கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 11, 2022

தேடல்

தேடல்

கடந்த இரண்டு வியாழன்களாக ஸ்ரீராம் பொருள்களை மறந்து விட்டு தேடுவதைப் பற்றி எழுதியதை படித்த பொழுது தேடல் என்பது பற்றி என் சிந்தனை ஓடியது. 

வாழ்க்கை என்பதே தேடல்தான். சிறு வயதில் அறிவைத் தேடுகிறோம், பின்னர் வேலை, அதன் பிறகு அல்லது அதனிடையே துணையைத் தேடும் வாலிபம். எதையோ தேடுகிறோம், ஓடுகிறோம்  தேடியது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் துக்கம், ஏக்கம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள். 

சரி அப்படி தேடியது கிடைத்து விட்டால் மட்டும் நின்று விடுகிறோமா? அடுத்த கட்ட தேடல் துவங்குகிறது. அதுதானே வளர்ச்சி. தேடல் நின்று விட்டால் தேங்கல்.  புதுப்புது உணவுகள், உடைகள், மாறும் ஃபேஷன்கள், ரசனைகள் எல்லாமே தேடலின் விளைவுகள்தான். 

ரொம்ப பாடுபட்டு தேடியதை அடைந்த பிறகு மிஞ்சுவது இவ்வளவுதானா? இதற்குதானா இத்தனை கஷ்டப்பட்டோம் என்னும் லேசான ஏமாற்றம். மெட்டீரியல் உலகின் வெற்றியில் இந்த உணர்வு வராதவர்கள் வெகு குறைவு. அதனால்தான் அவர்களில் பலர் ஆன்மீகத்திற்கு திரும்புகிறார்கள்.

ஆன்மீகத் தேடல்கள்தான் புதுப்புது தத்துவங்கள், குருமார்கள். ஆனால் அதன் முடிவு என்னவோ கண்டவர் விண்டிலர்தான். 

ஓடி ஓடி ஓடி ஓடி உள் கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்து போய்
தேடி தேடி தேடி தேடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
என்பது சித்தர் வாக்கு. 

ரொம்ப சீரியஸாகி விட்டதோ? 
வாட்ஸாப்பில் வந்த ஒரு ஜோக்கோடு முடித்துக் கொள்ளலாம். 28 comments:

 1. தேடிக் கொண்டே தான் இருக்கிறோம்.
  கூகிள் அம்மா, அப்பா, சித்தி என்று
  வேறு வேறு என்று தேடல்கள் தொடர்கிறது.

  இணையம் தரும் நன்மையால்
  வாழ்வில் முதல் 18 வருடங்கள் அறியாததை
  இன்னும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

  ஆத்மார்த்தமாக எதையாவது விரும்பினால் அவை நம்மிடம் வந்து சேர்வது
  நிச்சயம். நன்றி பானு மா.

  ReplyDelete
  Replies
  1. //இணையம் தரும் நன்மையால்
   வாழ்வில் முதல் 18 வருடங்கள் அறியாததை
   இன்னும் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.// Very true.
   நன்றி.

   Delete
 2. நல்லதொரு தேடல், உங்கள் தேடல் வெற்றி பெறட்டும். கூகிளாகவே இருந்தாலும் ஜோக் அரதப் பழசு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

  ReplyDelete
  Replies
  1. நான் பாடிக்கொண்டே இருப்பேன் என்று ஒரு பாடல் உண்டு. அதைப் போல நான்(நாம்) தேடிக்கொண்டே இருப்பேன் (போம்).
   ஜோக் அரதப் பழசு! //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))// ஹிஹி

   Delete
 3. வணக்கம் சகோதரி

  தேடல் குறித்த பதிவு அருமை. உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் எதையாவது தேடுகிறோம். தேடியது கிடைப்பது "அவனருள்". அது புரியும் போதும் தேடல் நிற்காமல் தொடர்கிறது. காரணம் தேட வைப்பதும் "அவன்"தான் என்பதை சில சமயங்களில் அவனே நமக்கு மறக்க வைத்து விடுவான். அதுதான் இந்தப் பிறவியின் இயல்பு. அந்த இயல்பை மாற்றும் தேடலை தர வேண்டி நாம் இறைவனிடம் இந்தப் பிறவியிலேயே வேண்டிக் கொள்வோம்.

  தேடல் எனும் போது கருத்தும் சீரியஸாகத்தான் போகிறது. வாட்சப் ஜோக் நன்றாக உள்ளது.

  சுகர் இல்லாதவர்கள் என்பது இப்போது அருகி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தெளிவான பின்னூட்டம்.

   Delete
 4. தட்டுங்கள் திறக்கப்படும் 
  கேளுங்கள் கொடுக்கப்படும் 
  தேடுங்கள் கிடைக்கும் 

  நான் யார்  என்று  தேடுங்கள் விடை கிடைக்கும் 


  தானாக கிடைத்ததைக் காட்டிலும் தேடியபின் கிடைத்ததில் உள்ள திருப்தி மகிழ்ச்சி இரண்டும் இனிமையானவை. 

  சுருக்கமான பதிவு ஆனாலும் சொல்லியது நிறைவு.

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. //தட்டுங்கள் திறக்கப்படும்
   கேளுங்கள் கொடுக்கப்படும்
   தேடுங்கள் கிடைக்கும்// இதை குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன். பாராட்டுக்கு நன்றி.

