கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 4, 2020

மசாலா சாட் - 16 சில நிகழ்வுகள், சில செய்திகள்

மசாலா சாட்  -  16  
சில நிகழ்வுகள், சில செய்திகள்

என்னுடைய சென்ற சென்னை விஜயத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்சிக்கான பேச்சரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்.

சென்னையில் நடை பெற்ற ஆன்மீக பொருட்காட்சியில்தான் அது நிகழ்ந்தது. நிகழ்ச்சி ஐந்து மணிக்கு துவங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாங்கள் நாலு முப்பதுக்கே அரங்கத்திற்கு சென்று விட்டோம்.  அப்போதுதான் மேடையை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
மணி நாலு முப்பது, நாலு நாற்பது என்று ஆகிக்கொண்டிருக்க எனக்கு கொஞ்சம் பதட்டமாகி விட்டது.  ஐந்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று போட்டிருக்கிறர்கள், இப்போதுதான் ரெடி பண்ணி கொண்டிருக்கிறார்களே? என்று தோன்றியது. ஆனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களான திரு.மோகனும், திருமதி.மீரா நாகராஜனும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வேலை வாங்கி கொண்டிருந்தார்கள். அவர்கள் பதட்டப்படாததாலோ என்னவோ மேடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் பதட்டமின்றி  பணியாற்றினர். 4.55க்கு மேடை தயார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உதாரண நிகழ்வு என்று கூறலாம். வேலைகளை செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், சிலர் எல்லாவற்றையும் தாங்கள்தான் தலையில் சுமப்பது போல் டென்ஷனாகி, அதை மற்றவர்களுக்கும் தொற்ற வைத்து, அந்த இடத்தையே ரணகளமாக்கி விடுவார்கள். அப்படி இல்லாமல் சீரான திட்டமிடல், தெளிவான செயலாற்றல் இரண்டும் இணைந்திருப்பதால்தான் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது.


பாண்டிச்சேரி அன்னையின் பக்தரான கர்மயோகி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் மலர்ந்த ஜீவியம் என்னும் புத்தகத்தில் வெளியான கருத்துதான் மேலே காண்பது.

செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்து மரணமடைந்தவர்களைப் பற்றி நிறைய கேட்டு விட்டோம். நேற்று படித்த ஒரு செய்தி மனதை மிகவும் சங்கடப் படுத்தியது. ஒரு 18 வயது மாணவன் டிக் டாக்கில் பதிவு
செய்வதற்காக ஒரு வீடியோ எடுக்க முயற்சி செய்த பொழுது அவனுடைய தலையில் அடிபட்டு மரணத்தை தழுவியிருக்கிறான்.

இந்த டிக் டாக் மோகத்தைப் பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன் நடத்தும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் ஒரு முறை விவாதித்தார்கள். அதில் கலந்து கொண்ட ஒரு பெண் நீச்சல் உடை அணிந்து
அதை படமெடுத்து டிக் டாக்கில் போட்டதால் அவர் கணவர் அவரை விட்டு
விலகி விட்டாராம். அதைத் தவிர தன்னையே மிகவும் கவர்ச்சிகரமாக (அவரும் சரி மற்றவர்களும் சரி ஆபாசப் படம் என்றே குறிப்பிட்டார்கள்) புகைப்படம் எடுத்து போடுவதால் அவருடைய பிறந்து வீட்டினர் எல்லோரும் அவரை ஒதுக்கி விட்டனராம். 14 வயதாகும் மகன் மட்டும் அவரோடு இருக்கிறானாம். அவனும்," அம்மா வேண்டாம் அம்மா, இந்த மாதிரி படங்கள் போடாதே" என்கிறானாம். ஆனால் அவரோ, "நான் நல்ல விஷயங்கள் போட்டால் யாரும் பார்ப்பதில்லை, ஆபாச படங்கள் போட்டால்தான் நிறைய பேர் பார்க்கிறார்கள், அதனால்தான் ஆபாச படம் போடுகிறேன், போடுவேன்" என்கிறார்.   மன நோய்!

