அருகி வரும் பழக்கங்கள்
சென்ற திங்களன்று நெருங்கிய உறவில்
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! டிரஸ்ட் மீ அங்கு ஒரு பெண்
தாவணி அணிந்து கொண்டு வந்திருந்தாள். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?..” என்று ஒரு
பழைய பாட்டு உண்டு. இப்போது அதை, “பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?..” என்றுதான்
பாட வேண்டும். தாவணி என்பது வழக்கொழிந்து போய் விட்டது. கிராமங்களில் கூட இளம் பெண்கள்
தாவணி அணிவதில்லை. சூடிதார்தான்”. என்றேன்.
அந்தப்
பெண்ணின் தாய், “ஆமாம், கடைகளில் தாவணி கிடைப்பதில்லை. ஒன்று மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக
இருக்கும் அல்லது ஜகஜகவென்று இருக்கும். நான் புடவை வாங்கி, அதை தாவணியாக கிழித்துத்
தருகிறேன். உங்களுக்கு ஏதாவது தாவணி கிடைக்கும் கடை தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார்.
யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்.
அப்படி
வழக்கொழிந்துகொண்டே வரும் ஒரு நல்ல பழக்கம் பெரியவர்களை வணங்குவது. என் அம்மாவுக்கு
பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊர். தெற்குத் தெருவில் பிறந்த வீடு, வடக்குத்
தெருவில் புகுந்த வீடு. ஆனாலும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும்
போதெல்லாம் இங்கிருக்கும் பெரியவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுதான் செல்வார்.
அம்மா நமஸ்காரம் பண்ணும் பொழுது, கூடவே நாங்களும் நமஸ்காரம் செய்வோம்.
தீபாவளி
அன்று, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கொண்டதும், ஸ்வாமிக்கு
நமஸ்காரம் செய்து விட்டு, வீட்டு பெரியவர்களை வணங்கிய பிறகுதான் பட்டாசு வெடிக்கச்
செல்வோம். கார்த்திகை அன்று விளக்கேற்றியதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம்.
காரடையான் நோன்பு அன்றும் நோன்பு சரடு கட்டிக் கொண்டதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம்
செய்வதுண்டு. கனுப்பொங்கல் அன்று மஞ்சள் கீறிக் கொண்டதும், மஞ்சள் கீறி விடுபவர்களுக்கு
நமஸ்காரம் செய்வோம். பிறந்த நாள், திருமண நாட்களில் நிச்சயம் நமஸ்காரம் செய்வோம். வெளியூர்களுக்குச்
செல்லும்பொழுது ஸ்வாமிக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டுதான்
கிளம்புவோம். என் அக்காவின் ஸ்நேகிதியின் வீட்டில் தினமுமே அம்மாவிடம் தலை பின்னிக்
கொண்டதும் நமஸ்கரித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள்.
நம் வீட்டுக்கு
வரும் பெரியவர்களுக்கும், நாம் செல்லும் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம்
செய்வதுண்டு. எங்கள் அத்தைப்பெண் வேடிக்கையாக, “ யாரோ கல்யாணத்தில் என் அப்பா, தூரத்து
சொந்தக் காரரை அறிமுகப்படுத்தி, அவருக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்றார், அது சரியா தாலி
கட்டும் நேரம், எல்லோரும் தூவும் அட்சதையெல்லாம் என் தலையில் விழுகிறது” என்பாள்.
இப்போது
நமஸ்காரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் நாம்தானோ? நாம்
நடுத்தர வயதில் இருக்கும்பொழுது யாராவது நமஸ்கரிக்க வந்தால், “சீ சீ! நமஸ்காரமெல்லாம்
வேண்டாம்” என்று மறுத்து, அந்த நல்ல பழக்கத்தை வேரறுத்து விட்டு, எல்லோரும் ஹை, ஹை
என்று மாடு மேய்க்கிறோம் வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும்
இருக்கிறது.
உண்மை...நாமும் ஒரு காரணமே..
ReplyDeleteஆமாம், வருத்தமான உண்மை. வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. கிராமத்திலும், ஓரிரு இடங்களை தவிர தாவணி போடும் பழக்கம் எப்போதோ போய் விட்டது நான் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் தாவணி இருந்தது. காலப்போக்கில் அங்கு யூனிபார்ம் சூடிதாராக மாறி தாவணி கலாச்சாரத்தை இல்லாமல் செய்து விட்டது.
