கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 30, 2021

திருவெம்பாவை - 15

திருவெம்பாவை - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல் குளத்தில் நீராடும் பெண்கள் தங்கள் தோழி ஒருத்தியின் பக்தியைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக  விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.

அழகிய ஆபரணங்கள் பூண்டிருக்கும் கொங்கைகளை உடைய பெண்களே, அதோ அங்கே வரும் நம் தோழி சிவபெருமானின் நினைவிலேயே வாழ்பவள். ஒரு முறை சிவனே என்பாள். மீண்டும் மீண்டும் பல முறைகள் எம்பெருமான் எம்பெருமான் என்றே மன மகிழ்ச்சியோடு கண்களில் நீர் வழிய உணர்ச்சி வசப்பட்டு பிச்சியைப் போல பிதற்றுவாள். இவ்வுலகை மறந்து பூமியில் கால் பாவாமல் பேரின்பப் பெருவெளியில் மிதப்பாள். அந்தப் பெண்ணை ஆட்கொண்டு இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய வித்தகனாகிய சிவபெருமானின் திருவடிகளை நாமும் பாடி அழகான இந்தப் பொய்கையில் நீராடலாம் வாருங்கள்.

13 comments:

  1. விளக்கம் நன்று. ரசித்தேன்.

    ReplyDelete
  2. விளக்கமின்றி பொருளைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன்..அருமையான விளக்கம் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.//

    ஒப்பீடு சூப்பர். ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete
  4. நாமும் சொல்லி மகிழ்வோம். அருள் பெறுவோம்.

    துளசிதரன்

    ReplyDelete