கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 14, 2017

ஆடி அவஸ்தைகள்!

ஆடி அவஸ்தைகள்!
"ஆடி மாதம் வந்து விட்டாலே தொல்லை தாங்க முடியவில்லை..." என்று அலுத்துக் கொண்டார் ஒரு நண்பர். "ஏன்? என்னாச்சு?" என்றேன். 

பின்னே என்ன அவரவர் இஷ்டத்திற்கு சேல், சேல் என்று கூவத் தொடங்கி விடுகிறார்கள். நாம்தானே கஷ்டப் பட வேண்டியிருக்கு..?" என்றார். 

அவர் கஷ்டத்திற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு வேறு வித கஷ்டம்.  

என்னது நான் சொல்வது காதில் விழவில்லையா? இன்னும் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டுமா? 

ஓ.. லவுட் ஸ்பீக்கர் அலறுகிறதா? அதை மீறி கத்த வேண்டுமா? 
இதுதான், நான் சொல்ல நினைத்ததும். இந்த லவுட் ஸ்பீக்கர் தொல்லை...

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறேன் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றுகிறார்கள் என்றால் வியாழக் கிழமை முதலே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு அலறத் தொடங்கி விடும். 

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்களோடு கொஞ்சம் பேச முடிந்தால் நன்றாக இருக்கும். 

"சின்னஞ் சிறு பெண் போலே..." போல  கம்போஸ் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எல்.ஆர்.ஈஸ்வரியின்,"தாயே கருமாரி.." போலவாவது இருக்க வேண்டாமா?

"துர்கா, சாமுண்டி.. " என்று முதலில் ஒரு பெண் அலறுகிறார், உடனே பின்னணி இசை ஒலிக்கிறது. எப்படிப்பட்ட பின்னணி தெரியுமா? எழுபதுகளில் வந்த படங்களில் கதாநாயகியை வில்லன் கடத்தி கொண்டு செல்வான், அவனைத் துரதியப்படி கதாநாயகன் ஒரு காரில் வரும் பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, அதைப் போன்ற ஓசை. இதைக் கேட்டால் பக்தி வரும் என்ற அந்த இசை அமைப்பாளரின் நம்பிக்கை வியக்க வைக்கிறது. 

இவர்களுக்கு இத்தனை சத்தம் போடவும், தன் பக்தியை மற்றவர்கள் மீது திணிக்கவும் யார் உரிமை கொடுத்தார்கள்? மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை,திருவெம்பாவை பாடல்களை ஒலி பரப்புவது தொந்தரவு என்று அவற்றை ஒலி பரப்பக் கூடாது என்று தடை செய்தார்களே, குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் கூட நாள் முழுவதும் இத்தனை இரைச்சலாக பாடல்கள் போடுவது அங்கு பணி ஆற்றுபவர்களுக்கு எத்தனை பெரிய அசௌகரியம்? இதைப்பற்றி  ஏன் யாரும் ஒன்றும் சொல்வதில்லை? 

இப்படிப்பட்ட கோவில் உற்சவங்களில் இன்னொரு தமாஷ் அவர்கள் ஓலி பெருக்கியை கையாளும் விதம். மைக் என்னும் ஆங்கில வார்த்தையை ஓலி பெருக்கி என்று அழகாக, பொருத்தமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நம்மால் ஒரு கூட்டம் முழுமைக்கும் கேட்கும்படி கத்த முடியாது என்பதற்காகத்தான் ஒலி அளவை பெருக்கிக் காட்டும் மைக்கை பயன் படுத்துகிறோம். ஆனால் நம்மவர்களோ ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் அலறுவார்கள் . 

விவேக் நகைச்சுவையாக சொன்னார், நான் எனக்கு தெரிந்த விதத்தில் கூறியிருக்கிறேன். ஊதுகிற சங்கை ஊதுவோம், விடியும் போது விடியட்டும் 

18 comments:

 1. ஒலிப்பெருக்கி வைத்து பாடல்கள் போட, அல்லது சத்தமெழுப்ப தடை உண்டே... அதை மீறியா செய்கிறார்கள்? அந்த மாதிரி ஏரியாவில் குடி இருந்தால் கஷ்டம்தான்!

  ReplyDelete
 2. துளசி: எங்கள் ஊரிலும் பாடல்கள் ஒலிப்பதுண்டு. ஆனால் அதிகச் சத்தம் கிடையாது. பாடல்கள் எல்லாமே மிகவும் அமைதியான முறையில்தான் இருக்கும். எங்கள் பகுதிகளி எல்லாம் கோயில்கள் காட்டிற்குள் தான் இருக்கும். நகரங்களில் மட்டும்தான் பிஸியான பகுதிகளிலும் கோயில்கள் இருந்தாலும் மிக மிக ஆர்பாட்டமில்லாத பாடல்கள் அதிக சத்தமில்லாமல் ஒலிக்கும். யாருக்கும் தொந்தரவு இருக்காது.

