கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 11, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 

அதைப் பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஊடகங்களில் இதை தவிர வேறு பேச்சு இல்லை.  எங்கேயோ இருக்கிறது, அங்கே இருக்கிறது, இங்கே இருக்கிறது என்ற நிலை மாறி நம் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் பீடிக்கும் பொழுது கவலை, இப்போது எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே எங்கள் வீட்டிற்கு நேர் கீழே, இரண்டு மாடிகளுக்கு கீழே ஒருவரை பாதித்து விட்டது என்று அறிந்தவுடன் அச்சம்! ஜன்னல் கதவை திறக்கலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது.  ஆனால் இப்பொழுது கூட முகக்கவசம் அணியாமல் சந்தைகளில் கூடும் மக்களையும், வியாபாரிகளையும் பார்க்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.  

என்னதான் லாக் டவுன் என்றாலும் பால், மளிகை சாமான்கள், கறிகாய்கள், இறைச்சி போன்றவை விற்கும் கடைகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கர்நாடகாவிலும், மதியம் பன்னிரெண்டு மணி வரை தமிழகத்திலும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்க ஞாயிறு அன்று ஏன் கடைகளை முற்றுகை இடவேண்டும் என்று புரியவில்லை. 

--------------------------------------

அன்றொரு நாள் பாலை அடுப்பில் வைத்தவுடன் டொப்,டொப் என்று சப்தம் கேட்டது. பால் திரிந்து விட்டது. அதை இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்து, கிளறி, கோவாவாக செய்து கொண்டேன். கொஞ்சமாக பயத்தம் பருப்பை வறுத்து, ஊற வைத்து அரைத்துக் கொண்டேன். வெல்லத்தில்  பாகு வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தேங்காய் துருவல், அரைத்த பயறு விழுது, மற்றும் கோவாவையும் சேர்த்து கிளறியதில் ஒரு நல்ல இனிப்பு கிடைத்து விட்டது. அதற்கு பெயர்தான் கிடைக்கவில்லை. 

வாணலியில் வறுபடும் பயத்தம் பருப்பு 

அரைத்த விழுது, தேங்காய், பால் கோவா வெல்லம் பாகாகிறது 

End product

------------------------------


இந்த படத்தில் இருப்பவர் யார் என்று யூகிக்க முடிகிறதா? ஒரு நல்ல அரசியல் தலைவரின் இளம் வயது புகைப்படம்.  

---------------------------


பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா இன்று மாலை(10.05.21) மஹாசமாதி அடைந்தார் என்னும் செய்தி இடியாக இறங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார், விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். இவர் மஸ்கெட்டிற்கு வருகை தந்த பொழுது இவரது கீதை உரைகளை கேட்டிருக்கிறேன். எளிமையாக இருக்கும். சமஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் நிபுணர்.  திருக்குறளிலிருந்து நிறைய மேற்கோள் காட்டுவார். திருக்குறளுக்கும், பகவத் கீதைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை விளக்கி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத் தர வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர்.    ஓம் சாந்தி!

---------------------------------------------

நானும் தில்லையகத்து கீதாவும் இணைந்து எங்கள் பிளாகில் எழுதிய 'நானும் நீயும் சேர்ந்தே செல்லும் நேரமே....'  என்னும் கதை  கிண்டலில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதோடு ஒரே கருவிற்கு நாங்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய இரு வேறு கதைகளும் படிக்க கிடைக்கும். திரு. வெங்கட் தன்னுடைய வேலைப்பளுவிற்கு இடையிலும் இதற்கு நேரம் ஒதுக்கி உதவியிருக்கிறார். 


இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருங்கள், அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

  

36 comments:

 1. சந்தடி சாக்கில் சமையல் குறிப்பு...

  கம்புக்குக் களையெடுக்கப் போய்
  தம்பிக்குப் பெண் பார்த்தானாம் ஒருவன்!..

  பழமொழி நினைவுக்கு வந்தது...

  ReplyDelete
 2. பூஜ்யஸ்ரீ ஓங்காரனந்தா ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்..

  ReplyDelete
  Replies
  1. கொரோனா பாரபட்சம் பார்ப்பதில்லை. நஷ்டம் நமக்குதான்.

   Delete
 3. இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வேண்டும்... வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. தீநுண்மி - கவனமாக இருங்கள். நலமே விளையட்டும்.

  புதியதொரு இனிப்பு - நல்லது! இனிப்பு என்றாலே சாப்பிடத் தோன்றுகிறது! ஹாஹா...

  அரசியல் தலைவர் - யூகிக்க முடியவில்லை.

  பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா - ஓம் ஷாந்தி.

  புத்தக வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும்! உங்களது வெளியீடுகள் இனியும் தொடரட்டும். எனது பங்கு ஒன்றுமே இல்லை! இது உங்களது உழைப்பு.

  ReplyDelete
  Replies
  1. இன்று மாலை பொதிகையில் பேசிய டாக்டர்.சுதா சேஷையன் கொரோனா பாதுகாப்பிற்கு SMS என்பதை வலியுறுத்தினார்.
   S - Sanitation
   M - Mask
   S - Social distancing.
   இவைகளை கடைபிடிக்கிறோம்.
   நன்றி வெங்கட்.

   Delete
 5. சென்ற வருடம் தீநுண்மி கொஞ்சம் சாதுவாக இருக்கும்போதே அவ்வளவு பயந்தோம்.  இப்போதோ பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் அச்சம் ஆட்கொள்கிறது.  வீட்டுக்குள் இருப்பவர்களே பாதிக்கப்படுகிறார்கள்.  வெளியில் சென்று வருபவர்கள் கதி என்ன ஆகுமோ...   மக்களுக்கு பயம் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.  ஆனால் எது அவர்களை அலட்சியமாக, பாதுகாப்புகள் இன்றி நடமாட வைக்கிறது என்றுதான் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் பாதிக்கப்படாத வீடே இல்லையோ என்று தோன்றுகிறதோ. அதுவும் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் பாதிக்கப்படுவது கொடுமை.

   Delete
 6. //ஒரு நல்ல இனிப்பு கிடைத்து விட்டது. அதற்கு பெயர்தான் கிடைக்கவில்லை.//

  ஹா...  ஹா..  ஹா...   அசோகா அல்வா பாணியில் இருந்திருக்குமோ....

  ReplyDelete
  Replies
  1. //அசோகா அல்வா பாணியில் இருந்திருக்குமோ....// கிட்டத்தட்ட அப்படித்தான். பருப்பை குறைத்து தேங்காய்,நெய் இவைகளை கூட்டினால் தோடா என்னும் வட இந்திய இனிப்பு போல இருக்கும் என்று தோன்றியது.

   Delete
 7. அரசியல் தலைவர் யாரென்று யூகிக்க முடியவில்லை.

  //நல்ல அரசியல் தலைவரின்//

  ஆக்சிமோரான்?!!

  ReplyDelete
  Replies
  1. மற்றவர்களும் வரட்டும்,பிறகு விடை சொல்கிறேன்.

   Delete
 8. கிண்டில் புத்தக வெளியிலிட்டுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  இன்னும் நூல்கள் வெளியிட வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அன்பழகனா இல்லை நால்வரணியில் மூத்தவரா?

  ReplyDelete
  Replies
  1. அகில இந்திய அளவில் யோசியுங்கள்.

   Delete
 10. கொரோனா கவலையும் அச்சமும் தருகிறது. பயமாகவும் இருக்கு! எங்கே போய் முடியுமோ? இது 2015 ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டதாகவும், இந்தியாவை/உலகை வெல்ல இம்மாதிரி ஒரு ரசாயன ஆயுதம் தயாரிக்கப்பட்டதாகவும் செய்திகள்! என்னவோ!

  ReplyDelete
  Replies
  1. //இந்தியாவை/உலகை வெல்ல இம்மாதிரி ஒரு ரசாயன ஆயுதம் தயாரிக்கப்பட்டதாகவும் செய்திகள்! என்னவோ!// அப்படிதான் கேள்விப்படுகிறோம். என்னவோ போங்க. 

   Delete
 11. கிட்டத்தட்ட அசோகா தான் புதிய இனிப்பு. இதுக்காகப் பாலைத் திரிய வைக்கணும்! இஃகி,இஃகி, இஃகி! புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். ஓம்காராநந்தா ஸ்வாமிகளின் மறைவு மாபெரும் இழப்பு. அந்த அரசியல் தலைவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நினைவூட்டுகிறார். ஆனால் யாருனு யூகிக்கும் அளவுக்கு இப்போ யோசிக்க முடியலை. நீங்களே சொல்லிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. பால் திரியும்பொழுது செய்து கொள்ளலாம். வாழ்த்துக்களுக்கு நன்றி. 

   Delete
 12. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் மா.
  கொரோனா கொடுமை ஒன்றும் சொல்லும்படி இல்லை.

  மனமே பேதலிக்கிறது.
  மக்களுக்கு இன்னும் இதன் வீர்யம் புரியவில்லை.

  நல்ல அரசியல் தலைவரா:)
  வினோபா பாவே?

  ஸ்வாமிஜியின் உரைகளைச் சென்னையில் கேட்டிருக்கிறேன்.
  அப்போது இளைஞர். சொன்ன உடன் பின்பற்ற வேண்டும்
  என்று தோன்றும்.
  ஓம் ஷாந்தி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அக்கா!. அங்கு நிலை இத்தனை மோசம் இல்லை போலிருக்கிறது. இங்கும் விரைவில் சரியாகுமென்று நம்பலாம்., அதற்கு பிரார்த்திக்கலாம். 

