கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 16, 2019

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் 






35 comments:

  1. பயனுள்ள சமையல் டிப்ஸ்

    ReplyDelete
  2. ரொம்பவே இளைச்சிருக்கீங்க! :( கொடுத்திருக்கும் டிப்ஸ் அனைத்தும் தெரிந்தாலும் நினைவு படுத்திக்கொள்ள வசதியாக இருந்தது. வெண்டைக்காய்க் கறியை முதலில் தாளிதத்தில் போட்டுக் கொஞ்சம் வதக்கிய பின்னர் உப்பு, தேவையான காரப்பொடி போட்டுக் கொஞ்சம் கெட்டித் தயிர் சேர்த்தாலும் நன்றாக வரும். வடமாநிலங்களில் பருப்பு வகைகள் எண்ணெய் தடவியே விற்பார்கள். அதே போல் தயிர் உறைய சின்னப் புளித்துண்டைப் போடுவார்கள். அல்லது ஒரு மிளகாய் வற்றலையும் போடலாம் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ரொம்பவே இளைச்சிருக்கீங்க!//

      ஹையோ கீசாக்காவுக்கு என்ன ஆச்சு கர்:)) அதில் பேசுபவர் பானுமதி அக்காவின் அக்கா ஹா ஹா ஹா...

      Delete
    2. அட? நிஜம்மாவா? கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்போக் கண்ணாடி வேறே போட்டுக்காமப் பார்த்தேன்.,

      Delete
    3. ஹா ஹா ஹா ஹா கீதாக்கா....நான் முதல்ல வாய்ஸ் கேட்டதும் பானுக்கானு போன வீடியோல நினைச்சு அப்புறம் கேட்டுப் புரிந்து கொண்டேன்....

      பானுக்கா வீடியோ இப்பக் கூட வந்ததே. அப்புறம் பானுக்காவின் அக்கா போன வீடியோவுல கண்ணாடி போடாம வந்தாங்க இப்ப கண்ணாடி போட்டு வந்துருக்காங்க அந்தனால உங்களுக்குச் சட்டுனு இப்படித் தோனிருக்கு கீதாக்கா...அம்புட்டுத்தான் இந்த பூஸாருக்கு லீவாம் அதான் இப்படிச் சுத்தி சுத்தி வந்து விரட்டுது..நான் பிஸினு தெரியாம நினைச்சுப்புட்டேன்...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    4. குரல் ஒற்றுமையும் இருக்கு கீதாக்கா...

      Delete
    5. நான் எத்தனை முயற்சி செய்தாலும் இந்த அளவு இளைக்க முடியாது. ண

      Delete
  3. ஜெர்மனில இருந்தப்போ இந்த பருப்பு வேகவைக்க நான் செஞ்ச வேலைகளை நினைச்சா ஹாஹா ஓவர் நைட்டெல்லாம் ஊற வச்சிருக்கேன் .இந்த எண்ணெய் சேர்க்கிறதுலாம் அப்போ தெரியாது .
    தேங்காய் பால் பால் சாம்பார் .நோட் பண்ணிக்கிட்டேன் .
    வெண்டைக்காய்க்கு புளி ..ட்ரை பண்றேன் தேங்காய் இங்கே பஹாமாஸ் வெரைட்டி உடைச்சா கொப்பரை மாதிரி வந்துடும் .அதையும் ப்ரீசரில் வைச்சா பிரவுன் தோல் பிரிஞ்சு வருமா ?டிப்ஸுக்கு தாங்க்ஸ் பானுக்கா 

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் பானுமதி அக்கா என்றே நினைக்கினமே வைரவா கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இதுக்குத்தான் ஒழுங்காக அதிராவைப்போல புளொக்ஸ் க்கு வரோணுமாக்கும்:))

      Delete
    2. ஹலோவ் மியாவ் ..அந்த வீடியோவை ஷேர் செஞ்சது பானுக்கா அதனால்தான் அவங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன் :) இது பானு அக்காவின் யூ டியூப் பக்கம் தானே அப்போ அவங்களுக்குத்தானே நன்றி சேரணு மில்லையா 

      Delete
    3. சரி சரி பானுக்கா உங்களுக்கும் வீடியோவில் tips கொடுத்த உங்க அக்காவுக்கும் தேங்க்ஸ்க்கா ..
      ஸ்ஸ்ஸ் இந்த பூனை சுத்தி சுத்தி வந்து அடிக்குது என்னை :)

      Delete
    4. ஓகே ஓகே! உங்கள் பாராட்டை சம்பந்தப்பட்டவரிடம் சேர்பித்து விடுகிறேன்.



