மசாலா சாட் - 8
தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் அவர்கள், சிலேடையாக பேசுவதில்
வல்லவர் என்பது தெரிந்த விஷயம்தான். நான் அதிகம் கேள்விப் படாத அவருடைய ஸ்லேடைகள் சில:
மாதுளம் பழமான விளாம்பழம்:
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்த பொழுது நண்பரின்
மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார்.
அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா? நான் தந்தது விளாம்பழம் அல்லவோ?” என்று
அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது, உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்” என்றாராம்
கி.வா.ஜ.
கடை சிப்பந்தியும், கடைசிப் பந்தியும்:
“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்து
கொள்வான்” என்றார் முதலாளி. உடனே, கி.வா.ஜ.”ஓஹோ! கடை சிப்பந்திக்கு கடைசிப் பந்தியா?”
என்றாராம்.
பிரகாசிக்கும் கம்மல்:
இப்படி சிலேடையில் கலக்கும் அவரையே ஒரு பெண்மணி அசத்தினாராம்.
ஒரு விழாவில் கலந்து கொண்ட அவரை உரையாற்ற அழைத்த பொழுது, "இப்பொழுது வேண்டாம் குரல்
கம்மியியிருக்கிறது" என்று அவர் கூறியதும், அந்தப் பெண், “பரவாயில்லை, கம்மல் ப்ரகாசிக்கும்”
என்று கூறி அசத்தினாராம்.
வாட்சாப்பில் வந்ததில் ரசித்தது:
மெட்ராஸ்காரனை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்படி
இருக்கும்? என்று ஒரு கற்பனை:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: கஸ்மாலம், ஒயுங்கா படி, பட்சது பட்சாமாறி நட்ந்துக்கடா,
பேமானி!
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
பொருள்: டேய், வூட்டுக்கு வந்த விருந்தாளி கைல நல்லா மூஞ்சி
குட்து பேசுடா, இல்லைன்னா பய அனிச்சம் பூவ மோந்தா மாரி வாடிவுடுவாண்டா சவாரி, அட, எங்
கேப்மாரி.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
பொருள்: சோமாறி, கொய்யாப் பயத்த கைல வச்சிக்கினு எவனாவது
கொய்யாக்காவ துண்ணுவானாடா? நல்ல வார்த்தையா நாலு பேசுவியா, அத வுட்டுப்புட்டு கெட்டகெட்ட
வார்ததையா பேசிக்கினு கீற? காது கொயிய்ன்னுதுடா, கொய்யால!
புறம்கூறி பொய்த்த்யிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
பொருள்: பன்னாட, ஒர்த்தனப் பத்திப் பின்னால போட்டுக் குட்து
பொயகறதெல்லாம் ஒரு பொயப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவலாம்டா, சனியம் புட்ச்சவனே!
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: எவன் வேணா சும்மா உதார் உடலாம் மச்சி,..த்தா சொன்னா
மாரி செஞ்சி பாரு அப்ப தெரியும் மேட்டரு, நெஞ்சில கீற ம்ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க.
எப்படியோ பொருளை சரியாக உணர்ந்து கொண்டால் சரி.
கி.வா.ஜ. அவர்களின் சிலேடை அருமை.. எல்லாம் அறிந்தவை தான்..
ReplyDeleteஇனிமை.. தென்றலான நகைச்சுவை...
தென்றலான நகைச்சுவை. யெஸ், அதுதான் கி.வா.ஜ.வின் ஸ்பெஷல். நன்றி.
Deleteதெருக்கொரல்.... உள்ளாறப் பூந்து சொம்மா வூடு கட்டி அட்ச்சுருக்காங்..கப்பா!..
ReplyDeleteஅஆம்மா. ஹாஹா நன்றி.
Deleteஇன்னொரு சிலேடை...
ReplyDeleteசொன்னவர் யாரென்று தெரியாது...
விருந்தினராகச் சென்றிருக்கிறார்...
அருகில் ஒரே இரைச்சல்..
முப்பது ஒரு தரம்..
முப்பது ரெண்டாந் தரம்....
என்று சத்தம் கேட்டிருக்கிறது....
இவர் கேட்டார்... எதற்கு சத்தம்?...
அவர் சொன்னார்..
பூவுக்கு ஏலம் போடுறாங்க...
இவர் அதற்கு சிலேடையாக -
எங்க ஊர்ல பொங்கலுக்குத் தான் ஏலம் போடுவாங்க!... - என்றார்..
ஏலம் - விற்பனை, ஏலக்காய்...
சொல் விளையாடல் ஒரு சுகம்தான். மீள் வருகைகளுக்கு நன்றி.
Deleteபடித்திருக்கிறேன்.
ReplyDeleteகீதாக்கா சொல்லும் மகாபெரியவர் கதை மாதிரி இதிலும் அவ்வப்போது சில சொந்தச்சரக்குகள், இடைச்செருகல்கள் சேர்கின்றனவோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு!
மகாபெரியவர் கதை மாதிரி இதிலும் அவ்வப்போது சில சொந்தச்சரக்குகள், இடைச்செருகல்கள் சேர்கின்றனவோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு// மன்னிக்கவும் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மஹா பெரியவரின் மகிமைகள் ஒரு சிறு வட்டத்திற்கு மட்டுமே முன்பு தெரிந்திருந்தது.இப்போது பரவலாக எல்லோருக்கும் தெரிகிறது. அதுவும் அவருடைய சங்கல்பமாக இருக்கலாம்.
Deleteரமண மகரிஷி பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரியாது. ஆனால் அவருடைய சீடர்கள் நிறைய சொல்லுவார்கள்.
வருகைக்கு நன்றி.
Deleteகி.வா.ஜகன்னாதன் அவர்கள் சிலேடையாக பேசியதை ரசித்தேன்.
ReplyDeleteதிருக்குறள் உரை படித்து எப்படி எல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள் என்று தோன்றியது
எப்படியோ திருக்குறளை படிப்பது மகிழ்ச்சி.
உங்களுக்கு தோன்றிய அதே இரண்டு விஷயங்களும் எனக்கும் தோன்றின. நன்றி.
Deleteதிரு கி.வா.ஜ.அவர்களின் சிலேடைப்பேச்சுக்கள் உள்ள புத்தகம் (கலைமகள் வெளியீடு) என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிக் கொண்டு போயிட்டுத் திரும்பிக் கொடுக்கவே இல்லை. அதே போல் தனிப்பாடல் திரட்டு என்னும் புத்தகமும்!
ReplyDeleteஇரவல் கொடுக்கும் பொழுது, புத்தகத்தில் "இந்த புத்தகம் கீதா சாம்பசிவம் வீட்டில் திருடப்பட்டது" என்று எழுதி விடுங்கள். ஹாஹா. நன்றி அக்கா!
Deleteதிருக்குறளின் இந்த விளக்கம் எனக்கும் வந்திருந்தது. இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கு போல!
ReplyDeleteஎப்படியோ நல்ல விஷயம் தானே சுற்றட்டும்.
Deleteசிலேடைகளும் சிலேடைக்கு சிலேடையும் சென்னை தமிழில் திருக்குறளும்.. எல்லாமே அசத்துகின்றன!!
ReplyDeleteகுறள் குரல்வளையை நெறிப்பது போன்று இருக்கிறது.
ReplyDeleteஎப்படியோ திருக்குறள் படிக்கிறார்களே என்று நினைத்தேன். நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகி.வா.ஜ அவர்களின் சிலேடைப் பேச்சுக்களை ரசித்தேன்.அவரையே சிலேடையால் பின்ன வைத்த அந்த மாதுவின் சாமார்த்திய சிலேடைதிகைக்க வைக்கிறது.
வாட்சப் குறள்களும், அதன் தொடர்பான சென்னை பாஷை சரியாக பொருந்துவதால், நன்றாக புரிகிறது. எல்லாவற்றையும், படித்து ரசித்தேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
Deleteபானுக்கா உங்க புதி பதிவு பார்க்க உங்க தளத்தை ப்ரெஸ் செஞ்சா அது பாட்டுக்கு என்னென்னவோ காடியது. அதில் இந்தப் பதிவை பார்த்ததும் இதுவா புதுசு என்று தோன்ற தேதி பார்த்தால் ஆ ஏப்ரல். ஆனால் நான் மிஸ் செஞ்ச பதிவு..
ReplyDeleteகிவஜ செம...மிக மிக ரசித்தேன் எல்லாமும் பிரகாசிக்கும் கம்மல் உட்பட!
சென்னை தமிழ் ஹா ஹா ஹா ரசித்தேன் நானும்.
உங்க பதிவும் கம்மியா இருந்தாலும் பிரகாசிக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா