கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 2, 2022

திருவெம்பாவை - 18

திருவெம்பாவை - 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

ஒளி வடிவான அண்ணாமலையாரின் பாதத்தில் விழுந்து துதிக்கும் தேவர்களின் கிரீடத்தில் பதிக்கப் பட்டிருக்கும் நவரத்தினங்கள் தங்கள் பிரகாசத்தை இழப்பதை போல, கதிரவன் உதித்து இருளை விரட்டியதால் நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்து மறைந்து விட்டன. பெண், ஆண், மூன்றாம் பாலினத்தார், ஒளி பொருந்திய விண், மண் மற்றும் பல் வேறு பொருள்களானவரும், நம் கண்ணிற்கு இனிமையானவருமாகிய அண்ணாமலையாரின் பாதகமலங்களை துதிக்க இந்த பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீராடலாம் பெண்ணே.

12 comments:

  1. அண்ணாமலையாரின் பெருமை அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    இன்றைய பதினெட்டாவது திருவெம்பாவை பாடலும், அதனுடைய விளக்கங்களும் மிக அருமையாக உள்ளது. இத்தனைச் சிறப்புகள் கொண்ட அண்ணாமலையாரின் அடிப்பற்றி தினமும் தொழுவோம்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  3. திருவெம்பாவை 18ஆம் பாடலும் அதற்கான விளக்கமும் சிறப்பு. எல்லாம் வல்ல ஈசன் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.

    ReplyDelete
  4. பெண், ஆண், மூன்றாம் பாலினத்தார், ஒளி பொருந்திய விண், மண் மற்றும் பல் வேறு பொருள்களானவரும், நம் கண்ணிற்கு இனிமையானவருமாகிய அண்ணாமலையாரின்//

    ரசித்தேன் பானுக்கா. இதில் இறைவன் எல்லாமும் ஆகிறார் என்கிறார் மாணிக்கவாசகர்.

    அதையே நம்மாழ்வார்
    ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
    காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
    பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
    கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

    ன்னு பாடியிருக்கிறார். இருவரும் சொல்வது ஒரே பொருள் ஆனால் அவர் எல்லாமும் நீ என்று பாடுகிறார். இவர் நீ அப்படியும் இல்லை இப்படியுமில்லை. அவரவர் எண்ணப்படி உருவம் தரிக்கிறான். இருக்கிறார் என்றும் சொல்ல முடியலை இல்லை என்றும் சொல்ல முடியவில்லை...அவரைப் பத்தி எடுத்துச் சொல்லிப் பாடறதே கஷ்டமாக இருக்கே..

    எனக்கு மிகவும் பிடித்தவை இரண்டுமே. பிரபஞ்ச சக்தி பரம்பொருள் என்பதற்கான விளக்கத்தை ஏற்கும் வகையில் அமைந்தவவை.

    அருமை பானுக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே பாசுரம் நினைவுக்கு வந்தது.

      Delete
  5. பதிக விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete