கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 10, 2018

மசாலா சாட்- 2

 மசாலா சாட்- 2

எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ஆனால் இப்போதைய இளைஞர்கள் தாடி வைக்காமல் இருப்பார்களா? பொறுத்துப் பார்த்த நிறுவனம் வேறு வழியில்லாமல்,"தாடி வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அதை சரியாக திருத்தி, ஒழுங்காக பராமரியுங்கள் என்று மொட்டைத் தலை,தாடியோடு கூடிய ஒரு மாடல் இளைஞனின் புகைப்படத்தோடு சர்குலர் ஒன்றை அனுப்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு?



எகனாமிஸ்ட் என்னும் பத்திரிகை எடுத்திருக்கும் ஒரு கணக்கெடுப்பில் வந்த விவரம்: இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 22% குறைந்திருக்கிறதாம். பெண்களை படிக்க வைக்கும் பெற்றோர் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் வேலைக்குச் சென்று விட்டால் தாங்கள் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள பெண்கள் ஒப்புக்கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் பயமாம்.  இதை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் கூறினார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதன்மையாக விளங்கிய சைனாவின் பீஜிங் நகரில் மக்கள் தொகை குறைந்துள்ளதாம். இருபது வருட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சாதிக்கப்பட்ட விஷயம் இது சீன அரசாங்கம் மகிழிச்சியோடு சொல்கிறது. வாழ்க வளமுடன்.

ஒரு குட்டி ரெசிபி

மாங்கா(ய்)இஞ்சி பிசிறல்

மாங்கா இஞ்சி என்பது பார்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் போல் இருக்கும். முகர்ந்து பார்த்தால், மாங்காய் வாசனையும், இஞ்சி வாசனையும் அடிக்கும். சுவையும் இரண்டும் கலந்த சுவைதான்.




மாங்கா இஞ்சி   -  50கிராம் 
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி 
உப்பு                       - தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் - 1 டீ  ஸ்பூன் 
கடுகு                            -  1/4 டீ ஸ்பூன் 

மாங்கா இஞ்சியை தோல் சீவி கழுவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு கலந்து விட்டு, கடுகு தாளிக்கவும். மோர் சாதத்திற்கு ஏற்ற சுவையான இன்ஸ்டன்ட் ஊறுகாய். பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். 

இப்போது ஒரு குட்டி கதை.

சமீபத்தில் திரு.ஜி.எம்.பி. ஐயா அவர்கள், "யாரடி அவன்"? என்று துவங்கி ஒரு கதை எழுதிவிட்டு, வாசகர்களும் தொடரலாம் என்று கூறியிருந்தார். ஸ்ரீராம் அடுத்தடுத்து மூன்று கதைகள் எழுதி விட்டார். நெல்லை தமிழனும் ஒரு கதை எழுதியிருந்தார். இதோ என் பங்கிற்கு ஒரு கதை.

காதல் பிறந்த கதை

"யாருடி அவன்?" என்று எரிச்சலுடன் கேட்டாள் ராதா தன்  மகளிடம்.
யாருமா?
"அதோ அங்க பாரு, பஸ் ஸ்டாண்டில், செல் போன் பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு உன்னையே பார்க்கிறான்" 
தன்னுடைய செல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பாவனா தன் அம்மா சுட்டிக் காட்டிய அந்த பையனை முதல் முறையாக பார்த்தாள். 
"ஹூ நோஸ்? யாராவது ரோடு ரோமியோவாக இருக்கும்.. நீ ஏன் அவனைப் பார்க்கிறாய்?" 
"வயசுப்பொண்ணை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் கவலை உனக்கு என்ன தெரியும்? துப்பட்டா போடுன்னா கேக்கறயா? எப்போ பார்த்தாலும் ஜீன்ஸ், குர்தா.."
அம்மா ப்ளீஸ் ஆரம்பிச்சுடாத.."
அதற்குள் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, பெண்ணை உள்ளே தள்ளி, தானும் அமர்ந்தாள் ராதா.
மறு நாள் கல்லூரியிலிருந்து வந்த மகளிடம், "இன்னிக்கு அந்த கடன்காரன் நின்று கொண்டிருந்தானா?" என்றாள்.
யாரை கேட்கிறாய்?
அதாண்டி, நேத்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தானே, அவன்தான்."
"நான் அதையெல்லாம் பார்க்கவில்லை" இரண்டு மூன்று நாட்கள் அவனை கவனித்தாள் பாவனா. பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த  அம்மா சொல்வது உண்மைதான் போலிருக்கிறது. அவன் செல் போனில் எதையோ பார்ப்பது போல் என்னைத்தான் பார்க்கிறான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டி விடலாம் என்று நினைத்த அவள், அந்த இளைஞன் அருகில்  சென்று, "ஹலோ, வொய் ஆர் யூ ஸ்டேரிங் அட் மீ? என்றதும், திடுக்கிட்ட அந்த பையன், "வாட்?" என்றான்.
"நானும் ஒரு வாரமா பார்க்கறேன், செல் போனில் எதையோ பார்ப்பது போல் நீங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்."
கமான், நான் என் ஃப்ரெண்டிர்க்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஐம் நாட் ஸ்டேரிங் அட் யூ?   
அவன் சொன்னது போலவே அவன் சிநேகிதன் டூ வீலரில் வர, அந்த இளைஞன் புறப்பட்டான். 
மறு நாள், இவளைக்கண்டதும், அவன் திரும்பி நின்று கொள்ள, அவளுக்கு என்னவோ போலானது. அவனை அழைத்து, "ஐயம் சாரி" என்றதும், 
"இட்ஸ் ஓகே" என்றான். அடுத்து வந்த நாட்களில் நண்பனின் வண்டியில் ஏறிக் கொண்டதும் அவளைப்பார்த்து புன்னகையோடு கை அசைக்க, அவளும் புன்னகைத்தபடியே கை அசைத்தாள். 
"டேய் என்னடா நடக்கறது இங்க..?" என்றான் நண்பன்.
"எல்லாம் நல்லதுதான்டா, வண்டியை பார்த்து ஒட்டு" என்றான் பாவனாவின் காதலன். 
                                                                       --------



