கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, March 20, 2023

ஒரு விளக்கம்

ஒரு விளக்கம்:

என்னுடைய சென்ற பதிவில் முரளி என்பவரின் மர்ம மரணம் படித்தவர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது புரிந்தது, காரணம் நான் சில தகவல்களை முழுமையாகத் தரவில்லை.  அதில் அவர் மனைவி முதல்  நாளே பேஸஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட்   பார்க்காததுதான் எனக்கு உறுத்தியது. முதலில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே பேசெஞ்சேர்ஸ் மேனிபெஸ்ட் பார்த்திருக்கிறார். அதன் பிறகு போலீஸில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால்   போலீஸ் மெத்தனமாக இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. திறமையாக செயல்பட்டிருந்தால் அடையாளம் தெரியாத உடலை இவருக்கு காட்டியிருப்பார்கள். 

ஒரு ஜோதிடர், உங்களுக்கு அவரைப் பற்றி செய்தி வரும் என்று கூறிய சில நாட்களிலேயே அவருடைய உடை மற்றும் பாஸ் போர்ட் பார்சலில் வந்திருக்கிறது. அதில் மிகவும் பயந்து போய் விட்டார் அவர் மனைவி. உடனேயே அவரைப் பற்றிய தகவல் மராட்டிய செய்தித் தாளில் வந்து, அவர் போலீசால் தகனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்திருக்கிறது. எங்கேயோ, ஏதோ தவறு நடந்திருக்கிறது, அதை தோண்டப் போய் குழந்தைகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் கேஸை வாபஸ் வாங்கி விட்டார். 

அதன் பிறகு எங்களுக்கு கிடைத்த செய்தி இறந்து போன முரளி ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடு பட்டிருந்தாராம். அது கூட துர் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம், அதை அவர் மனைவி அறிவாரா? என்பதும் தெரியாது. நமக்கு சரியாக தெரியாத விஷயங்களை எழுத வேண்டாமே என்று விட்டு விட்டேன். 

3 comments:

  1. ஓ.. ஆபத்தை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் முரளி. மேலும் கேஸை ஒருநிலையில் வாபஸ் வாங்கி விட்டார் என்றால் மனைவியும் ஓரளவு விஷயம் அறிந்திருக்கிறார் என்றுதானே பொருள்!

    ReplyDelete
  2. மர்மம் இன்னமும் இருக்கலாம்....

    ReplyDelete
  3. முரளி ஏதோ ஒரு வகை ஆபத்தில் சிக்கியிருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது பானுக்கா......மனைவிக்கும் ஏதோ தெரிந்திருக்கும், பயம் வந்திருக்கும் கண்டிப்பாக...அதனால்தான் கேஸை வாபஸ் வாங்கியிருக்கிறார். நிஜமாகவே க்ரைம் த்ரில்லர் போல இருக்கு...

    கீதா

    ReplyDelete