கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 19, 2020

நிழலும், நிஜமும்


நிழலும், நிஜமும்

பொது இடங்களைப் பற்றி நமக்கு கிடைக்கும் பல பிம்பங்களை சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். உங்களில் யாராவது போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கறீர்களா? எனக்கு அந்த சான்ஸ் கிடைத்தது. 

நான் ஊரில் இல்லாத பொழுது, பாஸ்போர்ட் போஸ்ட் வெரிஃபிகேஷனுக்காக போலீஸ் ஸ்டஷனிலிருந்து வந்தவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால், என்னை தொலைபேசியில் அழைத்து, ஹெப்பகுடி காவல் நிலையதிற்கு சில டாகுமென்ட்டுகளோடு வரச்சொன்னர்கள். அதற்காகச் சென்றிருந்தேன். 

ஒலா புக் பண்ணும் பொழுது ஹெப்பகுடி போலீஸ் ஸ்டேஷன் என்று புக் பண்ணியிருந்தேன். ஆட்டோ ஓட்டுனர், “இதுதான் ஹெப்பகுடி போலீஸ் ஸ்டேஷன்” என்று காட்டிய கட்டிடம் சினிமாக்களில் காட்டப்படுவது போல சிவப்பு கலரில் இல்லாமல் நவீனமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் பெரிய விஸ்தாரமான ஹால். அதன் ஒரு புற சுவற்றில் வரிசையாக பெரிய பெரிய டி.வி.க்கள். அவற்றில் அருகில் இருக்கும் சாலைகளில் விரையும் வாகனங்களை காண முடிந்தது. சி.சி.டி.வி.காமிராக்களின் உபயம். சினிமாக்களில் காட்டப்படுவது போல் கிரிமினல்களின் புகைப்படங்கள், வாசலில் பெரிய துப்பாக்கியை பிடித்தபடி நிற்கும் காவலர்கள், லாக்கப்  போன்றவை மிஸ்ஸிங்க்!

என்னுடைய ஒரு தோழியின் பெண்ணுக்கு நடந்த பதிவு திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட சைதாப்பேட்டை ரிஜிஸ்ட்ரர் அலுவலகதிற்கு சென்றிருந்த பொழுதும் இப்படிதான் ஏமாந்தேன். திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரி சினிமாக்களில் வருவது மாதிரி விசாலமான கூடத்தில் ஒரு உயரமான மேடையில் அமர்ந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஏகப்பட்ட மேஜைகள், அவற்றில் குவித்து வைக்கப் பட்டிருக்கும் கோப்புகள், பேப்பர்கள், சுற்றி கசகசவென்று மக்கள்... என்ன இது? என்று தோன்றியது எனக்கு மட்டுமல்ல, மணமகனின் தாய்க்கும்.
நிழல் நிஜமாகாது இல்லையா?

இப்போது ஒரு குறும்படம். Missed movies presents 'I reject the invitation from God' படம். தமிழ் படம்தான். ஏனோ ஆங்கிலத்தில் டைட்டில். வீட்டில் தனிமையில் இருக்கும் ஒரு முதியவரின் ஒரு நாள் காட்சிப்படுத்தப் படுகிறது. முதியவராக நடித்திருப்பது என் மாமா மகன்.









31 comments:

  1. நான் அபுதாபியில் பலமுறை போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்து இருக்கிறேன் நண்பரது கம்பெனி தொழிலாளர்கள் பிரச்சனைக்காக நண்பர் என்னை அழைத்து செல்வார் போலீஸிடம் பேசுவதற்காக மேலும் காரில் யாரோ கண்ணாடியை உடைத்து விட்டார்கள் புகார் கொடுக்கப் போய் வாக்குவாதம் செய்து இருக்கிறேன் ஒருமுறைகூட போலீஸ் ஸ்டேஷனை கண்டு நான் பயந்ததே இல்லை

    ஆனால் ???

    இந்தியாவில் போலீஸ் ஸ்டேஷனைக் கண்டாலே அலர்ஜியாக இருக்கிறது.

    குறும்படம் பெரிதாக இருக்கிறது நாளை காண்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜி. குறும்படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 

      Delete
  2. நிழல் நிஜம் வரிசையில் நானும் ஒன்று கண்டிருக்கிறேன்.  கோர்ட்!  சினிமாக்களில் வரும் கோர்ட் ஹால் மாதிரி இல்லை நேரில் நான் பார்த்த கோர்ட்.

