கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 14, 2022

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

போகிப் பண்டிகையாகிய இன்றுதான் அதாவது 13.01.2022 தான் வைகுண்ட ஏகாதசி. ஆனால் ஸ்ரீரங்கத்தில் சென்ற ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசி யாக கொண்டாடி விட்டதால் சிலருக்கு குழப்பம் வந்தது. சென்ற ஏகாதசி குருவாயூர் ஏகாதசி அல்லது கைசிக ஏகாதசி எனப்படும். திருக்குறுங்குடி ஏகாதசி என்றும் சொல்வார்கள்.

நம் நாட்டில் பின்பற்றும் எல்லா கேலண்டர்கள் அல்லது பஞ்சாங்கங்கள் படியும் ஒரு மாதத்திற்கு வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு ஏகாதசிகள் வரும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. 

ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா உண்டு.  அந்த கோவிலின் மிகச் சிறப்பான விழா வைகுண்ட ஏகாதசி. ஏகாதசிக்கு முன்னால் பகல் பத்து என்று பத்து நாட்கள், ஏகாதசிக்கு பின்னர் ராப்பத்து என்று பத்து நாட்கள் என்று மிகவும் விமரிசையாக இருபது நாட்கள் நடக்கும். இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று வருகிறது. அதை கடைபிடித்தால் தை மாதத்தில் வரும் உற்சவம் நடத்துவதில் பிரச்சனை வரும்.

அதனால் கோவில் ஒழுகுமுறைக்காக கார்த்திகை மாதம் வந்த ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அனுஷ்டித்து விட்டார்கள். மணவாள மாமுனிகள் செய்த ஏற்பாடாம் இது. பதினெட்டு வருடங்களுக்கு ஒரு முறை இப்படி நிகழும் என்கிறார்கள்.

சித்திரை தொடங்கி பங்குனி வரை வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும் ஏகாதசிகள்

காமதா, பாபமோசனிகா

மோகினி, வரூதினி

நிர்ஜலா, அபரா 

சபனீ, யோகிணி 

காமிகா, புத்திரதா 

பத்மநாபா,  அஜா 

பாபாங்குசா, இந்திரா 

ப்ரபோதினி, ரமா 

மோக்ஷ, உற்பத்தி

புத்ரதா, சபலா

ஜயா, ஷட்திலா

ஆமலகி, விஜயா

சில வருடங்களில் மட்டும் கமலா ஏகாதசி என்று இருபத்தைந்தாக ஒன்றும் வரும்.

ஹிந்து வாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஏகாதசி விரதம் என்று நம்பப்படுகிறது. எட்டு வயது பூர்த்தியானவர் முதல் எண்பது வயது நிறைந்தவர் வரை கடைப்பிடிக்க வேண்டும்.  எந்த நிலையிலும் கடைபிடிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் வைகுண்ட ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்றுதான் பெயர். வைகுண்ட ஏகாதசி என்னும் பெயர் பின்னாளில் வந்திருக்கும்.

ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முக்தி அடைந்த அரசன் அம்பரீஷன் என்பது பலருக்கும் தெரியும்.

நாங்கள் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று கனடாவில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். 

பெயர் என்னவோ திருப்பதி வெங்கடாசலபதி கோயில் என்றிருந்தாலும், அங்கு விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, நவகிரகங்கள் என எல்லா சன்னதிகளும் இருந்தன. மூலவர் திருப்பதி பெருமாள். அன்று அங்கு ஏதோ சிறப்பு பூஜை இருந்ததால் நல்ல கும்பல். செல்லும் வழியில் பூசை சாமான்கள் என்று தமிழில் பெயர் பலகையோடு கடை கண்ணில் பட்டது. கும்பலாக இருந்ததால் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முடிவதில்லை.

18 comments:

 1. சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி. மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்!

   Delete
 2. நல்ல தகவல்கள் பானுக்கா

  ஆமாம், திருக்குறுங்குடி யில் கைசிக ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்!

   Delete
 3. இன்னும் படங்கள் எடுத்திருக்கலாம். ஒருவர் கூட்டத்தைப் படமெடுக்கிறாரூ

  சென்ற வைகுண்ட ஏகாதசிக்கு ஶ்ரீரங்கம். இந்த ஏகாதசிக்கு வீட்டின் அருகிலுள்ள வெங்கடேசர் கோவில். லட்டு பிரசாத்த்துடன்.

  ReplyDelete
  Replies
  1. கும்பல் அதிகம் இருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை.

   Delete
 4. தகவல்கள் சிறப்பு
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மேடம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. பொங்கல் வாழ்த்துக்கள்.

   Delete
 5. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   Delete
 6. தகவல்கள் நன்று.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன் தாமதமாக வந்திருக்கின்றேன்..

  நலம் வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. வருவதுதான் முக்கியம். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   Delete
 9. வணக்கம் சகோதரி

  வைகுண்ட ஏகாதசி பற்றி தகவல்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் அங்கு சென்று வந்த வெங்கடாஜலபதி கோவில் நன்றாக உள்ளது. பெருமாளை நானும் தரிசித்து கொண்டேன்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல், மற்றும் கணுப்பொங்கல் நல்வாழ்த்துகள். வாழ்த்துக்களை தாமதமாக வந்து தந்துள்ளேன். இரண்டு நாட்களாக எனக்கு வலைப்பக்கம் வர இயலவில்லை நேரம் சரியாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 10. நன்றி கமலா. உங்களைப் போல அழகான பின்னூட்டம் எழுத பயில வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   பதிவும், பின்னூட்ட கருத்துகளும் மனதில் பதியும் வண்ணம் சுருக்கி எழுதும் திறன் கொண்ட உங்களை விடவா? உங்கள் திறமை எனக்கில்லையே என நான் எழுதும் போதெல்லாம் எப்போதும் நினைக்கிறேன். உங்களின் இந்த அசாத்திய திறமை கண்டு வியக்கவும் வியக்கிறேன். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. இந்த உங்கள் பதிவின் மூலம் எல்லா ஏகாதசிகளின் பெயர்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

  ReplyDelete