கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 16, 2021

சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி


ஒரு புகைப்பட பதிவு போட வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.

ஹலோவின் அலங்காரம் 

என் மகள் வீட்டு மாடியிலிருந்து…

கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வால்மார்ட்  பேத்தியின் ஆண்டு நிறைவு நடந்த ராதா கிருஷ்ணா கோவில் 

27 comments:

 1. Replies
  1. சில நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். நன்றி.

   Delete
 2. படங்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! நீங்கள் புகைப்படக் கலை நிபுணர். இவை செல்ஃபோனில் எடுக்கப்பட்டவை.

   Delete
 3. வணக்கம் சகோதரி

  எல்லா படங்களும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. வீடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. மாடி என்றால் மொட்டை மாடியா? தனி வீடு தானே? தோட்டம் பராமரிக்க முடிகிறதோ? அநேகமாக செப்டெம்பரிலேயே ஆரம்பிப்பார்கள் கிறிஸ்துமஸுக்கான அலங்காரங்களை. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இவற்றை எல்லாம் பார்க்கக் கூட்டம் அதிகம் வரும். இப்போக் கொரோனா காலம் என்பதால் குறைவாக இருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தனி வீடில்லை. அபார்ட்மெண்ட்தான். கிருஸ்துமஸ் அலங்காரங்கள் சில இடங்களில் மிக அழகாக இருக்கும் என்றும் அவைகளை பார்க்கச் செல்லலாம் என்றும் மகள் கூறியிருக்கிறார்.

   Delete
 5. ராதா, கிருஷ்ணா கோயில் இஸ்கானைச் சேர்ந்ததா? நீங்கள் இந்தியா திரும்ப எப்படியும் ஆறு மாதம் ஆகும் இல்லையா? அதுக்குள்ளே நயாகரா திறந்துடுவாங்க. பார்த்துட்டு வருவீங்கனு நினைக்கிறேன். எங்களால் போக முடியலை. எல்லாம் உணவுப் பிரச்னைகளால் தான் பலவற்றைத் தவிர்த்தோம். :(

  ReplyDelete
  Replies
  1. இஸ்கானை சேர்ந்ததல்ல. எல்லா சுவாமி மூர்த்தங்களும் இருக்கிறது. வட இந்தியர்கள் நிர்வகிக்கிறார்கள்.

   Delete
 6. படங்கள் அழகாக இருக்கிறது மேடம்.

  ReplyDelete
 7. படங்கள் அழகாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி.நீங்கள் பகிரும் படங்கள் அளவிற்கு இருக்கிறதா?

   Delete
 8. எல்லாப் படங்களுமே அருமை.

  ReplyDelete
 9. வால்மார்ட் படம் "எல்லை மீறிய" அழகாய் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. எழுத்தாளரின் பின்னூட்டம் என்று நன்றாகவே தெரியுது.

   Delete
 10. அழகான புகைப்படங்கள்! வால் மார்ட்டில் எடுத்த புகைப்படங்கள் மிக அழகு!

  ReplyDelete
 11. வால்மார்ட்!!! கற்பனைக்கும் அதிகமாகவே அழகாக இருக்கிறதே. முன்பு பார்த்த வால்மார்ட்டையே பார்த்து அதிசயித்திருக்கிறேன். அதனால்தான்!!

  ரொம்ப டெவலப் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லை என்றால் ஹாலோவீன் காக அழகுபடுத்தியிருக்கிறார்களோ?

  பேத்தி சாய் ஜனனியின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் நன்றாக நடந்ததை உங்களிடம் பேசியதில் அறிந்து மகிழ்ச்சி பானுக்கா.

  படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. பனி விழத் தொடங்கிவிட்டதோ?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். பனிப்பொழிவு இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

   Delete
 12. ராதா கிருஷ்னா கோயில் அழகு வட இந்தியர்கள் கோயில் என்று தெரிகிறது பெரும்பாலும் வெளிநாடுகளில் வட இந்தியர்கள் தான் கோயில்கள் நிர்வகிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் அறிந்தவரையில் சிங்கப்பூர், அப்புறம் பிட்ஸ்பர்க் கோயில் தவிர

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கு சில கோவில்கள் இலங்கை தன் தமிழர்களால் நிர்வகிக்கப் படுகிறதாம்.

   Delete
 13. வெகு நாட்களாகின்றன தங்களது தளத்திற்கு வந்து..

  உடல் நலக் குறைவினால் அவதியுற்ற் போது பதிவின் வழி தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

  நலமே வாழ்க..

  ReplyDelete