கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 26, 2023

நவராத்திரி அலப்பறைகள்

நவராத்திரி அலப்பறைகள்


எங்கள் குடியிருப்பில் நவராத்திரி நவராத்திரி முதல் நாள் ஒரு சிறப்பு பூஜை இருந்தது லலிதா சகஸ்ரநாம சகஸ்ரநாம பாராயணம், பக்தி பாடல்கள் என்று நடந்த பூஜையில் பிரசாத வினியோகமும் இருந்தது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, தயிர் சாதம் என்று ஐட்டங்கள். "புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா"? என்று கேட்டார் ஒருவர். எனக்கு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடித்த புதிதில் அதன் நிர்வாகி ஒருவர் மஹாபெரியவரை பார்க்கச் சென்றாராம். சென்றவர் மஹா பெரியவரிடம், "நாங்கள்,கோவிலில் , சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று போட்டு, வருகிறவர்களுக்கு தாராளமாக வயிறு ரொம்பும் அளவு வினியோகிக்கிறோம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் நிறைய கொடுக்க கூடாது, கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய் என்றாராம். இவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக போய் விட்டதாம். 

கோவிலில் வழக்கம் போல பிரசாத வினியோகம் தொடர்ந்து கொண்டிருந்ததாம். ஒரு நாள் காலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கியிருக்கிறார்கள். அதை சாப்பிட்ட ஒருவர், இவரிடம் வந்து, " நீங்க என்ன பண்ணுங்க.. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் போட்டு விடுங்கள், சாப்பிட சௌகரியமாக இருக்கும்" என்றாராம். அப்போதுதான் அவருக்கு பெரியவா சொன்னது புரிந்ததாம். எல்லோருக்கும் புரிய வேண்டும். 

நேற்று சரஸ்வதி பூஜை, உறவினர் ஒருவர் கிரக பிரவேசம் வைத்திருந்தார். அவர்கள் பூஜை மணி கேட்டதால் கொடுத்தோம். கிரக பிரவேசம் அதிகாலையில் முடிந்து விடும், அதன் பிறகு நம் வீட்டு பூஜைக்கு மணியை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தோம், ஆனால் எடுத்து வர மறந்து விட்டோம். நைவேத்தியம் செய்யும் பொழுதும், தீபாராதனையின் பொழுதும் மணி அடிக்க வேண்டுமே..? என்ன செய்வது? என்று யோசித்தேன். இருக்கவே இருக்கிறது யூ ட்யூப், அதில் மணியை ஒலிக்கச் செய்து விட்டேன்.. எ..ப்..பூ..டி..?! எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் பிராமண பையன் வட இந்தியப் பெண்ணை மணந்து கொண்டான். தென்னிந்திய முறைப்படி திருமணம். ஆனால் திருமணத்தில் நாதஸ்வரம் கிடையாது. கெட்டி மேளம் உட்பட D.J. வைத்தே சமாளித்தார்கள். வாழ்க டெக்னாலஜி!

17 comments:

  1. எங்கள் அலுவலகத்தில் இந்த வருடம் ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் அறுபது எழுபது பேருக்கு வருவதுபோல புளியோதரை, பொங்கல், சுண்டல் செய்தோம்.  ஆனால் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுக்கப்போய் சிறிது நேரத்தில் எல்லாம் காலி.  எங்களுக்கே இரண்டு இரண்டு ஸ்பூன்தான் கிடைத்தது!  என்ன செய்ய!

    ReplyDelete
    Replies
    1. யாரானும் ஒருத்தர் வீட்டில் பொறுப்பு ஏற்றுக் கொண்டு பண்ணிக் கொடுக்கலாம். அப்போச் சரியா வந்திருக்குமோ என்னமோ! என்றாலும் இது அநியாயக் கொள்ளையாக இருக்கே!

      Delete
  2. கோவில்களில் மதிய உணவு அன்னதானம் கூட எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு டோக்கன் கொடுத்தே வழங்கப்படுகிறது என்பதை மயிலைக் கோவிலில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மாங்காடு கோவிலிலும் அப்படித்தான்.

      Delete
  3. // கோயில்களில் மதிய உணவு அன்னதானம் கூட எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு..//

    அது கோயிலின் பொருளாதாரத்தைப் பொருத்து..

    திருச்செந்தூர் கோயிலில் காலை 8:00 முதல் இரவு 8:00 வரை அன்னதானம் என்ற பெயரில் விருந்து நடத்தப் படுகின்றது..

    ReplyDelete
  4. @ ஸ்ரீராம்..

    /// கோவில்களில் மதிய உணவு அன்னதானம் கூட எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு.. ///

    அது கோயிலின் உண்டியல் வசூலைப் பொறுத்தது..

    திருச்செந்தூர் கோயிலில் காலை 8:00 முதல் இரவு 8:00 வரை அன்னதானம் என்ற பெயரில் விருந்து..

    வாழ்க உண்டியல்!..

    ReplyDelete
  5. புளியோதரைக்குத் தொட்டுக் கொள்ள வேண்டுமாமா !! சிரித்துவிட்டேன். பிரசாதம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும் என்பதற்குப் பெரியவர் விஷயம் அருமை. எல்லோருக்கும் புரிய வேண்டும். இன்னும் கொஞ்சம் பிரசாதம் கொடுத்தாத்தான் என்ன என்று கேட்பவங்களும் இருக்காங்க.

    கீதா

    ReplyDelete
  6. நல்ல டெக்னிக்! யுட்யூப் மணி.

    கீதா

    ReplyDelete
  7. பூஜைக்கு மணி இல்லைனா என்ன? கேரளப் பாணியில் ஒரு சின்னத் தாம்பாளத்தில் கரண்டியால் தட்டினால் மணி ஓசை!

    ReplyDelete
    Replies
    1. தாம்பாளத்தில் தட்டி ஒலி எழுப்புவது கேரள பாணி அல்ல, கன்னட பாணி. எனக்கு அந்த ஐடியாவும் தோன்றியது அதை விட யூ ட்யூப் பெட்டெர் என்று தோன்றியது.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நவராத்திரி அலப்பறைகள் நன்றாக உள்ளது.

    "புளியோதரையும், சோறும், வெகு பொருத்தமாய் சாம்பாரும்" என்ற மாயா பஜார் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. நல்லவேளை..! கேசரிக்கும், சர்க்கரைப் பொங்கலுக்கும் தொட்டுக் கொள்ள எதுவும் கேட்கப்படவில்லை.

    மகா பெரியவா சொன்ன வார்த்தைகள் நிதர்சனம். 🙏. எதுவுமே அளவு கடந்தால் விஷந்தான்.

    தங்கள் சமயோசித டெக்னிக் அருமை. சட்டென இப்படி தோன்றவில்லையென்றால், பஞ்சபாத்திரத்தில் அதன் உத்தரணியை வைத்தும் ஒலி எழுப்பலாம்.

    திருமணத்தில் நடந்த விஷயத்திற்கும் பாராட்டுக்கள். வாழ்க டெக்னாலஜி..

    நிவேத்திய சமயத்தில் கோவில்களில் மணியோசை பெரிதாக எழும் போது, "அவனே" ஒலி, ஒளியில் நீக்கமற நிறைந்திருப்பவன்தானே..! ஏன் இப்படி.. அந்த நேரத்தில் இறைவனை விழித்தெழ செய்துதான் அழைக்க வேண்டுமா..? எனவும் எனக்குத் தோன்றும். ஆனாலும் இதற்கென்று ஒரு விளக்கமும் காலங்காலமாய் நம்மிடத்தே நீடித்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. வழக்கம் போல் விவரமான மகிழ்ச்சி தரும் பின்னூட்டம். நன்றி.

    ReplyDelete