ஜனநாயக கடமை
ஏப்ரல் 17ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வரவேண்டியிருந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே ஓட்டும் போட்டு விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் கிளம்பினோம்.
பெங்களூரிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணிக்கு பேருந்து. காலை பத்து மணியிலிருந்து ஓலா புக் பண்ண முயற்சித்து கொண்டேயிருந்தோம். மைக்ரோ, மினி, ப்ரைம், ஆட்டோ எதுவுமே இல்லை. எங்கள் நாத்தனார் பெண் மூலம் ஊபர் முயற்சித்தால் அதிலும் பலன் இல்லை. கடைசியில் அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஏற்பாடு செய்து கொடுத்தாள். வீட்டிலிருந்து 10:30க்கு கிளம்பினோம், 11:50க்கு மடிவாலாவை அடைந்தோம். அதற்குள் என் கணவர் ஏகத்திற்கு டென்ஷனாகி விட்டார்.
பஸ்ஸில் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகள் போட்டார்கள். பின்னர் சாமி 2 வில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் விக்ரம் தான் போலீஸ் இல்லை பொறுக்கி என்றார். திரிஷா ஏற்ற ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் டான்ஸெல்லாம் ஆடினாலும், கவர்ச்சி கோஷண்ட் கம்மி என்பதால் ரசிக்க முடியவில்லை. சாமி(1)ல் இருந்த பாடல், நகைச்சுவை, விறுவிறுப்பான திரைக்கதை எதுவுமே இதில் இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை. நம் ரசிகர்கள் தெளிவுதான்.
அக்கா மாமியாரை ஓட்டு போட அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாமியால் நடக்க முடியாது என்பதால் காரில் சென்றோம். வாகனங்களை பள்ளி அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்றாலும் மாமியின் உடல் நிலையை கருதி பள்ளி வாசலில் இறங்கிக் கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று ஒரு காவலர் தடுத்தார் இன்னொருவர் அனுமதித்தார். எனவே உள்ளே சென்று மாமியை பூத்திற்குள் செல்லும் வரிசையில் சேர்த்து விட்டு அருகில் காத்திருந்தேன்.
பள்ளி வளாகம் சுத்தமாக இருந்தது. நோ பிளாஸ்டிக் ஏரியாவாம். எல்லா சுவர்களிலும் பொன் மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் என்னைக் கவர்ந்த வாசகம் அப்துல் கலாமுடையது. பெண்கள் பள்ளியில் பெண்களுக்காக ஒரு வாசகம்
அந்த பள்ளியில் மொத்தம் எட்டு பூத்துகள் இருந்தன. எந்த ஏரியாவுக்கு எந்த பூத் என்று தெரியாமல் வந்தவர்கள் கொஞ்சம் குழம்பினர். ஒரு காவலர்," ஒரு சாக் பீஸ் கொண்டாப்பா, எழுதிடலாம். இல்லன்னா நமக்கு தான் சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் கஷ்டம்" என்று எப்படியோ ஒரு சாக்பீஸை வரவழைத்து, எந்தெந்த தெரு எந்த பூத்தில் என்று எழுதிப் போட்டார்.
எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று தெரியவில்லை, காமிராவை தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒருவர் காவலரிடம் வந்து, ஓட்டு போட்டு விட்டு வருகிறவர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று புகார் கூறினார். "வெளியிலிருந்து எடுங்கள்" என்று அவர் கூறியதற்கு, "கையில் மை வைப்பதை எல்லாம் எப்படி சார் வெளியிலிருந்து எடுக்க முடியும்? பூத்திற்குள் வரக்கூடாது என்கிறார், அஜீத்தையெல்லாம் எடுக்கிறோம்.." என்றதும், அந்த காவலர், இந்த பூத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தார். "உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடப்போகிறது" என்றேன், " ஓட்டு போடுவதைத்தான் எடுக்கக்கூடாது, மை வைப்பதை எல்லாம் எடுக்கலாம் என்றார்.
"ரொம்ப நேரமா இங்கேயே நிக்குறீங்களேமா?" என்று என்னிடம் ஒரு காவலர் வினவினார். நான் துணைக்கு வந்திருக்கிறேன் என்றதும்,"இங்கு நிற்க கூடாதுமா, வெளியே போய்டுங்க" எனறார். சரி என்று வெளியே வந்து காத்திருந்தேன்.
அங்கு தன் தாயோடு துணைக்கு வந்திருந்த ஒரு பையனிடம், காவலுக்கு நின்ற ஆந்திர ராணுவ வீரர் ஹிந்தியில் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.
"ஐ.பி.எல்.லில் ஏன் சி.எஸ்.கே.யை பிடிக்கும்?"
"உங்கள் ஊரில் ஆங்கிலம் பேசுகிறீர்கள், ஹிந்தி பேசுகிறீர்கள், தமிழ் பேச
மாட்டீர்களா?" போன்ற கேள்விகள். தமிழ் தெரியாத அவரோடு அந்தப் பையன் எப்படி தமிழில் பேச முடியும்?
