கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 12, 2022

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

முதல் படத்தில் தெரிவது மியூசியம்

மதிய உணவை சாப்பிட்டு விட்டு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு, ரைட்யூ நதியில் படகு சவாரிக்கு வர வேண்டும் என்ற திட்டத்தின் படி மதிய உணவிற்குப் பின் அலெக்ஸாண்ட்ரா பாலத்தை நோக்கி வண்டியை செலுத்தினார் மருமகன். 

நேஷனல் வார் மெமோரியல் அருகே வந்த பொழுது தூறல் தொடங்கியது. ஆலங்கட்டி மழை போல பெரிய பெரிய மழைத்துளிகள் பெருத்த ஓசையோடு கார் மீது விழுந்தன. அன்றைய வானிலை அறிக்கையில் மூன்று மணிக்கு மழை என்று இருந்ததால் நாங்கள் குடைகள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று பெய்த மழைக்கு இந்த குடைகள் உதவியிருக்காது. அப்படி ஒரு பேய் மழை. கார் ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எதிரே சாலை தெரியவேயில்லை. பக்கவாட்டில் மரங்களின் ஆட்டம் பயமுறுத்தியது. எப்படியோ மாப்பிள்ளை சமாளித்து ஓட்டினார். ஜி.பி.எஸ் வேலை செய்யாததால் வழி காட்ட யாருமில்லை. ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். இந்த மழையில் போட்டிங் இருந்தால் கூட போக வேண்டாம் என்று தோன்றியது.
 
 



ஒரு வழியாக மழை விட்டது. நாங்கள் ரைட்யூ கேனால் வந்து சேர்ந்தோம். க்ரூஸ் கிளம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுது ஒரு க்ரூஸ் கிளம்பிச் சென்றதை பார்த்தோம். என் மகள் அதன் ஆர்கனைசர்களை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் புக் பண்ணியிருந்த 4:30 மணி க்ரூஸ் கேன்சலாகி விட்டதாகவும் 5:30 மணி க்ரூஸில் இடம் இருந்தால் எங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறினர். 

அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம்

அந்த க்ரூஸ் பயணம் ஒன்றரை மணிநேரம். நாங்கள் அவசரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. டயபர் வேறு மாற்ற வேண்டும். அதுவும் கையில் இல்லை. எனவே மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த க்ரூஸ் பயணத்தை ரத்து செய்து, சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் ஹோட்டலுக்குச் சென்றோம். 


செல்லும் வழியில் சாலையில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்பது ஹாலிடே இன் சென்ற பிறகுதான் தெரிந்தது. சற்று முன் மழை பெய்த பொழுது ஒரு பெரிய இடி இடித்தது, அதில் ஆட்டவா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாம். "சிஸ்டம் வேலை செய்யாததால் இப்போது செக் இன் செய்வது கடினம்". என்றார்கள். 

ஹோட்டலிலிருந்து வியூ 

என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். மறுநாள் செல்வதாக இருந்த மாண்ட்ரியாலுக்கு இன்றே சென்று விடலாமா? என்று தோன்றியது. அங்கு ஏதாவது ஹோட்டலில் இடம் கிடைக்குமா என்று தேடினால் எல்லா விடுதிகளுமே ஓவர் புக்ட்! சரி வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வரலாம். வழியில் ஏதாவது கடையில் குழந்தைகளுக்கு டெட்ராபேக்கில் பால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிரகம் விடவில்லை. மின்சாரம் இல்லாததால் எல்லா கடைகளும், மூடப்பட்டு விட்டன. 

திறந்திருந்த ஒரு இந்திய உணவு விடுதியில்,  "ஏ.சி. போட முடியாததால் உள்ளே சூடாக இருக்கும், மெனு கார்டில் இருக்கும் எல்லா ஐட்டம்களும் கிடைக்காது" என்றார்கள். அதனால் என்ன? சாப்பிட ஏதாவது கிடைக்கிறதே என்று அங்கேயே இரவு உணவை
முடித்துக் கொண்டோம். அங்கிருந்த பெண்மணி, "நாளைக் காலை பத்து மணிக்குத்தான் மின்சாரம் வரும்" என்று குண்டைப் போட்டார். கால் நீட்டி படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று ஹாலிடே இன்னுக்கே திரும்பினோம். 

"உங்கள் அறை ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டி உங்களுக்கு அறையைத் திறந்து விடுவார். பவர் இல்லாததால் லிஃப்ட் இல்லை, நீங்கள் படியேறித்தான் செல்ல வேண்டும். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்" என்றார்கள். அந்த அசௌகரியத்திற்காக பில் தொகையில் இருந்து டாலர் கழித்துக் கொண்டார்கள்.

