கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, April 26, 2021

சில விமர்சனங்கள்

சில விமர்சனங்கள்

கர்ணன்

பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்ட படம் பிரம்மாண்டமான தயாரிப்பு. நடிகர்களின் தேர்வும் சிறப்புதான். அவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாடல்கள் சற்று அதிகம் தான் இருந்தாலும் இனிமை. என்ன? கொஞ்சம் அசந்தால் கதாநாயகியின் தோழிகள் கையில் ஒரு தட்டோடு நடனமாட வந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புகள் இருக்கும் இந்த படத்தினை கொஞ்சம் உண்மையாகவும் எடுத்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஹீரோக்களை போட்டு படங்கள் எடுக்கும் பொழுது கதைகள் அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றப்படுகின்றன. 

பரசுராமரிடம் பாடம் கற்கச் சென்ற கர்ணன் அவரிடம் சாபம் பெற்று திரும்பும் வரை ஒழுங்காக சென்றுகொண்டிருந்த கதை  சுபாங்கி(தேவிகா)யை கர்ணன்(சிவாஜி)  சந்தித்ததும் அவர்கள் பின்னால் சென்று விடுகிறது. காதல் டூயட் கல்யாணம் குழந்தை பிறப்பு என்று கதை பாதை மாறி விடுகிறது. 

கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி. சிவாஜி நடிப்பதற்கு என்ன நம் கண்களை குளமாக்கி விட்டார். அதேபோல  இந்திரனுக்கு தன் கவச குண்டலங்களை தானமாக கொடுக்கும் இடத்திலும் சிவாஜியின் நடிப்பு சிறப்பு, ஆனால் மாமனாரால் அவமானப் படுத்தப்படும் பொழுது சிங்கம் போல் கர்ஜித்தார், அந்த காட்சியை அந்த காலத்தில் அவருடைய ரசிகர்கள் கைதட்டி ரசித்திருப்பார்கள் இப்பொழுது அரங்கமே கொல்லென்று சிரிக்கிறது. 

என்டிஆர் கொஞ்ச நேரம்தான் வருகிறார் ஆனால் ஆனால் கருத்தைக் கவர்ந்து விடுகிறார்.  "செத்த பாம்பை அடித்து விட்டு நான் அடித்தேன்,நான் அடித்தேன் என்கிறாயே" போன்ற வசனங்கள் ஷார்ப்.

எதிர்பார்ப்புகள் அதிகம் நிறைவேறியது குறைவு

பி.கு.

தனுஷ் நடித்த கர்ணனை பார்க்க முடியாததால்,சிவாஜி நடித்த கர்ணனுக்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஹி ஹி!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரமபதம் விளையாட்டு


கதாநாயகியாக நடித்த நடிகைகளுக்கு வயது ஆக ஆக வாய்ப்புக் குறைகிறது. தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அப்படி திரிஷா நடித்திருக்கும் ஒரு படம்தான் பரமபத விளையாட்டு. முதல் பாதியில் ஆங்கிலப் படத்திற்கு இணையாக விறுவிறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செல்லும் இந்த படம் இரண்டாம் பாதியில் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறது. படத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் இதுவரை காமெடி நடிகராக இருந்த சாம்ஸ், இந்தப் படத்தில் காமெடி வில்லனாக மாறி இருக்கிறார். 

இடைவேளைக்குப்பிறகு தேவையே இல்லாமல் ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கும் அந்த படம் காட்டில் சுற்றி சுற்றி வருகிறது பெரும்பாலும் சேசிங் என்பதுதான் காட்சிகள் என்பதால் அதை திறமையாக கொண்டு செல்ல முடியாமல் திணறி இருக்கிறார் இயக்குனர் ஒரு அரசியல் படமாக ஆரம்பித்து திரில்லர் படமாக மாறி காட்டிற்குள் காணாமல் போய்விடுகிறது கதை. வில்லன் யார் என்பதையும் யூகிக்க முடிந்து விடுவதால் நமக்கு மிஞ்சுவது அலுப்பும், ஆயாசமும். 22 comments:

 1. இதுவல்லவோ விமர்சனம்... (!)

