கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, February 26, 2020

Where can you get wisdom?

30 comments:

  1. பானு, மிகச் சரியாக கூறியிருக்கின்றீர்கள். "He went around the world searching for his wish and came back home to find it there" என்பது ஒரு மிகப் பிரபலமான பழமொழி. உங்கள் கதையை கேட்டதும் எனக்கு அதுதான் நினைவிற்கு வந்தது. பெரியோரை போற்றுவதும் வணங்குவதும் ஒரு வேலை அல்ல என்பதை நாம்தான் நம் வாரிசுகளுக்கு சொல்லித் தர வேண்டும். அவர்களின் அனுபவங்களே ஒரு புத்தகமாகும். வாழக வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. சரியான புரிதலுக்கு நன்றி ரமா.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    யாவரும் அறிந்த இயல்பான ஒரு புராண கதைக்கு அதுவும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் அருமையாக விளக்கம் தந்திருக்கிறீர்கள் சகோதரி. அந்தப் ஞானப் பழத்தின் மகிமையே அதுதானே..! அப்படியிருக்கும் பட்சத்தில் பகிர்ந்தளிக்க இயலாது என்பதை கொண்டு வந்து தந்த நாரதரும் அறிவாரே..! நாரதர் கலகம் எப்போதும் நன்மையொன்றையே விதைக்குமே தவிர குடும்பத்தை பிரிக்கும் தீமைக்கு வழி வகுக்குமா?

    இதில் நம் அன்னை தந்தையை உலகமாக கருத வேண்டுமென்பதையும், அவர்களை மதித்து அவர்கள் பேச்சுக்கு மரியாதை தரும் போது ஞானம் (உலக அறிவு) நம்மை வந்தடையும் என்ற ரீதியில் தாங்கள் சிந்தித்து நயம்பட கூறியிருப்பது நன்றாக உள்ளது. இதில் அண்ணன் தம்பிகளுக்கிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது எனக் கூறுவதும் முற்றிலும் பொருந்தும். உங்களின் அழகான பேச்சையும், அதிலிருக்கும் ஆத்மார்த்தமான தத்துவத்தையும் கேட்டு ரசித்தேன். இந்தப் பதிவு ரொம்பவும் பிடித்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி கமலா.

      Delete
  3. வீடியோவில் எனக்கு சத்தம் வருகுதில்லையே... பானுமதி அக்காவின் வாய் அசைவு மட்டுமே வருகுது... கொம்பியூட்டரில் பார்க்கிறேன் பின்பு... இது மொபைல்.

    ReplyDelete
    Replies
    1. அடடா! கம்பியூட்டரில் கேட்டு விட்டு, பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறந்து விடாதீர்கள் 

      Delete
  4. தெரிந்த கதை என்றாலும் நல்ல விளக்கம். தொடரட்டும் உங்கள் காணொளி பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி. 

      Delete
  5. மிக மிக அருமையான பதிவு.
    தேவையானதும் கூட,. நல்ல உபமானம் கூகிள்.

    இந்தத் தலைமுறையினர் நம்மை மாதிரி
    இருப்பதை எதிர்பார்க்க முடியவில்லை.

    கேட்டால் சொல்லலாம். மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    சகோதரர்களுக்கிடையே நிலவ வேண்டிய சமாதானத்தையும்
    மாம்பழக் கதையோடு அருமையாக விளக்கம் கொடுத்தது
    அருமை. நன்றி மா.

    ReplyDelete
  6. மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி வல்லி அக்கா.

    ReplyDelete
  7. அருமை.   எப்படிஇந்த போஸ்ட்டை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை.  வழக்கம்போல அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததை விட குறைவான பேர்களே பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத் தலைப்பு குழப்பி விட்டதோ.? வருகைக்கு நன்றி.

      Delete
  8. ஒருகுடும்ப நிகழ்வில் ஒன்றுகூடினால் கூட அனைவரும் அவரவர் மொபைலில்தான் ஆழ்ந்திருப்பார்கள்.  வந்திருக்கும் உறவுகளையோ, வயதான பெரியவர்களையோ எத்தனை பேர் கவனிக்கிறார்கள்!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ஆமாம் வருந்தத்தக்க விஷயம்தான்

    ReplyDelete
  11. அருமையாக சொல்லி உள்ளீர்கள்... இருந்தாலும் :-

    பல வருடங்களில் நடந்த என் கதை... சுருக்கமாக :

    1) கல்லூரியில் படிக்கும் போது, என்னை அனைவரும் "home sick" என்பார்கள்... ஏனென்றால், மாதம் ஒருமுறை வீட்டிற்கு சென்று விடுவேன்...
    2) சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை... கூடவே அன்பு + அழகு குட்டிச்செல்லம்...!
    3) மனத்தை விட்டு வெளியேற்ற முடியாது என்பதை புரிந்து கொண்ட, கூடப்பிறந்த 5 உறவுகளாலேயே மீண்டும் இணைந்தேன்...! அடியேன் ஆறு...!
    4) இடைப்பட்ட சமயத்தில், பல வருடங்கள் கழித்து இதைக் அறிந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்னது : "தனியே இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்... இனி அனைத்தும் அறிந்து கொள்வாய்..."
    5) அவர் சொன்னது நியாயமா அல்லது ஞானமா என்று தெரியவில்லை... அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேனா...?
    6) ஆனால், ஒன்று மட்டும் உண்மை... வெளியேறிய ஒரு காரணத்தால் தான் உங்களிடம்... இதோ பேசிக்கொண்டிருக்கிறேன்...! ஆம் அன்று அந்த வெளியேறும் சூழ்நிலை வந்திருக்காவிட்டால், வலைப்பக்கம் வந்திருக்கவே மாட்டேன்... அவ்வளவு ஏன், வலைப்பக்கம் என்றால் என்னவென்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை...! முருகா எல்லாம் உன் செயல்... எதுவாயினும் குறளே துணை...!

    ReplyDelete
    Replies
    1. //அவர் சொன்னது நியாயமா அல்லது ஞானமா என்று தெரியவில்லை... அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேனா...?// இது எனக்கும் தோன்றியது. நான் வவலியுறுத்த விரும்பியது வீட்டை புறக்கணித்து விட்டு ஞானத்தை வெளியே தேட முடியாது என்பதைத்தான். நாம் கை விட்ட பல நம்முடைய பழைய பழக்கங்கள் அர்த்தம் பொதீந்தவை என்று இப்போது கூறுகிறார்களே, அதைத்தான். நன்றி.

      Delete
  12. 1) முடிந்தளவு பதிவின் தலைப்பை தமிழில் வையுங்கள்...

    2) உங்கள் தளத்தை reader-ல் தொடர்பவர்கள் / வாசிப்பவர்கள், அங்கேயே இந்த காணொளியை கேட்டு விடுவார்கள்... காரணம் அங்கேயே வருகிறது... உங்கள் தளத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை... இதை தடுக்க முடியாதா...? ஏன் முடியாது...? ஒரு பதிவை எழுத ஆரம்பிக்கிறீர்கள்... இரண்டே இரு வரிகள் மட்டும் எழுதி முடித்து விடுங்கள்... பிறகு சுட்டியை, எழுதும் பக்கத்தில் மேலே இருக்கும் (பல) icon-மீது வரிசையாக கொண்டு செல்லுங்கள்... அங்கே smiley icon-ல் சிரித்துக் கொண்டிருப்பேன்... அதற்கு பக்கத்திலிருக்கும் icon-மீது (பற்கள் நறறற-வென இருக்கும் icon) கொண்டு சென்றால், Insert Jump Break-என்று காண்பிக்கும்... அதை ஒரு முறை சொடுக்குங்கள்... அப்படி செய்தால், நீங்கள் எழுதிய இரு வரிகளுக்கு அடுத்து, ஒரு கோடு விழும்...! இருந்துட்டு போட்டும்... தொடர்ந்து பதிவு எழுதி "publish" செய்யுங்கள்... அவ்வளவு தான் அம்மா...! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //முடிந்தளவு பதிவின் தலைப்பை தமிழில் வையுங்கள்...// நிச்சயமாக.