நடிகை தேவயானியும், அவர் கணவரும் ஓட்டு போட்டு விட்டு சென்றார்கள். ஓட்டு போட்டு விட்டு வந்த ஒரு பெரியவர் செல் ஃபோன் வைத்திருந்தார். "செல்ஃபோனை அனுமதிக்கிறார்களா?" என்று கேட்டேன், "யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றார். பெரும்பான்மையோர் செல்போன் வைத்துக் கொண்டிருந்தனர். அசோக் நகரில் ஓட்டு போட வந்தவர்களில் பெரும்பான்மையினர் முதியவர்களாக இருந்தனர். ராமாபுரத்தில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் இளைஞர்களாக இருந்தார்கள்.
எங்கள் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அங்கிருந்த தேர்தல் அதிகாரி பொறுமையாக அறுபத்தேழு பக்கங்களிலும் தேடிக் கொண்டிருந்த பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இன்னொரு பெண் நடுவில் புகுந்து விட்டதாக குற்றம் சாட்ட, அந்தப் பெண் மறுக்க, இருவருக்கும் குழாயடி போல சண்டை வந்தது. ஒரு பெண் காவலர் வந்து விலக்கி விட்டார். எங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால் ஓட்டு போடாமல் தான் வந்தோம். காத்திருந்த நேரத்தில் பழைய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.
இதேபோல் பெயர் விடுபட்டிருந்தாலும் நடிகர்கள் ரமேஷ் கண்ணாவும், ஶ்ரீகாந்தும் மற்ற ஆதாரங்களை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர் என்று தொலைக்காட்சி செய்தியில் காண்பித்தார்கள். நாமெல்லாம் சாமானியர்கள்தானே? எனவே ஜனநாயக கடமை ஆற்ற முடியவில்லை
சட்டம் பிரபலமானவர்களுக்கு இடையூறு கொடுத்தால் அவர்கள் சட்டத்துக்கே பிராபலம் கொடுப்பார்கள் என்பதை அதிகாரி அறிந்து வைத்துள்ளார் போலும்.
ReplyDeleteஇருக்கலாம். நன்றி ஜி.
Deleteஅனுபவம் பலவிதம்.....
ReplyDeleteஅதில் இது ஒரு விதம். நன்றி வெங்கட்.
Deleteஆதார் கார்ட் இருந்தாலும் நீங்கள் இருப்பது தற்சமயம் "பெண்"களூர் அல்லவா? விலாசம் சான்றிதழ் வேண்டும். இருந்தால் கண்டு பிடிப்பார்கள். ஆதாரில் எந்த விலாசம் இருக்கிறதோ அங்கே நீங்கள் இருக்க வேண்டும். தெளிவாகச் சொன்னார்கள்.
ReplyDeleteஎங்களின் தற்போதய விலாசம் டெம்பரவரி என்மதால் நாங்கள் எங்கள் வங்கி கணக்கு உட்பட எதிலுமே இன்னும் விலாசம் மாற்றவில்லை. இனிமேல்தான் நிரந்தர விலாசத்திற்கு மாற்ற வேண்டும். எல்லாவற்றிர்க்கும் ப்ரூஃப் கேட்கிறார்கள். காஸ் இணப்பு, மின்சார பில், ரெண்டல் அக்ரீமெண்ட் எல்லாமே மகனின் பெயரில் இருப்பதால் எங்களுக்கு கஷ்டம். இனிமேல்தான் சொந்த வீட்டிற்கு செல்லப் போகிறோம். போனதும் மாற்றிவிட வேண்டும். ஆதார் கார்டில் இருப்பது சென்னை விலாசம்தான்.
Deleteபள்ளி வளாகம் சுத்தமாக இருந்தது. நோ பிளாஸ்டிக் ஏரியாவாம். எல்லா சுவர்களிலும் பொன் மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் என்னைக் கவர்ந்த வாசகம் அப்துல் கலாமுடையது.//
ReplyDeleteநானும் ஓட்டு போட்ட பள்ளி வளாகத்தை படம் எடுத்து வைத்து இருக்கிறேன், அங்கு வாசலில் கரும்பலகையில் அப்துல்கலாம் அவர்கள் பொன்மொழி பகிர்வை படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
அப்போது உங்களையும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
Deleteநான் ஓட்டு போட்ட பள்ளியில் மிக அமைதியாக வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அனுப்பி கொண்டு இருந்தார் காவலர். முகத்தை மலர்ச்சியாக வைத்து இருந்தார்.
ReplyDeleteகாலை எட்டுமணிக்கு போய் விட்டதால் கூட்டம் இல்லை பத்து நிமிடத்தில் போட்டு விட்டு திரும்பி விட்டோம்.
காவலர்கள் பணி மிகவும் கடினமானது. நாம் அதை பெரும்பாலும் உணர்வதில்லை. நன்றி கோமதி.
Deleteஇரண்டு மாதம் முன்பு :- இணையத்தில் சரி பார்த்த போது, எனது மற்றும் எனது துணைவியாரின் பெயர்கள் இல்லை... பிறகு முகாமில் எழுதிக் கொடுத்தோம்... இரு வாரம் முன்பு தான் புதிய Voter id கிடைத்தது...!
ReplyDeleteஉங்களைப்போல நாங்களும் முன்பே சரி பார்த்திருக்க வேண்டும். நன்றி டி.டி.
Deleteபானுக்கா இனிய காலை வணக்கம்...
ReplyDeleteகலாம் அவர்களின் வாசகம் செம!!! கலாம் அவர்களின் வரிகளிய இப்ப உங்கள் மூலம் அறிகிறேன் பானுக்கா!
என் பள்ளி என் காட்மதர் மேரி லீலா டீச்சர் எனக்கு அப்ப சொன்ன வார்த்தைகள்.என் மனதில் பதிந்த வரிகள். மற்றொன்றும் அடிக்கடி சொல்வார், சமூகத்தில் உன் உடை முதல், கெஸ்சர், உடல் மொழி அனைத்தும் உன் மீது மதிப்பைத்தான் உண்டாக்க வேண்டும் குறிப்பாக ஆண்களிடையே என்றும் சொல்வார். என் காட்மதர் பற்றி எழுதிய பதிவில் கூடச் சொன்ன நினைவு.
கீதா
அப்போதெல்லாம் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி பெண்களுக்கு அறிவுரைகள் அதிகம் இருக்கும். இப்போது சில தாய்மார்கள் அணிந்து கொள்ளும் உடையைப்பார்த்தால் இவர்கள் என்ன மாதிரி பெண்களை வழி நடத்துவார்கள் என்று நினைத்துக் கொள்வேன். நன்றி கீதா.
Deleteகுமரி உட்பட பல இடங்களிலும், பல ஆயிரம் பேருக்கு இந்த முறை ஓட்டுரிமை இல்லை... வாழ்க நாடு...!
ReplyDeleteஇதில் பெரும்பான்மை என்பது எப்படி?
Deleteபள்ளி வளாகம் ப்ளாஸ்டிக் ஃப்ரீ யாக சுத்தமாக இருந்தது மிக மிக மகிழ்வான விஷயம்.
ReplyDeleteகீதா
அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒரு முன்மாதிரியான பள்ளி. அங்கு படிப்பது பெருமைக்குரிய விஷயம்.
Deleteநாம் சாமானியர்கள்!!!//
ReplyDeleteயெஸ் யெஸ் அதே அதே...
கீதா
😞😞
ReplyDeleteவோட்டர் ஐடி நம்பரை வைத்து தேர்தல் பூத் இடம்போன்றவற்றைக் குறித்துக் கொள்ளமுடியுமே
ReplyDeleteநாங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு அதை செய்திருக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் பார்த்தோம் சுற்றிக் கொண்டே இருந்தது, நெட் பிசி என்று நினைத்து விட்டோம்.
Deleteஇவ்வளவு தூரம் வந்து வாக்களிக்க முடியாமல் போனது துரதிருஷ்டம். பிரபலங்கள் வாக்களிப்பதை நாங்கள் 'தொல்லை'க்காட்சியில்தான் பார்த்தோம். நீங்கள் நேராக ஒருவரைப் பார்த்திருக்கிறீர்கள்!!!
ReplyDeleteஅவரை யாருமே கொண்டு கொள்ளவில்லை.
ReplyDeleteநாங்கள் ஒரே ஊரில் 40 வருடங்களாக இருந்தும் எங்கள் பெயர்
ReplyDeleteபார்லிமெண்ட் தேர்தல் போது இல்லை.ஏகப்பட்ட நபர்கள் விட்டுப் போயிருந்தார்கள்.
அதே மானில சட்டசபைத் தேர்தலில் வோட் போட முடிந்தது.
இப்போது நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
அப்துல் கலாம் பொன் மொழிகள் மந்துக்கு இதம் .நன்றி மா
பானு.
நீங்கள் சொல்வது உண்மைதான். சில தாய்மார்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்..
வாங்க வல்லிமா, எலக்க்ஷன் கமிஷன் என்று ஒன்று இருக்கிறது. அது என்ன செய்கிறது என்று தெரியவில்லை. இறந்து போனவர்கள் பெயர்கள் பட்டியலில் இருக்கின்றன, இத்தனைக்கும் அவர்கள் குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழ் சமர்பித்திருக்கிறார்கள்.
ReplyDeleteபெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாது.சிவகார்த்திகேயன் போன்றோர் எப்படி வாக்களித்தார்கள் என்ரு தெரியவில்லை. ஒன்று பெயர் வரிசை எங்காவது மாறி இருக்கலாம். அல்லது ஏஜெண்டுக்ளின் ஒத்துழைப்புடன் ஒட்டுபோட அனுமதிக்கப் பட்டிருக்கலாம்.
ReplyDeleteவாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தேர்தல் தேதி அறிவித்தவுடன் பார்த்துவிடவேண்டும். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் இதற்கான வசதி உள்ளது.,நான் எனது பெயர் வரிசை எண் பூத் எண் இவற்றை சரிபார்த்து விட்டு சென்றேன்.
ReplyDelete