கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 3, 2022

திருவெம்பாவை - 19

திருவெம்பாவை - 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை நிறைவு செய்யும் பெண்கள் சிவ பெருமானிடம் தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, அவள் கையை பிடித்து மாப்பிள்ளையாக வரும் ஆண் மகனிடம், "இனி இந்தப் பெண் உன்னுடைமை" என்று ஒப்படைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.  அதை நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எங்கள் பெருமானே உன்னிடம் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறோம், கேட்பாயாக. நாங்கள் ஒரு சிவ பக்தனுக்கு மனைவியாகி அவனால் தழுவப் படுவதையே விரும்புகிறோம். எங்கள் கரங்கள் சிவத்தொண்டிலேயே ஈடுபட வேண்டும். இரவும், பகலும் எம் கண்கள் உன்னையே தரிசிக்க வேண்டும். இந்த பரிசை மட்டும் எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

பாவை நோன்பு நோர்ப்பது நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக  யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன. திருவெம்பாவையின் மகுடமாக விளங்கும் பாடல் இது.


11 comments:

  1. அதற்காக யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன.//

    ஆமாம். பாடலிலேயே பொருள் விளங்கிவிடுகிறது இதைச் சொல்ல நினைத்து வாசித்து வந்த போதுநீங்களும் சொல்லியிருக்கீங்க...

    பொதுவாகவே திருமணம் தாமதிக்கும் பெண்களுக்கும், நல்ல கணவன் அமையவும் இதைச் சொல்லச் சொல்வதுண்டு அது போல வாரணமாயிரமும்.

    ஆனால்....வேண்டாம் அடுத்த வரி!! அதை இங்கு தவிர்க்கிறேன்!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம் அடுத்த வரி!! அதை இங்கு தவிர்க்கிறேன்!!!!!!!!!!!!!// ஏன்? ஏன்? ஏன்?

      Delete
  2. நல்லதொரு விளக்கம்.

    ReplyDelete
  3. நல்ல விளக்கம். தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. அளவிற்கு மிஞ்சினால்...

    பக்தியும்...!

    ஆண்களே மடலேறுதலை விரும்புவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. நம்மைப் போன்றவர்களுக்கு அவர்களின் நிலை புரிவது கடினம். கருத்துக்கு நன்றி.

      Delete
  5. நல்லதொரு விளக்கம்!

    ReplyDelete