மறந்தே போச்சு..
ஒரு காலத்தில் கொழுப்பு என்பதே உடல் நலத்திற்கு கேடானது என்ற எண்ணம் இருந்தது,ஆனால் இப்போதோ கொழுப்பு என்பதும் உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்பதோடு கொழுப்பில் இரண்டு வகை உண்டு,ஒன்று நல்ல கொழுப்பு, இன்னொன்று கெட்ட கொழுப்பு என்கிறார்கள். அதைப் போலவேத்தான் மறதியிலும் நல்ல மறதி,கெட்ட மறதி என்று இரண்டு உண்டு.
நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறந்து விட்டால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? துரோகங்களை மன்னிக்கலாம், மறக்கக்கூடாது.
இயக்குனர் சேரன், "என் உதவியாளர்களிடம் செய்த தவற்றையே மறுபடியும் செய்யாதீர்கள், புதிதாக செய்யுங்கள்" என்று கூறுவேன் என்றார். தவறுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதை மறந்தால் எப்படி இயலும்?
ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் பொழுது மீண்டும் மீண்டும் அதை செய்யச் சொல்வதற்கு(பயிற்சி) காரணம் கற்றுக் கொண்டதை மறக்க கூடாது என்பதற்காகத்தானே?
நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களில் நம் கையை மீறி நடப்பவை, நம்மால் மாற்றவே முடியாது என்ற விஷயங்களை மறப்பதுதான் நலம்.
குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள்.
எக்ஸாஸ்ட் ஃபேனை நிறுத்த மறந்ததால் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.
மனைவியின் பிறந்த நாளையும், தங்கள் திருமணநாளையும் மறப்பதால் குடும்பத்தில் சலசலப்பு நிச்சயம்.
மறதியால் கிடைத்த ஒரு நன்மை, ஞாபகமறதிக்காரர்களைப் பற்றிய ஜோக்குகள்.
திருச்சி.கே.கல்யாணராமன் தன் உபன்யாசங்களில்,"உங்களுடைய மறதிதான் எங்கள் பலம். நீங்கள் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மறப்பதால்தான் நாங்கள் கதை சொல்லி பிழைக்க முடிகிறது" என்பார்.
நமக்கு ஈடுபாடு இருக்கும் விஷயங்களை நாம் மறப்பதில்லை. நெட் பாங்கிங் கடவுச்சொற்களையும், பின் நம்பர்களையும் மறக்கும் நான் லைப்ரரி மெம்பர்ஷிப் எண்ணை மறக்க மாட்டேன். எப்போதோ படித்த கதை, கவிதை வரிகள் நினைவில் இருக்கும். உறவிலும், நட்பிலும் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துவேன். பிரபலங்கள் உட்பட பலரின் ஜாதகங்கள் கூட எனக்கும் என்னுடைய இன்னொரு சகோதரிக்கும் மனப்பாடம், காரணம் ஈடுபாடு.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நண்பர்களோடு திருச்சி உறையூரில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்கச் செல்வாராம். எல்லோரும் பல் தேய்த்து விட்டு ஆற்றில் துளைத்து நீராடி விட்டு திரும்பி வந்தால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அப்போதும் பல் தேய்த்துக் கொண்டே இருப்பாராம். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், "இன்னுமா பல் தேய்த்து முடிக்கவில்லை?" என்று கேட்டால், "சங்கப் பாடலின் ஒரு வரியை யோசித்துக் கொண்டேயிருந்ததில் மறந்து விட்டது" என்பாராம்.
சர்.சி.வி. ராமன் வாக்கிங் சென்று வருகிறேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தால் நடந்து கொண்டே இருப்பாராம், வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே மறந்து விடுமாம் உடன் செல்பவர்கள் யாராவது நினைவூட்ட வேண்டுமாம். ஆனால் இவையெல்லாம் மறதி என்பதில் வராது, ஓவர் தி்ங்கிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஞாபகமறதியுள்ள மற்றொரு பிரபலம், பாடகர் உன்னி கிருஷ்ணன். அவருடைய ஞாபக மறதியைப் பற்றி அவருடைய தாயாரும், மனைவியும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்கள். பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு சென்ற பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டரிடம் சென்னை−பொள்ளாச்சி டிக்கெட்டை கோடுப்பதற்கு பதிலாக, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ரிடர்ன் டிக்கெட்டை கொடுத்து விட்டாராம். ரூமுக்குச் சென்று ரிடர்ன் டிக்கெட் இல்லாததை பார்த்த அவருடைய அம்மா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்லி, அந்த டிக்கெட்டை மீட்டெடுத்தாராம்.
ஹனிமூன் சென்ற பொழுது மனைவியின் பெட்டியை லிஃப்டிலிருந்து எடுக்கவே மறந்து விட்டாராம், மனைவி உடை மாற்றிக்கொள்ள பெட்டியை தேடிய பொழுதுதான் பெட்டியை லிஃப்டிலேயே விட்டு விட்டது நினைவுக்கு வந்து சென்று பார்த்ததில், நல்ல வேளை பெட்டி லிஃப்டிலேயே இருந்திருக்கிறது.
கச்சேரிகளில் பாடல் வரிகள் மறந்து விடுவாராம். வயலின் வாசிப்பவர் எடுத்துக் கொடுத்தால் உண்டு என்று அவரே சிரித்தபடி கூறினார்.
எழுபது வயதாகும் ஒரு முதியவர் தன் மனைவியை "ஹனி","டார்லிங்" என்றெல்லாம் அழைப்பதை பார்த்த ஒரு இளைஞர், "உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை, ஹனி,டார்லிங் என்றே அழைக்கிறீர்களே, அவ்வளவு காதலா?" என்று கேட்டானாம்.அதற்கு அந்த முதியவர்,"என் மனைவியின் பெயர் என்ன என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறந்து விட்டது,அதை அவளிடம் கேட்க பயம், அதனால்தான் இப்படி கூப்பிட்டு சமாளிக்கிறேன்" என்றாராம். எப்பூ..டி?
// ஹனி... டார்லிங்!...//
ReplyDeleteஆஹா.. இதல்லவோ அன்பு!...
ஹா ஹா! பிழைக்கத் தெரிந்தவர்.
Deleteபின்னே!...
ReplyDeleteபெயர் மறந்து விட்டதென்று சொல்லி அடி உதை என்று மண்டையை உடைத்துக் கொள்ளாமல் -
கடுமையாக இருந்தாலும் ஹனி..
டமாரமாக இருந்தாலும் டார்லிங்!...
வாழ்க மணமக்கள்!!..
வாழ்க வாழ்க!
Deleteகடைசி ஜோக் அடிக்கடி படித்துக் கேட்டு ரசித்தது. மறதினு ஒண்ணு இருப்பதாலே மக்கள் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் திரும்பத் திரும்ப செய்ததையே செய்கின்றனர். ஞாபக சக்தி என்பது ஓர் வரம். மன்னிக்கும் குணம் எல்லோருக்கும் வராது. அது கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன். மற்றபடி துரோகங்களை மறந்தது இல்லை.
ReplyDeleteமறதினு ஒண்ணு இருப்பதாலே மக்கள் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் திரும்பத் திரும்ப செய்ததையே செய்கின்றனர்.// மக்கள் அவர்களை மன்னித்து விடுகிறார்களோ?
Deleteநீங்கள் சொல்வது சரி தான்...ஈடுபாடு இருக்கும் பலவற்றை மறப்பதில்லை...
ReplyDeleteஅறிந்து / தெரிந்து / புரிந்து - மறக்க முயற்சிப்பது / தப்பிப்பது - கணக்கியல் மட்டுமே...!
அறிந்து / தெரிந்து / புரிந்து - மறக்க முயற்சிப்பது / தப்பிப்பது - கணக்கியல் மட்டுமே...!// ஏன் அப்படி? அது உங்களுக்கு முக்கியம் இல்லையோ?