செல்ஃபோனில் இருக்கும் டார்ச்சின் உதவியோடு எங்கள் உடைமைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினோம். கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

அறை வசதியாக இருந்தது. காஃபி மேக்கர், மைக்ரோ வேவ் அவன், அயர்ன் பாக்ஸ் என்று அத்தனையும் இருந்து என்ன பயன்? அவற்றை இயக்க மின்சாரம் இல்லையே!!

கனடா என்பதால் புழுக்கம் இல்லை. அதனால் நன்றாக தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு குளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது கரெண்ட் வந்து விட்டது. 

அப்பாடா! வாட் எ ரிலீஃப்! முதலில் காபி குடித்தோம். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக் ஃபாஸ்ட் என்றார்கள். என்ன பிரமாதம்? இட்லி, வடை, பொங்கல், பூரியா கிடைக்கப் போகிறது? ப்ரெட், பட்டர்,ஜாம், கார்ன் ஃப்ளேக்ஸ், பான் கேக்(Pan cake), கப் கேக் இவைதானே? சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் அருவியை பார்த்து விட்டு அந்த காட்டிற்குள் கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று சென்றோம். 

இதுதான் அருவியாம் 

வாட்டர் ஃபாலஸ், வாட்டர் ஃபால்ஸ் என்று என் மகள் கொடுத்த பில்ட் அப்பில் நான் குற்றாலம், பாபநாசம் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டேன். ஒரு சின்ன ஓடை, ஒரு பாறையிலிருந்து விழுகிறது,
அது வாட்டர் ஃபால்ஸாம்.. தோடா!


ஆனால் அந்த ட்ரேயில் (trail) மிக அழகு! எனக்கு அஹோபிலம்தான் நினைவுக்கு வந்தது. 

- இன்னும் வரும் 

24 comments:

  1. முகநூலிலும் படித்தேன். அம்பேரிக்காவிலும் அதிகமான/வேகமான புயல், மழை, வெள்ளம் எனில் மின்சாரம் துண்டிக்கப்படும். இதிலே மின்சார அடுப்பு இருக்கும் வீடுகளிலே தான் பிரச்னையும் அதிகமா இருக்கும். தேநீர் கூடப் போட்டுக்க முடியாது. நல்லவேளையாப் பெண்/பையர் வீடுகளில் எரிவாயு அடுப்பு. இயற்கையை வெல்ல எத்தனை பெரிய நாடானாலும் முடியாது என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது இயற்கை.

    ReplyDelete
    Replies
    1. ஆம், இயற்கைக்கு முன் மனிதனும் அவன் சாதனைகளும் தூசு.

      Delete
  2. பில்ட் அப் அதிகம் தான்...!

    ReplyDelete
  3. ஹோட்டல்களில் ஜென்ரேட்டர்கள் வைத்திருப்பார்களே? அப்படி இல்லாமல் இருந்தது மிக ஆச்சிரியமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல! எனக்கும் தோன்றியது. ஆனால் கேட்கலை.

      Delete
    2. எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த மாதிரி நிகழ்ந்ததே இல்லையாம். எதிர்பாராததை எதிர்பார்க்கவில்லை போலும். 

      Delete
  4. அமெரிக்காவில் நான் 25 வருடங்களாக இருக்கின்றேன் நான் வசித்த பகுதிகளில் இதுவரை வந்த கரெண்ட் கட் என்பது ஒரு சில நொடிகள் மட்டுமே புயல் நேரங்களில் பல இடங்களில் பாதித்து பவர் சப்ளை பல நாள் துண்டித்து இருக்கும் ஆனால் என் பகுதியில் அப்படி இதுவரை நேர்ந்ததே இல்லை 10 வருடங்களுக்கு முன்பு சாண்டி புயல் வந்தது மிகப் பெரிய அழிவை நீயூயார்க் நீயூஜெர்ஸி பகுதியில் ஏற்படுத்தியது. அந்த சம்யத்தில் கரெண்ட் பாதிக்கும் என்று நினைத்து நான் மிகப் பெரிய ஜென்ரேட்டர் ஒன்று வாங்கி வைத்தேன் அந்த சம்யத்தில் 1200 டாலர் அதன் விலை அது இன்னும் பெட்டியில் இருந்து பிரிக்காமல் அப்பட்யே இன்னும் காராஜில் இருக்கிறது சாண்டி புயல் சம்யத்தில் கரென்ட் கட் ஆகும் அப்பொது மெழுகு வர்த்தி வைத்து சாப்பிடுவோம் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனோம் என் மகள் மிகவும் அப்சட் அதனால் அவளுக்காக வீட்டில் உள்ள எல்லா விளைக்குகளை அணைத்தும் ஜன்னல் வழியாக எந்த வித ஒரு வெளிச்சமும் வாராமல் மூடி மொழுகு வர்த்தி ஏற்றி வைத்து சாப்பிட்டோம்

    ReplyDelete
  5. Replies
    1. அதேதான், எல்லாம் நம்ம நேரம் எனலாமா?

