கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 26, 2021

தி.ஜானகிராமன் நூற்றாண்டு.

தி.ஜானகிராமன் நூற்றாண்டு. 




இந்த வருடம் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. அவருடைய பல படைப்புகளை படித்து ரசித்திருக்கிறேன். மோகமுள் படித்த பொழுது இந்தக் கதையை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே என் மூச்சு பிரிய வேண்டும் என்று தோன்றியது. கும்பகோணத்தில் பிறந்து,  டில்லியில் வாழ்ந்தவர். 

தஞ்சை ஜில்லாவை சேர்ந்தவராக இருந்தாலோ என்னவோ இவருக்கு காவிரி மீது ஒரு தனி காதல் உண்டு.  இவருடைய எல்லா கதைகளிலும் காவிரி ஓடும். இவருடைய எல்லா கதாநாயகிகளும் காவிரியைப் போலவே அழகாகவும், கம்பீமாகவும் இருப்பார்கள்.

நம் நாட்டில் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை, கானடாவிலிருந்து வெளிவரும்  'இலக்கிய வெளி' என்னும் தமிழ் பத்திரிகை தி.ஜானகிராமன் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அதில் அவருடைய மகள் அவரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. 



 







இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி. 

 

50 comments:

  1. மிக மிக சுவாரஸ்யமான பகிர்வு.  திருமதி உமாசங்கரி அவர்களின் பக்கத்தைக் குறித்துக் கொண்டேன்.  

    ReplyDelete
  2. எபி ஆசிரியர்களில் ஒருவரான கேஜிஒய் திஜாவின் பரம ரசிகர்.  அவர் இந்தத் தகவல்களை ரசிப்பார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள். தி.ஜானகிராமனின் புதல்வி எழுதியவை அனைத்தும் மிகவும் அரிதான தகவல்கள். அவரின் வலைப்பக்கமும் போகிறேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தி.ஜா அவர்களின் பலரையும் உலுக்கிய "மோகமுள்" இன்னும் நான் படித்ததில்லை.

    தகவல்கள் பிறகு கணினியில் படிக்கிறேன்.

    ReplyDelete
  5. தெரியாத பல தகவல்களை அவரின் மகளின் எழுத்து மூலம் தெரிந்து கொண்டேன் நல்ல ரைட்அப்

    ReplyDelete
  6. ஆன்மிகமும் கள்ளக்காதலும் ஒத்து வராதுனு என்று நினைப்பவர்களுக்கு ஆன்மிகமும் தெரியவில்லை கள்ளக்காதலும் தெரியவில்லை என்றாகிறது. எதையும் நல்லது கெட்டது சரி தவறு என்ற தீர்வு நோக்குடன் பார்ப்பவர்களுக்கு ஆன்மிகம் அறவே ஒட்டாது என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // எதையும் நல்லது கெட்டது சரி தவறு என்ற தீர்வு நோக்குடன் பார்ப்பவர்களுக்கு ஆன்மிகம் அறவே ஒட்டாது என்று நம்புகிறேன்.//

      கொஞ்சம் விளக்கமாக?

      Delete
    2. ஆன்மிகம் என்பது தேடல். தொடர்ச்சி அதன் கரு.
      தீர்வு நோக்கு என்பது மூடல்.

      Delete
    3. அதுதான் தீர்வு என்பது தெரியுமா?

      Delete
    4. எதையும் நல்லது கெட்டது சரி தவறு என்ற தீர்வு நோக்குடன் பார்ப்பவர்களுக்கு ஆன்மிகம் அறவே ஒட்டாது என்று நம்புகிறேன்.// Correct 💯

      Delete
  7. கண்ணன் புரியாத கள்ளக்காதலா? கீதையை விட மேம்பட்ட ஆன்மிகமா?

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் புரிந்தது கள்ளக்காதலா?

      Delete
    2. கள்ளக்காதல் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்?

      Delete
    3. உங்கள் எண்ணம் என்ன?
      இப்படியே கேபிசு போல என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே போகக்கூடாது.

      Delete
    4. ஒண்ணு செய்வோம்.. கண்ணன் கள்ளக்காதலில் மன்னனா என்பதை அதாரிடியிடமே கேட்டு விடுவோம்

      Delete
    5. தெரிந்து கொள்ளலாமே என்றுதான்..   ஒரு கட்டுரை எழுதுங்களேன்.. எபியில் சனிக்கிழமை போடலாம்.

