நம்புவதே வழி
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் என்கிறார்கள். ஆனாலும் மக்கள் மனதில் ஒரு பீதி. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி பீதியூட்டிய வேறு சில தருணங்கள் நினைவுக்கு வந்தன.
1990 ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலிருந்து மஸ்கட் வந்திருந்த ஒரு நண்பரின் பெற்றோர்களைக் காண புறப்பட்டோம். அவர்களுக்காக பழங்கள் வாங்க எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த சூப்பர் மார்க்கெட் சென்ற பொழுது எல்லா சாமான் களும் கடையில் இருந்தன. நண்பரின் வீட்டில் இருந்த பொழுது, பிபிசியில் செய்தி கேட்ட நண்பர் குவைட்டை சதாம் ஹுசைன் பிடித்து விட்டதாக கூறினார். பக்கென்றிருந்தது. வீட்டிற்கு திரும்பி சாமான்கள் வாங்கலாம் என்று சூப்பர் மார்க்கெட் சென்றால், கடை மொத்தமும் காலி. இருந்த அரிசியை வாங்கிக் கொண்டு வந்தோம். மறு நாள் அலுவலகத்தில் சிலர் தாங்கள் புதிய பெரிய குளிர்சாதன பேட்டி வாங்கி அதில் மளிகை பொருள்கள், மற்றும் காய்கறிகளை வாங்கி நிரப்பி விட்டதாக கூறினர். நல்ல வேளை அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுத்து பொருள்களை வாங்கி பதுக்குவோர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரித்ததால் நிலைமை சீர் பட்டது. அப்போது சிலர் பயந்து கொண்டு வேலையை விட்டு இந்தியா திரும்பினர்.
பத்து வருடங்களுக்கு முன்பு கோணு புயல் ஓமானை தாக்கி பலத்த சேதத்தை உண்டாக்கியது. அப்போது குடி நீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதாம். அந்த பயத்தில் அடுத்த வருடம் அதே சமயத்தில் மீண்டும் கோணு புயல் மாதிரி ஒரு புயல் ஓமானை தாக்கப் போகிறது என்னும் வதந்தி பரவி மக்கள் ஹைபர் மார்க்கெட்டுகளில் இருந்த குடிநீர் பாட்டில்களை அள்ளிச் செல்ல, அரசு எச்சரித்து நடவடிக்கை எடுத்ததால் சகஜ நிலைமை தொடர்ந்தது.
என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் 1979 ஆம் வருடம் ஸ்கை லாப் என்னும் விண்கலம் அல்லது செயற்கை கோள் தன்னுடைய பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது, அது இந்தியாவிலோ, இலங்கையிலோதான் விழும். விழும் இடம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்னும் பீதி கிளம்பியது. திருச்சிக்கு அருகில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் எப்படியும் ஸ்கைலாப் விழுந்து சாகப் போகிறோம், எனவே இருக்கும் பொழுது சந்தோஷமாக இருந்து விடலாம் என்று தங்களிடம் இருந்த கோழி, ஆடு எல்லாவற்றையும் அடித்து விருந்து வைத்து சாப்பிட்டு விட்டனர் என்று செய்தி வந்தது. ஆனால் அந்த பொல்லாத ஸ்கை லாப் அவர்களை ஏமாற்றி விட்டது.
என்னுடைய அப்பா,அம்மா திருமணம் நடந்த காலம் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் என்றும் அப்போது பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது, கெஸ்ட் கண்ட்ரோல் இருந்தது அதனால் சாப்பிட்ட இலைகளை தெருவில் போடாமல் குழி தோண்டி புதைத்தார்கள் என்று எங்கள் அம்மா கூறியிருக்கிறார். பித்தளை பாத்திரங்கள் கூட கும்பகோணத்தில் இருந்த வைதீகர்கள் வீட்டிலிருந்துதான் வாங்கினார்களாம். திருமண பத்திரிகையில் தங்கள் வரும்பொழுது தங்கள் ரேஷனை கொண்டு வரவும் என்று அச்சிடுவார்களாம்.
இப்போது சிலர் திருமணத்தை ஒத்தி வைத்திருக்கின்றனர். என் தோழி அவளுடைய சகோதரியின் மகனின் திருமணத்தை குறித்தபடி வீட்டோடு நடத்தியதாக வாட்ஸாப்பில் புகைப்படத்தோடு செய்தி அனுப்பியிருந்தாள். 21 நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்து, சீரடைய வேண்டும் என்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை.
நம்பிக்கையை விதைக்கும் பாரதியின் பாடலை திருமதி.எம்.எஸ். அவர்களின் பேத்தி ஐஸ்வர்யா குரலில் கேட்கலாம்.
நம்பிக்கை மட்டுமே இப்பொழுது நமக்குத் தேவை. நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம். நலமே விளையட்டும்.
ReplyDeleteஇனிய பாடல் - கேட்டு ரசித்தேன். பராசக்தி நம் அனைவருக்கும் இந்தப் பேரிடரிலிருந்து விடுபட சக்தி தரட்டும்.
இதுவும் கடந்து போகும் என்று நம்பலாம். வருகைக்கு நன்றி.
Deleteஎன்னதான் மனதை மாற்ற முயற்சித்தாலும், சிறிது தான் உதவுகிறது என்பதே உண்மை...
ReplyDeleteகுறள், பாட்டு, திரைப்படம் என்று நாட்கள் போகிறது...
எல்லாம் மாறும். இயல்பு வாழ்க்கை திரும்பும். நன்றி.
Delete//21 நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்து, சீரடைய வேண்டும் என்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. //
ReplyDeleteஇறைவன் அருளால் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.
திருமதி.எம்.எஸ். அவர்களின் பேத்தி ஐஸ்வர்யா பாடிய
பாடல் நன்றாக இருக்கிறது , எனக்கு பிடித்த பாடல்.
பராசக்தி மனதைரியம், தன்னம்பிக்கை என்ற சக்தியை அருளவேண்டும்.
எல்லாம் சரியாக இறைவனை வேண்டுவோம். நன்றி.
Delete1979 வருடம் சரியே.... தங்களிடம் இருந்த கோழி, ஆடு எல்லாவற்றையும் அடித்து விருந்து வைத்து சாப்பிட்டு விட்டனர் என்று செய்தி வந்தது.
ReplyDeleteஅப்பொழுது நாங்கள் கிராமத்தில் இருந்தோம் உத்திரகோசமங்கை அருகில் சிலர் அருப்புக்கோட்டை ஏரியாவுக்கு போனார்கள்
அன்றே நான் நக்கலடித்தேன் அருப்புக்கோட்டை போனால் சாக மாட்டார்களா ?
ஹா.. ஹா.. பசுமையான குசும்பு நினைவுகளை மீட்டியது பதிவு
கொரானாவிலிருந்து இறைவன் காக்கட்டும்.
எல்லோரும் எல்லோருக்காகவும் வேண்டலாம். நன்றி சகோ.
Deleteமனம் கவலை கொள்ளும் நிலையே ...
ReplyDeleteசூழல் மாறும் என்னும் நம்பிக்கையில் இருப்போம் ...
நிச்சயம் மாறும் அனு. நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநீங்கள் கூறுவது போல் நிலைமை பீதியூட்டுவதாகத்தான் உள்ளது. 21 ல் நான்கு நாட்களே ஆன நிலையில், சாமான்களும், தினமும் அவசியமாக புழங்கும் பாலும் கிடைக்காமல் கொஞ்சம் தடுமாற்றங்கள், வெளியே செல்ல பயங்கள் என பாக்கி நாட்கள் எப்படியோ.. என கலக்கம் கொள்ளும்படியாக இருக்கிறது. எப்படியோ இந்த வைரஸ் மனதிறங்கி கட்டுக்குள் வந்து நாடுகளை விட்டு முற்றிலும் அகல பிரார்த்திப்போம்.
1979 ல் ஸ்கைலாப்புக்கு இப்படித்தான் பீதி வந்தது நானும் அறிவேன். மற்ற கலக்கமான சூழல்கள் பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
திருமதி எம். எஸ் அவர்களின் பேத்தி ஐஸ்வர்யா அவர்களின் பாட்டு மனதில் நம்பிக்கையை விதைக்கிறது. பாட்டு நன்றாக உள்ளது. நாம் அனைவரும் இந்த வலை உலாவில் சிறிது கவலையை மறக்க முயற்சிக்கிறோம். அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். அதற்கு நம்பிக்கை ஒன்றே நம் பலம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுவும் கடந்து போகும் என்று நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை. நன்றி.
Deleteஅன்பு பானுமா.
ReplyDeleteஇங்கும் எமெர்ஜென்சி எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இரண்டு மாதங்களுக்காவது அரிசி வாங்கி வைத்துக்
கொண்டு ,மிச்சதெல்லாம் ஆன்லைனில் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஓமான் புயல்களைப் பற்றிக் கேட்க வியப்பாக இருக்கிறது.
ஸ்கைலாப் நிகழ்வு எனக்கும் நினைவு இருக்கிறது.
எம் எஸ். அம்மா பேத்தியின் குரல் நன்றாக இருக்கிறது.
மனிதனின் அறிவு,திறமை எல்லாம் கேள்விக்குறியாகி விட்ட நிகழ்வு. இறையருளால் எல்லாம் சரியாகும். நன்றி.
Deleteஇனிய காலை வணக்கம் பானுக்கா
ReplyDelete//என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் 1979 ஆம் வருடம் ஸ்கை லாப் என்னும் விண்கலம் அல்லது செயற்கை கோள் தன்னுடைய பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது, அது இந்தியாவிலோ, இலங்கையிலோதான் விழும். விழும் இடம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்னும் பீதி கிளம்பியது//
ஆமாம் அக்கா அப்போது நான் 12 வது....நினைவிருக்கு நாங்கள் எல்லோரும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த நினைவு. ஹா ஹா ஹா
நம்பிக்கையே வாழ்க்கை. 21 நாளுக்குள்????!!!! ம்ம்ம்ம் சரி நம்புவோம்.
இங்கு பரவாயில்லை எங்கள் ஏரியாவில் மக்கள் அப்படி அதீதமாக வாங்கிக் குவிக்க வில்லை. இப்போது கடைகள் மூடியிருக்கின்றன. ப்ரொவிஷன் கடைகள். சிறிய கடைகள் இருக்கின்றன. கொஞ்சம் நேரம் திறக்கிறார்கள்.
ஓமான் புயல், குவைத் பற்றிய தகவல் எல்லாம் ஆச்சரியம்.
செம பாட்டு அக்கா. நான் தினமும் கேட்கும் பாடல். எம் எஸ் அவர்களின் பாட்டு சேமிப்பில். இபோது அது ஆன்லைனில் கிடைப்பதில்லை. இந்தப் பாட்டுதான் வருகிறது. எம் எஸ்ஸின் குரலில் கேட்டு கற்று உணர்ச்சி பொங்க நான் பாடியதுண்டு...மிக மிக மிக பிடித்த பாடல். இப்போதும் காலையில் மாடியில் வாக் செய்யும் போது கேட்கிறோம்...தினமும்
காலையில் அப்புறம் ராத்திரி 9.30 10 க்கு மேல்தான் நெட் வருகிறது....கணினியும் கிடைக்க ஸோ கட கட என்று பார்த்து கமென்ட்ஸ்...!!!!
கீதா
நன்றி கீதா.
Deleteஅப்போதெல்லாம் பார்த்த பிரச்னைகளை விட இந்தப் பிரச்னை மிகப்பெரிது. இந்நாட்களை கடக்கும் கொடுமை போல வேறு இருக்கப் போவதில்லை. பாஸிட்டிவாக மனதை வைத்துக்கொள்வது என்பது கடினமான செயலாக இருக்கிறது. நல்ல பாடல் பகிர்வு.
ReplyDeleteஇது உலகம் முழுமையும் பரவியிருக்கிறதே. எல்லாம் மாறும். நன்றி.
Deleteஇப்போதுள்ள பிரச்சனை இன்னும் பெரிது என்றே தோன்றுகிறது.
ReplyDeleteசில வருடங்களுக்கு முன்பு கத்தாருக்கு பிரச்சனை வந்தது. நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன. பஹ்ரைனிலிருந்து 20 நிமிடத்தில் கத்தார் அடைவதற்குப் பதில் குவைத் சென்று கத்தார் போகவேண்டிய நிலை. பால்பொருட்கள் போன்றவைக்குத் தட்டுப்பாடு.
இந்தியாவில் 21 நாட்களும் தாண்டி ஓரிரு மாதங்கள் போனாலும் ஆச்சர்யம் இல்லை. பெரிய கடைகளில் ரெப்ளனிஷ் ஆவதில்லை என்பது பெரிய பிரச்சனை. நல்லவேளை பாக்கெட் பொருட்கள் எம்ஆர்பிக்கு அதிகமாக விற்க முடியாது
அதிகம் யோசித்தால் அதிகம் பயம் வருகிறது. கடவுளை நம்புவோம். நன்றி
Deleteநாம ரீசனபிளா இருக்கும்போது, நடந்துகொள்ளும்போது, காவலர்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 2 மணி நேர ஸ்லாட், 1 மீட்டர் இடைவெளி, கூட்டம் கூடாமை, மாஸ் அணிந்திருத்தல் - இப்படி இருக்கும்போது மளிகைப் பொருட்கள் வாங்குவதிலோ மற்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலோ தடை இல்லை என்றே தோன்றுகிறது. பக்கத்தில் இருக்கும் தெருவை விட்டுவிட்டு, அடுத்த ஊருக்கு சுற்றுலா சென்று வாங்க முனையும்போதுதான் போலீஸ் கடுமை காட்டுகிறது எனத் தோன்றுகிறது. இதுவும் கடந்துபோகும்.
Deleteஆடு கோழிகளைத் தின்று தீர்த்த நிகழ்வு அப்போதைய பிரசித்தம்...
ReplyDelete2000 ல் உலகம் அழியப் போகிறது என்று பீதியைக் கிளப்பி விட்டார்கள்...
குவைத் களேபரம் கூடவே வருகிறது...
ஆனாலும்
நம்பிக்கை தானே வாழ்க்கை...
நம்பிக்கைதான் வாழ்க்கை. எல்லாம் மாறும் என்று. நம்பலாம். நன்றி.
Deleteநல்லதே நடக்கும்
ReplyDeleteகேட்க சந்தோஷமாக இறுக்கிறது.
ReplyDeleteஇறுக்கிறது அல்ல. இருக்கிறது என்று இருக்க வேண்டும்.
Delete”இறுக்கிறது அல்ல. இருக்கிறது என்று இருக்க வேண்டும். ”///
Deleteஇறுக்கிறது அல்ல:) இருக்கிறது என்று “இறுக்க” வேண்டும் ஹா ஹா ஹா..
என்ன நடக்கப் போகிறது என ஆருக்குமே தெரியாது.. எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்புவோம்.
ReplyDeleteஅதேதான் அதிரா. நன்றி.
ReplyDelete