முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள்
குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி
சமீபத்தில்
வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும்
முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப்
பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும்
பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம்
இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம்.
கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை.
அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு
பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.
முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.
குளத்தின் முகப்பு |
கோவிலுக்கு
எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில்
நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள்
நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை
காண முடிகிறது.
நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம் |
குளத்தைச்
சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின்
அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில்
இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை
சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’
என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம்,
திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
புதிய கோவிலா? அப்படியெல்லாம் கூட கட்டுகிறார்கள் என்பது வியப்புதான். அரசர்கள் காலத்தில்தான் கோவில் கட்டினார்கள், அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக (உள்நாட்டில்) தான் கட்டுகிறார்கள்.
ReplyDeleteநகரங்களில் கட்டப்படும் கோயில்களில் துவஜஸ்தம்பம் கூட இருக்காது. இங்கு கிராமம் என்பதால், குளத்தோடு கட்டியிருக்கிறார்கள்.
Deleteஅட! திருச்சிக்கு அருகிலும் குருவாயூரப்பன்! எல்லாமே அப்படியே இருக்கு போல!!!! நல்ல விவரங்கள். நோட் பண்ணிக் கொண்டேன், பானுக்கா. படங்கள் அழகு.
ReplyDeleteகீதா
நன்றி கீதா.
Deleteசென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் கூட குருவாயூரில் இருப்பது போலவே கிருஷ்ணர் கோயில் கட்டியிருப்பதாக ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பார்த்தேன்.
ReplyDeleteநானும் கேள்விப்பட்டேன்.
Deleteகுருவாயூரப்பன் கோயில் திருச்சிக்கு அருகில் இருப்பதை தற்போது தெரிந்து கொண்டேன். திருப்பதி பாலாஜி, சபரி சாஸ்தா, ஷீர்டி சாய்பாபா என்ற வரிசையில் குருவாயூரப்பனும் சேர்ந்து கொண்டார் , பல ஊர்களிலும் கோயில் கொள்ள.
ReplyDeleteபாலாஜியும், ஐயப்பனும், குருவாயூரப்பனும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் தெய்வங்கள். அதனால் எல்லா இடங்களிலும் வரவேற்பு என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல்🙏
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. குருவாயூரப்பன் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருச்சியிலும் குருவாயூர் போன்றே ஒரு கோவில் இருக்கிறது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அடுத்த தடவை எப்பவாவது திருச்சி போகும் சந்தர்ப்பம் அமைந்தால் தாங்கள் சொன்ன விபரப்படி குருவாயூரப்பனை சென்று தரிசிக்கலாம். அதற்கு அவன் அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிச்சயம் குருவாயூரப்பன் அருள் செய்வார். நன்றி
Deleteகேள்விப் பட்டேன், ஆனால் போகலை. போகவும் முடியாது. படங்களோடு திருப்தி அடைய வேண்டியது தான்.
ReplyDeleteஏன்? வைதீஸ்வரன் கோவில் வரை சென்றிருக்கிறீர்கள். முத்தரசநல்லூர் செல்ல முடியாதா? குருவாயூரப்பன் அருள் இருந்தால் நிச்சயம் அவன் தரிசனம் கிடைக்கும்.
Deleteவைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போனதே பெரிய விஷயம். பெண் பல வருஷங்கள் கழிச்சுக் குலதெய்வத்துக்கு மாவிளக்குப் போட்டாள். அவளுக்குத் துணையாகவே போய் வந்தேன். அதுவும் வீல் சேரில். இங்கெல்லாம் முத்தரசநல்லூருக்கு நான் எடுத்துக் கூட்டிக் கொண்டு போகணும். அது இயலாத ஒன்று. அப்படிப் போக முடிந்திருந்தால் நாலு வருஷமாகப் பெருமாளைப் போய்ப் பார்க்காமல் இருப்பேனா? :(
Delete