கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 24, 2022

மசாலா சாட்
ரொம்ப நாட்களாக பார்க்க ஆசைப்பட்ட ராமானுஜன் படத்தை யூ ட்யூபில்  பார்த்தேன்.  ஹூம்! இருந்தாலும் அந்த படத்தை விமர்சிக்க விருப்பம் இல்லை.  

நம் நாட்டில் வாழ்ந்த ஒரு மேதையின்
வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முன் வந்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும். என்றாலும் சில நெருடல்கள். 

ஒரு டாகுமெண்ட்ரி போல எடுக்கப் பட்டிருந்த இந்த படம் தராத ஸ்வாரஸ்யத்தை அவரைப் பற்றிய ஒரு ஆங்கில டாகுமெண்ட்ரி தந்தது.

அந்தக் கால படங்களைப் போல ஆங்கிலேயர்களை கொச்சைத் தமிழில் பேச வைத்திருக்க வேண்டாம்.  

வறுமையில் உழல்வதாக  காட்டப் பட்டிருக்கும் ராமானுஜத்தின் தாயார் (சுஹாசினி) ராமானுஜம் அவர்களின் திருமணத்தின் பொழுது காசு மாலையும், கல் அட்டிகையுமாக காட்சி அளிப்பதும், சில காட்சிகளில்  ஜரிகை வைத்த மாட்சிங் ப்ளவுஸ் அணிந்திருப்பதும் கொஞ்சம் உறுத்துகிறது. பின்னால் இயல்பாக மாறி விடுகிறார். நடிப்பும் இயல்பு. நடித்திருந்த பலரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

ராமானுஜத்தின் குல தெய்வமான நாமகிரித் தாயார் ராமானுஜம், அவருடைய தாயார் இரண்டு பேரின் கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றி அவர் லண்டன் செல்ல உத்தரவு அளித்ததை வெறும் வசனத்தில் கடந்து போகாமல் விஷுவலாக காண்பித்திருக்கலாம், ஏனெனில் அது நிஜமாகவே நடந்த விஷயம். 

கணிதத்தின் பயன்பாடு கட்டிடங்கள் கட்டவும், இயந்திரங்களை படைத்து, இயக்கவும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ராமானுஜம் அவர்களின் நம்பர் தியரி சாலை போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.  நெடுஞ்சாலைகளில் டிராஃபிக் ஜாம் ஏற்படும் பொழுது மாற்று வழி கண்டு பிடிக்க GPSக்கு உதவுகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது. 

******†**********************************


தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு செய்தி வந்தவுடன் இது அவர்களின் சொந்த விஷயம் மற்றவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை கிடையாது என்று சொல்லிக் கொண்டே யூ ட்யூபில் அத்தனை பேரும் இதையே பேசினார்கள். 

ராஜன் என்னும் சினிமா பிரமுகர் சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? என்று கோபித்தார். சிரிப்பு வந்தது. இப்போதெல்லாம் யார் சினிமா நட்சத்திரங்களை முன் மாதிரியாக கொள்கிறார்கள்? யோசித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னாலும் சினிமாக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடையாது.  நம் கில்லர்ஜி போல பலரும் அவர்களை கூத்தாடிகள் என்றே குறிப்பிட்டனர்.

இப்போது சினிமா சண்டைக் காட்சிகள் எவ்வளவு தூரம் நிஜம், எவ்வளவு கிராஃபிக்ஸ் என்பது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். அதனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் நட்சத்திரங்கள் மீது இருந்த பிரமிப்பு இப்போது கிடையாது. மேலும் இப்போது ஊடகங்கள் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை படத்தோடு அம்பலப்படுத்தி விடுவதால் அவர்கள் மீது மரியாதையும் கிடையாது. தவிர முன்னோடியாக கொள்ளக்கூடிய பாத்திரங்களையா இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்? 

அப்போது கட் அவுட் டிற்கு பால் அபிஷேகம் செய்வது என்னவாம் என்கிறீர்களா? அது ஒரு வகை ஏமாற்று.

**********************************************
கீதா ரங்கன் தயவில் 'வெண்ணிலா'வின் ஒரு கதையை படித்தேன். பெண்ணின் விரக தாபத்தை விலாவாரியாக விவரித்திருக்கும் கதை. கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் அசந்தாலும் ஆபாசமாகிவிடும் அபாயம். நேர்மையாகவும், திறமையாகவும் கையாண்டிருக்கிறார். 

நம் சமூகத்தில் பெண் எழுத்தாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு முறை வாசந்தி தன் கதை ஒன்றில்," அவளின் சட்டை பட்டன்களை அவிழ்த்தான்" என்று எழுதியிருந்ததை படித்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அதிர்ந்து போய் "நோ! நோ! ஒரு பெண் எப்படி இப்படி எழுதலாம்?" என்றாராம். அதற்கு வாசந்தி, "சட்டை பட்டனை அவிழ்க்காமல் எப்படி காதல் பண்ணுவீர்கள்?" என்று கேட்டாராம். இவரோ பல விஷயங்களை அனாயசமாக கடந்து சென்றிருக்கிறார்.

அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்கள், "நாங்கள் புடவை கட்டிக் கொள்கிறோம், எங்கள் எழுத்துக்களுக்கு புடவை கட்டி விடாதீர்கள்" என்பார்கள். புடவைக்குப் பின்னால் உணர்வும், மனமும் உண்டு என்பதை நேர்த்தியாக உணர்த்தியிருக்கிறார் வெண்ணிலா. அந்த வகையில் அவரை பாராட்டலாம். 
சுட்டியை இணைத்திருக்கிறேன். கதையை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதன் பின்னூட்டங்களையும் படியுங்கள்.

https://kanali.in/indira-neelam/


36 comments:

 1. ராமானுஜம் திரைப்படத்திற்கான சுட்டி நேற்று வேறு ஒரு குழுவிலும் எனக்கு வந்தது. பார்க்கவில்லை.

  பதிவின் வழி சொன்ன விஷயங்கள் படித்தேன். ரசித்தேன்.

  ReplyDelete
 2. இராமானுஜன் திரைப்படத்தில்...

  //ஜரிகை வைத்த மாட்சிங் ப்ளவுஸ் அணிந்திருப்பது//

  பற்றி குறிப்பிட்டீர்கள் இதுதான் யதார்த்தத்தை மறக்கும் கூத்தாடிகளின் இயல்பு குணம்.

  தனுஷ்-ஐஸ் விவாகரத்து விசயத்தை யாரும் விமர்சிக்க வேண்டாமென்று சொல்லும் தம்பதிகள் ட்விட்டரில் தெரிவிக்க வேண்டிய அவசியமென்ன ?

  லதா நடத்திய பள்ளியில் வேலை செய்த ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் ஒரு வருடமாக சம்பளம் கொடுக்க வில்லையாம் அவர்களின் சாபம்தான் இந்த அலங்கோலம்.

  கோடிகள் சேர்த்து வைத்து என்ன பயன் ? அடுத்த திருமணத்துக்கு ஐநூறு கோடிகள் செலவு செய்வார்கள்.

  ஒரு படத்தில் நடிப்பதற்கு கூத்தாடிகளின் சம்பளம் நூறு கோடி வாங்குவது நியாயமா ? இவ்வளவு சம்பளம் பெறுவதற்கு வழி வகுத்து கொடுத்தவர்கள் யார் ?

  கைவண்டி இழுப்பவர்களிடம் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசும், அரசியல்வாதிகளிடம் ஆயிரம் ரூபாய்க்கு தன்மானத்தை ஐந்து வருடங்களுக்கு அடகு வைக்கும் பாமரர்களே...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கில்லர்ஜி ஊருக்கு பறையறிவிக்க வேண்டியது, பின்னர் எங்கள் சொந்த விஷயம் என்று சீற வேண்டியது.

   Delete
 3. கல்யாணத்தின்போது சுஹாசினி அதுதான் ராமானுஜம் அம்மா வேறு யாரோட ட்ரெஸ்ஸையாவது வாங்கிப் போட்டிருப்பங்களோ....!

  ReplyDelete
  Replies
  1. //கல்யாணத்தின்போது சுஹாசினி அதுதான் ராமானுஜம் அம்மா வேறு யாரோட ட்ரெஸ்ஸையாவது வாங்கி ப் போட்டிருப்பாங்களோ?// இருக்கலாம். அந்த காலத்தில் அப்படிப்பட்ட பழக்கங்கள் உண்டு.

   Delete
 4. // ராமானுஜம், அவருடைய தாயார் இரண்டு பேரின் கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றி அவர்கள்  குல தெய்வமான நாமகிரித் தாயார் ராமானுஜம்  லண்டன் செல்ல உத்தரவு அளித்ததை...//

  இந்த வார்த்தையை இப்படி மாற்றியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது!

  ReplyDelete
 5. சினிமாக்காரர்கள் என்பதை விட்டுப் பார்த்தால் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்த ஒரு ஜோடி சட்டென பிரிவது என்ன காரணம் என்று யோசிக்க வைக்கிறது. இதில் சௌந்தர்யா தனுஷை விட ஒரு வயது பெரியவர்.  அவரும் திருமணத்துக்கு முன் வேறு ஒருவருடன் கிசுகிசுக்க பட்டவர்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம் புதுசா யார் யாருக்கோ லிங்க் போடுகிறார்.