  கீதா: ஐஉயோ அதை ஏன் கேக்கறீங்க பானுக்கா நானும் இதை ஒரு நகைச் சுவைப் பதிவாகவோ இல்லை இடையில் புகுத்தியோ எழுதிய நினைவு தலைப்பு மறந்து போய்விட்டது..ஆடி என்றால் அம்மன் ஆடத் தொடங்கிவிடுவார்...அதுவும் ரெகார்ட் டான்ஸ் போல என்று...எங்கள் வீட்டுப் பகுதியிலும் இப்படித்தான் இருந்தது. வீட்டில் பேசக் கூட முடியாது. ஏற்கனவே காது டமாரம்...இதைப் பற்றி அப்புறம் கம்ப்ளெய்ன்ட் கொடுத்து இப்போது ஒலிபரப்புவது இல்லை வீட்டினருகில். ஆனால் தெருவின் முக்கிற்குச் சென்றால் அங்கு பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து வாக்கிங்க் போகும் ஒரு சிறு பகுதி வரை டமார்ம தான். கடையில் எதுவும் வாங்க முடியாது. அத்னால் எழுதிக் கொண்டு போய் வாங்கிவிடுவேன்...ஹஹஹ்....

  அதுவும் நோயாளிகள் இருக்கும் இடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...பரிதாபம்...அம்மனும் பாவம் தான்...

  ReplyDelete
  Replies
  1. @துளசிதரன் மலையாளிகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

   @கீதா😊

   Delete
 3. எல்.ஆர்.ஈஸ்வரியின் பழைய பாடல்கள் கேட்க இனிமைதான்.

  //"சின்னஞ் சிறு பெண் போலே//

  பாடல் மிகவும் பிடிக்கும் எனக்கு.

  புதிய பக்தி பாடல்கள் அவ்வளவு இனிமையாக இல்லை, அந்த பாடல்களை ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் கேட்டால் தலைவேதனைதான்.

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது அக்கா?:( வருகைக்கு நன்றி!

   Delete
 4. இங்கே அந்தத் தொல்லை இல்லை! அம்மாமண்டபத்தில் முக்கிய விசேஷ தினங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அறிவிப்பினூடே பாட்டுகளையும் ஒலிபரப்புவார்கள். அது என்னிக்கோ தான்! என்றாலும் இங்கே அதிகம் சத்தம் போடுவது என்றால் யாரானும் மேலுலகம் போனால் அடிக்கும் கொட்டுச் சத்தம் தான்! சுமார் 2 நாட்கள் இடைவிடாமல் அடிப்பார்கள். மேலே நான்காவது மாடிக்கு வந்து கேட்கும். :(

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீரங்கத்தில் உண்டோ சிவ தரிசனம் என்பார்கள். அதனால் தப்பி விட்டீர்கள் போலிருக்கிறது.

   நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு விஷயம்... எனக்கு ரத்த கண்ணீர் திரைப்படத்தை நினைவூட்டும். அதில் எம.ஆர். ராதாவின் தாயார் இறந்து விடுவார். ஊரிலிருந்து சில உறவினர்கள் ஒப்பாரி வைத்தபடி வருவார். ராதா அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டு,"செத்தா கூட பாடரான்யா இந்த நாட்டில்" என்பார்👍

   Delete
 5. Replies
  1. நன்றி சார்! இதெல்லாம் எப்போது மாறும்?

   Delete
 6. ரீமிக்ஸ் என்ற பெயரில பழைய பாடல்களை கொலை செய்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் இதைத்தான் ரசிப்பார்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள்.

   Delete
 7. ஆடிக்கூழ் என்று வசுல் தொல்லை இல்லையா கேரளத்திலும் கர்க்கடகக் கஞ்சி என்று கோவிலில் தருகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. வியாபாரிகள் வசூல் தொல்லையால் அவஸ்தை படுவார்கள்.

   Delete
 8. எதுவுமே அடுத்தவர்களுக்குத் தொல்லையில்லாமல் இருப்பதுதான் நல்லது. ஐயப்பன் பாடல்களும், ஹிட் பாடல்களின் ராகத்தில் வந்து ரொம்ப வருடங்களாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நம் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் என்பதை நம்மவர்கள் உணரும் நாள் என்நாளோ..?

   Delete