கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 8, 2022

அலைக்கழித்த ஆட்டவா!

 அலைக்கழித்த ஆட்டவா!

மே.23 விக்டோரியா தினம் என்பதால் கனடாவில் அன்று விடுமுறை. அது எந்த கிழமையில் வந்தாலும் லாங் வீக் எண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23ம் தேதியை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமாம். இந்த வருடம் மே 21,22,23 அப்படிப்பட்ட விடுமுறை நாட்களாக அமைய

ஆட்டவாவிற்கும், மாண்ட்ரியாலுக்கும் சென்று வரலாம் என்று என் மகளும், மருமகனும் முடிவுசெய்து ஹோட்டல் அறைகள், பார்க்க வேண்டிய இடங்களில் நுழைவுச்சீட்டு போன்ற முன்பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே செய்து விட்டனர். 

21ம் தேதி சனிக்கிழமை காலை கிளம்ப வேண்டும். வெள்ளி மாலை முதல் என் இடது காலில் வாயு பிடிப்பு போல வலிக்க ஆரம்பித்தது. காலை நீட்டினால் சரியாகும் என்று என் மகள் சில பயிற்சிகளை கூறினாள். அவைகளை செய்ததும் வலி பொறுக்க முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்த என் மாப்பிள்ளை டூர் ப்ரோகராமை கான்சல் செய்து விடலாம் என்றார். 

வலியை குறைக்க மாத்திரை போட்டுக் கொண்டு என் மகளை விட்டு பிராணிக் ஹீலிங் செய்யச் சொன்னேன். அதன் பின்னர் வலி நன்றாக குறைந்து விட மறுநாள் கிளம்பினோம்.

இந்த வசந்த காலத்தில் ஆட்டவா வில் துலிப் ஃபெஸ்டிவல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா இந்த வருடம் மே 13 முதல் 23 வரை பதினோரு நாட்கள் நடந்தது. ஒரு பூங்கா முழுவதும் கலர் கலராக துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வருடம் (2022) எழுபதாவது வருடமாகிய பிளாட்டின விழாவாம்.

துலிப் மலர்கள் நட்பிற்கான மலர்களால் அறியப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனிய படையெடுப்பில் தப்பி கனடாவிற்கு அடைக்கலமாக வந்த டச்சு அரசு குடும்பம் இரண்டு வருடங்கள் இங்கே தங்கி யிருக்கிறார்கள். பிறகு நாடு திரும்பியதும் தங்கள் அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக 100,000 துலிப் கன்றுகளை டச்சு அரசி கனடாவிற்கு அனுப்பி வைத்தாராம். இன்றளவும் அந்த வழக்கம் தொடர்கிறதாம். டௌஸ் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் கமிஷனர் பார்க்கில்தான் இந்த துலிப் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் காரை நிறுத்த இடம் கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை அதிகம் நடக்கத் தேவையில்லாமல் காரை நிறுத்த முடிந்தது. 





தோட்டத்திற்குள் பtல வண்ண மலர்கள், பல வண்ண மனிதர்கள். துலிப் மலர்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக பாத்திக்கு ஊடாக வழி அமைத்து கொடுத்திருக்கின்றனர். 

ஆங்காங்கே உணவு கடைகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள தோதாக அமைப்புகள். குழந்தைகள் ஏன் பெரியவர்களும் விளையாட பெரிய அளவில் செஸ் போர்ட், சைனீஸ் செக்கர்ஸ் போன்ற உபகரணங்கள். 


இரவில் வாண வேடிக்கைகளும் இருக்குமாம்.

பூங்காவில் நாங்கள் நடக்கும் பொழுது நல்ல வெய்யில். தண்ணீர் குடித்து மாளவில்லை. மதிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டோம். ஆலு பராத்தாவும், வெஜிடபிள் பிரியாணியும், ராய்த்தாவும் ருசியாகவே இருந்தன. 

அதன் பிறகு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு ரைடு கால்வாயில்(Rideau canal) படகுசவாரியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு பைவார்ட் மார்க்கெட் செல்லலாம் என்று ஏற்பாடு. ஆனால் எங்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் வருண பகவான்.


- தொடரும்





15 comments:

  1. அங்கும் வெய்யில் அந்த அளவு தாங்க முடியாமல் இருக்குமா? சென்னையில் கொளுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. வீட்டிற்குள் தெரியவில்லை. வெளியே சென்றால் உணர முடிகிறது. யூ வி. ரேஸ் அதிகம் என்பதால் சான் ஸ்க்ரீன் லோஷன், குளிர் கண்ணாடி முதலியவை அவசியம். 

      Delete
  2. பிரானிக் ஹீலிங் முறையில் உங்கள் கால்வலி குணமானது மகிழ்ச்சி. என்ன செய்வார்கள்?​

    ReplyDelete
    Replies
    1. பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை சக்தியை நம் கரங்கள் மூலம்  பெற்று, அதைக்கொண்டு நோயுற்றவர்கள் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை வெளியேற்றும் முறைதான் ப்ராணிக் ஹீலிங். இதன் மூலம் வலிகளை குறைக்க முடியும். ஏன் பி.பி.யை கூட கட்டுப்படுத்த முடியும்.  தொலைவில் இருப்பவர்களுக்கு கூட டிஸ்டன்ஸ் ஹீலிங் என்னும் முறையில் குணப்படுத்த முடியும். கீழை நாடுகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின்  வேதனைகள், வலிகள் இவற்றை குறைக்க இப்படிப்பட்ட ப்ராணிக் ஹீலர்கள் உண்டாம். ஒரு வகை அக்கல்ட் சயின்ஸ்! சங்கிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. 

      Delete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மலர் அழகான படங்கள். அந்த இடத்தின் விபரங்கள் அறிந்து கொண்டேன். மலர்கள் மிகவும் அழகாக உள்ளது . பார்த்து ரசித்தமைக்கு வாழ்த்துகள். எங்களுக்கும் காண தந்தமைக்கு மிக்க நன்றி. கால் வலி இப்போது எப்படி உள்ளது குணமாகி விட்டீர்களா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அது வாய்வு பிடிப்புதான். சரியாகி விட்டது. நன்றி. 

      Delete
  4. கால்வலியா, கால வலியா? (அதாவது இளமைக்காலம் போய் இளம்-முதுமைக்காலம் வந்ததால் ஏற்பட்ட வலியா?) பூக்கள் என்றுமே மனதிற்கு அமைதி தருபவை.தான். ஆனால் கால்வலிக்கு அவை அமைதி தருமா என்று தெரியவில்லை. உரிய மருந்து எடுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. அது வாய்வு பிடிப்புதான். சரியாகி விட்டது. நன்றி. 

      Delete
  5. இதைப் படிச்சதும் போட்ட கருத்தைக் காணோமே! :(. நம்ம நாட்டிலும் ஜனவரி, ஃபெப்ரவரியில் ஜனாதிபதி மாளிகையில் மலர்க்கண்காட்சி நடைபெறும். ஊட்டி/கொடைக்கானல் மலர்க்கண்காட்சியும் பார்த்திருக்கேன். மண்ணுக்கும் மனதுக்கும் நிறைவானது. முன்னால் வேறே ஏதோ எழுதி இருந்தேன். மெயிலில் கூட இல்லை. :(

    ReplyDelete
  6. ஆமாம், நான் பிப்ரவரியில் டில்லி சென்றிருந்த பொழுது மலர் கண்காட்சி சமயம். ஆனால், கொரோனா காலம் என்றதால், சில கட்டுப்பாடுகள் இருந்தன, அதனால் பார்க்க முடியவில்லை. 

    ReplyDelete