இரண்டு தீர்ப்புகள்
ஓரினச் சேர்கையை
ஆதரித்து சென்ற வாரம் வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி எல்லோரும் விவாதித்து
முடித்து விட்டார்கள். அதைப் பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லாததால் விட்டு விடுகிறேன்.
நேற்று, தொழு நோயை
காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதைப் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பொழுது அவர்கள் வாழ்க்கை துணையால் பரிவை கொடுக்க
முடிந்தால்தான் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இருக்கும். அப்படி கொடுப்பதற்கு தயாராக
இல்லாததால்தான் விவாகரத்து கோருகிறார்கள், அவர்களைப் போய் வற்புறுத்தி சேர்ந்து வாழச்
சொல்வது சரியா?
நோயின் வேதனை,
பிடிக்காத வாழ்க்கைத் துணையால் வரும் மன உளைச்சல் எல்லாம் அவர்கள் நிலையை இன்னும் மோசமாக்கி
விடாதா? தீர்ப்பு அளித்தவர்கள் படித்தவர்கள், உலக அனுபவம் நிறைய இருக்கும், எனவே அவர்கள்
தீர்ப்பு சரியாகத்தான் இருக்க வேண்டும் இல்லையா?
…………………..
ஸ்வட்ச் பாரத் சாத்தியமா?
எங்கள் வீட்டுக்கு
அருகில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உருவாகி வருகிறது. அதில் பணியாற்றும் கூலித்
தொழிலாளர்கள் அதன் அருகிலேயே கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடியிருப்புக்கும்,
எங்கள் குடியிருப்புக்கும் இடையே நிறைய புதர்கள் மண்டிக் கிடக்கும். கட்டிட தொழிலாளர்களுக்கு
கழிப்பறையாக பயன்படுவது இந்த புதர்கள்தான். தினமும் எங்கள் வீட்டு ஜன்னல் திரைச்சீலையை
நீக்கும் பொழுது நான் கண்களை மூடிக் கொண்டு விடுவேன்.
எத்தனையோ கோடிகள்
லாபம் பார்க்கப் போகும் கட்டிட நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் தொழிலாளிகலின் அடிப்படை
தேவைகளைக் கூட நிறைவேற்ற முனைவதில்லை.
இப்போதெல்லாம் மொபைல் டாய்லெட்டுகள் வந்து விட்டன. அவைகளை நிறுவினால் போதும். இந்த
மாதிரி விஷயங்களை திருத்தாத வரை ஸ்வட்ச் பாரத் சாத்தியமில்லை.
இந்த கலிகாலத்தில் எப்படி வேண்டுமென்றாலும் தீர்ப்பு வரும்...
ReplyDeleteதவறு, சரி என்பது எல்லாம் காலத்திற்கு ஏற்றார் போல் மாறும். ஒரு காலத்தில் தவறு என்று கருதப்பட்ட விஷயங்கள் வேறொரு காலத்தில் சரி என்று அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருந்தாலும் சில விஷயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. வருகைக்கு நன்றி.
Deleteஆனால் இதற்கெல்லாம் தீர்ப்பு சொல்லி கடைப்பிடிக்க வைக்க முடியுமா? நீதிமன்றங்கள் இப்படி ஆரம்பித்து விட்டனவே...
ReplyDeleteநானும் உங்கள் கட்சிதான். ஆனால் இப்படி எல்லாம் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி விடுவார்கள்.
//ஆனால் இதற்கெல்லாம் தீர்ப்பு சொல்லி கடைப்பிடிக்க வைக்க முடியுமா?//
Deleteஅதேதான். நீதிபதிகளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
இரண்டாவது செய்தி வேதனை அளிக்கும் உண்மை. இந்தியர்கள் இதில் முன்னேறவே மாட்டார்கள்!
ReplyDeleteஹூம்ம்ம்!
Deleteஅதுசரி..
ReplyDeleteதொழுநோயை ஒழித்து விட்டதாகச் சொன்னார்களே...
இப்படி சந்தேகப்படுவது கூட ஏதாவது அவமதிப்பாகி விடக்கூடும்!..
>>> இப்போதெல்லாம் மொபைல் டாய்லெட்டுகள் வந்து விட்டன..<<<
அதையெல்லாம் பராமரிக்கணுமே... ரொம்பவும் கஷ்டமாச்சே!..
//அதுசரி..