இரண்டு நாட்கள் முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்," வங்கிகளின் உயரதிகாரிகள் வாடிக்கையாளர்களோடு தொடர்பில் இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சென்டரலைஸ்ட் பாங்கிங் வந்து, வீட்டிலிருந்தபடியே விரல் நுனியில் எல்லாவற்றையும் செய்து விட முடியும் என்றானபின் வாடிக்கையாளர்களோடு என்ன தொடர்பு இருப்பது சாத்தியம்? கஸ்டமர்களின் க்ரெடிபிலிட்டி பற்றி வங்கி மேலாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்த காலமெல்லாம் கடந்து விட்டது. லோன் கொடுப்பது ஒரு இலாகா. அதை வசூல் செய்வது இன்னொரு இலாகா. சில தனியார் வங்கிகளுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் புதிது  புதிதாக யாரோ இருப்பார்கள். நாம் ஒவ்வொரு முறையும் நம்மை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். வங்கி மேலாளரை பார்க்கவே முடியாது. பரிவார தேவைதைகள்தான் நம்மை கவனிப்பார்கள். இந்த நிலையிலும் வாடிக்கையாளர்களோடு நல்ல தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கனரா வாங்கி எனலாம்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு பாஸ்புக்கில் எண்ட்ரி போடுவதே சிரிப்புக்கு இடமாக இருக்கிறது. அவர்கள்தான் எல்லாவற்றையும் மொபைலிலேயே பார்த்து விடுகிறார்களே? வங்கிக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்தால்தானே?

 இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான விஷயம், வங்கிகள் சேவை நிறுவனங்கள் என்னும் நிலையைக் கடந்து, கார்ப்பரேட் என்னும் நிலைக்கு வந்து விட்டன. அதன் பிறகு வாடிக்கையாளராவது? உறவாவது?

சென்ற வாரம் எங்கள் குடியிருப்பில் ஸ்ரீ.ஸ்ரீ.ரவி சங்கர் அவர்களின் வாழும் கலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஏற்கனவே அதை பயின்றிருக்கும் நான் மீண்டும் அந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். அதன் கடைசி  நாளில் கலந்து கொண்டவர்களை  பத்து பேர்கள் கொண்ட நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவும் மதிய உணவிற்காக ஒரு சாண்ட்விச், ஒரு பழக்கலவை(fruit salad), ஒரு snack, ஒரு பானம் தயாரிக்க வேண்டும் என்றார்கள். நிபந்தனைகள், அங்குதான் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து எதையும் செய்து கொண்டு வரக்  கூடாது. நோ குக்கிங். 20 நிமிடங்களுக்குள் எல்லாவற்றையும் செய்து விட வேண்டும். எங்கள் குழுவில் பழக்கலவைக்காக இளைஞர் ஒருவர் கடகடவென்று பழங்களை நறுக்கி, அவற்றை மிகவும் நேர்த்தியாக அலங்கரித்திருந்தார்.

எங்கள் குழுவில் நான் snack செய்வதாக ஒப்புக் கொண்டேன். நான் செய்த snack கீழே.



கிராக்கர்ஸ் பிஸ்கெட்டில் சீஸ் ஸ்லைஸ் ஒன்றை வைத்து, அதில் பிஸ்சா சாஸை தடவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வெங்காயம், வெள்ளரி, தக்காளி துண்டுகளை அடுக்கி  அதன் மீது chilly flakes ஐ தூவ வேண்டும். ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.

















27 comments:

  1. கதம்பமாய் தொகுத்த பதிவு ஸூப்பர் என்று உங்கள் ஊர்க்காரரையே சொல்ல வுத்தது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அவர் நம்ம ஊர்க்காரராக மாறி ரொம்ப நாளாச்சு சகோ.

