கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 26, 2021

திருவெம்பாவை - 11

திருவெம்பாவை - 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல சிவந்த நிறம் கொண்டவரே, திருநீற்றிலேயே குளித்தது போல உடலெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பவரே, சிறுத்த இடையும், பெரிய கண்களும் கொண்ட பார்வதியின் மணாளனே,  வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் நீராடி, வழி வழியாக உன்னை வழிபடுவதால் நாங்கள் நலமாக வாழ்கிறோம். பக்தர்களை ஆட்கொண்டு அருளும் உன் திருவிளையியாடலுக்கு ஆட்பட்டதால் பல நன்மைகளை அடைந்தோம். இதிலிருந்து குறையாமல் எங்களை காப்பாயாக. 

11 comments:

  1. ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெறுவோமே..  எங்கள் ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே..

    ReplyDelete
  2. கையால் குடைந்து குடைந்து! என்பதற்காகக் கிட்டத்தட்ட ஒரு பக்கம் விளக்கம் எழுதி இருந்தார் எங்கள் குழும நண்பர் மருத்துவர் சங்கர்குமார் அவர்கள். குழுமம் என்பதால் தேடிக் கண்டு பிடிக்கணும். அருமையான விளக்கம். நினைவில் வரும்போது பகிர்கிறேன். அருமையான பதிகத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 'குறையொன்றுமில்லை' புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் விஸ்வம் என்னும் ஒரு பெயருக்கான விளக்கம் கொடுத்திருப்பார் முக்கூர்.
      அலகிலா விளையாட்டுடையான் என்னும் ஒரு பதத்திற்கு கம்பன் கழகத்தில் இரண்டு மணிநேரம் விளக்கம் கொடுத்ததாக சுகி சிவம் கூறினார். அதெல்லாம் வேற லெவல். நான் கத்துக்குட்டி. நீங்கள் ரசித்ததை பகிருங்கள் நானும் ரசிக்கிறேன். நன்றி.

      Delete
    2. அருமையான விளக்கம். நினைவில் வரும்போது பகிர்கிறேன்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவையின் அழகான பாடலும், அதன் தெளிவான விளக்கமும் நன்றாக உள்ளது. சிவ தியானம் என் சிந்தையில் தவறாது நீடித்து இருக்கவும் வேண்டிக் கொள்கிறேன். ஓம் நமசிவாய. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. பாடலும் விளக்கமும் சிறப்பு.

    கீதா

    ReplyDelete