  ReplyDelete
 2. // மாமனாரின் அவமதிப்பால் பொங்கி எழுந்து கர்ஜிக்கும் கர்ணன்..//

  ரோஷமும் இயலாமையும் மீறும் போது இப்படி ஆகலாம்...

  அந்தக் கர்ணன் கர்ஜித்தானோ இல்லையோ... இனிமேல் இப்படிக் கர்ஜிக்க இனியொரு நடிகர் இல்லை என்பது உண்மை..

  ReplyDelete
  Replies
  1. இப்போது சிவாஜியை வைத்து கர்ணனை எடுத்திருந்தால், அவர் வேறு விதமாக நடித்திருப்பார். நன்றி.

   Delete
 3. Replies
  1. உங்கள் வழக்கமான சிரிபைக்காணோமே..!

   Delete
  2. இஃகி,இஃகி,இஃகி,இஃகி! மாத்தலை! செரியா?

   Delete
 4. கர்ணன் படம் புதுசு வேறு இருக்கா? தனுஷ் வேறு நடித்திருக்கிறாரா?

  பழைய கர்ணன் படம் ஊடின் தேரடியில் ராத்திரி ரீல் கட்டாகி கட்டாகி 5 மணி நேரம் ஓட்டிய படத்தை கோயில் திருவிழா, சிவராத்திரியின் போது பார்த்திருக்கிறேன். அப்போது அப்படி ரசித்த படம்.

  பரமபதம் விளையாட்டு ஒரு வழியாக இறங்கிவிட்டதா! அட! வரும் வரும்னு சொல்லி...எதில் பார்த்தீர்கள் அக்கா. நான் வெகு நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம்...ட்ரெய்லர் ஈர்த்ததால்...பொலிட்டிக்கல் த்ரில்லர் என்பதால். ஆனால் உங்கள் விமர்சனம் இல்லை என்று சொல்கிறதே..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //கர்ணன் படம் புதுசு வேறு இருக்கா? தனுஷ் வேறு நடித்திருக்கிறாரா?// சரிதான். நீங்களுமா? கீதா அக்காவுக்கு தங்கை நான்தானென்று இப்படி ஒரு படம் வந்ததா? என்று கேட்க ஆரம்பித்து விட்டீர்களா?

   Delete
  2. ஹிஹிஹி, எனக்கு எண்பதுகள்/தொண்ணூறு ஆரம்பம் வரை இந்த உலகில் என்ன நடந்தது என்பதே அதிகம் தெரியாது. முழுக்க முழுக்கக் குடும்பம்/குடும்பம்/குடும்பம்! வேலை/மீண்டும் வேலை/அதிக வேலை! இவ்வளவு தான் தெரியும்.

   Delete
 5. விமர்சனம் நன்றாக இருக்கிறது கர்ணன் படம்...இரண்டாவது பார்க்கலையே இன்னும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இனிமேல்தான் பார்க்க வேண்டும். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவரின் படம். அதனால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

   Delete
 6. கர்ணன் படத்துக்கு நீண்ட காலத்திற்குப்பிறகு வரும் விமர்சனம்!
  பிரம்மாண்டமான இந்தப்படத்தின் அலங்கரிப்பும் இனிமையான பாடல்களும் பாடல் வரிகளும் சிவாஜியின் அசத்தும் நடிப்பும் இன்னும் மனதில் அப்படியே நிற்கின்றன!அதுவும் கடைசி காட்சியில் சிவாஜியின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் என்.டி.ராமராவின் நடிப்பு இருக்கும்.

  ReplyDelete
 7. சிவாஜியின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் என்.டி.ராமராவின் நடிப்பு இருக்கும்.// நிஜம்தான். நன்றி மனோஜி. துபாயில் கோவிட் நிலவரம் எப்படி இருக்கிறது?

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரி

  இரு படத்தின் விமர்சனங்களும் சிறப்பு. கர்ணன் படத்தின் பாடல்களும் நன்றாக இருக்கும். "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலை எப்போது கேட்டாலும் கண்கன் கசிவது நிச்சயம். கர்ணன் மறக்க முடியாத படம். எத்தனை தடவை வேண்டுமானாலும் சிவாஜியின் கம்பீரமான நடிப்புக்காக பார்க்கலாம். (சில இடங்களில் மட்டும் ஓவர் நடிப்போ என எண்ண வைக்கும்.)