      Delete
  2. பேச்சரங்க காணொளி அடுத்து வெளியிடுவார்கள் தானே...?

    snack (தான்) சூப்பர்...!

    ReplyDelete
    Replies
    1. //snack (தான்) சூப்பர்...!// OMG!! பேச்சரங்க காணொளி சன் டி.வி.யில் வரும். நன்றி. 

      Delete
  3. மிக்ஸர் அருமை ..சுவைத்து மகிழ்ந்தோம்.வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  4. கல்யாணமாலை நிகழ்ச்சி ஒரு முறைஎங்கள் பகுதியில் நடந்தது டிக்கடெல்லாம் வசூலிக்கிறார்களென்பது தெரிந்ததும் தொலைசிக்காட்சியிலேகாணலாமே என்றுபோகவில்லை

    ReplyDelete
    Replies
    1. வரன்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதாக இருந்தால்தான் கட்டணம் வசூலிப்பார்கள். பட்டிமன்றம், பேச்சரங்கம் போன்றவைகளுக்கு இலவச அனுமதித்தான். வருகைக்கு நன்றி.

      Delete
  5. நல்ல அருமையான மசாலா சாட். கல்யாணமாலை நடத்துபவர்கள் சமையல் வேலைகளும் எடுத்துச் செய்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். எங்கே தான் நேரம் கிடைக்குமோ என நினைப்பேன். நீங்கள் செய்திருக்கும் ஸ்நாக் அருமை. வீட்டிலிருந்து எதுவும் கொண்டுவரக் கூடாது எனில் பொருட்கள் அவர்களே கொடுப்பார்களா? நாங்க கலந்து கொண்ட சமயம் வீட்டில் இருந்து அவல் கொண்டு வரச் சொல்லி அதில் செய்யச் சொன்னார்கள். ஆனால் அன்றைய தினம் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. வெறும் அவல் மட்டுமே எடுத்துப் போய் என்ன செய்ய முடியும் என நினைத்துப் போகவில்லை.

    ReplyDelete
  6. //வீட்டிலிருந்து எதுவும் கொண்டுவரக் கூடாது எனில் பொருட்கள் அவர்களே கொடுப்பார்களா?  // மன்னிக்கவும், தவறாக குறிப்பிட்டு விட்டேன். வீட்டிலிருந்து எதுவும் செய்து கொண்டு வரக் கூடாது. உதாரணமாக சாண்ட்விச் செய்ய சட்னியை வீட்டில் தயாரித்து கொண்டுவரக் கூடாது.  ஆனால் பிரெட் ,வெண்ணை, போன்றவைகளை நாம்தான் எடுத்துக் கொண்டு போக வேண்டும். இன்னும் சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் உள்ளன. திருத்தி விடுகிறேன். நன்றி.  நான் பிஸ்கெட், சீஸ், கறிகாய்கள் முதலியவை வாங்கிச் சென்று, அங்கு போய் காய்களை வெட்டி, அலங்கரித்தேன். 

    ReplyDelete
  7. //வீட்டிலிருந்து எதையும் செய்து கொண்டு வரக் கூடாது.// என்று நான் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

    ReplyDelete
  8. கல்யாணமாலை பேச்சரங்கத்தில் எல்லாம் கலக்கறீங்கக்கா சூப்பர் .காணொளி இங்கேயும் வரும்மா ?டிக்ட்டோக் உண்மையில் ஒரு மனநோய் .தங்கள் எதை செய்தா மக்கள் மனதில் நீர்ப்போம்னு நினைச்சு செய்யும் அவலங்கள் எங்கே கொண்டு போகுது :( அந்த பெண்மணி கவுன்சலிங் செல்வது நன்று.வங்கிகள் எல்லாம் கார்பொரேட் நிறுவனங்களாகிடுச்சு முந்தி பாஸ்புக் கொண்டுபோய் அம்மாவின் அக்கவுண்டில் என்ட்ரி போடுவேன் .இப்போ என் கணக்கை நானே ஆன்லைனில் போன் ஆப்பில் பார்த்துக்கறேன் ஸ்டேட்மெண்டும் மெயிலுக்கே வருது .எங்க வங்கி மேனேஜர் யார்னே தெரியாதது :))
    சித்தப்பாவே சூப்பர்னு சொன்னபிறகு நாங்க  சொல்லாம இருப்போமா :)) ஸ்நாக் சூப்பர்க்கா 

