கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, July 20, 2022

வாஷி (மலையாள திரைப்படம்)

வாஷி 

(மலையாள திரைப்படம்)


மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்று பொருள்.(அப்படித்தானே கீதா?)

இளம் வக்கீல்களான எபின் மாத்யூ
(டொவினோ தாமஸ்),  மது(கீர்த்தி சுரேஷ்) இருவரும் வெற்றிகரமான வக்கீல்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். அவர்களுடைய வெல்விஷர் மூலம் ஒரே அலுவலகத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளும் இருவருக்குமிடையே காதல் பூக்கிறது. 

சாராயக்கடை நடத்தும், அரசியல் செல்வாக்குள்ள சகோதரியின் கணவர் மூலம் எபினுக்கு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டர் பதவி கிடைக்கிறது. 

டொவினோ தாமஸ் பப்ளிக் பிராக்ஸிக்யூட்டராக வாதாடும் முதல் கேஸிலேயே அவருக்கு எதிராக அவருடைய மனைவியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ். இருவருக்குமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இது ஒரு முக்கியமான கேஸ். குற்றம் சாட்டப்பட்ட ஆணை காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் முயல, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக டொவினோ தாமஸ்.  இந்த வழக்கு சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையையும் பாதித்து, இளம் தம்பதிகளான அவர்கள் தனித்தனியே உறங்கும் அளவிற்குச் செல்கிறது. கேஸில் யார் ஜெயித்தார்கள்? அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதையெல்லாம் மிகையில்லாமல், இயல்பாக, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம். 

கடைசியில் தன் வாதத்தை தொகுத்து வழங்கும் கீர்த்தி சுரேஷ்  எல்லா படங்களையும் போல உடைந்து போய் அழுது தன் வாதத்தை முடிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. அப்படியெல்லாம் இல்லை. 

நோ ஹீரோயிசம், நோ மெலோ டிராமா, நோ வயலென்ஸ், நோ டூயட், நோ தனி காமெடி டிராக்‌.

கட்டுக்கோப்பான திரைக்கதை, இயல்பான காட்சிகள், வசனங்கள் மற்றும் நடிப்பு.  நிச்சயமாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம். 
Available in Netflix. 

20 comments:

  1. தமிழிலும் வசனங்கள் ஒலித்தால் தேவலாம்.  மொழிபெயர்ப்பைப் படித்தால் படம் பார்க்க ம்டுய்வதில்லை.  படத்தைப் பார்த்தால் மொழிபெயர்ப்பைப் படிக்க முடிவதில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 20, 2022 at 10:47 AM

      வசனங்கள் தமிழிலும் உண்டு

      Delete
  2. நானும் சில வெவ்வேறு படங்கள் பார்த்தேன்.  பகிரலாமா என்று யோசித்து கைவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 20, 2022 at 10:48 AM

      பகிரலாமே..

      Delete
  3. //கீர்த்தி சுரேஷ் எல்லா படங்களையும் போல உடைந்து போய் அழுது தன் வாதத்தை முடிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. அப்படியெல்லாம் இல்லை. // இது என்ன தமிழ்ப்படமா? அப்படி எல்லாம் முடிய?: யதார்த்தத்தை அப்படியே சொல்லும் மலையாளப் படம்.

    ReplyDelete
    Replies
    1. //இது என்ன தமிழ்ப்படமா? அப்படி எல்லாம் முடிய?//ஹிந்தி, கன்னடம், தெலுங்கு படங்களிலும் உண்டு

      Delete
  4. பார்த்து விட வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. பானுமதிJuly 20, 2022 at 10:51 AM

      பாருங்கள், ரசிக்க முடியும்.

      Delete
  5. വാശി പിടിച്ചു ഊ ചിത്രം ഞാൻ കാന്നും - കില്ലർജി

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்July 20, 2022 at 10:55 AM

      സന്തോഷം (நன்றி கூகுள்)

      Delete
  6. //மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்று பொருள்.// இலக்கு, பிடிவாதம், முரண்டு, தீவிரம் என்பனவும் அதற்கு இணையான தமிழ் சொற்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருப்பதை நான் மறந்து விட்டேன். தகவலுக்கு நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    படத்தைக் குறித்த நல்ல விமர்சனம். நான் இதுவரை பார்க்கவில்லை. வீட்டில் எங்கள் குழந்தைகள் முன்பே பார்த்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. சந்தர்ப்பம் அமைந்தால் நானும் பார்க்க ஆவல் வருகிறது. . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. ஹாஹாஹா பானுக்கா இங்கே மலையாளம் அறிந்த கில்லர்ஜி, மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட துளசி இருக்கறப்ப மீ!!!

    ஆமாம்

    கதை யதார்த்தம் என்று தெரிகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஜெயகுமார் சாரை மறந்து விட்டீர்களே..?

      Delete
  9. அர்த்தம் அதுதான். திரை அரங்கில் வந்த போது படம் பார்க்கவில்லை. விமர்சனம் நன்று. பார்க்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நெட் ஃப்ளிக்ஸிலும் பார்க்கலாம்.

      Delete
  10. ட்வுன்லோட் செய்து பார்த்துவிட்டேன். யதார்த்தமாக இருந்தது. வித்தியாசமான கதைதான். முடிவும் நன்றாக இருந்தது.

    துளசிதரன்

    ReplyDelete
  11. தமிழிலும் நல்ல படங்கள் வருகின்றனவே!

    ReplyDelete