   Delete
 5. சித்தர்கள் வாக்கு அருமை மேடம்.

  ReplyDelete
  Replies
  1. சித்தர்களுக்கு நன்றி.

   Delete
 6. தேடல் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
  சித்தர் பாடல் அருமை.
  நகைச்சுவை அருமை.
  வயதான காலத்தில் இறைவனின் பாதரவிந்தங்களை தேடி அமைதி காணவேண்டும்.
  ஆனால் நிறைய கூகுள்தேடல் தான் தொடர்கிறது.

  ReplyDelete
 7. //வயதான காலத்தில் இறைவனின் பாதரவிந்தங்களை தேடி அமைதி காணவேண்டும்.
  ஆனால் நிறைய கூகுள்தேடல் தான் தொடர்கிறது.// ரொம்ப கரெக்ட். நம்மை இறையருள் தான் சரியாக வழி நடத்த வேண்டும்.

  ReplyDelete
 8. தேடல்... தொலைத்த இடத்தில் தேடலே சிறப்பு... அது என்ன இடம்...?!

  ReplyDelete
  Replies
  1. நம்முடைய மனம் என்று தோன்றுகிறது. அங்குதான் பல நல்ல விஷயங்களை தொலைக்கிறோம். நல்ல சிந்தனைக்கு நன்றி.

   Delete
 9. அக்கா ஹைஃபைவ். ஸ்ரீராமின் பதிவு எனக்கும் உங்களைப் போலவே தோன்ற வைத்தது. வாழ்க்கையே தேடல்தான். எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று.

  பதிவு செம. வழக்கம் போல சின்னதாக அருமையான அனைத்து கருத்துகளும் உட்படுத்தி.

  வாழ்க்கை பல ரகசியங்களைக் கொண்டுள்ளதால்தான் தேடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறதோ?

  மேற்கோள் சூப்பர். தேடலில் அமைதி கிடைத்துவிட்டால் நன்றாக இருக்கும். பரபரப்பு இருப்பதால்தான் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறதோ

  கீதா

  ReplyDelete
 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடிசேரா தார்

  இது தெரிந்துவிட்டால்!!

  ஜோக் ஹாஹாஹா....நாங்கல்லாம் ஏற்கனவே சர்க்கரை வைச்சிருக்கோம்!!!

  அக்கா எனக்கு சுருக்கமா எழுத சொல்லித் தாங்க!! ஹாஹாஹாஹா

  எனது இப்போதைய பதிவும் பெரிசு என்று எல்லாரும் சொல்லப் போறாங்க!!!!! சுருக்க நினைத்து நினைத்து சில கன்டென்ட் விட்டுப் போச்சு. பேசுவது போல எழுத்தையும் செய்வதாலோ?

  கீதா

  ReplyDelete
 11. இந்த வாழ்க்கை பயணமே தேடுதல் தானே..... ஸ்ரீராம் அவர்களின் பதிவு தந்த எண்ணங்கள் சிறப்பு.

  ReplyDelete
 12. பானுக்கா எனக்கு அடிக்கடித் தோன்றும் ஒன்று. தத்துவங்களும் யதார்த்த முரண்களும். ஒரு பதிவு எழுதி வைத்து ஆனால் தயக்கம் இருந்ததால் போடாமல் இருக்கிறது. ஆசை, தேடல் எல்லாம் இணைத்து. இப்போது உங்கள் பதிவும், ஜிஎம்பி சாரின் பதிவும் பார்த்ததும்தான் நினைவுக்கே வருகிறது!!!!!!!!

  பதிவைத் தட்டி கொட்டி போட வேண்டும். என் கேள்விகளுடன்!!!!

  கீதா

  ReplyDelete
 13. பதிவு அருமை. நல்ல கருத்துகள். இறைவன் விட்ட வழி என்று நினைத்துவிட்டால் மனதில் தேடலினால் விளையும் சஞ்சலங்கள் குழப்பங்கள் சற்றே குறையும் என்றே தோன்றுகிறது. என் அனுபவம்

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். சற்று கடினம். நன்றி துளசிதரன்.

   Delete
 14. எதைத் தேடினாலும் தேடலின் நோக்கம் என்னவோ நிம்மதிதானே?  எனவே நிமமதியைத்தன் தேடிக்கொண்டே இருக்கிறோம் என்றும் சொல்லலாமா?  தொளதொள என்று ஒரு வெள்ளை பேண்ட், ட்ரான்ஸ்பார்ன்ட்டாக ஒரு வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு இருள்களின் நடுவே வெளிச்சத்தில் 'எங்கே நிம்மதி...  எங்கே நிம்மதி' என்று ஜலதோஷக்குரலில் எதிரொலித்துக் கொண்டே மெதுவாய்த் திரும்பலாம்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா! வழக்கத்திற்கு மாறாக சற்று தாமதமான கருத்து. நன்றி
   'தேடாதே தொலைந்து போவாய்' என்பது சுஜாதா, ப.பிரபாகர் இந்த இருவரில் யார் எழுதிய நாவல்?

   Delete
  2. சுஜாதா தான்.  தேடாதே மட்டும்தான் தலைப்பு .  'தொலைந்து போவாய்' என்று இருக்காது.

   Delete
 15. ஜோக் பழசு என்றாலும் சிரிக்க வைக்கிறது. ஹைக்கூ போல கடைசி வரியில் ஒரு திருப்பம்!

  ReplyDelete