      Delete
  4. முதல்ல பானுக்கா உங்களுக்கும் அக்காவுக்கும் ரொம்ப தாங்க்ஸ் டிப்ஸ்கு...

    சாதாரணமா பருப்பு நல்லா வெந்துவிடுகிறது. ரொம்ப ரேர் வேகாம போவது. ஆமாம் அக்கா, பருப்புக்கு நல்லெண்ணை நான் சேர்த்து வேக வைப்பதுண்டு. சி மி இப்பத்தான் தெரிந்து கொள்கிறேன். நோட்டட்.

    கீதா

    ReplyDelete
  5. சாம்பார் கடைசில தேங்காய்ப்பால் நோட்டட். இது செய்ததில்லை……
    சி வெ ஆமாம் அக்கா நெய்யில வதக்கிப் போடுவதுண்டு. நல்ல டேஸ்ட்…இருக்கும். மணமா…

    கீதா

    ReplyDelete
  6. சோலேக்கு கடலை நன்றாக வெந்துவிடுகிறது இது வரை. அக்கா உங்க குறிப்பும் நோட்டட். பயத்தம் பருப்பு சேர்த்து வேக வைத்ததில்லை.
    கீதா

    ReplyDelete
  7. பொரியல் வதக்கலுக்கு சிலதுக்குக் கொஞ்சம் புளி இப்பல்லாம் புளிக்குப் பதிலா ஆம்சூர் நீங்க சொன்னாப்ல சேர்ப்பதுண்டு..நானும்…ஆம்சூர் கொஞ்சம் டேஸ்டும் கொடுக்கிறது……காய் கொஞ்சமா வதக்கினா போடுவதில்லை…

    கீதா

    ReplyDelete
  8. தேங்காய் ஃப்ரீசர் ஆம் அழகா வந்துரும். இது ஏதேச்சையாகக் கற்றுக் கொண்டது…ஹிஹிஹி…ஆனா பெரும்பாலும் நான் துருவி விடுகிறேன். இப்போதும்…..டேபிள் அல்லது கிச்சன் மேடை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அப்படியான தே து கேரளத்தில் இருந்து வாங்கி வைச்சுருக்கேன்…இங்கு பங்களூர்லயும் கிடைக்குது.

    கீதா

    ReplyDelete
  9. இங்க பங்களூர்ல இப்ப சமீபத்துல ஏதேச்சையாக அறிந்தேன்… தயிர் உறைய அதுவும் மழை சமயத்துல படுத்திச்சு அப்ப ஒரு நாள் பாத்திரத்தை மூட புது மூடி எதுக்கு எடுக்கணும் யூஸ் செஞ்ச ஒரு பாத்திரம் க்ளீனா தான் இருந்தது..அதை கவிழ்த்தி மூடி வைச்சுட்டேன் அடுத்த நாள் நல்லா உறைஞ்சுருந்தது. அடன்னு அதைப் பிடித்துக் கொண்டுவிட்டேன். அதை ரெண்டு மூணு தடவை டெஸ்ட் செஞ்சு எல்லா டைமும் சக்ஸஸ் ஆனதிலிருந்து இப்பல்லாம் அப்படித்தான் அதுவும் இப்ப குளிர் மெதுவா வரத் தொடங்கிருக்கே…

    கீதா

    ReplyDelete
  10. சூப்பர் டிப்ஸ் அக்கா. …அப்படிச் சொல்றதை விட அனுபவங்களை, அப்சேர்வ் செய்த அனுபவங்களை இதை பகிரணும்னு எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு போடுவது இன்னும் சிறப்பு. அதுக்கு ரொம்பவே பாராட்டுகள் ரெண்டு அக்காஸுக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தனித்தனியாக பாராட்டியிருந்தாலும், நான் மொத்தமாக நன்றி சொல்லி விடுகிறேன். நன்றி கீதா.