      Delete
    6. அப்பாதுரை கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். கண்ணன் புரிந்தது கள்ளக்காதல் என்று லௌகிக நோக்கோடு பார்க்கக் கூடாது. அப்புறமா எல்லோரும் இப்போவெல்லாம் கள்ளக்காதலனுக்காகக் கணவனை/மனைவியைக்கொல்வது மாதிரித்தான் அப்போவும் கண்ணனே இருந்திருக்கான் என நினைக்க இடம் கொடுக்கும்.

      Delete
    7. அத்தாரிட்டி யார்? கீதா அக்கா?

      Delete
    8. அய்...   வந்துட்டாங்க இல்ல...   வந்துட்டாங்க இல்ல...

      Delete
    9. அதாரிடினா போதும் மூக்குல வேத்துரும்
      கரெக்டா வந்துட்டாங்க பாருங்க.
      மத்தபடி அதாரிடினா அவரு தான். :-)

      Delete
    10. மனைவி கணவனை பரஸ்பரமாகக் கொன்றால் தான் கள்ளக்காதலா? வினயத்திலிருந்து விகாரம் வரை எல்லாமே ஒரு பரப்புக்குட்பட்டதில்லையா? கண்ணன் லீலைகளில் (?) வினயமும் உண்டு விகாரமும் உண்டு.. ஆனால் இது வினயம் இது விகாரம் என்று பார்வைகள் வேறுபடலாமே? நிற்க, லீலை என்ற அற்புதமான சொல்லே தமிழில் விகாரமாகித் தொலைந்ததை என்னவென்று சொல்ல?

      கள்ளக்காதல் தி.ஜாவின் பார்வையில் எப்படித் தெரிகிறது (படிப்பவருக்கு)? இதை வைத்து தி.ஜா ஆன்மிகரா இல்லையா என்ற வியப்புக்குட்பட்ட கேள்வியே வியப்புக்குட்பட்டது என்று சொன்னேன்.. அஷ்டே.

      Delete
    11. அதான் வந்துட்டாங்களே அவரு தான்

      Delete
    12. மன்னிக்கணும்.. எங்கருந்து வந்த எதிரொலினு தெரியலே.. (சரி.. இதெல்லாம் பின்னூட்டக் கணக்குல எடுத்திங்கன்னா நாளைக்கு ஆடிட்ல மாட்டிக்குவிங்க)

      Delete
    13. நாலு வருஷம் முன்னே தோளில் துண்டோடு பிளாகை விட்டுப் போனவன் நான். திரும்ப வரவழைச்சிடுவீங்க போல இருக்கே!
      நல்லதோர் பதிவுக்கு நன்றி மேடம்.
      கீதாக்கா! கும்ப்ட்டுகிறேன்! கொக்கிப்போட்டு இழுத்த அப்பாதுரையாரே ! திஜாவே சொன்னதுபோல் ‘எனக்கே எனக்காக’ என்று எழுதிக் கொண்டவையே கொடிகட்டிப் பறக்கின்றன. அவர் போதனை செய்யவில்லை. அழகியல் கொண்டு கதைகளை நெய்தவர். அம்மா பின்னிய ஸ்வெட்டர்.. அளவு, உதிர்ந்த பட்டனையும் பொருட்படுத்தாமல் கதகதப்பும் அம்மா வாசனையையும் மீட்டு வரும் படைப்புகள் அவருடையவை.

      Delete
    14. @மோகன் ஜி! வாங்க! வாங்க! உண்மையில் உங்களை நினைத்துக் கொண்டேன் தி.ஜானகிராமன் பற்றிப் படிக்கையிலும் கருத்துச் சொல்லும்போதும். அதான் போல வந்துட்டீங்க. விரைவில் "வானவில் மனிதனை"ப் பார்க்கலாம்னு சொல்லுங்க. துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கோங்க!

      Delete
  8. திஜாவின் கதைகளை அவர் நல்லது கெட்டது பார்த்து எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் கதைகள் நிலைக்கின்றன. அவர் கதைகளில் கெட்டவரும் நல்லவராகிறார் என்பது தனிப்பட்ட கருத்து. திஜாவை ஆதரிக்கும் வகையிலான உளறல் என்றும் சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. அவர் கதைகளில் முக்கியமாய்ச் சொல்லப்படுவது அன்பு, ஆண்/பெண் பேதமற்ற அன்பு.