அது சரி... அப்போது (நாங்கள் மதுரை அருகே வசித்த போது) மதுரை அருகே மாட்டுத்தாவணி என்ற பெயருடன் ஒரு இடம் இருந்தது. இப்போது அதுவும் இருக்கிறதோ இல்லையோ என்னவோ:)))
பெரியவர்களை நமஸ்கரிக்கும் பழக்கமும் இப்போது போயே போச்சு. என் திருமணத்தில் பெரியவர்கள் ஒவ்வொருரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறோம் . இப்போது மேடையில் இருந்தபடியே ஒரே நமஸ்காரம்.
நீங்கள் சொல்லியபடி ஊருக்குச் செல்லும் போதும், சென்ற பிறகு புகுந்த வீட்டு பெரியவர்கள், வீட்டு விஷேடங்கள் நோன்பு என அடிக்கடி அனைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதங்களை பெற்றிருக்கிறேன். இப்போதுள்ளவர்கள் மனதில்தான் மரியாதை என்கிறார்கள். காலங்கள் மாறி விட்டது. அவ்வளவுதான்..!
/வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. /
உண்மை... கால, நேரம் என்றில்லாமல், பொது இடம் என்றில்லாமல் பொசுக்கென வீட்டு பெரியவர்களின் காலை தொட்டு கும்பிடுவதை பார்க்கும் போது, பழைய நம்முடைய காலம் நம் கண்களுக்கு தெரியும்.
அங்கிருந்து ஆடைகளின் வடிவமைப்பை எளிதில் கற்று கொண்டு பெரியவர்களிடம் ஆசிகளை பெறும் பழக்கத்தை விட்டு விட்டார்கள். ஒன்று வரும் போது ஒன்று விலகிப் போவது இயல்புதானே..! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//என் திருமணத்தில் பெரியவர்கள் ஒவ்வொருரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறோம் . இப்போது மேடையில் இருந்தபடியே ஒரே நமஸ்காரம்.// நானும் இதை குறிப்பிட நியனித்தேன், மற்ந்து விட்டது. நன்றி
Deleteமுதலில் படித்தபோது பேஷன் போல ஒரு நடுத்தர வயது அல்லது பெரிய பெண்மணி தாவணி அணிந்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். பின்னர்தான் வயசுப்பெண் தாவணி அணிவதே அதிர்ச்சி, ஆச்சர்யம் அளித்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன்!
ReplyDelete:))))
Deleteஎங்கள் இல்ல விழாக்களில் சாதாரணமாக தாவணி அணிகிறார்கள். யாரும் வித்தியாசமாய் பார்ப்பதில்லை. அதாவது வழக்கொழிந்து விட்ட வழக்கம் என்று யாரும் நினைப்பதில்லை.
ReplyDeleteஎங்கள் குடும்பத்தில் இளைய தலைமுறையினர் யாரும் தாவணி அணிவதில்லை. வெகு அபூர்வமாக ஏதவது பூஜை சமயங்களில் அணிகிறார்கள்.
Deleteபெரியோரை வணங்கும் வழக்கம் குறைந்துதான் வருகிறது. ஆரம்பம் தனியார் ஆகியவககங்களில்.. வயதான அதிகாரியாக இருந்தாலும் வந்திருக்கும் ஜூனியர் அவரை பெயர் சொல்லித்தான் கூப்பிடும் நாகரீகம்!
ReplyDeleteகார்பரேட் கலாசாரம்!. மஸ்கட்டில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது எங்கள் எங்கள் டிபார்ட்மெண்ட் டைரக்டரைக் கூட பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம்.
Deleteஅக்கா, உங்க முதல் பத்தி - தாவணிக் கனவுகள்!!!!! எனக்கு நினைவுகளை மீட்டெடுத்தது.
