2024ஆம் வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது நிறைய பயணங்கள். "சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்க சீஸன் டிக்கெட் வாங்கி வைத்துக்கொள்" என்று சிலர் கூறும் வண்ணம் ஷட்டில் சர்வீஸ் போல பெங்களூர்-சென்னை-பெங்களூர் என்று பயணித்தேன்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பயணங்கள். அவற்றில்திருப்பதியில் ஸ்ரீவாரிி தரிசனம் பெற்றதையும், அமிர்தபுரியில் அம்மாவுக்கு ஆரத்தி எடுத்ததையும் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன்.
மூன்றாவது பயணம் புட்டபர்த்திக்கு சென்றது. கனடாவில் வசிக்கும் என் மகள்,மாப்பிள்ளை,பேத்தி இவர்கள் புட்டபர்த்தியில் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். அதற்காக டிசம்பர் 20 முதல், 27 வரை அங்கே தங்கினேன். அது ஒரு அற்புத அனுபவம். எட்டு நாட்களும் இறை சிந்தனை தவிர வேறு இல்லை.
2024 ஜனவரி ஐந்தாம் தேதி கர்நாடகா யாத்திரையில் தொடங்கி, டிசம்பரில் புட்டபர்த்தியில் முடித்தேன். கர்னாடகா யாத்திரையில் அறிமுகமான ஹேமா சுந்தரம் என்பவர் நாராயணீயம் வகுப்புகள் எடுப்பது அறிந்து, அவரிடம் நாராயணீயம் கற்றுக் கொள்ள துவங்கினேன். முகநூல் தோழி ஒருவர் கீதா குஞ்சன் மூலம் பகவத் கீதா கற்றுக் கொண்டதை எழுதியதை படித்து விட்டு பகவத் கீதையும் கற்றுக் கொள்கிறேன். சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன எனலாமா?
விஷயங்கள் இன்னமும் அதிகம் தொடரட்டும் இந்த வருடம்.... உபயோகமாக, சுவாரஸ்யமாக கழித்திருக்கிறீர்கள் சென்ற வருடத்தை.
ReplyDeleteமுதல் கமெண்ட்டில் 'நல்ல' என்னும் ஆரம்ப வார்த்தை டைப்பாகாமல் தப்பி இருக்கிறது! தயவு செய்து சேர்த்துக் கொள்ளவும்!
Deleteநன்றி. எல்லாம் இறையருள்.
Deleteபுட்டபர்த்தியில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளா.... புரியவில்லை.
ReplyDeleteபகவான் சத்திய சாயி பாபா மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர். Unity in diversity என்பது அங்கு பின்பற்றப்பட்டது. சத்தியமாய் ட்ரஸ்ட் emblem பார்த்ததில்லையா?
ReplyDeleteசத்திய சாய் ட்ரஸ்ட் emblam
ReplyDeleteசாயி பஜன்களில் சர்வதர்ம பாடல் ஒன்று கண்டிப்பாக இடம் பெறும். அவருடைய அஷ்டோத்திரத்தில் 'சர்வ மத சம்மதாய நமஹ' என்பதும் ஒரு நாமம். மேலும் மேலை நாடுகளிலிருந்து நிறைய பக்தர்கள் வருவதால் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.
ReplyDeleteஇந்த வருடம் கிருஸ்துமஸ் கரோல் பாடும் குழுவில் என் மகளும் இருந்தாள்.
நல்லதே நடக்கட்டும்...
ReplyDeleteதலைப்பு : 2014 ?