      Delete
    2. இது என்னோட புரிதல்.

      Delete
    3. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலைத் தருவது படைப்பாளியின் திறமை.

      Delete
    4. திஜாவின் கதைகளை அவர் நல்லது கெட்டது பார்த்து எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் கதைகள் நிலைக்கின்றன// yes! இது இப்படி நடந்தது என்று வியாசர் எழுதியதைப் போல எழுத அதிக திறமை வேண்டும். வாசந்தியின் 'அம்மணி' படித்திருக்கிறீர்களா? அதில் அவரும் அப்படித்தான் எழுதியிருப்பார்.

      Delete
    5. கதாசிரியர் பார்வையில் சிலர் கதை எழுதுவார்கள் (சுஜாதா). கதாபாத்திர நடத்தையில் சிலர் கதை எழுதுவார்கள் (புபி, திஜா). ரெண்டுங்கெட்டானாக சிலர் கதை எழுதுவார்கள் (பெயர் சொன்னால் ஜீவி சாபமிடுவார், வாணாம்).

      தன் பாத்திரங்கள் நடத்தையை அப்படியே வடிப்பதாக தி.ஜா சொல்லி (சொன்னதாக) படித்திருக்குறேன். method writing என்று நினைக்கிறேன் இந்த பாணியின் பெயர். இதைக் குலைத்தவர்களில் சுஜாதா தலைவர் என்று சொல்வேன்.

      Delete
    6. @அப்பாதுரை! அதே சமயம் தி.ஜா. தன் பாத்திரங்கள் உண்மையில் தனக்கு நெருங்கியவர்களும், உறவுகளும், நட்புக்களும் என்றும் சொல்லி இருக்காரே! அது தெரியுமா? இதைக் குறித்துத் தி.ஜா.வே எழுதி இருக்கார். தேடிப் பார்த்துப் போடறேன். மோகமுள் புத்தகத்தில்னு நினைக்கிறேன்.

      Delete
  9. அட என்னுடைய பதிவுக்கு இத்தனை பின்னூட்டங்களா? என்று வியப்பாக இருந்தது. அப்பாதுரைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி நன்றி திஜாவுக்கு :-)

      Delete
    2. ஆமாம். தி.ஜா.என்றாலே வாசகர் வட்டம் பறந்து ஓடோடியும் வருமே!

      Delete
  10. நான் புரிந்து கொண்டவரையில் தி.ஜா.வின் படைப்புகள் எல்லாமே ஆண், பெண் பேதமற்ற அன்பை சொன்னது மரப்பசு மட்டுமே.
    அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளுக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்திருக்கிறது, ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். தன் கணவனுக்கு பிறந்த மகனை வேதம் படிக்க வைத்து அந்த நெருப்பில் தன்னை தீர்த்துக்கொள்ள விரும்புகிறாள்.ஆனால் அதுவும் நடக்காதது தான் சோகம். இதை ஒரு உயரமான பீடத்தில் நின்று கொண்டு இது சரி, இது தவறு என்று பிரிக்காமல் மிகவும் subtleஆக சொன்னதுதான் தி.ஜா.வின் திறன்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. *நெருப்பில் தீய்த்துக்கொள்ள என்று வந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. மிக மிக சுவாரஸ்யமான பதிவு! பின்னூட்டங்களையும் சேர்த்து சொல்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. பின்னூட்டங்களுக்கான பெருமை அப்பாதுரை அவர்களைச்சேரும்

      Delete
  14. வணக்கம் சகோதரி

    நலமா? நல்ல பதிவு. சிறந்த எழுத்தாளர் தி. ஜா பற்றி அவர் மகள் கூறியவைகளை ரசித்துப் படித்தேன். நல்ல விபரத்துடன் சுவாரஸ்யமாக எழுதி உள்ளார்.அறியாத தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  15. வாங்க கமலா. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. தி ஜா வின் மகளின் கட்டுரை நல்ல சுவாரசியம். பதிவையும் கருத்துகளையும் ரசித்தேன்.

    // எதையும் நல்லது கெட்டது சரி தவறு என்ற தீர்வு நோக்குடன் பார்ப்பவர்களுக்கு ஆன்மிகம் அறவே ஒட்டாது என்று நம்புகிறேன்.// யெஸ்ஸு. ப்ளஸ் 1

    கீதா

    ReplyDelete