கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, February 22, 2022

ஹ்ருதயம்

 ஹ்ருதயம் 

(மலையாள திரைப்படம்)


பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து, வினீத் ஶ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் படம். ஒரு கல்லூரி மாணவன் குடும்பஸ்தனாக மாறுவதை எவ்வித ஸ்வாரஸ்யமும் இல்லாமல் சொல்லியிருக்கும் படம்.

கேரளாவிலிருந்து சென்னைக்கு இன்ஜினீயரிங் படிக்க வரும் பிரணவ் மோகன்லாலும் அதே வகுப்பில் படிக்கும் தர்ஷணாவும் காதல் வசப்படுகிறார்கள். ஆனால் அந்த காதல் முறிய, கவனம் சிதறும் பிரணவ் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி எக்கச்சக்க அரியர்ஸ் வைக்கிறார். திடீரென்று படிப்பில் ஆர்வம் வந்து செல்வா என்னும் சக தமிழ் மாணவன் நடத்தும் க்ரூப் ஸ்டடியில் சேர்ந்து ஒரே முயற்சியில் 18 பேப்பர்களையும் கிளியர் பண்ணுவதோடு வகுப்பில் ஐந்தாவது மாணவனாக வருகிறாராம் (ஏ அப்பா!). படிப்பு முடியும் பொழுது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்து விடுகிறது. சரி படம் முடிந்து விட்டது என்று நினைக்கிறோம். அப்போதுதான் இண்டர்மிஷன், எண்டே குருவாயூரப்பா!

இதற்கு நடுவில் படத்தோடு துளியும் ஒட்டாத  ஏழை குடும்பத்திலிருந்து வந்து நன்றாக படித்து, படிப்பில் பின்தங்கியிருக்கும் மற்ற மாணவர்களுக்கு உதவும் ஏழை மாணவன் செல்வாவின் கதை. 

கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது என்கிறார்கள், ஆனால் அவர் அந்த வேலைக்குச் சென்றதாக தெரியவில்லை. இவண்ட் ஃபோட்டோகிராஃபராகி திருமணங்களில் புகைப்படம் எடுக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் என்று சொன்னார்களே, எங்கே அவரைக் காணோம் என்று நினைத்தால் இப்போதுதான் அவர் அறிமுகம்! ஒரு திருமணத்தில் கல்யாணியை பார்க்கும் பிரணவிற்கும் கல்யாணி க்கும் காதல்,  திருமணம், குழந்தை பிறப்பு. ஒரு திருமணத்திற்காக சென்னை வரும் பிரணவ், தன்னுடைய கல்லூரிக்குச் சென்று ‌அவர்கள் படித்த பொழுது கிறுக்கிய சுவற்றில் நான் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் நீ என்று எழுதுவதோடு படம் முடிகிறது. உஸ்.. அப்பாடா..!
 
படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பிரணவ்! பார்க்க நன்றாக இருக்கிறார், நடிக்கவும் வருகிறது. இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டப்பட வேண்டும். கல்யாணி க்யூட்! ஆனால் அவரை விட முக்கியத்துவம் தர்ஷணா ராஜேந்திரனுக்குத்தான். அவரும் மிக சிறப்பாக செய்திருக்கிறார். கல்லூரி மாணவியாக அந்த துள்ளல், பிற்பகுதியில் மெச்சூர்ட் நடிப்பு என்று கலக்கியிருக்கிறார். 

பாடல்கள் இனிமை. சினிமாடோப்போகிராஃபி அட்டகாசம்! படம் நீ...ள...ம்..! நீங்கள் 90 கிட்டாக இருந்தால் ரசிக்க முடியுமோ என்னவோ.

17 comments:

  1. சுவாரசியமான படம என்று சொன்னார்கள்...! (90...?)

    ReplyDelete
    Replies
    1. சொன்னவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள்.

      Delete
  2. எந்தவிதமான சம்பவங்களும் இல்லாமல் நகரும் திரைப்படங்கள் அங்கு சகஜம்.  தேசிய விருது பெரும் படங்கள் எல்லாம் அப்படிதானே இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா தேசிய விருது பெறும் படங்களும் அப்படி கிடையாது.

      Delete
  3. ஒரு ஆச்சர்யம்.  நான் இந்த கமெண்ட்டை டைப் செய்து கொண்டிருக்கும்போது என் மகன் இந்தப் படத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஒரு அழகான வயலின் பிட் வருகிறது (வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள் டியூன் போல)  அது மட்டும் கவர்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பார்க்கவில்லையா? உங்கள் மகனுக்கு பிடித்ததா?

      Delete
    2. இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.  மகன் ரசிக்கிறான்.  காதில் விழும் இசையை நான் ரசிக்கிறேன்.

      Delete
  4. எவ்வித ஸ்வாரஸ்யமுமில்லாத படம் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்! கதையைப்படித்ததும் அப்படித்தான் தோன்றுகிறது!!

    ReplyDelete
    Replies
    1. குறிப்பாக நம்மைப் போன்றவர்களுக்கு எந்த ஸாவாரஸ்யமும் இல்லை.

      Delete
  5. இந்தப் படத்தின் இசை பற்றி சொல்ல மறந்திருக்கிறீர்கள் பானு அக்கா.  வினீத் மனதை என்னவோ செய்கிறார்.  தனி அல்லது பீம்பிளாஸ் அலலது ஆபேரி ரகத்தை மெயின் தீமாக எடுத்துக் கொண்டு படம் முழுக்கப் பிழிகிறார்.  மனசே மனசே என்று வரியும் பாடி இருக்கிறார்.  மகன் படம் பார்க்கும்போது காதில் விழும் இசை மனதை...

    ReplyDelete
  6. பாடல்கள் இனிமை என்று சொல்லியிருக்கிறேனே? படத்தில் 12 பாடல்களால்,தெரியவேயில்லை. இசை வினீத் அல்ல, ஹேஷம் அப்துல் வஹாப்.

    ReplyDelete
  7. //ஒரு கல்லூரி மாணவன் குடும்பஸ்தனாக மாறுவதை எவ்வித ஸ்வாரஸ்யமும் இல்லாமல் சொல்லியிருக்கும் படம்//


    விமரசனம் அருமை. படம் பார்க்க தோன்றவில்லை .நானும் சில படங்கள் பேத்தி, மகள், மகனுடன் பார்த்தேன்.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அக்கா. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. பானுக்கா பொறுமையா பார்த்திருக்கீங்களே!!

    படத்தின் கதை தெரிந்ததுமே பல க்ளிஷே என்று தோன்றியது. பெரிதாக எதுவுமில்லை என்றும் தோன்றியது. ஈர்க்கவில்லை. பரிவை சே குமாரும் விமர்சனம் எழுதியிருக்கிறார். ஆனால் படம் ஹிட் என்று கேள்விப்பட்டேன். ஸோ நாட் இன் மை லிஸ்ட். வீனிதையும் கொண்டாடியிருக்கிறார்கள். ஒரு வேளை இளைய தலைமுறைக்குப் பிடிக்கலாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஒரு வேளை இளைய தலைமுறைக்குப் பிடிக்கலாம்.// அதே அதே.

      Delete
  10. மலையாளப் படங்கள் சில பார்த்ததுண்டு. சமீபத்தில் மீண்டும் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்.

    இந்தப் படம் குறித்தும் இணையத்தில் படித்தேன். முடிந்தால் வார இறுதியில் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. வாங்க வெங்கட். மூன்று மணி நேரம் படம் பார்க்க பொறுமை உண்டா?

    ReplyDelete