   Delete
  2. ஸ்ரீராம் 18 என்ன 20 25 வருடங்கள் கழிந்தும் கூடப் பிரிவதுண்டு. நான் இவர்களைப் பற்றிப் பேசவில்லை. சாதாரணமாகவே சொல்கிறேன். உளவியல் ரீதியாக பல நான் பார்த்த வகையில்....பெண்களின் ரசாயனம் வேறு ஆண்களின் ரசாயனம் வேறு அது இயற்கை சார்ந்த் படைப்பின் விஷயம். பொதுவாகவே பெண்களின் நுண்ணுணர்வுகள் 40 வயதை நெருங்கும் சமயத்தில் அல்லது அதற்கு மேலாகத்தான் எழுகிறது. எனக்கு டோட்டல் ஹிஸ்ட்ரெக்டமி அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் எனக்கு நிறைய சொன்னார்.

   இதைக் குறித்தும் நான் ஒரு கதையாக எழுதி வழக்கம் போல் பாதியில் இருக்கிறது. தயக்கம் தான் காரணம். ஏனென்றால் பானு அக்கா சொல்லியிருக்கும் விஷயம்தான். பெண்கள் சில விஷயங்களைப் பேசினால் அது தவறாகப் பார்க்கப்படுகிறது.

   கீதா

   Delete
  3. சௌந்தர்யாவா தனுஷை மணந்திருக்கார்? ஐஸ்வர்யா இல்லையோ? ஶ்ரீராம் குழப்பி விட்டார். முதல் காதல் பிரச்னையானதால் தானே அவசரமாக தனுஷை மணக்க நேர்ந்தது என்பார்கள்?

   Delete
  4. ஆமாம், பெயரை மாற்றிக் குழப்பி விட்டேன்!

   Delete
  5. ஓ...   அந்தக் கதை மறந்து விட்டதா நெல்லை?!  இது சம்பந்தமாய் அவர்கள் நடித்த படங்களிலேயே  சில வரிகள் சேர்த்துக் கொண்டார்கள்!

   Delete
  6. ஐஸ்வர்யா தனுஷை விட நான்கைந்து வருடங்கள் பெரியவர். சிம்புவோடு கிசுகிசுக்கப் பட்டார்.

   Delete
 6. ராமானுஜன் பட லிங்க் எனக்கும் வந்தது.
  நிறைய விவரங்கள் தெரிய வருகின்றன.

  சில புதியவை. படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியதே
  அருமை தான்.
  சில பல கட்டுக்குள் ,நஷ்டம் வராமல் எடுக்க வேண்டுமே.

  ReplyDelete
  Replies
  1. ராமானுஜன் நானும் முன்னரே பார்த்தேன். அவ்வளவா ரசிக்கலை. அ.வெண்ணிலாவின் "இந்திர நீலம்" சிறுகதைச் சுட்டி பரிவை குமார் மூலம் சில மாதங்கள் முன்னர் எனக்கும் கிடைத்துப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். ஆனால் அது பற்றி விமரிசித்தால் சரியாக வராது என்று தோன்றியது.

   Delete
  2. நம் நாட்டில் வாழ்ந்த ஒரு கணித மேதை, அவரைப் பற்றிய படத்திற்கு அரசாங்கம் வரி விலக்கு அளித்து பள்ளி மாணவ/மாணவியரை பார்க்க வைத்திருக்கலாம். என்ன செய்வது அவர் பிராமணனாக பிறந்து விட்டாரே..?

   Delete
 7. வெண்ணிலா கதை லிங்க் முடிந்தால் பார்க்கிறேன்.
  தனி துணிச்சல் வேண்டும் இது போலக் கதை எழுத.

  இதில் பெண் ஆண் என்று ஏன் பேதப் படுத்துகிறார்களோ.

  ஒரு வேளை
  பெண்கள் ஆண் பெயர் வைத்துக் கொள்ள வேண்டுமோ
  என்னவோ:)

  ReplyDelete
  Replies
  1. லிங்க் பதிவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறதே... அது இல்லையா?

   Delete
  2. இந்திர நீலம் என்று கூகிளில் தட்டச்சு செய்யுங்கள். அல்லது அ.வெண்ணிலா எனத் தட்டச்சுங்கள். வந்துடும்.

   Delete
  3. @ வல்லி சிம்ஹன்: படித்துப் பாருங்கள். நம்மாலெல்லாம் இப்படி எழுத முடியாது. //தனி துணிச்சல் வேண்டும் இது போலக் கதை எழுத// துணிச்சல் மட்டுமல்ல, திறமையும் வேண்டும். மத்யமரில் சிலர் எழுதுவதை படித்தாலே என்ன இதையெல்லாம் எழுதுகிறார்கள் என்று வியப்பாக இருக்கும்.

