கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 28, 2022

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி மஹா சிவராத்திரியாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி என அழைக்கப்பட்டாலும், சிவ வழிபாட்டுக்கு உகந்த மாதமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி. 

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது தசமி வரை பாற்கடலை  கடைந்தும் அமிர்தம் கிடைக்காததால் மன சோர்வுற்ற தேவர்கள் ஏகாதசியன்று உபவாசம் இருந்து துவாதசியில் பாற்கடல் கடைவதை தொடர, *ஆலகால விஷம் வெளிப்பட்டு அவர்களை துரத்துகிறது சிவபெருமானை வலம் வரும் அவர்களை எதிர் திசையில் வந்து மறிக்கிறது அதிலிருந்து தப்பிக்க அவர்கள் பிரதட்சிணத்தை முடிக்காமல் வந்த வழியிலேயே திரும்பி ஓடுகிறார்கள். மீண்டும் எதிர் திசையில் வந்து ஆலகால விஷம் மறிக்க,  மறுபடியும் வந்த வழியிலேயே திரும்பிச் செல்கிறார்கள். இப்படி மூன்று முறை பிரதட்சணம் செய்த பிறகு சிவ பெருமான் அந்த விஷத்தை அருந்துகிறார். அம்பிகை அந்த நஞ்சை சிவபெருமானின் தொண்டையிலேயே நிறுத்தி விட விஷத்தின் பாதிப்பால் அம்பிகையின் மடியிலேயே சற்று கண்ணயரும் பெருமான் கண் விழித்த நாள்தான் சதுர்த்தசியான சிவராத்திரி. 

விஷத்தை அருந்தியதால் உஷ்ணமாகிவிட்ட சிவபெருமானை குளிர்விக்க அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

மனோகாரகனான சந்திரன் முழு கலையில் இருக்கும் பௌர்ணமி அம்பிகையை வழிபட உகந்த நாள் என்றால்,  சந்திரகலை குறைவாக இருக்கும் சதுர்த்தசி சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய நாள். நம்முடைய மனம் அடங்கி இறையனுபவத்தில் லயிப்பதை இது குறிக்கலாம்.

சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் உறங்காமல் இறை சிந்தனையிலேயே கழிக்க வேண்டும் என்பது நியதி.  உணவையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்தும் பொழுது, புலன் உணர்வு கட்டுப்படும். அதனால்தான் இறைவனுக்கு உகந்த நாட்களில் இவை இரண்டையும் வலியுறுத்துகிறார்கள். 

சில பெருமானுக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் உண்டு. சுலபத்தில் சந்தோஷமடைபவர் என்று அதற்கு பொருள். சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று, நமக்கு தெரிந்த சிவ துதிகளை (லிங்காஷ்டகம், மார்க்கபந்து ஸ்லோகம், சிவ புராணம், தேவார, திருவாசக பதிகங்கள்)சொல்லி வழிபட்டு இறையருள் பெறலாம்.ஓம் நமசிவாய 🙏🙏

*அதனால்தான் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களில் நந்திக்கு முன் தொடங்கி கோமுகி வரை சென்று பின்னர் திரும்பி நந்தி வரை வந்து பிரதட்சிணம் செய்வார்கள். 

24 comments:

  1. இப்படி பெருமை வாராந்த மஹா சிவன் ராத்திரியை...

    கோவை ஈஷா மையத்தில் இரவு முழுவதும் கூத்தாடிகளை வைத்து நடனமாட வைத்து பணம் வசூல் செய்யும் கும்பலை கேட்க அரசுக்கு வக்கு இல்லை, வாக்கு போட்ட மக்களுக்கும் கேட்க திராணியில்லை.

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்கள்.... தென்னாடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

    ReplyDelete
  3. சுலபத்தில் சந்தோஷமடைபவர் -  யோகங்களில் எளிமைஎளிதானது சிவயோகம் என்று கொள்ளலாமா?  சிறப்பான தகவல்கள்.  ஒருமுறை கூட சிவராத்திரிக்கு கண் விழித்ததில்லை.

    ReplyDelete
  4. நல்ல விவரங்கள் பானுக்கா. இதுவரை தெரிந்திராத ஒரு தகவல் - சிவன் சுலபத்தில் சந்தோஷமடைபவர் என்பது. நம்பிக்கெட்டவர் எவரையா உமை நாயகனை திரு மயிலையின் இறைவனை!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சிவன் சுலபத்தில் சந்தோஷமடைவதால்தான் வரங்களை வந்துவிடுவார். நன்றி கீதா.

      Delete
  5. மிகவும் சிறப்பான தகவல்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோஜி. உங்கள் பதிவிற்கு காலையில் கருத்துரை போட்டேன். வெளியாகவில்லை. மீண்டும் கருத்துரையிட்டேன்.

