நாளாம் நாளாம்
பிறந்த நாளாம்
பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு சிறு வயதில் ஆசைப்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் யாரும் வாழ்த்து கூறியதில்லை. சீனியர் சிட்டிசனாகி, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆசை போன பிறகு முக நூல், மெசன்ஜர், வாட்ஸாப் என்று பல வழிகளில் வாழ்த்து மழை!
எங்கள் வீட்டில் பெரும்பான்மை-யோர்களின் பிறந்த நாள்கள், திருமணநாள்கள் எல்லாமே ஜுன், ஜுலையில்தான் வரும். ஆனி கொண்டாட்டம்!
இந்த வருடம் சனிக்கிழமையன்று என்னுடைய பிறந்தநாள் வந்ததால் ப்ராம்டன் என்னும் இடத்தில் இருக்கும் குருவாயூரப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில்தான் நான் நாராயணீயம் கற்றுக் கொண்டேன். எனவே குருவாயூரப்பனை தரிசிக்க விரும்பினேன்.
ப்ராம்டனில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில் கேரள பாணியில் அமைந்திருக்கும் சிறிய அழகான கோவில், நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் பிரதானமாக குருவாயூரப்பன் சன்னதி. குருவாயூரில் இருப்பது போல குழந்தை கிருஷ்ணனாக இல்லாமல் சற்று பெரிய குழந்தையாக இருக்கிறார் அதற்கு எதிர் எதிரே துலாபாரம் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது விநாயகர் ஐயப்பன் பகவதி சன்னதிகள்.
கோவிலில் இருந்து ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றோம் அங்கிருந்து அவர்கள் குடும்பத்தோடு நயாகரா சென்றுவிட்டு, அங்கிருந்து நயாகரா பை தி லேக்ஸ் ஒரு பெரிய ஏரியை ஒட்டி இருக்கும் பார்க்கிற்கு சென்றோம். அந்த பார்க்கிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு கட்டிடம் தெரிந்தது அது அமெரிக்காவை சேர்ந்ததாம் ஒருமுறை அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் யுத்தம் வந்த பொழுது அமெரிக்க துருப்புகள் அந்த கட்டிடத்தில் இருந்தும் கெனடிய துருப்புகள் அருகில் இருக்கும் மிசிசாக போர்ட் என்னும் இடத்தில் இருந்தும் யுத்தம் செய்தனவாம்.
அதற்கு அருகில் குயின்ஸ் ஸ்ட்ரீட் என்ற ஒரு இடம் அது பழங்கால கனடா. தெருவின் இரண்டு புறங்களிலும் வரிசையாக கடைகள் அவைகளை பார்வையிட்டோம் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம் ஆனால் எனக்குத் தான் கடுமையான தலைவலி இவர்கள் என்னதான் கோடை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இத்தனை நாட்களாக எனக்கு கோடை போல தோன்றவில்லை. வீட்டிற்குள் ஏசி ஓடிக் கொண்டிருந்ததால் நான் வெப்பத்தை உணரவில்லை அன்றுதான் வெளியே சென்றோம் பளிச்சென்று வெயில் இத்தனை நாட்களாக குளிர் குளிர் என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று வெயிலுக்கு எக்ஸ்போஸ் ஆனதில் ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது கடுமையான தலைவலி வந்துவிட்டது அதனால் நாங்கள் சீக்கிரம் நண்பர் வீட்டிற்கு வந்து விட்டோம் அங்கு வந்ததும் இரண்டு பாரசிட்டமால் போட்டுக் கொண்டேன். அதனால் புகைப்படம் எடுக்க மூட் இல்லை.
குயின்ஸ் ஸ்ட்ரீட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் இருந்தன குதிரை என்றால் அதுதான் குதிரை, நமீதா போல. எலும்பும்,தோலுமாக இருக்கும் நம்ம ஊர் சோப்ளாங்கி குதிரைகளை பார்த்துவிட்டு அந்த குதிரைகளை பார்த்தால் வியப்பாக இருந்தது.
அங்கிருந்து நண்பர் வீட்டிற்கு வரும் வழி முழுவதும் திராட்சை தோட்டங்கள் மற்றும் ஒயின் தயாரிக்கும் கூடங்கள் நயாகரா ஒயின் மிகவும் பிரசித்தி பெற்றதாம் அங்கு இருக்கும் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளை சுற்றிப் பார்ப்பதையே ஒரு டூராக அரேஞ்ச் பண்ணி தருவார்களாம் அந்த சமயத்தில் ஒயினை சுவைத்துப் பார்க்கலாமாம்.