Deleteதொழுநோயை ஒழித்து விட்டதாகச் சொன்னார்களே...//
ஒரு முறை ஒரு ரயில் பயணத்தில் தொழு நோயாளிகளுக்கான காப்பகங்களில் பயணியாற்றும் என்.ஜி.ஓ. ஒருவரிடம் இதே கேள்வியை கேட்டேன். அதற்கு அவர்,"தொழு நோயை ஒழித்து விட்டோம் என்றால் அதன் வெளி அடையாளங்கள் இருக்காது, ஆனால் அவர்களுக்கு உடல் வலி அதிகம் இருக்கும். ஆயுள் முழுவதும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சங்கி : டேய்!.. மொபைல் டாய்லட் வந்துடுச்சாம்...டா!...
ReplyDeleteமங்கி : மொபைல்..ல டாய்லட்டா!... என் மொபைல் தான் நேத்து டாய்லட்டுக்குள்ள விழுந்திடுச்சே!...
ஒரிஜனல் நகைச்சுவை. ரசித்தேன்.
Deletehahaha!
Deleteரோடு பராமரிப்பு, ரிப்பேர் ஒர்க்குக்காக தொடர்ந்து சில நாட்கள் வேலை இருக்கும்போது, அங்கு மொபைல் டாய்லட் வைக்கும் வழக்கம் (தொழிலாளர்களுக்காக) நான் பஹ்ரைனில் பார்த்திருக்கிறேன். தொழிலாளர்களுக்கு என்று இந்த ஊரில் எந்த முதலாளி கவலைப்படுவதுபோல் (இந்த மாதிரி கட்டிட வேலை சம்பந்தமாக) தெரிகிறது?
ReplyDeleteதீர்ப்புகள் - சித்தன் போக்கு சிவன் போக்கு - இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
//தீர்ப்புகள் - சித்தன் போக்கு சிவன் போக்கு - இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? //
Deleteஅப்படி எதுவும் இல்லை. என்ன இப்போ? சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறேன் என்கிறீர்களா?(ஜஸ்ட் ஜோக்!)
தீர்ப்புகள் - என்ன சொல்ல. எது சொன்னாலும் தவறாகத் தான் படும் கோர்ட்டுக்கு!
ReplyDeleteஸ்வச்ச் பாரத் - ஒவ்வொரு மனிதரும் திருந்தும் வரை இது சாத்தியமில்லை. தொழிலாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லையே! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா - இரயில் எஞ்சின் ட்ரைவர்கள் வழியில் அவஸ்தையானால் இரயில் நிறுத்திய பிறகு தான் எஞ்சினிலிருந்து இறங்கி அடுத்த பெட்டிக்குச் சென்று தங்கள் உபாதைகளைக் கழிக்க முடியும். நீண்ட நேரம் நிறுத்தம் இல்லாதபோது அவர்கள் என்ன செய்ய முடியும்....
சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது கோரிக்கைகளை ஏற்க - இரயில் எஞ்சின் பகுதியில் கழிப்பிடம் வைக்கும் வசதி - முடிவு செய்திருக்கிறார்கள். எப்போது நடைமுறைக்கு வரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அட கடவுளே! இன்ஜின் டிரைவர்கள் வாழ்க்கை கடினமானது என்று தெரியும், இத்தனை கஷ்டமா?
Deleteஅம்பத்தூர் வீட்டில் இருக்கையில் அக்கம்பக்கம் குடியிருப்புக்கள் வந்தப்போ நீங்க அனுபவிச்ச அதே கஷ்டத்தை நாங்களும் அனுபவிச்சோம். தினம் தினம்! வாசக் கதவை எப்போதும் மூடவும் முடியாது! நரக வேதனை தான். இந்தக் குடியிருப்பில் வரும் தொழிலாளர்களுக்கு எனக் கீழே கார் பார்க்கிங் பகுதியிலும் மொட்டை மாடியிலும் கழிவறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தினம் தினம் சுத்தமும் செய்கிறார்கள். மற்றபடி உச்சநீதிமன்றத்க் தீர்ப்புகள் பற்றிய முழு விபரம் எனக்குத் தெரியவில்லை. ஆகவே அதைப் பற்றிக் கருத்துச் சொல்ல ஏதும் இல்லை.
ReplyDeleteகோடி கோடியாக சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட்காரர்கள் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டாமா?
Deleteதீர்ப்பு வேதனையைத் தந்தது
ReplyDeleteஹூம்ம்!
Deleteஓரினச் சேர்க்கை தண்டனைக் குரியது அல்ல என்றுதீர்ப்பு இருந்தாலும் மக்கள் அதைமனதாற ஏற்றுக் கொள்வார்களா
ReplyDelete