கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏


28 comments:

  1. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு //

    ஹாஹாஹாஹா சந்தடி சாக்குல அப்படியே சாப்பிட்ட மெனுவும் சொல்லிட்டீங்க!!!! யும்மி!!! மெனு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அன்றைய மெனு அமர்க்களமாக இருந்திருக்க வேண்டும்.  அதுதான் நான்கைந்து வருடங்கள் கழித்தும் நன்றாய் நினைவில் இருக்கிறது போல...!

      Delete
  2. "படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? //

    பல சமயங்களில் நாம் நினைப்பது அதாவது இப்படி நினைப்பது நடந்துவிடுகிறது.

    நான் என் அனுபவங்களைக் கவனித்த வகையில் ஏதேனும் நல்ல விஷயம் நடக்கத் தொடர்ந்து நினைத்தாலோ அல்லது ப்ரேயரின் போது இப்படி டக்கென்று நினைத்தாலோ பெரும்பாலும் நடப்பதில்லை என்றாலும் அட்லீஸ்ட் ஓரிரு தடவையேனும் நடக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏதேனும் நம்மை அறியாமலேயே, அல்லது ஏதேச்சையாக நினைத்துவிட்டால் அது பெரும்பாலும் நடக்கிறது!!! Statitics probablity is more!!!! சமீபத்தில் நடந்தது. அதையும் நான் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு கடக்க வேண்டியதானது!

    கீதா

    ReplyDelete
  3. சேச்சே..   ஆஞ்சி அப்படி எல்லாம் கோபப்பட மாட்டார்.  உங்கள் கவனக்குறைவு அவ்வளவுதான்.  இப்போதும் அந்த கைப்பையில் அதன் பக்கச்சுவர்களுக்குள் கைகளால் அழுத்தி, துழாவிப் பாருங்கள்.  காசு என்பதால் சில சமயம் சிறு துளை வழியாக அதன் சுவர்களுக்குள் புகுந்து பத்திரமாக அங்கேயே (மாட்டிக்கொண்டு) இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. காசு தனியாக வைக்கவில்லை, குட்டி ziplock bagல் அல்லவா வைத்திருந்தேன்.

      Delete
  4. ஆட்சி எங்கு செல்ல வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. கெஜரிவால் தான் ஹனுமான் சாலீசா பாடுகிறார்.

      Delete
    2. நீங்கள் பேசிக் கொள்வது எதுவும் எனக்கு புரியவில்லை கில்லர்ஜி &JK Sir. Anyway thanks.

      Delete
    3. ஆஞ்சி என்பது ஆட்சி என்றாகி விட்டது மன்னிக்கவும்.

      Delete
  5. கவனக்குறைவு. உங்களிடமே தான் அவர் இருப்பார். நன்கு கவனித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  6. தேடுங்கள்..தேடிப் பாருங்கள்..
    அவர் எதிர் வந்து நிற்பார்..

    ReplyDelete
    Replies
    1. தேடிக் கொண்டே இருக்கிறேன்.

      Delete
  7. ஸ்ரீ ராம்.. ஜெய ராம் ..
    ஜெய ஜெய ராம்..

    ஸ்ரீ ராம்.. ஜெய ராம் ..
    ஜெய ஜெய ராம்..

    ReplyDelete
    Replies
    1. என்னது. திங்கள் செவ்வாய் நன்றிக்கடனா ஸ்ரீராமிற்கு? 

      Delete
    2. ஆஹா..  ஸார்...   அவர் சொல்வது லார்ட் ஸ்ரீராமை!  ஆஞ்சியின் பாஸை!

      Delete
    3. @துரை செல்வராஜு சார்: _/\_ _/\_

      Delete
  8. வணக்கம் சகோதரி

    சில நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தை தந்தபடி கடந்து போகும். அதுவும் தெய்வ சம்பவங்கள் எனும் போது மனதில் சலனத்தையும் தந்து விடும்.

    /படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? /

    இந்த வரிகளை படித்ததும் உடம்பு சிலிர்த்து விட்டது. இப்படித்தான் நானும் சில சமயம் அஞ்ஞானமாய் கடவுளிடம் நேரடியாக பேசிய மாதிரி பேசும் போதும், பின் அதுவே கண்ணெதிரே நடக்கக் காணும் போதும், அவர் நாம் வேண்டியதை தந்து விட்டாரோ என மனமும் கலக்கமடைந்து விடும். அதன்பின் இதுவும் அவன் செயல்தான் என்ற எண்ணம் வந்து சமாதானப்படுத்திக் கொள்வேன். ஆனால் நீங்கள் இப்படி கலக்கமுறுவது தீடிரென ஆஞ்சநேயருக்கு தோன்றினால் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதே வெள்ளிக் காசிலேயோ வேறு ரூபத்திலேயோ உங்களிடம் கண்டிப்பாக வந்து சேருவார். இதுவும் அவரின் ஒரு விளையாடல்தான். கவலைப்பட வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. நம்மைப் போன்ற குழந்தைகளின் அஞ்ஞானத்தை அகற்றி கடவுள் அருளுவார் என்ற நம்பிக்கைதான் நம்மை செலுத்துகிறது. நன்றி சகோதரி.

    ReplyDelete
  10. நினைவுகள் குறித்த பதிவு நன்று. உங்களிடமே காசு இருக்கக்கூடும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தால் சரி. நன்றி

      Delete
  11. அன்பின் பானுமா,
    நலமுடன் இருங்கள்.

    எல்லோரும் அவரவர் ஆஞ்சனேயரைப் பிரிந்து இங்கே வந்திருக்கிறோம். அவர்தான் பறந்து வந்து காப்பவராச்சே.
    கவலை வேண்டாம் அவர் சாந்த ஸ்வரூபியான ராமனுடைய பக்தர்.

    எப்படியும் உங்களை வந்து சேருவார்.
    உங்கள் சகோதரியே படம் அனுப்பினாலும் அனுப்புவார்.

    ReplyDelete
  12. உங்கள் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன. நன்றி

    ReplyDelete