கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 12, 2019

மசாலா சாட் - 7

மசாலா சாட் - 7

இந்த முறை சென்னை விஜயம் கொஞ்சம் சோர்வூட்டக்கூடியதாக  இருந்தது. மைசூரிலிருந்து சென்னை செல்லும் சதாப்தி பெங்களூரிலிருந்து கிளம்பும் பொழுதே பத்து நிமிடம் தாமதம் என்றாலும் காட்பாடி வரை சரியான நேரத்தை கடைபிடித்த வண்டி, அதற்குப்பிறகு அரக்கோணம் வரை நத்தை வேகம், ஆமை வேகம். இரண்டு இடங்களில் வேறு எதற்காகவோ நின்று, 23:30க்கு சென்னை சென்ட்ரலை மன்னிக்கவும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தை அடைத்தது. 21:30க்கு அடைந்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் தாமதம். அதன் பிறகு ஓலா கிடைப்பதில் தாமதம், மைலாப்பூரில் இருக்கும் சகோதரி வீட்டை அடையும் பொழுது, 0:30 மணி.

மறுநாள் காலை 4:30க்கு(டெக்நிக்கலாக அன்றே) ஒரு பூஜைக்கு கிளம்ப வேண்டும், அதற்கு விடியர்காலை 3:30க்கு எழுந்திருந்தால்தான் சரியாக இருக்கும். எனவே இரண்டு மணி நேரம்தான் தூக்கம்.

மறுநாள் மீண்டும் சதாப்தியில் பெங்களூர் பயணம், மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதமாக பெங்களூர் வந்து சேர்ந்தது. வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த பொழுது மணி 1:30.  காலையில் ஏழே காலுக்கு முன்னால் கண் விழிக்க முடியவில்லை. சென்னையில் கற்பகாம்பாள் தரிசனமும், நீண்ட நாள் நண்பரை சந்தித்ததும் மகிழ்ச்சி.

கற்பகாம்பாள் கோவிலும், கொடி மரமும் 
அக்காவின் வீட்டில் என்னைக்  கவர்ந்த ஒரு விஷயம், வீட்டை அழகாக பெருக்கி, துடைத்த எலெக்ட்ரானிக் மாப். அமெரிக்காவிலிருந்து மகன் வாங்கி வந்ததாக அக்கா கூறினாள். நீங்களும் பாருங்களேன்.





இந்த மிஷினின் அடி பாகத்தில் துடைப்பதற்கான துணியை இணைக்க வேண்டும். அதன் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு துளையில், தரை துடைக்கும் திரவத்தை ஊற்றி, மூடி இயந்திரத்தை ஆன் செய்யலாம். இதனோடு இனைந்து ஒரு ஜி.பி.எஸ். உபகரணமும் இருக்கிறது. அது முதலில் வீட்டின் அமைப்பை
படித்துக் கொள்ளும். பின்னர் அதற்கேற்றபடி இந்த மாப்பிற்கு கட்டளை இடுகிறது.  அது பீரோவிற்கு அடியில் எல்லாம் சென்று துடைக்கும் அழகு..!!

இன்னுமொரு சிறப்பு, இதை அலெக்ஸ்சாவோடு  இணைத்துக் கொள்ளலாம். அலெக்ஸ்சாவை செல் போன் மூலம் இயக்கும் வசதி இருந்தால், நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கூட, வெளியிலிருந்தபடியே அலெக்ஸா மூலம் இயக்க முடியும் "அலெக்ஸா, ஆன் தி மாப், அலெக்ஸா ஸ்டாப் தி மாப்" என்று கட்டளையிட்டால் போதும். வேலை நடந்து விடும்.



இது சார்ஜிங் யூனிட். சார்ஜெரை ப்ளக் பாயிண்டில் இணைத்து விட்டு, இதை நிலையாக ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். மாப் தன் வேலையை முடித்து விட்டு, அழகாக இதில் ஏறி அமர்ந்து சார்ஜ் ஆகி விடும்.

திரும்பி வரும்பொழுது சென்னை.பு.த.டா.எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் இரண்டு மூன்று இடங்களில் மாதிரி தேர்தல் பூத்துகள் அமைத்து எப்படி எலெட்ரானிக் மிஷினில் எப்படி வாக்களிப்பது என்று ஒத்திகை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜைக்கு போன இடத்தில் பாட்டில்களில் வாங்கப்பட்ட குடிநீரை பானையில் கவிழ்த்து வைத்திருந்தார்கள். ஜில்லென்று டிஸ்டில்லது வாட்டர். நல்ல ஐடியா! நம் வீட்டிலும் பின்பற்றலாம்.





எல்லாவற்றையும் இழந்த பின்னாலும் 
எதிர்காலம் மிச்சமிருக்கிறது என்கிறதோ 
இலைகளை உதிர்த்த இந்த மரம் ?







16 comments:

  1. எலெக்ட்ரானிக் மாப் காணொளியாக இல்லையே... படமாய்த்தான் வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. காணொளி இணைத்து விட்டேன், விட்டுப்போன இன்னும் சில விஷயங்களையும் கூட இணைத்து விட்டேன். நன்றி டி.டி.

