கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 16, 2025

மேப்பில் சிரப் ஃபெஸ்டிவெல்

மேப்பல் சிரப் உற்சவம்(Maple Syrup Festivel)

கனடாவின் தேசிய மரம் மேப்பில் மரம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.  ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பால் எடுப்பதை போல மேப்பில் மரத்திலிருந்து கிடைக்கும் தேன் போன்ற இனிமையான திரவத்தை(Maple Syrup)எடுப்பார்கள்.

குளிர் குறைந்து, வசந்தம் துவங்கும் காலம்தான் மேப்பில் சிரப் எடுக்க உகந்த காலம். பனி உறையாத இரவுகள், மிதமான உஷ்ண பகல்கள், அதனால் பனி உருகத் தொடங்கி விடும் காலத்தில்தான் மேப்பில் திரவத்தை மரத்திலிருந்து எடுப்பது சுலபமாக இருக்குமாம். அப்படி சேகரித்த சிரப்பை கொதிக்க வைத்து அதிலிருக்கும் நீர் ஆவியானதும் பாட்டிலில்களில் சேகரித்து வைப்பார்களாம். இதன் அறுவடைக் காலம் நான்கு வாரங்களிலிருந்து ஆறு வாரங்கள் வரை நீடிக்குமாம். அந்த காலத்தில் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பத்து காலன் வரை மேப்பில் சிரப் கிடைக்கலாம். இது அந்த வருடம் நிலவும் சீதோஷ்ணம், மண் மற்றும் மரத்தின் வளத்தை பொருத்து மாறலாம்.





மேப்பில் சிரப்பில் முக்கி எடுக்கப்பட்ட ஆப்பிள் பழங்கள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரம் முதல் மே முதல் வாரம் வரை வெவ்வேறு இடங்களில் மேப்பில் சிரப் ஃபெஸ்டிவல் கொண்டாடுகிறார்கள். அன்று நகரின் பிரதான சாலை ஒன்றை வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்து சாலையின் இரு புறங்களிலும் சிறு வியாபாரிகள் தங்கள் பொருள்களை கடை பரப்பியிருக்கிறார்கள். மேப்பில் சிரப்பில் செய்த உணவு பண்டங்கள் தவிர அணிகலங்கள், உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், முக ஓவியம்(face painting) என்று பல வித கடைகள். இதற்கு நுழைவு கட்டணமும் கிடையாது, வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் கிடையாது என்பது கூடுதல் கவர்ச்சி.  காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். 

மேப்பில் சிரப் லாலி பாப்


செவிக்கும் உணவு


மர பொம்மைகள்

பறவை வீடுகள்



10 comments:

  1. மேப்பில் சிரப் பற்றிய விவரங்களும் படங்களும் சூப்பர் பானுக்கா. சிரப் வைத்து நிறைய செய்யறாங்க அவங்க. கேக் கூட மேலே ஊற்றுவதற்கும் இந்த சிரப்பை பயன்படுத்துவாங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நான் அடைக்கு தொட்டுக் கொள்வேன் ஹிஹி!

      Delete
  2. மர பொம்மைகள் அழகு. மனதைக் கவர்கின்றன.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்May 18, 2025 at 1:19 AM

      அந்த ஊர் மரப்பாச்சி எனலாம். நம் ஊரிலும் இப்போது இந்த மாதிரி கிடைக்கின்றன.

      Delete
  3. ஒரு மரத்திலிருந்து பத்து காலனா?  அம்மாடி...  அப்போ விலை ரொம்ப சீப்பாதான் இருக்கும்!

    ReplyDelete
  4. படங்கள் சுவாரஸ்யம்.  செவிக்குணவை சிறுதுளி செவிக்கு வழங்கி இருக்கலாமோ!

    ReplyDelete
  5. பானுமதி வெங்கடேஸ்வரன்May 18, 2025 at 1:23 AM

    நன்றி. //செவிக்குணவை சிறுதுளி செவிக்கு வழங்கி இருக்கலாமோ!// லாம், எனக்கு தோணவேயில்லை, மேலும் அப்போதுதான் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ReplyDelete
  6. மேப்பில் சிரப் பற்றிய விவரங்களும் படங்களும் அருமை.
    பறவை வீடுகள் வித விதமாக எப்போதும் மனதை கவரும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. அருமையான பதிவு அம்மா. நன்றி. காத்திருப்போம் இன்னும் இன்னும்.

    ReplyDelete