கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, January 1, 2022

திருவெம்பாவை - 17

திருவெம்பாவை - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

அழகான கண்களை உடைய திருமால் மீதும்,  திசைக்கு ஒரு முகம் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா மீதும், தேவர்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பை விட அதிகமாக நம் மீது அன்பு வைத்திருப்பவரும், நம் குற்றங்களை களைந்து நம்மை உயர்த்தும் பொருட்டு நம் மனமாகிய வீட்டில் எழுந்தருளி சிவந்த தாமரை மலர்கள் போன்ற தன் பாதங்களை காட்டி நமக்கு சேவை செய்பவரும், அழகான கண்களை உடைய அரசனும், அடியவர்களுக்கு அமுதம் போன்றவரும் நம்முடைய பெருமானுமாகிய சிவபெருமானை பணிந்து நலம் பெறும் பொருட்டு தாமரை மலர்கள் பூத்திருக்கும் அழகிய இந்த சுனையில் நீராடலாம் வாருங்கள்.

8 comments:

  1. பானுக்கா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! சுபா குடும்பத்திற்கும், மகன் குடும்பத்திற்கும் சொல்லிடுங்க. குழந்தைகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  2. அழகான கண்களை உடைய திருமால் மீதும், திசைக்கு ஒரு முகம் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா மீதும், தேவர்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பை விட அதிகமாக நம் மீது அன்பு வைத்திருப்பவரும், நம் குற்றங்களை களைந்து நம்மை உயர்த்தும் பொருட்டு நம் மனமாகிய வீட்டில் எழுந்தருளி//

    அழகான பாடல் விளக்க வரிகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. திருவாசகத்தின் அழகிற்கு என்ன குறை?

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பாடல் வரிகளும் விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete