கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 4, 2022

திருவெம்பாவை - 20

திருவெம்பாவை - 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை முடிக்கும் பெண்கள் சிவபெருமானை போற்றி வணங்குவதாக அமைந்திருக்கிறது திருவெம்பாவையின் கடைசி பாடல்.

அனைத்திற்கும் மூலமான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்.
அனைத்திற்கும் முடிவான செம்மை பொருந்திய தளிர் பாதங்களை போற்றுகிறோம்.
எல்லா உயிர்களின் எதிலிருந்து தோன்றுமோ அந்த பொற் பாதங்களை  போற்றுகிறோம்.
இவ்வுலகில் உள்ள உயிர்களும் அனுபவிக்கும் போகங்களாக விளங்கும் கழலணிந்த மலர் பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களின் முடிவாக விளங்கும் பாதங்களை போற்றுகிறோம்.
திருமாலும், நான்முகனான பிரம்மனும் காண முடியாத தாமரைப் பாதங்களை போற்றுகிறோம்.
நாங்கள் உய்யும் பொருட்டு எங்களை ஆட்கொண்டு அருளும் பொற்பாதங்களை வணங்கி மார்கழி நீராடுகிறோம். 

இத்துடன் திருவெம்பாவை முற்றுப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம்.

9 comments:

  1. போற்றுவோம் எங்கும் சக்தியாக நிறைந்திருக்கும் பரம்பொருளை!

    திருவெம்பாவை தொடர் சிறப்பாக முடிந்திருக்கிறது பானுக்கா

    கீதா

    ReplyDelete
  2. அழகான விளக்கங்களை அருமையாகப் பகிர்ந்தீர்கள்.

    ReplyDelete
  3. திருவெம்பாவை விளக்கங்கள் நன்று. பதிவு செய்தமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    திருவெம்பாவை தொடர் இதுவரை நன்றாக இருந்தது. இத்தனை நாட்கள் சிறப்பாக பாடல்களையும், அதன் விளக்கங்களையும் தொகுத்து தந்ததற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. சிறப்பான பதிவுகள்.

    ReplyDelete