      Delete
  11. நல்ல குறிப்புகள்!   (ஹிஹிஹி... அப்புறம்தான் கேட்கவேண்டும்!)

    ReplyDelete
  12. கேட்டுட்டேன்.   நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
  13. தேங்காய்த் துருவலுக்கு, என்னுடைய லேட்டஸ்ட் finding: Mogra dessicated coconut flakes (1 kg = Rs 400) ordered and bought through Amazon. நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி. ஆனால் விலை அதிகம் இல்லையோ..?

    ReplyDelete
    Replies
    1. விலை, சிரமத்தைக் குறைக்க நாம் கொடுக்கவேண்டிய ஒன்று. ஒருநாள் ஆசைப்பட்டு, ஒரு தேங்காய் வாங்கிவந்தேன். முதலில் அதை உடைக்கத் தெரியாமல் பல விழுப்புண்கள் விழுந்தன. அப்புறம் வீட்டில் துருவுவதற்கு கருவி ஏதும் கிடைக்காமல், கத்தி கொண்டு கீறி, (விழுப்புண் = X + delta x) கீறியவைகளை மிக்சியில் இட்டு அரைத்து, அல்லோகல கல்லோகலம் செய்து பொரியல் செய்து முடிக்க சரியாக இரண்டுமணி நேரம் ஆயிற்று. அதிலிருந்து dessicated coconut போதுமடா சாமி என்று சரணடைந்துவிட்டேன்.

      Delete
    2. நீங்கள் சமையலறைக்கு புதிது என்று நினைக்கிறேன். நான் உடைப்பதற்கு, துருவுவதற்கு போன்ற எல்லாவற்றிர்க்கும் உபகரணங்கள் வைத்திருக்கிறேன்.

      Delete
  15. சமையல் டிப்ஸ் நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி. அவர்கள் காணொளி பதிவை பதிவு செய்பவர்கள் கொஞ்சம் சத்தம் பெரிது செய்து பதிவு செய்தால் நல்லது.

    ReplyDelete
  16. //பதிவை பதிவு செய்பவர்கள் கொஞ்சம் சத்தம் பெரிது செய்து பதிவு செய்தால் நல்லது.// இதை நானும் கவனித்து என் சகோதரியிடம் சொல்லியிருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரி

    சமையல் குறிப்பு பகிர்வுகள் நன்றாக உள்ளது. உபயோகமாக இருக்கும் வண்ணம் பல குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி.

    நானும் வெண்டை, வாழை, கத்திரிக்காய் போன்றவற்றிக்கு சில சமயம் புளித்தண்ணீர் சேர்ப்பேன். சீக்கிரமாக தயிர் உரையாக கொடுத்த டிப்ஸ் இங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னமும் பல பயனுள்ள குறிப்புகளை தந்திருக்கும் தங்கள் சகோதரிக்கு என்.வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  18. அன்பு பானு மா. இப்பதான் பார்த்தேன். அக்கா அப்படியே உங்க
    சாயல்தான்.
    இவர் வீட்டுக்குத் தான் வந்திருக்கிறீர்களா.
    எத்தனை நல்ல குறிப்புகள்.
    இங்க எல்லாமே சுலபமாய் இருக்கிறமாதிரி படேல் என்ற நிறுவனம்
    செய்கிறது.
    வெண்டைக்காய் வதக்கும் போதும் துளி தயிர் சேர்ப்பதுண்டு. சீக்கிரம் வதங்கி தனித்தனியாக இருக்கும்.
    தயிர் உறைய இன்ஸ்டண்ட் பாட் வந்துவிட்டது.
    அதில் காய வைத்து ,நல்ல தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்து யோகர்ட் மோட் ல வைத்தால் எட்டு மணி நேரத்தில் கெட்டித் தயிர் ரெடி.

    சின்ன வெங்காயம் வதக்கல் குறிப்புக்கு மிக நன்றி.
    அக்காவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் மா.

    ReplyDelete