      Delete
  6. சிவன் ராத்திரி மகிமையை நன்றாக சொன்னீர்கள்.

    சின்ன வயதிலும் ஒரு முறை கண்விழித்தோம். அப்புறம் மாயவரத்தில் சிவன் கோயிலில் ஒரு முறை நாலு கால பூஜைக்கு விழித்து இருந்து தேவாரம், திருவாசகம் பாடி இருக்கிறேன்.

    ஒரு முறை பஞ்ச பூத தலங்கள் சிவன் ராத்திரிக்கு சென்று இருக்கிறேன்.

    எங்கள் மாமானார் வீட்டில் நாலு காலமும் சிவபூஜை செய்வார்கள். என் கணவர் ஒரு காலம் வீட்டில் பூஜை செய்து விட்டு அடுத்த காலத்திற்கு கோவில் போவார்கள்.

    ஓம் நமசிவாய !

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முறை பஞ்ச பூத தலங்கள் சிவன் ராத்திரிக்கு சென்று இருக்கிறேன்// பெரும் பாக்கியம்! என் அண்ணா ஒரு முறை சிவராத்திரி அன்று பஞ்சபூத தலங்களுக்கும் சென்றார்.

      Delete
  7. பாற்கடல் கடைந்ததையும் ஈசன் நஞ்சினை அருந்தியதையும் வைத்து சில ஆண்டுகளுக்கு முன் தொடர் பதிவுகள் வெளியிட்டிருக்கின்றேன்..

    சிவராத்திரியைப் பற்றி
    சிறப்பான தகவல்கள் தங்கள் தளத்தில்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  8. மதுரையோடு போச்சு இம்மாதிரியான நாட்கள் எல்லாம். அங்கே இருந்தவரை சிவராத்திரிக்குச் சொக்கநாதர் சந்நிதியிலும் வைகுண்ட ஏகாதசிக்கு வடக்குக் கிருஷ்ணன் கோயிலுமே கதி. இரவு முழுக்க விழித்திருந்துவிட்டுப்பின்னர் மறுநாள் காலை பள்ளிக்குச் சென்றதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. பள்ளி நாட்களிலேயே இதெல்லாம் செய்திருக்கிறீர்களா? கிரேட்!

      Delete
  9. ஹிஹிஹி, என்னோட வயிற்றுப் பிரச்னையால் இன்று நான் முழுப்பட்டினி. காலையில் இருந்து இதுவரை எதுவுமே சாப்பிடலை/குடிக்கலை. எலுமிச்சை ரசம் தான் ஒரு தம்பளர் சாப்பிட்டிருக்கேன். சாதாரணமாக இருந்தால் ஏதேனும் பத்தில்லாத பலகாரம் செய்து சாப்பிட்டிருப்பேன். இன்று இறைவன் திருவுளம் இதான் போல!

    ReplyDelete
    Replies
    1. சிவராத்திரி என்று தெரியாமல் இரவு தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வில்வ மரத்தின் மேல் அமர்ந்திருந்த திருடன் பறித்து போட்ட வில்வ இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்ததால் அவனுக்கு மோட்சம் கிட்டியது என்று சிவராத்திரி மகாத்மியம் கூறுகிறது. உங்களை சிவராத்திரி அன்று உபவாசம் இருக்க வைத்து புண்ணியத்தை கூட்டி வைத்திருக்கிறார்.

      Delete
    2. சிவராத்திரினு தெரியும். அதற்கான வழிபாடுகளுக்கும் நிவேதனங்களுக்கும் திட்டம் போட்டு வைத்திருந்தேன். ஆனால் திங்களன்று இரவில் இருந்தே எழுந்து நடமாட முடியாதபடிக்கு வயிற்றுத் தொந்திரவு. காலை எழுந்து காஃபி மட்டும் போட்டுக் கொடுத்துட்டுப் படுத்துட்டேன். பத்தரை மணிக்கு எழுந்து குளித்துவிட்டு எலுமிச்சை ரசம் குடிச்சேன். அவ்வளவு தான். நோ சமையல் டே! அவர் மட்டும் தயிர்சாதம் வாங்கிச் சாப்பிட்டார். இரவு அவர் இட்லி வாங்கிச் சாப்பிட்டார். மீ நோ உணவு. :))))) இப்போத் தான் சாப்பிட்டுட்டு வரேன்.

      Delete
  10. மஹா சிவராத்திரி தகவல்கள் சிறப்பாக உள்ளது. இன்று விரதம், பூஜை, கோயிலில் சிவராத்திரி பூஜைக்குச் செல்ல வேண்டும். எல்லாம் அவன் செயல்.

    துளசிதரன்

    ReplyDelete
  11. சிவராத்திரி பகிர்வு நன்று. முன்பு இரவு கோவிலுக்கு சென்று நித்திரை விழிப்பதுண்டு இப்பொழுது இல்லை. சிவாயநமக.

    ReplyDelete