கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 31, 2022

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்

நேற்று மாலை கனடாவின் ரிச்சமாண்ட் ஹில் என்னும் இடத்தில் இருக்கும் சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம். சித்திவிநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் விநாயகர், முருகன், சிவன், வெங்கடாசலபதி பெருமாள், துர்க்கை என்று எல்லா  தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

இங்கே இப்போது நல்ல குளிர் போகும் வழியெங்கும் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்த பனி எனக்கு திருவிளையாடல் படத்தை நினைவூட்டியது.

இந்த ஊரில் கோவில்களிலும், பொது கூடங்களிலும் நுழைந்ததும் நம்முடைய ஓவர் கோட்டை கழற்றி மாட்ட ஹாங்கர்கள் இருக்கும். மற்றவர்கள் ஓவர் கோட் டை அவிழ்த்தார்கள். நான் அவிழ்க்க வில்லை, காலில் சாக்ஸையும் அணிந்து கொண்டுதான் உள்ளே சென்றேன். எனக்கு இணையாக சிலர் இருந்தனர். 

வடக்கத்திய பாணியில் சலவைக் கல் விக்கிரகங்களை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு முற்றிலும் தென்னிந்திய பாணியில் அமைந்திருந்த அந்த கோவில் இனிய ஏமாற்றத்தை தந்தது. 

உற்சவர் விநாயகர்

உற்சவர் முருகன்

பிரும்மாண்டமாண கூடத்தில் விநாயகர், முருகன், வெங்கடாசலபதி சன்னதிகளுக்கு தனித்தனியாக கொடிமரத்துடன் தோரணவாயில். பாண்டிச்சேரி கற்பக விநாயகரை நினைவுபடுத்தும் விநாயகர், டில்லி மலையகத்தின், பெங்களூர் திப்பசந்திரா பாலமுருகன் கோவில்களில் இருப்பதை போன்று நின்ற கோலத்தில் மேலிரண்டு கரங்களில் வேல், மயில், கீழ் வலது கரத்தில் தாமரை மலரோடு பிரும்மாண்ட முருகன். எதிரில் வள்ளிக்கு தனி சன்னதி. 

பெருமாள் உற்சவர்

வெங்கிடாசலபதி சன்னதிக்கு நேரே தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் மஹாலட்சுமி.  பெருமாளுக்கு அருகில் சக்கிரத்தாழ்வார்.

 ராம,லட்சுமண்,சீதாவோடு ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்கள் தனியே எழுந்தருளியிருக்கிறார்கள். 





இதைத்தவிர அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி, நின்ற கோலத்தில் துர்க்கை, சிவலிங்கத்திற்கு அருகில் நடராஜர், திரிபுரசுந்தரி, பைரவருக்கு தனி சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்களும் இருக்கின்றன. 


நேற்று (சனி)பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு முடிந்து நந்திக்கும், ஸ்வாமிக்கும்  பூஜை நடந்து கொண்டிருந்தது. தீபாராதனை பார்த்து விட்டு கிளம்பினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. 


பிரதோஷ பூஜையில் பக்தர்கள்

சேஷ வாகனம்

ஹனுமந்த, கருட வாகனங்கள்

கோவில் வாசலில் பேத்தியோடு நான்

24 comments:

  1. அங்கே அநேகமாக எல்லாக் கோயில்களிலும் வித்தியாசம் இல்லாமல் எல்லா உம்மாச்சிங்களும் இருப்பாங்க. தனியான பெருமாள் கோயில்கள் தவிர்த்து! ஆந்திரா, தமிழ்நாட்டுக்காரர்கள் கட்டிய கோயில் எனில் கொடிமரத்தில் இருந்து எல்லாமும் காணலாம். இஸ்கான் கோயிலில் தான் அதிகம் சலவைக்கல் உம்மாச்சிங்க. அடுத்து ஸ்வாமிநாராயண் கோயில்களிலும் காணலாம். இஸ்கான் கோயிலில் சாத்வீக உணவு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் இஸ்கான் ஊழியர்கள் காடரிங் சேவை செய்வதாகக் கேள்விப் பட்டேன். சென்னையில் இருக்கலாம். இங்கே திருச்சியில் இருப்பதாகத் தெரியலை.

      Delete
    2. நம் நாட்டிலும் பெரு நகரங்களில் உள்ள கோவில்களில் எல்லா சாமிக்கும் சன்னதிகள் இருக்கிறதே.
      திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் போன்ற கோவில்களை பார்த்து பழகிய எனக்கு இந்த அபார்ட்மெண்ட் கோவில்கள் பழக சில வருடங்கள் ஆனது. ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேறு ஆகம விதியாயிற்றே என்று தோன்றும்.

      Delete
    3. //நம் நாட்டிலும் பெரு நகரங்களில் உள்ள கோவில்களில் எல்லா சாமிக்கும் சன்னதிகள் இருக்கிறதே.// அப்படியா?

      Delete
    4. இப்போது வெளிநாடு, உள்நாடுகளில் கட்டப்படும்/கட்டிய கோயில்களில் ஆகம விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. மற்றபடி பழமையான கோயில்களில் மட்டுமே ஆகமங்கள்.

      Delete
  2. கோவில் விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன வரவர தலையைக் காட்டுகிறீர்கள், வாலைக் காட்டுகிறீர்கள் ஓடி விடுகிறீர்கள்.

      Delete
  3. என்னடா! மாமி போய் மூணு மாசம் ஆச்சு.ஒண்ணும் எழுதக் காணோமே என்று நினைத்தேன்.அனுபவம் நல்ல விபரமாக இருந்தது.Nice writeup👍

    ReplyDelete
  4. அழகான கோவில்.... உங்கள் வழி நாங்களும் கோவிலுக்கு வந்தோம்... நன்றி.

    ReplyDelete
  5. நிஜமாகவே மிகவும் அழகான கோவில்.

    ReplyDelete
  6. படங்கள், தகவல்கள் அருமை...

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. கோவில், உற்சவர்கள் படங்கள் அனைத்தும் அருமை. சித்தி விநாயகரை தரிசித்துக் கொண்டேன். இந்தக் கோவிலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு பளிச்சென உள்ளது. கோவிலைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. உங்களுடன் சேர்ந்து இனிய தரிசனம்..

    கோயிலின் அழகைக் காட்டின படங்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  9. படங்களும் கோயில் பற்றிய தகவல்களும் அருமை பானுக்கா.

    படங்கள் அழகாக இருக்கின்றன.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //படங்கள் அழகாக இருக்கின்றன.// உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு இருந்தாலே மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  10. கனடாவிலும் இப்படி நம்மூரைப் போன்ற கோயில்கள் இருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் எல்லாம் அம்சமாக இருக்கின்றன.

    துளசிதரன்

    ReplyDelete
  11. நிறைய கோவில்கள் இருக்கிறதாம்.

    ReplyDelete
  12. ஆஹா பானு அக்கா கனடாவிலயோ நிற்கிறீங்கள்.. நானும் ரிச்மெண்ட் ஹில் போய் படங்கள் எடுத்து வந்தேன், அந்த அழகிய ஆனைப்பிள்ளை உட்பட... ஆனால் படம் எடுக்கப்படாது என கண்டிப்பான உத்தரவு போடப்பட்டிருக்கே, எப்படிப் பயப்பிடாமல் எடுத்தீங்கள்:))

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கனடாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டீர்கள் போல் தெரிகிறதே!

    ReplyDelete