      Delete
  13. இருந்துட்டு போட்டும்... பற்றிய நன்மைகள்...

    1) உங்களின் பதிவுகளை, உங்கள் தளத்திற்கு வந்து தான் முழுவதும் படிக்க முடியும்...

    2) அதனால் பக்கப்பார்வைகள் கூடும்... மனதிற்கு ம்ஹிம்... வலைப்பக்க வரும்போது வரும் மனதிற்கு, ஒரு மகிழ்ச்சி...!

    3) உங்கள் முகப்பு பக்கத்தை (https://thambattam.blogspot.com/) திறந்து பாருங்கள்... குட்டிகுட்டியாய் ஏழுமலை... அட... 7 பதிவுகளும், அதன் சிறு விளக்கங்களும்... (சிறு விளக்கங்கள் = நீங்கள் அந்தந்த பதிவில், எங்கு until Jump Break உபயோகித்தல் பொறுத்து)

    4) எது நடந்ததோ, அதை நன்றாகவே நடக்க வைக்க முடியும் - இங்கு...! அண்மைய ஏழு பதிவுகளை இது போல் செய்து முகப்பு பக்கத்தை பார்க்கவும்...

    5) வலைப்பக்கம் இல்லாத, வாசிக்க மட்டும் என்று இருப்பவர்களும் பலர் உண்டு... அவர்கள் உங்கள் தளத்தில் சந்தா-வில் (Subscription-Follow by Email) இருப்பார்கள்...உங்களின் ஏதாவது ஒரு பதிவு நீளமாக இருந்தால், இந்தப்பதிவு அவர்களுக்கு போய் சேராது...! காரணம் Feedburner அனுப்பும் அளவு 512K

    6) முடிவாக முந்தைய கருத்துரையில் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்... அது :- Dash board --> Settings --> Other --> Allow Blog feed --> Until Jump Break என்பதை தேர்வு செய்யுங்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியிருக்கும் ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
  14. (கைபேசியால் எழுதிய) மேலுள்ள கருத்துரைகளில் சில திருத்தங்கள் :-

    பற்கள் நறறற --> பற்கள் நறநற
    வலைப்பக்க வரும்போது --> வலைப்பக்கம் வரும்போது
    இந்தப்பதிவு அவர்களுக்கு --> அந்தப்பதிவு அவர்களுக்கு

    ReplyDelete
  15. அன்றைக்கு பதிவின் தலைப்பை ஆங்கிலத்தில் கண்டதும் ஏதோ நினைவில் சென்று விட்டேன்...

    ReplyDelete
  16. நாரு முழுதாக தங்களது உரையைக் கேட்டேன்... ஆனாலும் கருத்துரையைப் பதிவு செய்ய முடியவில்லை....

    மிகவும் நன்றாக சொல்லியிருக்கின்றீர்கள்...
    ஞானநூல்களில் ஓரளவுக்குப் பழகியிருப்பவர்கள் அறிவார்கள் - இந்த மாம்பழக் கதையைப் பற்றி...

    அதன் தத்துவம் ரசனையுடன் சொல்லப்படுவதற்காகத் தான் வேறொரு அவதாரத்தை அடைந்ததே அன்றி வேறொன்றிற்காக அல்ல..

    உலகத்தைப் பெற்றோராகக் காண்பதுவும்
    பெற்றோரை உலகமாகக் காண்பதுவும்
    மிகப் பெரிய தத்துவம்...

