கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 17, 2017

நாள் நல்ல நாள்

நாள் நல்ல நாள் 


"ஹாய் ரம்ஸ் எப்படி இருக்க?" என்று கேட்டபடியே வீட்டுக்குள் 
சதீஷ் நுழைந்த பொழுதே ரமாவிற்கு கணவன் உற்சாக மூடில் இருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. 

"என்ன ஒரே குஷி? ஆபிஸில் என்ன விசேஷம்?"

"அப்படி கேளு.. என் டீமில் இருக்கிற வித்யா இன்னிக்கு செமத்தியா என்கிட்ட மாட்டிக்கிட்டா.. வெச்சேன் அவளுக்கு சரியான ஆப்பு.."

"என்ன ஆச்சு?"

"இன்னிக்கு லீவு கேட்டா, முடியாதுனு சொல்லிட்டேன்."

"இது ஒரு பெரிய விஷயமா?"

"கண்டிப்பா.. அவ லீவு கேட்டதுக்கு சொன்ன காரணம்தான் முக்கியம்."

"அப்படி என்ன காரணம்? குழந்தைக்கு உடம்பு சரியில்ல.."

"அப்படியெல்லாம் சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே.. ஐ  காட் மை சம்ஸ்(பீரியட்ஸ்) னு சொன்னா.. யார் கிட்ட? எங்கிட்ட..?
என்ன மேடம், உங்களோடது டுவெண்ட்டி செவென் டே சைக்கிள், பன்னிரண்டு நாள்தான் ஆகிறது.. அதுக்குள்ள எப்படினு கேட்டேன், பதிலே இல்ல, மரியாதையா ஆஃபீஸுக்கு வந்துட்டா.."

"இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன் தெரியாம? ஆபிஸில் வேலை பார்க்கும் எல்லோருடைய பீரியட்ஸ் டைமும் பிங்கர் டிப்பில் வெச்சிருக்கேன். தீபிகாவுக்கு தர்ட்டி டே சைக்கிள், அடுத்த வாரம் ட்யூ, சாக்ஷாவுக்குதான் கொஞ்சம் இரெகுலர், ப்ரியா..."

சதீஷ் அடுக்கிக் கொண்டே போக, "வெய்ட்! வெய்ட்! என்று இடை மறித்த ரமா  என்னோட சைக்கிள் தெரியுமா?" என்று கேட்க.

கொஞ்சம் திடுக்கிட்ட சதீஷ், "அது... உனக்கு ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?" என்க,

"ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?..தட் மீன்ஸ் யூ ஆர் நாட் ஷுயர்.. எனக்கு எப்போ டியூ? சொல்லு பார்க்கலாம்.."

"வந்து.. இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்றது..?" சதீஷ் சமாளிக்க முயற்சி செய்தான்.

"வித்யா என்ன முன்னாலேயே சொல்லி வெச்சுட்டு லீவ் கேட்டாளா? ஊர்ல இருக்கிறவ டேட் எல்லாம் தெரியறது, பெண்டாட்டி பத்தி தெரியல..."

ரமா விருட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை சாற்றிக் கொள்ள.. "உனக்கு தேவையடா இந்த பெருமை?" என்று சோபாவில் சரிந்தான். 

வேறொன்றுமில்லை பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிருந்தா காரத் கூறியதை கேட்டதும், என் கற்பனை பறவை சிறகை விரித்து விட்டது. 

15 comments:

 1. சைக்கிள் படிதான் வரும் என்பது நிச்சயமில்லை என்பதை ஹீரோ உணர்வதாக சொல்லியிருக்கலாமோ... ம்ம்ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. ஹீரோ உணர்வதாக எழுதினால் சீரியசாகி விடுமே.வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. "அடிச்சுக்கூட கேட்பாங்க அப்பவும் உண்மையா சொல்லமாட்டோமில்ல"

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா! நன்றி மீண்டும் வருக.

   Delete
 4. ஹாஹாஹாஹா...ஆ! இப்படியுமா? அதெல்லாம் கூடச் சொல்லி லீவு கேப்பாங்களா அதாவது அதுவாவே இருந்தாலும் வேற ரீஸன் சொல்லிக் கேக்கமாட்டாங்களா..வியப்பாக இருக்கே அக்கா!! ஒரு ஆண் தன் ஆஃபீஸில் இருக்கும் பெண்கள் எல்லாரது சைக்கிளையும் நினைவு வைத்திருப்பது!!!

  எனக்கு எங்கள் வீட்டில் ஒரு நெருங்கிய உறவினர் அவர் இப்படித்தான் எங்கள் வீட்டுப் பெண்களின் சைக்கிள் எல்லாம் நினைவு வைத்து வீட்டில் பொதுவான விசேஷங்கள் வரும் போது அவர் அவளுக்கு நாள் இவளுக்கு நாள், உனக்குக் கூட நாள் என்று என்னிடம் சொல்லும் போது .எங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதுவும் எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கும். கோபமும் வரும்.. இதெல்லாம் இப்படிப் பப்ளிக்காக...சில சமயம் எனக்குத் தோன்றும் இதெல்லாம் எதற்காக இப்படி ஊரறியத் தெரிய வேண்டும் என்று...இப்படி வீட்டில் ஒதுங்குவதால்தானே எல்லாருக்கும் தெரியவருகிறது என்று தோன்றும். எனக்கு என்னவோ ரொம்பவே கஷ்டமாக இருக்கும்...வீட்டிலேயே இப்படி என்றால் ஆஃபீஸில் என்று நினைத்த போது வியப்பாக இருந்தது அக்கா....ஒரு வேளை எனக்கு ஆஃபீஸ் அனுபவம் இல்லாததால் அப்படித் தோன்றியதோ என்னவோ!!!

  வித்தியாசமான ஒரு பக்கக் கதை!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் விபரீத கற்பனைதான். ரசிக்கும்படி இருந்ததா?

   Delete
 5. இப்படித்தான் கண்வர்கள் பல விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் நானெல்லாம் இப்படி எல்லாம் மாட்டிக்க மாட்டேன் ஏனென்றால் பொண்டாட்டி முன் நான் வாயே திறக்க மாட்டேன்ல என் மனைவி பூரிக்கட்டையால் அடித்தாலும் வலி அதிகம் இருந்தாலும் வாய் திறக்கமாட்டேனாக்கும்

  ReplyDelete
 6. தில்லையகத்து/கீதா சொன்ன மாதிரிச் சிலர் இருக்கத்தான் செய்யறாங்க! :( ஆனாலும் பிருந்தா காரத் வெளிப்படையாக் கேட்பதைத் தானே நம் முன்னோர்களும் செய்து வந்தார்கள் என நினைக்கையில் இதெல்லாம் அறிவு ஜீவிகள் சொன்னாத் தான் ஏத்துப்பாங்களோனும் தோணும்! :))) நல்ல நகைச்சுவையான பதிவு. சிக்கென்று ஒரே பக்கம்! எனக்கு வளவளனு வருது! :)

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி!

   Delete
 7. பெண்ணாய்ப் பிறந்தாலே சலுகையுமா

  ReplyDelete
  Replies
  1. இது சலுகை என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய அடுத்த பதிவினை பாருங்கள்.

   Delete
 8. நீங்கள் விளையாட்டாக எழுதி இருந்தாலும் இப்படியும் நடக்கலாம் இல்லை நடக்கும் என்பதே என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நன்றி.

   Delete