சேனை கிழங்கு மசியல்
தேவையான பொருட்கள்:
சேனை கிழங்கு ---- 1/2 கிலோ
பச்சை மிளகாய் ---- 4 அல்லது 5
எலுமிச்சம் பழம் ------ 1/2 மூடி
இஞ்சி ----- ஒரு சிறு துண்டு
தாளிக்க: கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு .... 1 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தழை
சேனை கிழங்கை நன்றாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். கிழங்கு வெந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி இவைகளை சேர்த்து கீரை மசிக்கும் மத்து அல்லது குழியாக இருக்கும் கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.
மேற்படி மசியல் கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாக கிளறி விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல் இவைகளை தாளித்தால் சேனை கிழங்கு மசியல் ரெடி.
பிடி கருணை கிழங்கிலும் இந்த மசியலை செய்வதுண்டு. கருணை கிழங்கு மசியலைப் போல சேனை கிழங்கு மசியல் தொண்டையை அரிக்காது. தளர இருந்தால் பிசைந்து சாப்பிடலாம், கெட்டியாக செய்தால் கூட்டு போல சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையானது.
தேங்காய் அரைத்து மிளகு சேர்த்தால் எரிசேரி. கருணைக் கிழங்கில் இதுபோல மசியல் செய்து சாப்பிட்டிருக்கிறோம். இதில் எ.ப பிழிந்து செய்ததில்லை.
ReplyDeleteஎரிசேரிக்கு தேங்காய்+மிளகு வறுத்து அரைத்து விடுவதோடு கடைசியில் தேங்காய் துருவலை சிவக்க வறுத்து சேர்க்க வேண்டும். எ.ப.கிடையாது.
Deleteஆம், எரிசேரிக்கு ஏ.ப கிடையாது. கருணைக்கிழங்கு மசியலுக்கு சொன்னேன்.
Delete* எ ப
DeleteSuper
ReplyDeleteசாப்பிட்டுவிட்டு சொல்லுங்க ஜி.
Deleteசுவையான குறிப்பு!
ReplyDeleteவாங்க! சுவையான உணவும் கூட.
Deleteநல்ல குறிப்பு.... நன்றி.....
ReplyDeleteவாங்க! தனியாக இருக்கிறீர்கள். சமைக்க மூட் இருக்கும் ஒரு நாளில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா!
Deleteவித்தியாசமான குறிப்பு....
ReplyDeleteவித்தியாசமா இருக்கு. பண்றது சுலபம்தான். ஆனால் எதுக்குத் தொட்டுக்கறது? செய்முறையைக் குறித்துவைத்துக்கொண்டேன். வேகவைக்கும்போது புளியைச் சேர்த்துக்கொண்டால் (தொண்டை அரிப்பு இருக்காது) கடைசியில் எலுமி பிழிந்துவிடவேண்டாமோ? (ஆனால் இந்த அழகான மஞ்சள் நிறம் கிடைக்காது)
ReplyDeleteசேனைக்கிழங்குத் துவையல் கூட நல்லா இருக்கும். புளி சேர்த்தும் மசியல் செய்யலாம். எலுமிச்சம்பழம் பிழிந்தும் செய்யலாம். சேனைக்கிழங்கும் காராமணியும் போட்டுப் பிட்லையும் செய்யலாம்.
ReplyDeleteஇந்தப் பதிவு வந்ததே எனக்கு அப்டேட் ஆகலை! :)
ReplyDelete