    இது மிகப் பெரிய விவாதப் பொருள்...

    சிவசக்தி என்பதே ஞானத்தின் சாரம் என்றால் அதிலிருந்து வெளிப்பட்டிருக்கும் கணபதிக்கும் கந்தனுக்கும் என்ன வேறுபாடு?..

    ஒன்றுமில்லை..

    ஏழிசையாய் இசைப் பயனாய்... என்பார் சுந்தரர்...

    அவ்வண்ணமே இது...

    ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமான் என்று உருகுவார் வாரியார் ஸ்வாமிகள்... அப்படியான வள்ளல் உறைகின்ற வயலூர் தலத்தில் வீற்றிருக்கும் கணபதியின் திருப்பெயர் பொய்யாக் கணபதி...

    கணபதியும் கந்தனும் பழமும் அதன் சுவையும் போல...

    ஆன்றோர் போற்றும் ஞானஸ்கந்தன் என்பதும் ஞானவிநாயகன் என்பதும் ஒரே பொருள்..

    ஆன்மாக்கள் சஹஸ்ராரத்தை அடைந்தாலும் மீண்டும் மூலாதாரத்தில் இருந்தே பிறப்பை அடைகின்றன...

    சஹ்ஸ்ராரத்தில் அன்னை தந்தையருடன் திகழ்பவன் கந்தன்.. சோமாஸ்கந்த மூர்த்தி என்பது சிவசக்தியின் திருக்கோலம்...

    மூலாதாரத்தில் அன்னை தந்தையரைத் தன்னுள் வாங்கிய ஏகநாயகன் - விநாயகன்.. கணபதி தனக்கு மேல் தலைவன் இல்லாத குணநிதி...

    இப்போது இவ்விரு நிலைகளும் நமக்கு உணர்த்துவது என்ன!..

    பண்ணிடைத் தமிழொப்பாய்
    பழத்தினுட் சுவையொப்பாய்!.. என்று போற்றுபவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

    அவ்வண்ணமே நாமும் போற்றுவோம்...

    ReplyDelete
    Replies
    1. //உலகத்தைப் பெற்றோராகக் காண்பதுவும்
      பெற்றோரை உலகமாகக் காண்பதுவும்
      மிகப் பெரிய தத்துவம்...// அருமை.

      Delete
    2. இப்போத் தான் கவனிச்சேன். என்னோட பதிவில் நீங்கள் இதற்கான என் கருத்தைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதை. தாமதத்துக்கு மிகவும் மன்னிக்கவும். 3 நாட்களாக மருத்துவரிடம் ஓடிக் கொண்டிருக்கோம். :( இன்னிக்கும் போகணும்.

      துரை அநேகமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். இது ஞானமாகிய பழத்தைப்பற்றிய உவமைக்கதை. ஈசனையும், அம்பிகையையும் சரண் அடைந்து அவர்களோடு ஐக்கியம் ஆனால் ஞானமாகிய முக்தி கிடைக்கும். மற்றபடி உலகெல்லாம் சுற்றி வந்தாலும் ஞானம் என்பது வராது. முக்தியும் கிடைக்காது. உன்னுள்ளேயே உறைந்திருக்கும் ஈசனைக் கண்டுபிடித்து ஒன்றானால் ஞானம் கிடைக்கும். இது எங்கள் குருநாதர் சொன்னது. எனக்காக எதுவும் தெரியாது.

      Delete
    3. மூலாதாரத்தில் கணபதியும் சஹஸ்ராரத்தில் ஸ்கந்தனும் இருப்பதால் இங்கே இருவரையும் காட்டிப் புரிய வைத்திருக்கலாம்.

      Delete
  17. விரிவான, தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களைப்"போன்றவர்களின் பின்னூட்டங்கள் என் தவறுகளை திருத்திக் கோள்ளவும், என்னை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.

    ReplyDelete
  18. நல்ல விளக்கம்.

    ReplyDelete