கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 31, 2023

மாற்றம்

'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 

வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம்.  கடலைக் கடந்தது,  அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?

நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா?  சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?

பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.

விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். 

குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.

இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.

பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.

கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.

கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும். 

கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.

புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.

அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.

இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.

இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.

காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும். 

வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார். 

நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.

25 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்ற தலைப்பிற்கு உங்கள் அருமையான எண்ணங்களுடனான பங்களிப்பு பதில் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். இதில் அனைத்துமே நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. .

    இறுதியில் கூறியுள்ளவை100 சதவீத உண்மை. நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும் கலையை மட்டும் எத்தனை வருடங்களாயினும் யாருமே கற்க மாட்டார்கள் போலும்..! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நாகரீகமாக தோற்றமளிக்கும் ஆண்களே தெருவில் அசிங்கம் பண்ணும் காட்சி அதிர்ச்சி தருகிறது. ஹூம்! மாறினால் நல்லது. நன்றி.

      Delete
  2. இறுதியில் சொன்னது சூப்பர் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. மத்யமரில் ஒருவர் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதும் மாறாது என்று குறிப்பிட்டிருந்தார். வேதனை!

      Delete
  3. Replies
    1. இரண்டும் இல்லை, முன்பு இருந்த நியையிலிருந்து நாம் கண்ண்டிருக்கும் மாற்றங்களை வைத்து ஒரு யூகம்.

      Delete
    2. இந்த தலைப்பிற்கு எழுதிய பலரும் பெற்றோர்கள் தெருவில் நிற்பார்கள், குடிக்கத் தண்ணீர் கிடைக்காது, என்றெல்லாம் நெகடிவாக எழுதியிருந்தார்கள். எங்க்கு எதிர்மறை சிந்தனை எப்போதுமே பிடிக்காது. நாளை என்பது நன்றாகத்தான் இருக்கும் என்று நினைப்பேன், அரியக்குடியோடு பாட்டு போய் விட்டது, சிவாஜி கணேசனோடு நடிப்பு போய் விட்டது, இப்போது வருபவை திரைப்படங்களே இல்லை, இவை எல்லாம் பாடல்களா? என்று பேச்சைக் கேட்டால் எரிச்சல் வரும். எதிர்காலம் சிறப்பாகத்தான் இருக்கும்.

      Delete
  4. மக்களின் மனநிலையில் மாற்றம் வருமா?  இப்போதுதான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பதிவை தேவகோட்டை ஜி பதிவில் படித்துவிட்டு வருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நானும் சென்று படிக்கிறேன்.

      Delete
  5. தண்ணீரிரிருக்காது, விளைநிலங்கள் இருக்காது...  அப்புறம் ஒருவர் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் எப்படி ஜீவிப்பது?  அதற்கு மாத்திரை போல உணவு வந்து விடுமா?

    ReplyDelete
  6. கடைசியில் சொன்னது கண்டிப்பாக நடக்கும். நம் மக்களின் மனதில் மாற்றம் வருவதற்குப் பலயுகங்கள் ஆகும். மாற்றம் ஒன்றே மாறாதது ஆனால் இந்த மாற்றம் மாற மாட்டேங்குதே!

    கடைசில கேப்ஸ்யூல் வடிவில் உணவு வரும்.

    //குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.//

    இப்போதே வந்தாச்சு பானுக்கா.

    கீதா

    ReplyDelete
  7. கடைசியில் சொன்னது கண்டிப்பாக நடக்கும். நம் மக்களின் மனதில் மாற்றம் வருவதற்குப் பலயுகங்கள் ஆகும். மாற்றம் ஒன்றே மாறாதது ஆனால் இந்த மாற்றம் மாற மாட்டேங்குதே!

    கடைசில கேப்ஸ்யூல் வடிவில் உணவு வரும்.

    //குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.//

    இப்போதே வந்தாச்சு பானுக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..!

      Delete
  8. என்னுடைய பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். தண்ணீர் இருக்காது என்று நான் எழுதவில்லை, கடல் நீர் குடிநீராக்கப்படுவதால் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்னும் பொருள்படத்தான் எழுதியிருந்தேன். விளை நிலங்கள் குறையும் என்றுதான் எழுதியிருந்தேன், விளை நிலங்களே இருக்காது என்று எழுதவில்லை. //விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள்.

    குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.// இதுதான் வளர்ந்த நாடுகளின் நிலை.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் இருக்காது என்று நீங்கள் சொல்லவில்லை. அது என் கருத்து.

      Delete
  9. எனக்கு பதினைந்து வயது இருந்த பொழுது துக்ளக்கில் மூர்த்தி என்னும் நெய்வேலியைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவர்,"ஈன்னும் பதினைந்து வருடங்களில் சென்னை பாலைவனமாகி விடும்" என்று எழுதினார். அப்படி நடந்ததா என்ன?

    ReplyDelete
    Replies
    1. 2012 ல் உலகமே அழிந்து விடும்.  மயன் காலண்டர் கூற்று என்றார்கள்.  நடக்கவில்லை.  2025 க்குள் சென்னையில் கடல் கிண்டி வரை வந்து விடும் என்றார்கள்.  வரவில்லை!!

      Delete
  10. இவை எல்லாம் நடக்கக் கூடிய சாத்தியங்களே. ஓரிருவர் எழுதி இருந்தவற்றை மத்யமரில் நானும் படித்தேன். அவ்வளவாய்க் கவரவில்லை. குடும்ப அமைப்பு சிதைவது தான் மனதுக்கு வருத்தம். உங்கள் கடைசிக் கணிப்பு என்றென்றும் தொடரும். ஏனெனில் நம் மக்களின் மன்ப்பான்மை அப்படித்தான்.

    ReplyDelete
  11. நல்ல ஆராய்ச்சி. ஆனால் இன்னும் 30 வருடங்கள் வரை நான் இவ்வுலகில் இருக்கமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அடடா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.

      Delete
  12. நல்ல ஆராய்ச்சி. ஆனால் இன்னும் 30 வருடங்கள் வரை நான் இவ்வுலகில் இருக்கமாட்டேன்.

    ReplyDelete
  13. Where are my comments? Will search for them.

    ReplyDelete