கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 29, 2017

சாபுதானா கிச்சடி

சாபுதானா கிச்சடி 

தேவையான பொருள்கள்: 

சாபுதானா(ஜவ்வரிசி பெரியது)  - 200gm
உருளை கிழங்கு (மீடியம் சைஸ்) - 3
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 3 அல்லது 4
தக்காளி(பெரியது) - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது இல்லையென்றால் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி போடலாம்.
நிலக்கடலை - ஒரு சிறிய கப் 
கறிவேப்பிலை - ஒரு ஆர்க் 
மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க:
எண்ணெய்  - சிறிதளவு 
சீரகம் - 1 டீ ஸ்பூன் 
உ.பருப்பு - 2 டீ ஸ்பூன் 
க.பருப்பு -  2 டீ ஸ்பூன் 







செய்முறை:

ஜவ்வரிசியை கழுவி விட்டு, ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வடிய வைக்கவும். தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் நன்றாக வடிய வேண்டியது முக்கியம். இல்லையென்றால் கிச்சடி உதிர் உதிராக வராமல் கொழ கொழவென்று ஆகி விடும். 

ஊற வைத்து வடிய வைத்திருக்கும் ஜவ்வரிசி 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நாலு அல்லது எட்டு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.ஜவ்வரிசி தயாரானதும் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அது சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்(கீறி போடலாம்) கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது  இவைகளை சேர்த்து வதக்கவும்.






அவை நன்கு வதங்கியதும் ஜவ்வரிசியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள். ஜவ்வரிசி வெந்ததும்(அதன் வெண்மை நிறம் மாறி கண்ணாடி போல மாறும்) துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, மற்றும் ஒன்றிரெண்டாக பொடி செய்யப்பட்ட நிலக்கடலை இவைகளையும் சேர்த்து கிளறி சற்று நேரம் சின்னத் தீயில் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும். 






பி.கு. : கடலையை மிக்சியில் பொடி செய்யும் பொழுது அதிகமாக நொறுங்கி விட்டது. உ.கி.? மறந்து விட்டேன்.ஹி,ஹி! நீங்கள் மறக்காமல் போட்டு விடுங்கள். 


17 comments:

  1. பெயர் மும்பையிலிருந்து இறக்குமதி ஆனதோ.....
    செய்து பார்க்கச் சொல்லணும்.

    ReplyDelete
    Replies
    1. மும்பை மட்டும் இல்லை, வட இந்திய உணவு. குஜராத்தியர்களும், மராட்டியார்களும் விரத நாட்களில் சாப்பிடுவார்கள். சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும்.

      Delete
  2. ரொம்ப நல்லா இருக்கும். .இந்த விடுமுறைக்கு அதுதான். (நாளை அல்லது மறு நாள்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. வீக் எண்டில் செய்து சாப்பிடீர்களா?

      Delete
  3. இப்படி முயற்சித்ததில்லையே... ஒருதரம் செஞ்சு பார்த்துடலாம்!

    ReplyDelete
    Replies
    1. செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.

      Delete
  4. சாபுதானா கிச்சடி பொதுவாக விரத நாட்களுக்கு என்பதால் பூண்டு, வெங்காயம் சேர்க்காமலேயே செய்வோம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் மளிகைக்கடைகளில் சாபுதானா கிச்சடிக்காகவென்றே நிலக்கடலைப் பொடி தனியாக விற்பார்கள். ஆசாரக் காரர்கள் வீட்டில் பொடித்துக் கொள்வார்கள்.சாபுதானா வடையும் அங்கே பிரபலம்! கொஞ்சம் எண்ணெய் குடிக்கும்! ஆனால் அதுக்கும் உ.கி வேர்க்கடலை வேணும். ஜவ்வரிசியை வறுத்து மிஷினில் கொடுத்து மாவாக்கி உருண்டை பிடிக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும். :)

    ReplyDelete
  5. வேர்க்கடலை நன்கு பொடியாகலாம். தப்பில்லை! உகி. வேக வைக்காமல் தோல் சீவிட்டுத் துருவிக் கூட நான் சேர்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. //உகி. வேக வைக்காமல் தோல் சீவிட்டுத் துருவிக் கூட நான் சேர்ப்பேன்.//

      வாங்க கீதா அக்கா! அடுத்த முறை இது போல முயற்சி செய்கிறேன். உடல் நலம் எப்படி இருக்கிறது?

      Delete
  6. ஜவ்வரிசிக்குப் பெயர் சாபுதானா வா

    ReplyDelete
  7. கேள்வி பட்டு இருக்கிறேன் செய்ததில்லை செய்து பார்த்துவிட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி(எவ்வளவு அழகான பெயர்!). செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.

      Delete
  8. நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...இதற்கென்றே ஜவ்வரிசி...பெரிசா...நான் இப்படியும் செய்ததுண்டு..ப்ளெயின் ஆகவும், உ கி மட்டும் போட்டும் நிலக்கடலை உண்டு....நான் பூனாவில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன். அதில் நோ வெங்காயம், நோ பூண்டு, நோ உ கி....உதிரியாக..தாளித்தல் இதே தான்.கடலை பொடிக்காமல் அப்படியே போட்டு, தேங்காய் பூ நிறைய போட்டு...அதுவும் நன்றாக இருந்தது....நினைவு படுத்திட்டீங்க அக்கா ஸோ செஞ்சுடனும்...ஹா..ஹா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தக்காளி, வெங்காயம் இல்லாமல் ஒரு முறை செய்தேன். என் செய்முறையில் கோளாறோ என்னவோ தொண்டைக்குள் குச்சியை வைத்து தள்ள வேண்டும் போல ஆகி விட்டது. அதனால் அதற்குப் பிறகு தக்காளி வெங்காயம் இல்லாமல் செய்வதில்லை.

      Delete
    2. சாபுதானா நன்கு ஊறி இருந்தால் தக்காளியோ, வெங்காயமோ தேவை இல்லை. உருளைக்கிழங்கையும் நன்கு துருவிக்கணும். அல்லது உதிர் உதிராக வரும்படி வேக வைச்சுக்கணும். தக்காளி, வெங்காயமே தேவை இல்லை. தேங்காய் கூட எப்போவானும் தான் சேர்ப்பேன். வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்ததுமே சாபுதானா நன்கு உதிர ஆரம்பிக்கும். முக்கியமானது வேர்க்கடலைப் பொடி.

      Delete
    3. சாபுதானா கிச்சடி சூப்பர் பானு. ஒரு ஹெல்தி பலகாரம் வயிறு நிரம்பிடும். எனக்கு ஜவ்வரிசி மிகப் பிடிக்கும்.

      Delete