கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 1, 2023

பெற்றால்தான் பிள்ளையா?

 பெற்றால்தான் பிள்ளையா?

"உன் மகளிடமிருந்து செய்தி" என்றது வாய்ஸ் மெஸேஜர்.
"என்னவாம்?" என்றாள் தீக்ஷா.
"அம்மா, உன் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது, நீ பாட்டியாகப் போகிறாய், உடனே எக்ஸைட் ஆகி அழைக்காதே, ஐயாம் பிஸி. ஐ வில் கால் யூ லேட்டர்"என்றது மகள் நீதாவின் குரல்.
தன் கணிணியை மூடிய தீக்ஷாவுக்கு உடனே மகளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அழைத்தால் பதிலளிக்க மாட்டாள்.
திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி விட்டது. முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டவள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிள்ளை பேற்றை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
வயதாகி முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதையெல்லாம் நவீன மருத்துவம் பொய்யாக்கி விட்டது.
மாலையில் நீதா வீடியோ காலில் வந்ததும், " டாக்டரை பார்த்தியா? எவ்வளவு நாட்கள் ஆகிறது?" என்றதும் நீதா கொஞ்சம் யோசித்து ஐ திங்க் ஃபைவ்மன்த்ஸ்"என்றாள்.
"திங்கா? என்னடி. ?" என்றதும் கொஞ்சம் யோசித்து, செல்போனில் எதையோ தேடி, ஆ.. ஐஞ்சு மாசங்கள் முடிஞ்சாச்சு.." என்றாள் நீதா.
"மை காட்!" இத்தனை நாள் எங்கிட்ட சொல்லவேயில்லை..?" கொஞ்சம் தள்ளி நில், உன்னை முழுமையாக பார்க்கிறேன்" என்றதும், காமிராவை விட்டு தள்ளி நின்று கையாட்டினாள்.
"என்னடி இது? ஐஞ்சு மாசம் முடிஞ்சாச்சு என்கிறாய், வயிறே தெரியலை..?"
"எனக்கு ஏன் வயிறு தெரியனும்?" என்று நீதா கேட்டதும், தீக்ஷாவுக்கு குழப்பமாகியது.
"நீ கர்பமாக இருப்பதாக சொன்னாயே..?"
நான் எங்கே அப்படி சொன்னேன்? நீ அப்படி புரிந்து கொண்டிருக்கிறாய்"
" நான் பாட்டியாக வேண்டும் என்றால் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்?"
தீக்ஷா இப்படி கேட்டதும்,"வெயிட் வெயிட், எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆனால் நான் கர்ப்பமாக இல்லை.. எங்கள் குழந்தையை சுமக்க ஒரு வாடகைத் தாயை புக் பண்ணி விட்டோம்"
"உன் குழந்தையை உன்னால் சுமக்க முடியாதா?"
"கஷ்டம் மா..இப்போது என் கேரியர் ரொம்ப க்ரூஷியல் ஸ்டேஜில் இருக்கு. ஃபர்ஸ்ட் நானே பெத்துக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனால் என் ஃப்ரண்டு வாமிட்டிங்,நாஸியானு பட்ட கஷ்டத்தை பார்த்ததும் வேண்டாம், சர்ரகஸி இஸ் பெட்டர்னு தோணிடுத்து. ரகு ஆல்ஸோ ஓகே வித் திஸ்."
"வளர்க்கவாவது செய்வியா..?"
"கண்டிப்பா.. பட் இனிஷியலா பார்த்துக்க நானி புக் பண்ணியாச்சு"
யாரோ பெத்து குடுக்க போறா, யாரோ வளர்க்க போறா..நீ என்ன அம்மா..?"
"பட் ஸ்டில் அது எங்களோட குழந்தை. கொஞ்சுவோம், விளையாடுவோம், படிக்க வைப்போம்.."
அம்மா அலுத்துக் கொண்டதற்கு சமாதானமாக பதில் சொன்னாள்.
"இதுக்கு பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே..?"
"அம்மா உனக்கு புரியவில்லையா? தத்து குழந்தை எங்கள் குழந்தை கிடையாது. இது எங்கள் குழந்தைதான், எனக்கு கர்ப்ப கால தொந்தரவுகள் கிடையாது. எவ்வளவு சௌகரியம்!"
"ம் ம், என்னவோ போ.. அந்த வாடகைத் தாய் எப்படிப் பட்டவள்?"
"அதெல்லாம் நல்ல பெண்தான். நல்ல ஏஜென்சி மூலம் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்". என்று நீதா சொன்னதும், 2023க்கு முன்பாகவே வாடகைத் தாய் கான்செப்ட் வந்து விட்டாலும், 2053ல் இது மிகவும் பிரபலமாகி விடும் என்று அப்போது தோன்றவேயில்லையே..? என்று தீக்ஷா நினைத்துக் கொண்டாள்.

14 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இப்போதுள்ள கால சூழ்நிலைகளை அழகாக சுட்டிக் காட்டுகிறது கதை. நீங்கள் எழுதிய சென்ற பதிவுக்கும், இந்தக்கதை ஒத்து வருகிறது. மனிதர்களால் காலங்கள் மாறிக் கொண்டேதான் உள்ளது. மனிதர்களும் இது காலப் போக்கு என அன்பு, பாசம், பொறுப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சென்ற பதிவின் தொடர்ச்சிதான் இது. நன்றி.

      Delete
  2. கதை நன்றாக இருக்கு பானுக்கா. இப்போதே இது மருத்துவ காரணங்களினால் செய்யப்பட்டாலும் கதையில் வருவது போன்றும் பெற்றுக் கொள்பவர்களும் இருக்காங்களே இனி வரும் காலங்களில் சாத்தியம் உண்டு என்றாலும், வாடகைத் தாயும் கூடக் கிடைக்காமல் போகலாம் இல்லையா? அதுவும் அரிதாகலாம் இல்லையா? ஏனென்றால் பெரும்பாலோர் இப்படிப் பெற்றுக் கொள்ள நினைக்கும் போது!!!!!! வாடகைத் தாயின் விலையும் அதிகமாகலாம் ஆனால் கிடைப்பதும் சிரமமாகும்....

    Surrogate குழந்தைக்கு என்னதான் வாடகைத் தாயின் மூலம் ஜீன் வராது என்றாலும், என்னதான் வாடகைத் தாயை செக் செய்து சுமக்க வைத்தாலும் குழந்தை உள்ளே வளரும் போது அந்தத் தாயிடம் ஏற்படும் மாறுதல்கள், ஹார்மோனல் சேஞ்சஸ், அதைச் சுமக்கும் பெண்ணின் மூளையில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்ஷன் - வருத்தங்கள், கோபங்கள், மனதில் தோன்றும் சில வார்த்தைகள், உணர்வுகள் என்று பலவும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு வரும் என்று அறிவியல் சொல்கிறது.

    என் தனிப்பட்டக் கருத்து - மருத்துவ காரணங்கள் ஆனாலும் சரி, (சிலருக்குக் குழந்தை தாங்கும், பெறும் சக்தி கர்ப்பப் பைக்கு இல்லாமல் போகலாம் அப்படி) அல்லது தனிப்பட்ட விருப்பத்தினாலும் சரி இப்படிப் பெற்றுக் கொள்வதை விட, தத்து எடுத்து வளர்க்கலாம். அதுவும் சிறு பிராயத்தில் நானியிடம் வளர்வது நல்லதல்ல என்பது குழந்தை உளவியல் சொல்கிறது.

    நாம இப்படிச் சொல்வதால் உலகம் மாறிவிடுமா இல்லை ஏற்றுக் கொண்டுவிடுமா நம்மை ஓல்டி, அந்தக்காலம் என்று சொல்லிவிடும் உலகம் என்ன சொல்றீங்க பானுக்கா!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விவரமான, விளக்கமான பின்னூட்டம். நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது வாஸ்தவம். நன்றி

      Delete
  3. ம்ஹூம்...  அவ்வளவு சர்வ சாதாரணமாகி விடுமா?  பாவம் குழந்தை!

    ReplyDelete
    Replies
    1. நடக்கவே நடக்காது என்று நினைத்த எத்தனையோ விஷயங்கள் இப்போது உண்மையாகியிருக்கிறதே?

      Delete
  4. படிச்சுட்டேன் இந்தக் கதையை ஏற்கெனவே மத்யமரில்.போன பதிவுக்குக் கொடுத்த கருத்துகள் உங்கள் மெயில் பாக்சில் எங்கேயோ ஒளிஞ்சுட்டு இருக்குப் போல. இது வருமா வராதானு தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. //படிச்சுட்டேன் இந்தக் கதையை ஏற்கெனவே மத்யமரில்.// என்ன ஜூனூன் தமிழ் விளையாடுகிறது?

      Delete
  5. கலிகாலம் நெருங்குகின்றது.. என்பதை தங்களது கை வண்ணம் காட்டுகின்றது..

    ReplyDelete
  6. கணவனைச் சுமக்கின்ற கைங்கர்யமும் கிடையாதோ!?..

    ReplyDelete
  7. உங்களுக்குத் தெரியாதா சார்? என் சகோதரி விளையாட்டாக,"இந்தக் கால பெண்கள் வீட்டிற்கு ரெண்டு கதவுகள் இருந்தால் ஒரு கதவை அவர்கள் சாத்துவார்கள், இன்னொரு கதவை கணவன் சாத்த வேண்டும் என்பார்கள்" என்று கூறுவார். இந்த லட்சணத்தில் கைங்கர்யமாவது? ஒன்றாவது?

    ReplyDelete