Deleteகணக்கியல் பதிவுகளில் (வந்தால்) சந்திப்போம்...
Deleteசிலரது மறதி அடுத்தவருக்கு லாபம்! தப்பித்தவறி நினைவுக்கு வந்துவிட்டால் கூட "நானா?" என்று கேட்டால் அவர்களுக்குச சந்தேகம் வந்துவிடும்!
ReplyDeleteஎன் அலுவலகத்தில் என்னுடைய மறதி பிரசித்தம். இதனால் என்ன ஆகும் என்றால் உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகள், மறந்து விடுபவற்றையும் என் பேரில் சுமத்தி விடுவார்கள்!
ReplyDeleteபண விஷயத்தில் என் ஞாபக சக்தி மிகவும் வீக் என்பதால் என் கணவர் நான் சொல்வதை நம்ப மாட்டார். அது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் நாம்தானே அப்படி ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணியிருக்கிறோம் என்று தேற்றிக் கொள்வேன்.
Deleteஉங்கள் ஞாபக சக்தி என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். எப்போதோ படித்த விஷயங்களை வரிக்கு வரி உடனே எடுத்துக் கொடுப்பீர்கள். நான் கூட கையில் ரெபரென்ஸ் தேடி எடுத்து தருகிறீர்களோ என்று யோசிப்பேன். இல்லை என்பது விளங்கும். அதேபோல ஏஞ்சலின் நினைவாற்றலும் அபாரம்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம். என் குடும்பத்தில் உனக்கு இரண்டு வயதில் நடந்தது கூட ஞாபகம் இருக்கும் என்பார்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமறதி பற்றிய பதிவு அருமை. நம் வாழ்வில் நீங்கள் சொல்வது போல் நிறைய கெட்ட மறதிகளை மறக்க முயற்சித்தாலும், அதனுடைய தாக்கங்கள் சமயத்தில் வந்து நினைவுபடுத்துகின்றன. அப்போது நல்லதையே நினைத்து நல்லதை செய்தும் இறைவன் ஏன் நம்மை மறக்கிறார் என்ற வருத்தமும், அதன் பின மனசமாதானமும் எழுகிறது.
தங்களுடைய ஈடுபாடு காரணமாக இயல்பாகவே உங்களுடன் இருந்து வரும் நினைவாற்றல்கள் சிறந்த வகையை சார்ந்தது. உங்கள் உறவுகளையும், நட்பையும் கண்டிப்பாக உங்களுடன் பலப்படுத்தும். வாழ்த்துகள்.
ஞாபகமறதிகாரர்களை பற்றிய ஜோக்குகள் அருமை. மறதிகளும் சமயத்தில் சுவாரஷ்யமாக இருக்கிறது. கடைசி ஜோக் நன்றாக உள்ளது. நல்லவேளை.. அவர் மனைவியை மறக்காமல் இருக்கிறாரே..:) இதோ.. நானும் மறக்காமல் இன்றே பதிவை வந்து படித்து விட்டேன். ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நீங்கள் வந்து படித்ததை விட மறக்காமல் அதற்கு பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி.