24 comments:

  1. இது இப்படித் தான் முடியும்! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தாற்போல் ஆகும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா, சில பெற்றோர்கள் இப்படித்தான் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

      Delete
  2. மாங்கா இஞ்சியைத் தொக்கு மாதிரியும் போடலாம். இங்கே உள்ள ஓர் ஓட்டலில் அது அடிக்கடி போடுவாங்க! காரம் தான் தலையில் போய்த் தாக்கும். நான் மஞ்சள்(பச்சைமஞ்சள் காலங்களில்) இஞ்சி மாங்காய் இஞ்சி மூன்றையும் கலந்து எலுமிச்சம்பழம் பிழிஞ்சு பச்சைமிளகாயும் சேர்த்து நறுக்குப் போட்டு அரை டீஸ்பூன் மி.பொடி, தேவையான உப்பு, சர்க்கரை, வறுத்த சீரகப் பொடி போட்டு கலந்து வைச்சுப்பேன். ஆனால் கட்டாயமாய்க் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும். இஞ்சியும் குருத்தாக இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. மாங்கா இஞ்சியில் தொக்கா? உங்கள் குறிப்பு நன்றாக இருக்கிறது.

      Delete
  3. மசாலா சாட் 1 வந்துடுச்சோ?

    ReplyDelete
    Replies
    1. வந்து விட்டதே, நீங்களும் பின்னூட்டமிட்டிருந்தீர்கள்.

      Delete
  4. சும்மா இருந்த சங்கு என்று கீதா சாம்பசிவம்கதையையா சொல்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீங்கள் எதை நினைக்கிரீர்கள்? எல்லோரும் கதை எழுதுவதையா?

      Delete
  5. தாடி வைத்திருப்போர் சங்கம் சார்பாக கண்டனங்கள்!

    பெண்கள் வேலைக்குப் போகா கணக்கெடுப்பால் பயனில்லை. பையனுக்கு பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எத்ற்கு கண்டனம்? அதுதான் அஃபீஷயலாக அனுமதித்து விட்டார்களே?
      வேலைக்குச் செல்லும் பெண்கள் பையனுக்கு சம்பளம் கொஞ்சம் ஏறக்குறைய இருந்தாலும் சரி என்கிறார்கள். வேலைக்கு போகாத பெண்கள்தான் தான் வேலைக்குச் சென்றால் எவ்வளவு சம்பளம் வருமோ அதையும் சேர்த்து வரப்போகும் கணவன் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

      Delete
    2. வேலைக்குப் போகும் பெண்ணானாலும் சரி, வேலை பார்க்காத பெண்ணானாலும் சரி, பையர்களின் சம்பளம் ஒரு லக்ஷமாவது இருக்கணும் என்கிறார்கள் என்பதே எங்கள் வீட்டில் அனுபவம். தம்பி பையர் 80,000/- வரை வாங்குகிறார். ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்தார்கள். அவங்க வீட்டில் எல்லோருமே பையருக்குச் சம்பளம் ரொம்பக் கம்மி, குடித்தனம் நடத்தப் போதுமானது இல்லைனு சொல்லிட்டாங்க. இத்தனைக்கும் அந்தப் பையர் வீடு வாங்கி வாடகைக்கு விட்டு அதுலே 20,000 வாடகை வருது. பெண்ணுக்கு வங்கியில் 30,000/- தான் சம்பளம். !!!!!!!!!!!!!!!