    ReplyDelete
    Replies
    1. கோர்ட் உள்ளே சென்று பார்த்ததில்லை. கோர்ட் பற்றி ஏதாவது ஒரு வியாழனில் எழுதுங்களேன். 

      Delete
  3. காவல் நிலையம் நானும் சென்றிருக்கிறேன்.   நான் சென்ற காவல் நிலையம் கிட்டத்தட்ட சினிமா காவல் நிலையத்தையோ ஒத்திருந்தது!  பல வருடங்களுக்கு முன்னால் மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காவல் நிலையம் சென்றிருக்கிறேன்.  சைக்கிளில் லைட் இல்லாத கேஸ்!

    ReplyDelete
    Replies
    1. நான் எம்ப்லாய்மெண்ட் விசாவில் மஸ்கட் சென்றதால், என்மீது எந்த கிரிமினல் கேசும் இல்லை என்று சான்றிதழ் வாங்குவதற்காக ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அது சினிமாக்களில் பார்ப்பது போலத்தான் இருந்தது. அன்றைக்கு ஏதோ கொலை கேசில் ஸ்டேஷனே பரபரப்பாக இருந்தது. காலையில் சென்ற பொழுது, மாலையில் வரச்சொன்னார்கள், மாலையில் சென்ற பொழுது, என்னைக் கண்டதும் அந்த ரைட்டர் பெண்மணி, "ஐயோ இது ஒரு தொல்லை, வந்து தொலைத்து விட்டது" என்று ஏதோ ஜாடை காட்டி முணுமுணுத்தார். 

      Delete
  4. குறும்படம் இப்போது பார்க்கவில்லை.  பிறகுதான் பார்க்கவேண்டும்.  மோடி ஏதோ மகமாயி மகமாயி என்று பேசிக் கொண்டிருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. //மோடி ஏதோ மகமாயி மகமாயி என்று பேசிக் கொண்டிருக்கிறார்!//ஆமாம் , நானும் கேட்டேன். வருகைக்கு நன்றி. 

      Delete
  5. //உங்களில் யாராவது போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கறீர்களா? //

    ஹா ஹா ஹா

    93ல் துபாயில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறேன் (அந்த ஊர் போய்ச்சேர்ந்து இரு வாரங்களுக்குள்). நானும் என் நண்பனும் என் பாஸின் வீட்டிற்கு (கராமாவிற்கு எதிரே முழுவதும் பாலவன மண் போன்ற இடத்தில் ஒரே ஒரு மிகப் பெரிய பில்டிங் இருந்தது அந்தச் சமயம். அதில்தான் அவர் இருந்தார். இப்போ அந்த இடத்தில் ஆயிரம் பெரிய பில்டிங்குகள் வந்துவிட்டன) மாலை சென்றுவிட்டு இரவு திரும்பினோம். அந்த பில்டிங்கில் அன்று நடந்த அசம்பாவிதத்திற்கு பில்டிங்கிற்குள் சென்ற எல்லோரையும் வரவழைத்திருந்தார்கள் போலிருக்கு. நல்ல ஏசி போலீஸ் ஸ்டேஷன். மிக கெளரவமாக எங்களை உட்கார்ந்திருக்கச் சொல்லிவிட்டு, கேள்வியே கேட்காமல் 1 மணி நேரத்தில் அனுப்பிவிட்டார்கள் (அதற்குள் ஆளைப் பிடித்துவிட்டார்கள் போலிருக்கு). அங்கு இருந்த சமயத்தில்தான், நான் பார்த்த பலபேரை, ரோடில் பலமுறை பார்த்த நினைவு வந்தது. அவங்க எல்லாரும் சி.ஐ.டிக்கள்.

    பஹ்ரைனில், நான் ஒரு பொஸிஷனில் இருந்தபோது, ஸ்பேம் மெயில் சம்பந்தமாக கம்ப்ளெயிண்ட் செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தேன். மிக மரியாதையாக போலீஸ் தலைவர் பேசினார். நான் கம்ப்ளெயிண்ட் செய்தது இன்னொரு மினிஸ்டிரியில் கணிணி டிபார்ட்மெண்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த யாரோ ஒருவரைப் பற்றி. அப்புறம் அவர் என்னிடம் ரொம்ப சாஃப்டாக நிலைமையை விளக்கி, பேசாமல் விட்டுவிடுங்கள் என்று ரிக்வஸ்டாகச் சொன்னார்.

