கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 9, 2022

கெட்ட சொப்பனம்..


கெட்ட சொப்பனம்..

பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரிலீசாகி விட்டது. திரையரங்குகளில் ஒரே கும்பல். முதல் காட்சியை என் மகள் என் சகோதரி குடும்பத்தோடு பார்த்து விட்டாள். "என்னை விட்டு விட்டு நீ மட்டும் பார்த்து விட்டாய்" என்று அவளிடம் கூறி விட்டு நான் வரிசையில் நிற்கச் செல்கிறேன். என்னோடு பாம்பே ஜெயஶ்ரீ இணைந்து கொள்கிறார். தியேட்டரில் உள்ளே வருபவர்களுக்கெல்லாம் வாழை மட்டை தட்டில் பொங்கல் தருகிறார்கள். இந்த நேரத்தில் பாம்பே ஜெயஶ்ரீ எங்கேயோ சென்று விடுகிறார். 

நான் படம் பார்த்து விட்டு Awesome என்ற ஒரே வார்த்தையை பெரிதாக என் பிளாகில் விமர்சனமாக எழுதுகிறேன். அதற்கு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், "அதற்குள் பார்த்து விட்டீர்களா? ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவா?" என்று கேட்கிறார். கீதா அக்கா,"நிஜமாக வா..? நன்றாக இருக்கிறதா?" என்கிறார். எனக்கு திடீரென நாம் நிஜமாகவே படத்தை பார்த்தோமா? பாதியில் தூங்கி விட்டோம் போலிருக்கிறதே..? இதில் விமர்சனம் வேறு எழுதி விட்டோம் என்று சந்தேகம் வருகிறது. புரண்டு படுத்து முழித்துக் கொண்டு விட்டேன். 

நேற்று பொன்னியின் செல்வன் -1 டீசர் பார்த்தேன். அதற்கு இப்படி ஒரு விளைவா? சின்ன வயதில் ராத்திரி நேரத்தில் பேய்க்கதைகளை படிக்க க் கூடாது கெட்ட சொப்பனம் வரும் என்பார்கள். 

13 comments:

  1. ஆத்தாடி...! சம்பந்தப்பட்ட டீசர் அப்படியோ...?!

    ReplyDelete
  2. நூல் வாசித்தோரை எப்படி படம் எடுத்தாலும் திருப்திபடுத்த முடியாதுதான் மேடம். பார்க்கலாம் படம் எப்படி வருகிறது என.

    ReplyDelete
  3. மோசமான டீஸரை முதலில் வெளியிடுவது தான் நல்லது. இல்லையெனில் படத்தை விட டீஸரே மேல் என்று எழுதுவார்கள் காசுக்கு எழுதும் பல சமூகஊடகர்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஏன் கெட்ட சொப்பனம் என்கிறீர்கள்?  இதில் கெட்டது என்பது மறைபொருளாக உணர்த்துவதா?!

    ReplyDelete
  6. எப்போ வந்தாலும் நான் பார்க்கப் போவதில்லை. என் மனதுக்குள் நான் கட்டி வைத்திருக்கும் கோட்டை இடிந்துவிடும். டீசர் நானும் பார்த்தேன். சகிக்கலை. ஐஸ்வர்யாராயின் தலை அலங்காரமே சரியில்லை. ஒரு வேளை அது மந்தாகினியின் பாத்திரத்துக்கானது எனில் அப்போதும் சரியில்லை. முகத்தில் அந்தப் பித்துப் பிடித்த களை ஓவியத்தில் மணியம்.வினு/பின்னாட்களில் வேறொருத்தர் கொண்டு வந்தது போல் இங்கே மேக்கப்பில் வரலை. திரிஷாவுக்குக் குந்தவை வேடம் பொருந்தவே இல்லை. ஜெயராமைப் போய் ஆழ்வார்க்கடியானாக்கி! கடவுளே! ஆதித்தகரிகாலன் நெற்றியில் விபூதி இல்லை. சோழ மன்னர்கள் சிறந்த சிவபக்தர்கள். ராஜராஜசோழன் யோக முறையில் தான் உயிர் நீத்தான் என்றொரு கருத்து உண்டு. அதை வைத்து என் சிநேகிதர் திவாகர் எம்டன் புத்தகத்தில் விரிவாக எழுதியும் இருப்பார். ஆனால் இங்கே?