   Delete
 13. பானுக்கா அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! சில ஃபீச்சர்ஸ் மோதி என்று சொல்கிறது. என்னவோ என் மனதிற்குப் பட்டதைச் சொல்கிறேன்..ஹா ஹா ஹா

  அக்கா பாதுகாப்போடு இருங்க வேற என்ன சொல்ல? தீநுண்மி ரொம்ப படுத்துகிறது. இயல்பு வாழ்க்கையே போச்சு.

  அக்கா புத்தகத்திற்கு உங்களுக்கும் வெங்கட்ஜிக்கும் நன்றி. நீங்களாக இருக்கக் கண்டு முனைந்து வெளியிட்டிருக்கிறீர்கள். நான்? ஹிஹிஹிஹி...

  ஸ்வாமிகள் - ஓம் ஷாந்தி!

  ஸ்வீட் அட! தேங்காய் போட்ட அசோகா ஹல்வா!!! தேங்காய் அசோகா ஹல்வா ந்னு பெயர் வைச்சுருங்க.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //அந்த அரசியல் தலைவர் திரு மோதியோ?! // நெருங்கி விட்டீர்கள். தேங்காய்,அசோகா ஹல்வா .. பெயர் நன்றாக இருக்கிறது. பெயர் வைக்காமலே சாப்பிட்டு விட்டோம்.

   Delete
 14. ஐ... பயத்தம் பருப்பு பால் அல்வா...!

  இவ்வாறு செய்து "ஆகா...!" என்று சொன்னதன் விளைவு : மாதம் இருமுறை பால் தானே திரிந்து போகிறது...!

  ReplyDelete
  Replies
  1. //இவ்வாறு செய்து "ஆகா...!" என்று சொன்னதன் விளைவு : மாதம் இருமுறை பால் தானே திரிந்து போகிறது...!// ஹாஹா! எப்படியோ அல்வா கிடைக்கிறது..அதுதானே முக்கியம். 

   Delete
 15. பாரதி தாசன்

  ReplyDelete
 16. கொரோனா பயம் எல்லோருக்கும் இருந்தாலும் கவலை இன்றி ஊர் சுற்றுபவர்களும் இருக்க த்தான் செய்கின்றனர்.
  அரசியல் பிரமுகர்:நாவலர் நெடுஞ்செழியன்??.
  திரிந்த பாலில் பிறந்த இனிப்பிற்கு , "திரிபாலா" என்ற பெயர் பொருத்தமாக இருக்குமோ?,

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோயில்பிள்ளை, திரிபாலா.. பெயர் நன்றாக இருக்கிறதே. நன்றி நன்றி.

   Delete
 17. கொரோனா இன்றைய சூழலில் பிரியமானவர்களையெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் மருத்துவமனைக‌ளில் அடுக்கடுக்கான மரணங்களினால் நோயாளிகளின் உறவினர்கள் நிறைய பேர் ' மூன்று ஊசி போட்டு கொல்லுகிறார்கள்' என்று புலம்புகிறார்களாம். அதை ' புதிய தலைமுறை தொலைக்காட்சி படம் பிடித்துக்கொன்டிருந்ததாம்.நேரில் பார்த்த‌ சினேகிதி சொன்னார்.
  அந்த புகைப்படம் இள வயது நெடுஞ்செழியன் போலவே இருக்கிறது. ஆனால் அகில இந்திய அளவில் என்று சொல்லி விட்டீர்கள். எல்.கே.அத்வானியா?
  திரிந்த பாலை அருமையான இனிப்பாக மாற்றியதற்கு பாராட்டுக்கள். இவ்வளவு செய்த நீங்கள் ஒரு நல்ல பேரையும் அதற்கு சூட்டியியிருக்கலாம்!

  ReplyDelete
 18. //அந்த புகைப்படம்...எல்.கே.அத்வானியா?// சூப்பர்! சரியாக கணித்து விட்டீர்கள். பிடியுங்கள் பாராட்டை.

  ReplyDelete
 19. வறுத்த பாசிப்பயறு மாவு கலந்து திரட்டுப்பால் சிலர் இப்படி ஆந்திராவில் செய்வார்கள் . நல்லா நிறையக் காணும் .
  எனக்கும் எதிர்த்த ஃ பிளாட்டில் கொரோனா. அவங்களுக்கும் குவாரன்டைன் முடிஞ்சுடுச்சு
  கிட்டத்தட்ட நாற்பது நாளாச்சு வீட்ட விட்டு வெளியே போகவே இல்லை . எந்த வேலையும் செய்யத் தோணலை

  ReplyDelete
 20. வாங்க அபயா! உங்களுக்கு ஹோம் க்வாரண்டைனா? என்னாச்சு?

  ReplyDelete