      Delete
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் தாடி விஷயத்துக்கு இந்த கமென்ட் போடுவாரோ என்று நினைத்தால் பொட்டுவிட்டார்!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  6. மாங்கா இஞ்சி நாங்களும் செய்து சாப்பிட்டதுண்டு. அது கொஞ்சம் பித்தம் செய்யும் என்பார்கள்.

    ஆமாம்.... பெரும்பாலும் பெற்றோர்களின் சந்தேகத்தினாலேயே விபரீதம் விளையும்!

    ReplyDelete
  7. தொலைக்காட்சி நிகழ்வுகள் சிலவற்றில் கூட - கடூரமான தாடியுடன் பலர்...

    மனைவி கர்ப்பவதியானால் கணவன் முகம் மழிக்கக் கூடாது என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்...

    மாங்காய் இஞ்சி - ஆகா!...

    ReplyDelete
    Replies
    1. தாடி இல்லாத சீரியல் நடிகர்களை பார்க்க முடியாது. கல்யாண மாப்பிள்ளையும் தாடியோடுதான்.

      Delete
  8. காதல் பிறந்த கதை...

    சில சமயம் - இப்படித்தான்...

    குரங்கைப் பிடிக்கப் போய் -
    குரங்கிடம் சிக்கிக் கொள்கிறார்கள்..

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா! அதேதான்.

    ReplyDelete
  10. கதையும் மாங்கா இஞ்சியும் அருமை...

    ReplyDelete
  11. அக்கா கதை நல்லா இருக்கு.........

    கதைல அந்த அம்மாதான் தொடங்கி வைச்சுருக்காங்க...பேசாம இருந்திருக்கலாம்...சரி பரவால்ல இன்னார்க்கு இன்னாரென்று ...அந்தப் பையன் நல்லவானாகவே இருக்கட்டும். பாவனாவின் அம்மா இப்ப ஷாக்காகி இருக்கலாம் என்று பட்சி சொல்லுது.

    ஸ்ரீராம் அடுத்தடுத்து மூன்று கதைகள் எழுதி விட்டார். நெல்லை தமிழனும் ஒரு கதை எழுதியிருந்தார்.// ஆஹா நான் மிஸ் பண்ணிவிட்டேனோ ஜிஎம்பி சார் தளத்துலயே எழுதிருக்காங்களோ?!! நான் போய்ப் பார்க்கறேன் ஏன்னு கேட்டா...

    நான் எழுத பிள்ளையார் சுழி போட்டு வைச்சுருக்கேன்..அன்னிக்கு வாசிச்சதுமே டக்கென்று மனசில் தோன்றி...ஆனால் வழக்கம் போல் எழுத முடியவில்லை..ஜஸ்ட் சுழிதான்...அப்புறம் வேலை மும்முரத்தில் மறந்தே போனேன்....ஹிஹிஹிஹி.

    இந்த பெண்கள் வேலைக்குப் போகாத புள்ளி விவரம் ம்ம்ம்ம்ம்ம்...அப்படி எல்லாம் சொல்ல முடியாது என்றே தோனுதுக்கா...எது எது எப்படி நடக்கனுமோ அப்படித்தான் நடக்கும். வேலைக்குப் போகலைனா பெற்றோர் பார்க்கும் பையனை பண்ணிப்பான்னு எல்லாம் சொல்ல முடியாது...அண்ட் வைஸ்வெர்சா...அந்தக் காலத்துல வீட்டுக்குள்ள இருந்தே ஜன்னல் வழியா எல்லாம் காதலிக்கலையா என்ன?!!!!அதுக்குன்னே பொடிசுகள் இருக்குமே லெட்டர் கொண்டு போக... ஹா ஹா ஹா

    மா இஞ்சி ரொம்பப் பிடிக்கும் இப்படித்தான் செய்வது அதுவும் திவசத்தில் எங்க வீட்டுல செய்வாங்க..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பிசி ஷெட்யூலுக்கு இடையில் வந்து பினூட்டமிட்டதிற்கு நன்றி!

      Delete
  12. எங்கே இருக்கு ஸ்ரீராமின் கதை நெல்லையின் கதை?

    கீதா

    ReplyDelete
  13. பார்த்துவிட்டேன் பானுக்கா அவங்க கதைகளையும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்த்தது சரி, பின்னூட்டம்?

      Delete