    ReplyDelete
  7. முழுவதும் பார்க்கும் முன்னர் சொல்லக் கூடாது எனினும் போர்க்களக்காட்சிகள் எல்லாம் நினைவுகளிலும்/பேச்சுக்களிலுமே வரும். உண்மையான போர்க்களம் இதில் வராது. அருள்மொழிவர்மனும்/வந்தியத்தேவனும் மட்டும் இரு முறை சண்டை போட்டுக்கொள்வார்கள். முதல் முறை பார்க்கையில். பின்னால் ஒரு முறை தன்னைக் கடந்து செல்ல இருந்தவர்களை அருள்மொழி வர்மன் நிறுத்துவதற்கு. அதுவும் இலங்கை வீதியில். பூங்குழலி யார்னு தெரியலை. சேந்தன் அமுதன் சிறந்த சிவபக்தன். அவன் நெற்றியிலாவது விபூதி இருக்குமா? தெரியலை.

    ReplyDelete
  8. என்னைப் பொறுத்த அளவில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. மோகமுள் பார்த்துட்டு வெறுத்துப் போயிட்டேன். தி.ஜா. இருந்திருந்தால்! :( அல்லது இருந்தாரா? நினைவில் இல்லை. தமிழில் மட்டும் நல்ல திரைப்படம் என்பது குதிரைக்கொம்பு. கதாநாயக/நாயகிகளுக்காக சமரசம் செய்து கொள்ளும் தயாரிப்பாளர்கள்.இயக்குநர்கள்/ரசிகர்கள்.(இவங்க தான் ஆஹா, ஓஹோ எனத்தூக்கியும் விடுவாங்க!)

    ReplyDelete
  9. ஹாஹாஹா பானுக்கா டீசர் ஏற்படுத்திய விளைவா....ஆ...ஆனால் கனவு அப்படிச் சொல்லவில்லையே...படம் நன்றாக இருக்குமோ!! வேண்டாம் ரொம்ப ஓவரா எதிர்பார்க்கவே கூடாது!! ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  10. பாம்பேஜெயஸ்ரீ கச்சேரி ஏதேனும் கேட்டீங்களா அவங்க வந்திருக்காங்க...கோயில் கச்சேரியோ இல்லை டிசம்பர் கச்சேரியோ அதான் பொங்கல் வேற!! கச்சேரியும் பொன்னியின் செல்வன் டீசரும் கலந்து கட்டி!!??

    கீதா

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி

    நான் போட்ட கருத்து காணவில்லையே..? ப்ளைட் ஏறி வரும் போது எங்கேனும் தவறுதலாக விழுந்து விட்டதோ என்னவோ.. :) இதுவும் அப்படியே விழவும் திட்டமிட்டிருக்கிறதா என்பதும் நாமறியோம்.ஹா ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. வாழைமட்டையில் பொங்கல் - எனக்கு அது, வெண்பொங்கலா சர்க்கரைப் பொங்கலா என்ற சந்தேகம் வருது. இதை நினைத்து எனக்கு இன்று கனவு வந்துவிடுமோ? நல்லவேளை எனக்கு ப்ளாக்ஸ்பாட் எதுவும் இல்லை, உடனே பகிர்ந்துகொள்வதற்கு.

    பொன்னியின் செல்வன் கதையில் மதமாற்றங்கள் புகுத்தப்படுது என்று ஒரு பட்சி சொல்லுதே...

    ReplyDelete
    Replies
    1. பக்ஷி ஏன் சொல்லணும்? அதான் வெளிப்படை! ஆழ்வார்க்கடியான் நெற்றியில் திரு நாமம் இல்லை. சோழர்கள் முகத்தில் விபூதி கிடையாது. பாழ் நெற்றி!
      பி.கு. நானும் வாழை மட்டையில் பொங்கல் கொடுத்துப் பார்க்கலை. தாமரை இலை, மந்தாரை இலையில் கொடுப்பாங்க.

      Delete