என் பிறந்தநாளுக்கு என் மகள் மேங்கோ கோக்கனட் பை செய்திருந்தாள், நன்றாக இருந்தது. ஒரு திங்கள் அன்று பகிர எண்ணி இருக்கிறேன். இரண்டு பேத்திகளும் அவர்களாகவே பர்த்டே கார்டு வரைந்து கொடுத்தார்கள். சர்ப்ரைஸாக எனக்கு தர வேண்டும் என்பதால் அவர்கள் அதை தயாரிக்கும் வரை என்னை ஹாலுக்கு வர விடவில்லை:))
![]() |
கூகுள் உதவியோடு தமிழிலும் வாழ்த்து :)) |
அடுத்த நாள் சாயிபஜனைக்கு சென்று விட்டு வரும் பொழுது சங்கீதாவிற்கு நான் அவர்களை அழைத்துச் சென்றேன். சாப்பாடு நன்றாக இருந்தது அதை பரிமாறிய தமிழ் பேசிய இரண்டு இளம் பெண்களும் நன்றாக இருந்தார்கள் கல்லூரி மாணவிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படியாக என் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது பேத்திக்கு ஜூலை 15 பிறந்தநாள் அன்று ஒர்க்கிங் டேயாக இருப்பதால் சனிக்கிழமை அதாவது ஜூலை 12 அவை அவளுக்கு நெருக்கமான சில தோழிகளை அழைத்திருந்தாள். மகள் விருப்பப்படி வீட்டில் என் மகள் செய்த டபுள் லேயர் கேக் கட் பண்ணினார்கள். பலூன் அலங்காரம் எல்லாம் என் மகளேதான் செய்திருந்தாள்.
பர்த் டே தீம் வாட்டர். அதனால் அவள் தன் தோழிகளோடு பக்கத்தில் இருந்த splash padல் விளையாடி விட்டு வந்தனர். கேக் கூட நீல நிறத்தில் வேண்டுமென்றாள். குழந்தைகளுக்கு கேக்கோடு சிப்ஸ் ஜூஸ் பீட்சா, வெஜிடபிள் சாலட் வித் ராஞ்ச் போன்றவை வழங்கப்பட்டன. தனக்கு பரிசாக வந்த லேகோ பிளாக்ஸ்களை வைத்து என் பேத்தி செய்திருந்த மயில்.
![]() |
மயிலாசனம் - ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மயில் |
பிறந்தநாள் கொண்டாட்டப் படங்கள் நன்று. திராட்சைத் தோட்டம் நயகரா படங்கள் மிஸ்ஸிங்
ReplyDeleteஐஸ்க்ரீம் கோன்... எனக்கு பஹ்ரைன் நினைவைக் கொண்டுவந்துவிட்டது. எனக்கு அந்த கோன் ரொம்பவே பிடிக்கும். அதனால் அது மாத்திரம் ஒன்று 100 ஃபில்ஸ் என்று பணம் கொடுத்து ஸ்பெஷலா வாங்குவேன் (சூப்பர் மார்க்கெட்டில் அல்ல. ஐஸ்க்ரீம் வேன்களில்)
மயிலாசனம் அழகு. கேக்-எனக்கு அலங்காரங்கள் க்ரீம் இல்லாமல் வெறும் கேக் மாத்திரம் சாப்பிடப் பிடிக்கும்.
வாங்க நெல்லை. சென்ற முறை கனடா விசிட்டில் நிறைய படங்கள் நயாகராவில் எடுத்து விட்டதால், இந்த முறை எடுக்கத் தோன்றவில்லை.
Deleteகாரில் செல்லும்பொழுது திராட்சை தோட்டங்களை கடந்ததால் எடுக்க முடியவில்லை. பெங்களூரிலிருந்து புட்டபர்த்தி செல்லும் வழியில் நிறைய திராட்சைத் தோட்டங்களை பார்க்கலாமே.
நான் இந்த வருடம், கம்பம் அருகே திராட்சை தோட்டங்களுக்குச் சென்றிருந்தோம். அது பற்றி எழுதணும் (மூணாறு பயணம்). சமீபத்தில், வ்ருத்த பத்ரி சென்றிருந்தோம் (மொத்தம் ஐந்து பத்ரி கோயில். அதில் புகழ் பெற்றது பத்ரிவிஷால்). அங்கு திராட்சைக் கொடிகள் நிறைய இருந்தன. அந்த பச்சை திராட்சை வித்தியாசமான சுவை
Deleteபிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஜோர். அதென்னவோ அன்று எல்லோரும் கோவில் போவதையே விரும்புகிறார்கள். இந்தமுறை பாஸ் அதட்டிக் கூப்பிட்டும் நான் கோவில் செல்லவில்லை. நான் நாத்திகனில்லை!
ReplyDeleteபொதுவாக டைரி குறிப்புகள் போன்ற பதிவுகள் எழுதுவது எனக்கு அவ்வளவாக பிடிக்காது இருந்தாலும் இப்பொழுது ஏனோ எழுதுகிறேன் கோவில் செல்ல ஒரு சாக்கு என்று வைத்துக் கொள்ளலாமே
Deleteகூகுள் பார்த்தாவது தமிழில் வாழ்த்து தயாரிக்க வேண்டும் என்கிற உங்கள் பேத்திகள் அன்புக்கு ஒரு ஸலாம்!
ReplyDelete:))
Deleteஅந்தக் காணொளியை நான் பேஸ்புக்கில் பார்த்தேனோ? ஆனால் ஏற்கனவே பார்த்தேன். நினைவிருக்கிறது.
ReplyDeleteஆமாம் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தேன் பேஸ்புக்கிலும் பார்த்திருக்கலாம். அந்த காணொளிக்கு 1.2 k views.
ReplyDeleteபார்த்திருக்கலாம் இன்ஸ்டாகிலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன் 1.2 K பார்வையாளர்கள்.
ReplyDeleteவாவ்! கேக்கும், மாங்கோ பையும் சூப்பர். ரொம்ப நல்லா வந்திருக்கு. மாங்கோ கோக்கனட் க்ரீம் பை பேக் பண்ணாமல் பண்ணினாங்களா சுபா?
ReplyDeleteதங்கை மகளும் குழந்தைகளும் வந்தப்ப பை செய்தேன் கோதுமை மாவில். மிக்ஸ்ட் ஃப்ரூட். அதன் மேலே சாக்லேட் நட்ஸ் என்று. closed pie ஒப்பன் பையும்.
கீதா
அலங்காரங்களும் சூப்பர்.
ReplyDeleteஅந்த தெரு நம்ம ஊர் பாரிஸ் கார்னர் போலவும், ரங்கநாதன் தெரு போலவும் இருக்கு பார்க்க.
கோன் மேக்கிங்க் சூப்பரா இருக்கு வீடியோவும். கோப் பேஸ் கார்ன் மாவு என்று வாசித்த நினைவு. வேஃபர் பிஸ்கட் வருமே அப்படி.
உங்க பிறந்தநாளும், பேத்தியின் பிறந்தநாளும் கலக்கல் போங்க!!
கீதா
பேத்திகளின் கைவண்ணம் க்யூட்!
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. உங்களுக்கும், உங்கள் பேத்திக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பேத்தியின் பிறந்த நாள் அலங்காரங்கள், பேத்தி உங்களுக்கு தயாரித்து தந்த வாழ்த்து அட்டைகள் எல்லாமே அருமையாக உள்ளது.
உங்கள் மகள் பிறந்த நாட்களுக்காக செய்த மாங்கோ ஸ்வீட்டும், கேக்கும் நன்றாக இருக்கிறது
தமிழில் அழகாக வாழ்த்து எழுதியுள்ளனர் குழந்தைகள். இங்கும் என் பேரன் பேத்திகள் இப்படித்தான் சட்டென வாழ்த்து அட்டைகளை ரெடி பண்ணி எங்கள் பிறந்த நாளுக்கு தந்து விடுவார்கள். அவர்கள் தயாரிக்கும் வரை நம்மை அதை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நம்மிடம் சர்ப்ரைஸாக இதைக் கொடுத்து நம் பாராட்டை பெற அவ்வளவு ஆர்வம்./ சந்தோஷம்.
தங்கள் பேத்தி லெகோவில் செய்த தோகை விரித்தாடும் மயில் மிக அழகாக இருக்கிறது. அவளுக்கு என் பாராட்டை தெரிவியுங்கள்.
அங்குள்ள கோவில், மற்றும் கடைத் தெருக்கள் நன்றாக உள்ளது. எனக்கும் தலைவலி வந்து விட்டால், வேறு எதிலும் ஆர்வம் செலுத்த இயலாது. அப்புறம் முழுவதுமாக குணமாகி விட்டதா? அத்தனை வலியிலும், எங்களுக்காக பல படங்கள் எடுத்து அசத்தி உள்ளீர்கள். காணொளியும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. படங்களும் தகவல்களும் ரசித்தேன்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகளும் - சற்றே தாமதமாக...