Deleteஹா. ஹா. ஹா.. படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் போவேனா.. போகத்தான் மனம் வருமா? தாங்கள் இரு பதிவுகளாக என் வலை தனம் பார்வையிட வரவில்லையே! உங்கள் வரவைத்தான் அன்புடன் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். முடிந்த போது தாங்களும் மறக்காமல் வரவும்:)
Deleteநான் தற்சமயம் பயணத்தில் இருக்கிறேன். அதனால் மற்ற பதிவுகளை செல்ஃபோனில் படிப்பது சற்று கடினமாக இருக்கிறது. சற்று குற்ற உணர்வும் ஏறபடுகிறது. விரைவில் வருகிறேன்,தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Delete///குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள். //
ReplyDeleteசரியா சொன்னிங்கக்கா .எப்படி இருந்தோம் என்பதை விட இப்போ அப்படி இருக்கிறோம்னு நினைச்சு சந்தோஷமா இருக்கணும் .மறதி விஷயங்கள் ரசித்தேன் :) அதுவும் ஹனி ஹாஹாஹா :) ஒரு ரகசியம் :) என் கணவர் என்னை அவர் தங்கையின் பெயரை சொல்லி கூப்பிட்டிடுவார் :) ஸ்லிப் of டங் இருவர் பெயரும் ஒரே எழுத்தில் ஆரம்பிக்குன்னாலும் கர்ர்ர்ர் சொல்வேன் :)
என் மகன் கூட சில சமயம் என் மகள் பெயரைச் சொல்லி மனைவியை அழைத்து விடுவான், மருமகள் முறைப்பாள்.
ReplyDeletehaaaa haaaa :))))))))))
Delete:)))
Deleteமறதி பிளா சமயங்களில் பயனுள்ளது. மறதி குறித்த உங்கள் எண்ணங்கள் நன்று.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteமறதி சில விசயங்களுக்கு மட்டுமே நல்லது.
ReplyDeleteதுரோகத்தை எப்படி மறக்க இயலும் ? மறந்தால் மீண்டும் நமக்கு துரோகம் செய்வார்களே...
வாங்க சகோ, துரோகத்தை மறக்கக் கூடாது. செய்த தவறுகளையும் மறக்கக் கூடாது.
ReplyDeleteமறதி என்பது வரம். நாம் செய்த தவறுகளையும் பிறர் செய்த தவறுகளையும் மறக்கணும். துரதிருஷ்டவசமாக பிறர் செய்த தவறுகள் மாத்திரம் மறப்பதில்லை.
ReplyDeleteஎனக்கு எப்போதும் முகம் நினைவில் இருப்பதில்லை. ஒருவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மறுநாள் பார்த்தாலும் இவரைப் பார்த்திருக்கிறோமா என்ற சந்தேகம் வரும். அலுவலகத்தில், இவரை எங்கேயோ சந்தித்திருக்கிறோம் எனத் தோன்றும். அவர்கள்தான் முன் கதைச் சுருக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக்கணும்.
ஹாஹாஹாஹா, நெல்லை, நம்ம ரங்க்ஸ் இந்த விஷயத்தில் உங்களுக்கு அண்ணா! யாருடைய பெயரும் அவருக்கு நினைவில் இருந்ததில்லை. இஷ்டத்துக்குப் பெயரை மாற்றிக் கூப்பிடுவார் அல்லது சொல்லுவார். எனக்குத் தெரிந்து அவர் மாற்றாத ஒரே பெயர் என்னுடையதாய் இருக்கும். அதை நானே அவரிடம் சொல்லிக் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். பெயரை மாற்றுவது போல் மளிகை சாமான்கள் வாங்குவதையும் ஒரு மாசத்துக்கு ஒரு கடைனு மாத்துவார். எனக்கு அது சுத்தமாப் பிடிக்காது. ஒரே கடையில் வாங்கினால் நம்விருப்பத்திற்கு ஏற்பப் பொருட்கள் கிடைக்கும் என்பேன் நான். அவரோ விலையைப் பார்ப்பார்.
Deleteநல்ல வேளை நீங்கள் ஆசிரியர் வேலைக்குச் செல்லவில்லை. உங்கள் வகுப்பு மாணவர்கள் கேட் அடித்தால் கூட கண்டு பிடிக்க முடியாதே?
Deleteயாரைச் சொல்றீங்கனு தெரியலை. ஆனாலும் நான் ஆசிரியப் பணி புரிந்திருந்தால் மாணவ, மாணவிகளின் முகத்தை வைத்தே கண்டு பிடித்துவிடுவேன் என அனைவரும் சொல்வார்கள்.
Delete*கட் அடித்தால் ..
ReplyDelete