ReplyDeleteஆனால் நான் சங்கடப்பட்டதுண்டு. இரு காரணங்கள். என்னதான் இடுப்பு தெரியாத அளவு ரவிக்கை அணிந்தாலும் அப்போதெல்லாம் ஹை நெக் பிரசித்தம் என்பதை விட நான் விரும்பியதும் அதுதான்...கொஞ்சம் தழைவான (இப்போது பலரும் அணிவது போல் அல்ல...) கழுத்து இருக்கும் ரவிக்கை அணிந்தால்...சிரமம். எல்லாம் பேருந்தில் கூட்டத்தில் சிக்கி ஒவ்வொரு நாளும் பள்ளிக்க்கும், கல்லூரிக்கும் சென்று வந்தது....22 வயதுவரை...இடுப்பில் கை வைப்பார்கள் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு....கழுத்தில் எதையாவந்து வைத்து வருடுவார்கள்....
இரண்டாவது காரணம் எனக்கு உள்ளாடை அணிவது மிகவும் சிரமம். இறுக்கமாக எதையும் அணிய முடியாது. காரணம் குழந்தை பிறந்த பிறகுதான் தெரிந்தது...செவைக்கல் ரிப் அதனால் இடப்புறம் கொஞ்சம் வீங்கியே இருக்கும். இப்போது வரை எனக்கு இறுக்கமாக எதுவும் அணிய முடியாது. எனவே எனக்குத் தனிப்பட்ட முறையில் தாவணி பிடித்தாலும் அணிய விரும்புவது சுடிதார்தான்.
கீதா
வழக்கம் போல் விரமான பதில். நன்றி.
Deleteவிவரமான பதில்.
Deleteதாவணி - வழக்கொழிந்து போனதில் வருத்தம் தான். எல்லாம் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. லேஹங்கா - சோளி நம் ஊருக்கு வந்து கோலோச்சுகிறது.
ReplyDeleteபெரிய்வர்களை வணங்கும் வழக்கம் - இப்போதும் இங்கே (வடக்கில்) இருக்கிறது - பெயருக்கேனும்! மொத்தமாக காலில் விழாமல் கொஞ்சம் குனிந்து ஒரு கையால் பெரியவர்களின் முழங்கால் தொடும் வழக்கம்!
//லேஹங்கா - சோளி நம் ஊருக்கு வந்து கோலோச்சுகிறது.// கரெக்டுதான். நன்றி.
Deleteஇப்போது பலரும், புடவையும் சரி, தாவணியும் சரி, வேறு நாகரீக உடைகள் பல வந்திருக்கே ஏல்லாமுமே.....அணியும் விதம் உறுத்துகிறது. புடவைக்கான ரவிக்கை உள்ளாடை போல அணிகிறார்கள்...முன் பக்கம் மேலாக்கை அதென்னவோ தழைத்து வைத்துக் கொண்டு அணிகிறார்கள். இடுப்பைக் காட்டி, லோ ஹிப் வேறு உறுத்துகிறது. மேலாக்கை நன்றாக முழுவதும் கவர் செய்வது போல் அணிவது இல்லை...எனவே எந்த உடையும் அணிந்தால், நம்மைப் பார்ப்பவர்களுக்கு நம் மேல் ஒரு மரியாதை கலந்த பார்வை வேண்டும் என்று என் பள்ளி மேரி லீலா ஆசிரியை சொல்லிக் கொடுத்த அது இப்பவும் பசுமையாய்.
ReplyDeleteஇப்ப பார்த்தீங்கனா சானல்களில் கொஞ்சம் புகழ் பெற்றுவிட்டால் அடுத்து அவங்க உடனே கொஞ்சம் அப்படியும் இப்படியுமான உடைகள் அல்லது அரைகுரை ஆடை அணியத் தொடங்கிவிடுகிறார்கள்...
நாகரீகம் மற்றும் முற்போக்குக் கருத்துகள் கொண்ட எனக்குமே அது கொஞ்சம் உறுத்துகிறது.
கீதா
//லேஹங்கா - சோளி நம் ஊருக்கு வந்து கோலோச்சுகிறது.// ஆமாம், பொருத்தமில்லாத ஆடைகள் உறுத்தவே செய்யும். எங்கள் சொசைடியில் சில பெண்களின் உடை நமக்கு கூச்சமாக இருக்கும்.
Deleteநவீனம்...!?
ReplyDeleteஅப்படி நினைப்பு.
ReplyDelete