      Delete
  6. நியூயார்க் சப்வேயில் இரண்டு நாள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது -புயல் அல்லாத ஒரு நாளில்! நியூ ஜெர்ஸியில் மின்சாரம் அடிக்கடி போகும். ஒரு சமயம் ஐந்து மணி நேரம் திரும்பவில்லை. எந்த நாடாக இருந்தாலும் கருவிகள் சில சமயம் இயங்காமல் போவது சகஜமே. அமெரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன? இங்கு பல்வேறு தனியார்கள் வசம் மின்சாரம் இருக்கிறது. ஒவ்வொருவரின் தரமும் சற்று வித்தியாசப்படத் தானே செய்யும்! ஆனால் மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொள்ள யாரும் அவதிப்படவேண்டாம் என்பதுதான் ஒரு நிம்மதி. சம்பந்தப்பட்ட கம்பெனியிடமிருந்து, இத்தனை மணிக்குள் மின்சாரம் சரியாகிவிடும் என்ற குறுஞ்செய்தி உடனே வந்துவிடும். கனடா இன்னும் பிரிட்டிஷ் ராணியின் கீழ் இருப்பதால் அங்கு பிரச்சினை வேறுவிதம் போல!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதிகபட்சமாக அரைமணி நேரத்திற்குள் வந்து விடுமாம். அன்று கொஞ்சம் விபரீதம். 

      Delete
  7. ஓரளவுக்காவது சமாளிக்கும் அளவுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்து வைக்கவில்லையா தங்குமிட நிறுவனங்கள்?  சோலார்,  இன்வெர்ட்டர் போல...  இப்போது இந்தக் காலத்தில் கரண்ட் இல்லாது  போனால் மனித வாழ்க்கையின் முக்கால் இயக்கங்கள் நின்று போகும் என தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தில் இந்தியா பரவாயில்லையோனு தோணும். இங்கெல்லாம் எல்லா ஓட்டல்களிலும் ராக்ஷத ஜெனரேட்டர் இருக்கு. அடிக்கடி மின்சாரம் போயிடுமே!

      Delete
    2. இத்தனை நாட்களாக இப்படி அவ்வளவு நேரம் மின்சாரம் தடை படாததால் ஜெனரேட்டர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லையோ என்னவோ?

      Delete
    3. @கீதா அக்கா: இந்தியா பல விஷயங்களில் உயர்வுதான். வெறும் தரையிலேயே நீந்தி வந்து விடும் திறமை உண்டு. ஊழல் மட்டும் இல்லையென்றால் எங்கேயோ சென்று விடுவோம். 

      Delete
  8. அருவி மகள் குழந்தைப் பருவத்தில் இருக்கிறாளோ என்னவோ...!!

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி

    ஆகா.. நான் இதற்கு முன் இந்தப் பதிவுக்கு போட்ட கருத்துரை காணவில்லையே... எங்கே போயிற்றோ ? போட்டதும் வாக்கியங்களோடு மறந்து விட்டது. எனக்கு இந்த தலைவலி இப்போதுதான் ஆரம்பம். பார்க்கலாம். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நான் பார்த்த நினைவு இருக்கு கமலா. மெயில் பாக்ஸில் பாருங்கள். அங்கே இருந்தால் காப்பி, பேஸ்ட் பண்ணிப் போடலாம் திரும்பவும்.

      Delete
    2. தங்கள் சாட்சியத்திற்கு நன்றி சகோதரி. :) நீங்கள் சொன்னபடி பார்க்கிறேன். நன்றி.

      Delete

  10. ஹாஹா! வெல்கம் டு த ப்ளாகர் படுத்தல் க்ரூப் கமலா! 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. க்ரூப்பில் இணைத்ததற்கு நன்றி.

      Delete
  11. படங்கள் அசத்தல் பானுக்கா. அதுவும் சுபாவின் கைகளில் பாலம்!!!! அலெக்சாட்ரா பாலம் அழகு. தகவல்களும் சூப்பர்

    மின்சாரம் இல்லை என்றால் எலலம் போச்சு என்ற நிலைமை பாருங்கள். இந்தப் பயமுறுத்தில் அடிக்கடி வந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் எல்லாமே ப்ளாக் அவுட் ஆகி கற்காலம் ஆகிவிடும் என்று

    நாம் இயற்கையிலிருந்து விலகி தொழில்நுட்பங்களுக்கு எவ்வளவு அடிமை ஆகியிருக்கிறோம் அல்லது தொழில்நுட்பங்கள் நம்மை ஆள்கின்றன என்று. இயற்கையை ரசிக்கவும் கூடத் தொழில்நுட்பங்கள் மறைமுகமாகத் தேவையாகிவிட்டன என்பதும் தெரிகிறது.

    கீதா

    ReplyDelete