கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 21, 2022

சில காணொளிகள்

 இன்று சில காணொளிகள்.



முதல் காணொளி எங்கள் குடும்ப நண்பரின் குழந்தைகளின் யூ ட்யூப். என்னதான் அவர்களுக்கு இப்போது திருமணமாகி குழந்தை, குட்டி என்ற குடும்பஸ்தர் களமாக ஆகி விட்டாலும் என் பார்வையில் குழந்தைகள்தான். நாம் பார்த்து வளர்ந்த குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் பொழுது சந்தோஷம் வரத்தானே செய்கிறது. அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

இன்னொன்று நானும் என் மகளும் பாடியது. மத்யமரில் சிலர் தைரியமாக பாடி பதிவேற்றுவதை கேட்கும் பொழுது நாம் கூட பாடலாம் போலிருக்கிறதே என்று தோன்றும். 

மற்றது வெள்ளி பாத்திரங்களை வீட்டிலேயே பளிச்சிட வைக்கும் டெக்னிக்.


பாருங்கள், கேளுங்கள், கருத்திடுங்கள். நன்றி. 

கருத்திடுங்கள் என்றதும் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. பல சமயங்களில் மற்றவர்களின் பதிவுகளுக்கு நான் அனுப்பும் கருத்து போய் சேர்வதில்லை. நான் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம். __/\__ __/\__

13 comments:

  1. நீங்களும் உங்கள் மகளும் பாடியிருபப்தை முகநூலிலேயே கேட்டு ரசித்தேன்.  நன்றாய்ப் பாடி இருந்தீர்கள்.  வெள்ளி பளிச்சிட வைக்கும் டெக்கினிக்கும் முதல் காணொளியும் பின்னர் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அங்கும் பாராட்டியிருந்தீர்கள். நன்றி.

      Delete
    2. வெள்ளிப்பாத்திரங்கள் பளபளப்புக் குறிப்பு ஸூப்பர். காணொளியில் காட்டி நிரூபித்திருப்பது சிறப்பு. உபயோகமான டிப்ஸ்

      Delete
  2. பாட்டு மிகப்பிரமாதம். உங்கள் இருஅருக்குமே நல்ல குரல்.
    அன்பு வாழ்த்துகள் மா.

    குட்டி விளக்குகளில் இண்டு இடுக்குகளில் இருக்கும்
    அழுக்கை எடுப்பதற்குள் அப்பாடா என்று ஆகிவிடும்.

    நல்ல காணொளி மா. மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. காணொளியில் கூறியுள்ளபடி வெள்ளி பாத்திரங்களை துலக்கி விட்டு சொல்லுங்கள்.

      Delete
  3. பாடுவதையும் இன்னொன்றையும் முகநூலிலேயே பார்த்தேன். உங்க உறவினர்களின் வீடியோ தான் புதிது. அதையும் இங்கே பார்த்து ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உறவினர் இல்லை, நண்பரின் பெணகள்.

      Delete
  4. காணொளிகள் கண்டேன். வெள்ளிப் பாத்திரங்கள் பளபளக்க குறிப்பு நன்று. பாடல்களும் இனிமை. தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. முதல் காணொளி பெண்கள் பாடிய காணொளிகள் கேட்டிருக்கிறென் பானுக்கா ஆஹா முதல் அங்க உங்க குடும்ப நண்பரின் குழந்தைகளா!! சூப்பர்!! பாராட்டுகள் சொல்லிடுங்க.

    நீங்களும் சுபாவும் பாடியதை யுட்யூபில் வந்ததும் கேட்டுவிட்டேன். அங்கு கருத்தும் போட்டிருக்கிறேன். செம உங்க குரலும் நன்றாக இருக்கிறது என்றால் சுபா குரல் வாவ். செம ரொம்ப நன்றாக இருக்கு. ப்ருகா/சங்கதிகள் நன்கு வருகிறது. ப்ராக்டீஸ் பண்ணச் சொல்லுங்க. ரொம்ப நன்றாகப் பாடுகிறார். வாழ்த்துகள் பாராட்டுகள் உங்கள் இருவருக்குமே. சுபாவுக்க்கு ஸ்பெஷல்!

    கீதா

    ReplyDelete
  6. வெள்ளிப் பாத்திர பள ப்ளப்புக் குறிப்பு! சூப்பர் இது புதியது எனக்கு. செய்துபார்க்கிறேன். நன்றி ஜெபி சானல்!!

    நான் விபூதி, அப்புறம் சபீனா அல்லது இப்போது கிடைக்கும் பிங்க் கலரில் கோபால் பல்பொடி போல கிடைக்கிறதே பேர் டக்கென்று வரவில்லை...அந்தப் பொடியும் வைத்து கூடவே நானும் ப்ரஷ் வைத்திருக்கிறேன். இண்டு இடுக்கு சுத்தம் செய்ய..

    கீதா

    ReplyDelete
  7. காணொளிகள் மூன்றும் கண்டேன் சிறப்பு.

    ReplyDelete
  8. மாடு மேய்க்கும் கண்ணே ... பாடல் அருமை.... சூப்பர்... சூப்பர்!!!

    ReplyDelete