      Delete
  2. "https://4.bp.blogspot.com/-yLNc0Ilzc88/XLCWmpHosGI/AAAAAAABGZw/p1R3MuS7yNkHtWUMPUs642T-nhsG95AIwCKgBGAs/s1600/VID-20190412-WA0107.mp4" என்று உள்ளது... மேற்படி அந்த காணொளியை youtube-ல் ஏற்றி, அதை இங்கு பகிர்ந்தால், அனைவரும் காண முடியும்...

    ReplyDelete
  3. எலெக்ட்ரானிக் மாப்...ஆஹா சூப்பரா இருக்கு ...

    அதனை காணொளியாக கண்டால் இன்னும் நன்றாக இருக்கும் ...



    எல்லாவற்றையும் இழந்த பின்னாலும்
    எதிர்காலம் மிச்சமிருக்கிறது என்கிறதோ
    இலைகளை உதிர்த்த இந்த மரம் ?....


    அழகிய வரிகள் ..ஆமாம்

    மீண்டும் வசந்தத்தை வரவேற்க

    தன் இரு அல்ல

    பல கைகள் நீட்டி காத்திருக்கிறது ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. டி.டி.யின் தயவால் காணொளி இணைத்து விட்டேன். கண்டு களியுங்கள்.

      Delete
  4. தினமும் எங்கள் வீட்டை நாலு முறையாவது கூட்ட வேண்டும்... ஏனென்றால் வீடு, பேருந்துகள் போகும் மெயின் ரோட்டில் உள்ளது... சில மாதங்களுக்கு முன்பு தான் aero clean vaccum cleaner வாங்கினோம்... ஆனால் இது மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா... எங்கள் ஊரில் கிடைக்குமா என்று தேடுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நம் ஊரில் வருவதற்காக நானும் காத்திருக்கிறேன்.

      Delete
  5. //இது சார்ஜிங் யூனிட். சார்ஜெரை ப்ளக் பாயிண்டில் இணைத்து விட்டு, //

    இணைப்பதற்கு அடாப்டர் வேண்டுமா?.. இந்தத் தொல்லை+பழுது பார்த்தல், டாலரில்
    அம்மாடியோ விலை.. காரணங்களினால் அங்கிருந்து எலட்ரானிஸ் சமாச்சாரம் எதுவும் வாங்கி வருவதில்லை.

    இதே பொருள் இந்திய சூழ்நிலைகளுக்கேற்ப அமெஸானில் விற்பனைக்கு வந்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. //இணைப்பதற்கு அடாப்டர் வேண்டுமா?.. இந்தத் தொல்லை+பழுது பார்த்தல், டாலரில்
      அம்மாடியோ விலை.. //
      அடாப்டர் வேண்டும். நீங்கள் சொல்லியிருக்கும் மற்ற விஷயங்கள் உண்மை.
      வருகைக்கு நன்றி.

      Delete
  6. எலக்ட்ரானிக் மாப் - நல்ல வசதியாகத் தெரிகிறது. இந்தியாவில் விரைவில் வந்து விடலாம்!

    மரம் - நம்பிக்கை தருகிறது!

    இரயில் தாமதம் - கஷ்டம் தான். வடக்கே பல இரயில்கள் தினமும் தாமதம் தான்.

    சுவையான மசாலா சாட்.... அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. அம்பேரிக்காவில் பொண்ணு வீட்டில் இந்த வீடு துடைக்கும் ரோபோ (அங்கே மாப் மாதிரி இல்லை) ஐந்தாறு வருடங்களாக இருக்கு! ஆனால் எனக்கு என்னமோ அவ்வளவு பிடிக்காது.

    ReplyDelete
  8. இந்த முறை பல்லவன் குறித்த நேரத்தில் ஶ்ரீரங்கம் வந்துடுச்சு! போகும்போது தேஜஸ் குறித்த நேரத்தை விட முன்னாடியே போயிடுச்சு! அவசரக்குடுக்கை!

    ReplyDelete
  9. //போகும்போது தேஜஸ் குறித்த நேரத்தை விட முன்னாடியே போயிடுச்சு! அவசரக்குடுக்கை!//
    கீதா அக்கா இருக்காங்கனு பதறி அடிச்சு போய் விட்டதோ என்னவோ?ஹாஹா!

    ReplyDelete
  10. அட பானுக்கா இன்றைய சாட்டில் கவர்ச்சியே அந்த் மாப் தான்!! ஹா ஹா ஹா..ரொம்ப சமர்த்துப் பெண்ணா/பிள்ளையா இருக்கே!!.அதுவும் தானாவே சூப்பரா தன்னை சார்ஜ் பண்ணிக்குது!!! ஏறி உக்காந்து!! .இத்தனையும் சொன்ன நீங்க அதோட வேல்யூவை சொல்லவே இல்லையே...ஹிஹிஹி

    மரம்// உங்கள் வரிகள் செம! நாம் ஒவ்வொன்றிலிருந்தும் நிறைய் கற்கலாம் இல்லையா...சூப்பர் சாட்!

    கீதா

    ReplyDelete
  11. வாங்க கீதா. உங்களைப்போல தாராளமாக பாராட்டவும், ஊக்குவிக்கவும் எல்லோருக்கும் வராது. மிக்க நன்றி.

    ReplyDelete