குஷி(தெலுங்கு)
கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானியான ஒருவரின் மகனும், புராண பிரவசனங்கள் செய்யும், கடவுள் மற்றும் சடங்குகள் முடலியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவரின் மகளும் காதலித்து மணமுடிக்கிறார்கள். சில காலம் வரை அவர்கள் எக்கச்சக்க முத்தங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். கதாநாயகியின் குழந்தை ஆசை நிறைவேறாத பொழுது தன் தந்தை கூறியபடி ஒரு பரிகார ஹோமம் அதுவும் மகன், தந்தை இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆராத்யா(ஸமந்தா) வலியுறுத்த, “என் அப்பாவுக்கென்று சொஸைட்டியில் ஒரு மரியாதை இருக்கிறது, அவர் இப்படிப்பட்ட ஹோமங்களை ஒரு நாளும் செய்ய மாட்டார்” என்று விப்லவ்(விஜய் தேவரகொண்டா) மறுத்துவிட, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இருவரும் இணைந்தார்களா? விப்லவ் அப்பா ஹோமத்திற்கு ஒப்புக் கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை. விப்லவ் மிகவும் இறங்கி வந்து தன் காதலை வெளிப்படுத்திய பிறகும் ஆராத்யா ஏன் அத்தனை பிடிவாதமாக பிரிந்து போகிறாள் என்பது புரியவில்லை.
விஜய் தேவரகொண்டாவின் உயரதிகாரியாக ரோகிணி, அவர் கணவராக ஜெயராம், வி.தே.வின் அம்மாவாக சரண்யா, சமந்தாவின் பாட்டியாக லக்ஷ்மி, என்று நிறைய தெரிந்த முகங்கள். அப்பாக்களாக சச்சின் கேடேகர், முரளி ஷர்மா என்று எல்லோருமே தங்கள் பகுதியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். சரண்யா அப்பாவி, அம்மா என்னும் டெம்ப்ளேட்டிலிருந்து வெளி வந்தால் நல்லது. கண்ணுக்கினிய லொகேஷன், காதுக்கினிய பாடல்கள், படத்தோடு இணைந்த நகைச்சுவை, விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் நெருக்க்க்கமான காட்சிகள் படம் ஓடாமல் இருக்குமா? ரசிகர்களுக்கு குஷிதான்!
பார்க்க வேண்டும். இந்தப் படமும் அடியே என்றொரு படமும் பார்த்து வைத்திருக்கிறேன். பிசா 3 என்றொரு திகில் படம் பார்த்தேன். சுமார் ரகம்.
ReplyDeleteபாருங்கள், உங்களுக்கு சப்-டைடில் தேவையிருக்காது, தெலுங்கு புரியுமே.
Deleteஅடுத்த ரத்தக்களரி படம் வெளியாகப்போகிறது. பத்தொன்பதாம் தேதி. மக்கள் அதற்காக வெறிபிடித்து காத்திருக்கிறார்கள். இதில் இரத்தம் என்றே ஒரு படம் வெளியாகி இருக்கிறது!
ReplyDelete100 கோடி வசூல் எதிர்பார்க்கிறார்களாமே..? 100 கோடிக்கு எத்தனை சைபர்?
Deleteசமந்தாவுக்கு இன்னுமா இளமையான வேடங்கள் கிடைக்கின்றன? OTT யில் மேய்ந்து கொண்டிருந்த போது அனுஷ்கா நடித்த புதிய படம் ஒன்று கண்ணில் பட்டது. பெயர் நினைவில்லை.
ReplyDelete//சமந்தாவுக்கு இன்னுமா இளமையான வேடங்கள் கிடைக்கின்றன?// ஏன் அவருக்கு என்ன குறை? இளமையாக, அழகாகத்தானே இருக்கிறார்?
Deleteவிமர்சனம் விளக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது மேடம்.
ReplyDeleteநன்றி ஜி.
Deleteஒரு வாரம் கூட ஓடவில்லை என்று கேள்விப்பட்டேன்...
ReplyDeleteயார் சொன்னது? தமிழ் நாட்டில் வேண்டுமானால் ஓடாமல் இருக்கலாம், தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தின் வெற்றியிலிருந்து கிடைத்த பணத்தில் ஒரு கோடி ரூபாயை நூறு பேர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. நன்றி
Deleteவிப்லவ் - கண்ணு லிப்லவ் என்று வாசிக்க....அட! லிப் லவ்வோடு முடிந்துவிட்டதே அவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை! லவ் - (உதடு) ஒட்டாத லவ்வாகிவிட்டதே!
ReplyDeleteஎன்னவோ கதையில் ஒன்று ஒட்டாமல், குறைவாக இருக்கிறதே, பானுக்கா...ஒருவேளை எடுத்த விதம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
கீதா
லிப் லவ்.. ஹா ஹா! ஒரு வகையில் சரிதான், படத்தில் எக்கச்சக்க முத்த பரிமாற்றம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇந்த தெலுங்கு திரைப்பட விமர்சனம் நன்றாக உள்ளது. பார்க்க வேண்டுமென தோன்றுகிறது. குழந்தைகள் பார்த்து விட்டார்களா எனத் தெரியவில்லை. அவர்களின் குழந்தைகளுக்கு தேர்வுகள் நடப்பதால் அவர்கள் திரைப்படங்கள் ஏதும் பார்க்கவில்லை. அவர்கள் பார்த்தால் நானும் அவர்களுடன் சேர்ந்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Thanks Kamala. sorry for the delayed approval.
ReplyDelete