    ReplyDelete
  9. நல்ல பதிவு. ஒவ்வொருவரின் மாறுபட்ட எண்ணங்களையும் இவ்வாறான பதிவுகளில் அறிந்துகொள்ள முடிகிறது. சிறப்பு.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது மசாலா சாட் – 16 சில நிகழ்வுகள், சில செய்திகள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  10. மசாலா சாட் அருமை.கல்யாணமாலை பேச்சரங்கத்தில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

    //ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.//

    எடுத்துக் கொண்டேன், சுவை அற்புதம்.

    ReplyDelete
  11. //என்னுடைய சென்ற சென்னை விஜயத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்சிக்கான பேச்சரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன்.//

    ஓஓ இன்னும் வெளிவரவில்லையோ.. நாங்களும் கல்யாணமாலை பட்டிமன்றம் பார்ப்ப்போம்...

    சில்லி ஃபிளேக்ஸ் போட்டதில் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  12. ஸ்நாக்ஸ் அருமை. சூப்பர் ஸ்டார் பாராட்டுகிறாரே... இந்த டிக்டாக் என்பது என்னவென்று எனக்கு சரியாகப் புரிவதில்லை.

    ReplyDelete
  13. காணொளிகளுக்கான பிரத்யேக சைட் டிக் டாக். நன்றி.

    ReplyDelete
  14. ஸ்நாக்ஸ் அருமை.

    ReplyDelete
  15. //வாடிக்கையாளர்களோடு நல்ல தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கனரா வங்கி// - மிகச் சரியான கணிப்பு. நான் அவர்களிடம் எஃப்.டி போட்டிருந்தேன். ஒரு நிலம் வாங்க அனைத்தையும் எடுக்க வேண்டியிருந்தது. எவ்வளவு விரைவாக அதனைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகவும் மனிதத் தன்மையோடும் அன்போடும் நடந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல, இடம் வாங்குவது மகிழ்ச்சிக்குரியது அதனை உடனே செய்யுங்கள், எதிர்காலத்தில் பணம் வரும்போது எங்கள் வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்றனர்.

    நான் பல வங்கிகளுடன் டீல் செய்திருக்கிறேன். மோசமான எக்ஸ்பீரியன்ஸ் ஐ சி ஐ சி ஐ வங்கி. மிகத் தரமான எக்ஸ்பீரியன்ஸ் கனரா வங்கி.

    ReplyDelete
    Replies
    1. //மோசமான எக்ஸ்பீரியன்ஸ் ஐ சி ஐ சி ஐ வங்கி// மஹா மோசம் ஐ.சி.ஐ.சி.ஐ.! அதோடூ ஒப்பிடுகையில் HDFC பரவாயில்லை.

      Delete
  16. வாழும் கலையில் குறைந்த சரிவிகித உணவைத்தான் விரும்புவார்கள் (ஓரிரு பழத்துண்டு என்பதைப் போல). சிறப்பாகவே செய்திருக்கிறீர்கள். அப்படியும் என்ன சந்தேகம்? தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் போல ரஜினியைத் துணைக்கு அழைத்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. அதிரா தன் பதிவுளை ஒரு gif படத்தோடு முடிப்பார். அது போல முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். ரஜினி படம் கிடைத்தது. முழு பதிவிற்குமாக நான் குறிப்பிட நினைத்தேன். எல்லோரும் snackகிற்கு மட்டும் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
      வருகேக்கு நன்றி.

      Delete