  என்.டி.ஆரை கிருஷ்ணனாகவே, ராமராகவே நினைத்து ஒரு காலத்தில் வழிபட்டாகி விட்டது (குறிப்பிட்ட நிஜ கடவுளார்களே நேரில் வந்து வித்தைகள் காட்டினாலும், அவரைத்தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்க விரும்பாத மனதுகளுடன் இருந்த காலம்.) நடிப்பிலும் சரி... அவரை விட அப்போது அந்த வேடங்களில் வேறு பிற நடிகர் யாரையும் வைத்து பார்க்க முடியாது. ஆனால், இப்போது வந்த தெலுங்கு லவகுசா இராமாயணத்திலும், அவர் பையன் அவரைப்போலவே தோற்றத்திலும், நடிப்பிலும் மெருகேற்றியிருந்தார்.

  தனுஷ் நடிப்பில் கர்ணன் புதுப்படம் வந்திருப்பதை அறியேன்.

  பரமபதம் படத்தின் தங்கள் விமர்சனமும் அருமை. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நேரம் கிடைக்கும் பொது பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வழக்கம் போல விரிவான விமர்சனத்திற்கு நன்றி. //பரமபதம் படத்தின் தங்கள் விமர்சனமும் அருமை. பார்க்க வேண்டும் போல் உள்ளது.// பார்க்கலாம் என்று தோன்றும்படியாகவா நான் விமர்சனம் எழுதியிருக்கிறேன்??

   Delete
 9. இங்கே தினசரி குறைந்த‌ அளவில் பாதிப்பு இருக்கிறது. சென்ற வருட ஆரம்பத்திலிருந்தே கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அப்போதிலிருந்தே மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் இருக்கிறது. உணவகங்களில் பாதி இருக்கைகள் தாம். காரில் நால்வர் மட்டும் தான் போகலாம். அதனால் எங்கள் காரில் முழு அங்கத்தினர்கள்[ 6 பேர்] போக முடிவதில்லை. நடுவில் தளர்வுகள் என்பதெல்லாம் கிடையாது. இப்போது இந்தியாவிலிருந்து வரும் விமானக்ன்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

  ReplyDelete
 10. கர்ணன் விமர்சனம் சூப்பர். இப்போது அதை அமர்ந்து பார்க்கப் பொறுமை உண்டா தெரியவில்லை.
  வர்ணங்களும் கண்ணை உறுத்துகிறது.
  பாடல்கள் மிக இனிமை. முழௌக்க இந்துஸ்தானி இசையில்
  அமைந்த படம். இள வயதில்
  கர்ணனுக்கு நேர்ந்ததை நினைத்து
  சினம் கொண்டதும் நினைவில்!! சிவாஜியின் நடிப்பு அப்படி.

  புதுப்படங்கள் அவ்வளவாக ஈர்ப்பதில்லை.

  பரமபத விளையாட்டு!!!
  எனக்கு வயதாகி விட்டது என்பதை
  மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
  ஹாஹாஹா.
  மிக நல்ல விமரிசனங்கள்.
  பங்களூர் செய்திகளை மனதில் வாங்க பயமாக
  இருக்கிறது.
  பத்திரமாக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனதில் இருப்பதை சொல்லியிருக்கிறீர்கள். எல்லாமே நிஜம். நன்றி. 

   Delete
 11. பேஸ்புக்கில் படித்தேன்.   அங்கு ஆன்சிலா அவர்கள் சீரியஸாக கேள்வி கேட்டிருந்தார் என்று ஞாபகம்!

  ReplyDelete
 12. ஆன்சிலா தியேட்டரில் பார்த்தீர்களா? என்றுதான் கேட்டிருந்தார். இன்னொருவர், அரங்கமே கொல்லென்று சிரித்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நான் வீட்டில் பார்த்துவிட்டு, தியேட்டரில் பார்த்ததாக எழுதுவதாக குற்றம் சாட்டினார். 

  ReplyDelete