    இதற்கெல்லாம் முன்பு, பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் வரத் தாமதிக்கிறதே என்று தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தேன். அங்கு அப்போது முகம்மது அலி என்பவர் ஸ்டேஷன் இன்சார்ஜ். விஷயத்தை விளக்கிச் சொன்னபிறகு, மிகத் தன்மையாகப் பேசி, நானே இதனை கன்ஃபர்ம் செய்து அனுப்பிவிடுகிறேன் என்று சொன்னார். வெளிநாட்டு வேலை விஷயமாக முயற்சிக்கிறீர்கள், நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தவும் செய்தார். அவருக்கு பத்தடி தள்ளி, போலீஸ் லாக்கப்பில் லோகல் ரவுடிகள். போலீஸ் வேலை என்பது மிகக் கடினமானது என்று புரியவைத்தது.

    இன்னொரு விஷயத்துக்கு (நண்பனின் காதல்) சும்மா பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு நுழைந்து ஒரு காவலரிடம் விஷயத்தைச் சொல்லி, அவரது ஆலோசனை கேட்டபோது அவர், 'தம்பி... இந்த மாதிரி விஷயத்துக்கு காவல் துறையை அணுகாதீங்க. நீங்க 50 ரூபாய் கொடுத்தீங்கன்னா நீங்கள் செய்வதைக் கண்டுக்க மாட்டாங்க. பெண் சைடில் 100 ரூபாய் கொடுத்தால் உங்களை முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க. நியாயம்லாம் பார்க்க மாட்டாங்க' என்று என் நண்பனுக்கு அட்வைஸ் செய்தார்.

    பெங்களூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு திருட்டு சம்பந்தமா எஃப்.ஐ.ஆர் போட்டு அதன் காப்பி வாங்கச் சென்றிருந்தபோது (ரெகமெண்டேஷனில்தான்), ஸ்டேஷன் செலவுகளுக்கு 3000 ரூபாய் வாங்கிக்கொண்டு எஃப்.ஐ.ஆர் மட்டும் போட்டார்கள். இந்த இடத்துக்குப் போய், திருடு போன பொருள் மாதிரி (அதன் ஸ்பெக்‌ஸ்) சொல்லி அது வேண்டும் என்று தேடுங்கள். அங்கதான் திருட்டுப்பொருள் இருக்கும். உங்களுக்கு அதைக் காட்டினால், எங்களைக் கூப்பிடுங்கள், மீட்டுத் தருகிறோம் என்றார்கள். ஹா ஹா ஹா.

    பொதுவா போலீஸ் ஸ்டேஷனில் பெரும்பாலும் நியாயமானவர்கள்தாம் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் கிரிமினல்களிடமே பழகுவதால், நாம் அவர்களிடம் தன்மையாகப் பேசவேண்டும். நியாயமானவற்றிர்க்கு அவர்கள் உதவவே செய்வார்கள், அல்லது நம்மை பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கச் சொல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல அனுபவங்கள். //நியாயமானவற்றிர்க்கு அவர்கள் உதவவே செய்வார்கள், அல்லது நம்மை பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கச் சொல்வார்கள்.//உண்மைதான். நன்றி. 

      Delete
    2. @ நெ தமிழன்//
      அச்சச்சோ நேக்குப் பயமாக இருக்கு:) இவர் சி ஐ டி ஆக இருக்கும் வாய்ப்பு அதிகம்:)) அதனாலதான் எப்பவும் துருவித் துருவிக் கேள்விகள் கேட்பார்போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  6. அது நாம் எல்லாரும் ஏமாறும் விஷ்யம்க்கா :) ஆனா சென்னை போலிஸ்ட்டேஷன்ஸ் ரெட் கலரில்தான் இருந்துச்சி இப்போ எப்டியோ சைதாப்பேட்டை ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் எப்போ மேசைலம் விசாலமா இருந்துச்சி ? நான் 2005 இல் பவர் of அட்டார்னி விஷயமா போனப்போ ஒரே கசகசன்னு இருந்துச்சி .வீடியோ பார்த்தேன் ..பாவம் பெரியவர் மகன் அவரை உடனே வச்சிருக்கலாமோ என்ற உணர்வு வந்தது .உங்கள் உறவினரா ? மிக அருமையான இயல்பான  நடிப்பு .எனக்கு இப்பிடி பெரியவர்களை தனிமையில் தனிச்சு பாக்கறதுக்கு வருத்தமாகிடும் .அவருக்கு வீடியோ அலாரம் எல்லாம் தெரியும் ஆனா பேசணும் இன்னும் டைம் யாருடனாவது ஸ்பென்ட் பண்ணனும்னு ஆட்டோ டிரைவருடன் கேட்கிறார் னு நினைக்கின்றேன் 

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஏஞ்சல். படம் பற்றிய விமர்சனத்திற்கும் நன்றி. 

      Delete
  7. ஓமானில் ஒரு தடவை நண்பனுடன் கடற்கரைப் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது (பேலஸ் இருக்கும் ரோடு), காரிலிருந்து நான் படங்கள் எடுத்துக்கொண்டு வந்தேன். திடுமென சைரன் போலீஸ் கார் எங்கள் பின்னால் வந்தது. நாங்கள் நிறுத்தியதும், என்னைப் பார்த்து பாஸ்போர்ட் செக் செய்த பிறகு, சிரித்துக்கொண்டே, நீங்கள் போட்டோ எடுத்த பகுதியில் போலீஸ்/கடற்படை போலீஸ் கேம்ப் இருக்கிறது. அதனால்தான் சந்தேகப்பட்டு உங்களை நிறுத்தினோம் என்றார்.

    நம்ம ஊர் அவ்வளவு மெச்சூர்டாக இன்னும் ஆகவில்லை என்பது என் அபிப்ராயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஓமானில் எல்லா இடங்களிலும் நாம் புகைப்படம் எடுத்து விட முடியாது. ஒரு முறை நாங்கள் அங்கிருக்கும் ரியாம் பார்க் சென்றிருந்த பொழுது, ஒருவர் வீடியோ காமிராவில் படம் பிடித்தார். எங்கிருந்தோ போலீஸ் வந்து, அவருடைய கேசட்டை பிடுங்க கொண்டு விட்டது. 

      Delete
  8. ஆரம்பத்தில் சிறிது அதிர்ச்சி... பிறகு அறிந்தேன்...

    // நிழல் நிஜமாகாது // சரி தான்... ஆனால் நிழல் இறைவனாகலாம்...

    காணொளியில் ஒலி அதிகமாக வைத்து கேட்டாலும், மாமா மகன் அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள் ...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கூட காணொளியில், ஒலி சற்று குறைவாகத்தான் இருக்கிறது. வருகைக்கு நன்றி. 

      Delete
  9. நிழல் நிஜமாகாது..
    இதுவரை போலீஸ் ஸ்டேஷன் சென்றதில்லை. நம்மூரில் போலீஸ் ஸ்டேசனுக்கு போனாலே என்னமோ நாம தப்பானவங்களாதான் பார்க்குறாங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. 

      Delete
  10. அக்கா நிழளுக்கும் நிஜத்துக்கும் இடையில் கொஞ்சம் தூரம் இருக்கத்தான் செயகிறது. பெரும்பாலும். சென்னையில் இருந்தப்ப பாஸ்போர்ட் வெறிபிக்கேஷனுக்கு போலீஸ் ஸ்டேஷன் போயிர்க்க்கிறேன்....படத்தில் இருப்பது போலதான் இருந்தது. ஆனால் இங்கு பெங்களூரில் வழக்கமான எந்த அடையாளமும் இல்லை..பாலிஷ்ட்டா உயர்தர அலுவலகம் போல ...

    குறும்படம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக உங்கள் கசின் நன்றாக மிக இயல்பான நடிப்பு. பாராட்டுகள் சொல்லிடுங்க..பெரிய திரையில் ல்.வயதான மனிதர், அப்பா தாத்தா கேரக்ட்ர்கள் கிடைக்கக் கூடும் டைரக்டர்கள் கண்ணில் பட்டால்....

    சில காட்சிகளில் கொஞ்சம் கேட் செய்திருக்கலாமோன்னு தோணிச்சு...அது கொஞ்சம் ஆர்ட் பிலிம் பீலை குறைத்திருக்குமோ என்று தோன்றியது....

    இயக்குனர் மற்றும் குழுவினர் களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்...சொல்லிடுங்க. நல்ல படம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா, குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை என் கஸினுக்கு அனுப்பி வைக்கிறேன். 

      Delete
  11. நிழல் நிஜமாகாது சினிமாவில் காட்டுவது போல் இருக்காது.

    குறும்படம் இல்லை கொஞ்சம் பெரிதாக இருக்கிறது.
    தனிமை கொடுமை. முதியவராக உங்கள் மாமா மகன் நன்றாக நடித்து இருக்கிறார்.

    நடப்பது, பேசுவது எல்லாம் மெதுவாகத்தான் இருக்கும் அதை காட்சி படுத்திய விதம் அருமை. மகன் , பேரனைப் பற்றி பேசும் போது முகத்தில் புன்னைகை வருகிறது.

    முதுமையில் தனியாக இருப்பதை பற்றி கேள்வி கேட்டு படம் எடுக்க வந்தவர்களிடம் ஆல்பம் காட்டுவது, பந்து எடுக்க வந்த சிறுவனிடம் பேசுவது, கடையில் பிறந்த நாள் பரிசு எடுக்க தவிக்கும் காட்சி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    சாம்பார் பையை பிரிக்க முடியாமல் கொட்டி விடுகிறதோ? அப்புறம் சீனி வைத்து சாப்பிடுகிறார் அதுவும் சாப்பிட முடியவில்லை போலும். தண்னீரை தூக்கி ஊற்ற முடியவில்லை. இந்த காட்சிகள் எல்லாம் மனம் கனத்து போகுது.

    தோட்டத்தில் படுத்து அழும் போது படுக்கையில் படுத்து விடித்தும் எழாமல் இருப்பது(ஆடாமல் அசையாமல்) எல்லாம் கொஞ்சம் பயம் கொடுத்தது இறந்து விட்டோரோ என்று அப்புறம் எழுந்து போன போது நிம்மதி பெருமூச்சு என்னிடமிருந்து வந்தது.



    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. குறும்படம் பற்றிய உங்கள் விரிவான விமர்சனத்திற்கு நன்றி. என் கஸினுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.

      Delete
  12. அது என்ன ராசியோ என்னமோ தெரியேல்லை பானு அக்கா, போட்டால் எல்லோரும் ஒரே நாளில் பதிவு போடுவினம், இல்லை எனில் வேரிச்சுப்போய் இருக்கும் வலை உலகம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    பொலிஸ் ஸ்டேசனைப் படங்களில்தான் பார்த்ததுண்டு..

    உங்கள் மாமாவின் மகனையும் பார்த்தேன், நன்றாக நடிக்கிறார்..

    ReplyDelete
  13. நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் லாஜிக் இடிக்கிறதே. ஏனென்றால் நான் ஒரு மாதத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டால் அதிகம். வாரத்திற்கு இரண்டு பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்களே!! எனிவே சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி. வருகைக்கும்தான். 

    ReplyDelete
  14. நிழல் நிஜமாகாது.

    சில முறை காவல் நிலையம் சென்றதுண்டு.

    குறும்படம் - சற்றே நீண்ட குறும்படம். பொறுமையாகப் பார்த்து முடித்தேன். நல்ல விஷயம் - முதுமையில் தனிமை - கடினம் தான்.

    ReplyDelete
  15. வாங்க வெங்கட். முதுமையில் தனிமை கடினம்தான் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சற்று மெதுவாக நகரும் வண்ணம் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  16. காணொளியை இன்னும் பார்க்கவில்லை..
    காரணம் இணையம் அந்த மாதிரி..

    மற்றபடி காணொளியின் காட்சிகள் சோகத்தில் ஆழ்த்தி விடாது அல்லவா!?...

    ReplyDelete
    Replies
    1. சோகத்தில் ஆழ்த்தாது. ஆனால் மனது கொஞ்சம் கனத்துப் போகும். வருகைக்கு நன்றி.

      Delete
  17. காணொளி நன்றாக வந்திருக்கிறது. மிக மெதுவாக நகர்கிறது. உங்கள் கசினுக்கு அவ்வளவு வயதாகவில்லை என்பது தெரிகிறது.
    மனது மிகக் கலங்கிவிட்டது. அவர் இறந்து விட்டார் என்றே நினைத்தேன். மிக இயற்கையாக
    இருந்தது. பேச ஆள் கிடைத்தால் நிறுத்தி வைத்துக் கொள்கிறார்.
    பாராட்டுகளைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  18. நன்றி வல்லி அக்கா. என் கஸினுக்கு என் வயதுதான். நிச்சயம் உங்கள் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். 

    ReplyDelete