   Delete
 8. பானுக்கா ராமானுஜம் படத்தின் விமர்சனம் அருமை. நான் ஏதோ ஒரு சமயத்தில் பார்த்த ஒரு காட்சியில் அவரின் தாயார் (சுஹாசினி) பட்டுப்புடவை ஜரிகை வைத்த ப்ளௌஸ் கஃப் கை, நகைகள் என்று வருவதை மட்டுமே பார்த்தேன் அப்போதே தெரிந்தது யதார்த்தம் மீறிய காட்சி என்று. ஆனால் அதன் பின் படம் பார்க்கவில்லை. பார்க்க நினைத்திருந்த படம் ஆனால் பார்க்க முடியவில்லை. தருணம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

  கீதா

  ReplyDelete
 9. அக்கா வெண்ணிலாவின் கதை யைப் பற்றிய உங்கள் விமர்ச்னம் சிறப்பு என்பதோடு தைரியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் பிடித்திருந்தது. உளவியல் இதில் நிறைய உள்ளது. நான் உளவியல் ரீதியாக நிறைய வாசித்திருப்பதாலும், பெண்களின் உளவியலை நிறைய கேஸ்கள் கண்டிருப்பதாலும் புரிந்து கொள்ள முடிந்தது. வெண்ணிலா கத்தி மேல் நடந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார். நீங்கள் சொல்லியிருப்பது போல் அந்தப்பக்கம் கொஞ்சம் சரிந்திருந்தாலும் வேறு மாதிரி வந்திருக்கும்.

  பெண்ணின் அந்தரங்க உணர்வுகளுக்கும் ஆணின் அந்தரங்க உணர்வுகளுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. இது தனி உளவியல்.

  பெண்களின் மெனோபாஸ் படுத்துவதில் சிலருக்கு ஹிஸ்டீரியா...அடக்கிவைக்கும் உணர்வுகள் பீரிடும் பருவம் அது. அதற்கு ஒரு காரணம் வெண்ணிலா அவர்களின் கதையில் சொல்லப்பட்ட மையக்கரு. மிக மிக இயற்கை சார்ந்த விஷயம் இது. ரசாயன்மாற்றம். ஆனால் அது வெளியில் பேசப்படுவதில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணம் தான். பெண்கள் பேசக் கூடாது கதையில் கூட எழுதினால் அது ஆபாசம். ஆனால் ஆண்கள் அதைப் பற்றி பேசலாம்!!! வெளிப்படையாகவே கூடப் பேசலாம். தங்கள் உணர்வுகள் உட்பட!

  வெண்ணிலா அவர்களின் 8 கதைகள் - பெண்களின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் இப்படியான கதைகளின் தொகுப்புதான் இந்திர நீலம். எனக்கு இக்கதையை மட்டும் அனுப்பியவர் நம் பரிவை சே குமார். அப்போது வாட்சப் தொடர்பு இருந்த்தால் அவர் அனுப்பிய கதை. ஒரு முன்னுரை கொடுத்துதான் அனுப்பியிருந்தார். தனக்குப் பிடித்திருந்தது என்றும் பெண்ணாகிய உங்களுக்கு ஒரு வேளை அது கொஞ்சம் அப்படியும் இப்படியுமோ என்று தோன்ற வைக்கலாம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் வாசித்துப் பாருங்கள் என்று. அப்படித்தான் நான் வாசித்து ஒரு வருடம் மேலான கதை ஆனால் எனக்கு அதைப் பற்றிப் பேசத் தயக்கம். காரணம் நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணம் தான்.

  நீங்கள் தைரியமாகச் சொன்னதற்குப் பாராட்டுகள் அக்கா.

  கீதா

  ReplyDelete
 10. நான் ஒரு கதை எழுதி வைத்து அதை வெளியிடத் தயக்கம் இருந்ததால்தான் உங்களுக்கு வெண்னிலா அவர்களின் கதையையும் நான் எழுதிய கதையை அப்புறமும் அனுப்பியிருந்தேன். நீங்கள் என் கதையை "நாசுக்கான எக்செலன்ட் ப்ரெசென்டேஷன்" என்று பாராட்டியிருந்தாலும் எனக்கு இன்னமும் தயக்கமாகத்தான் இருக்கிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், மீள் வருகைக்கும் நன்றி கீதா.‌

   Delete
 11. நல்ல விபரமான பதிவுக்கு நன்றி,

  ReplyDelete
 12. இருக்கும் போது அருமை தெரியாமல்...

  ம்... மதம், மனிதத்தின் சீரழிவு...

  ReplyDelete
 13. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. இன்று தந்திருக்கும் மசாலா சாட் அனைத்துமே. புதிது.. (ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு விஷயம் தவிர்த்து. ) படம் இன்னமும் பார்க்கவில்லை. கதையும் வாசித்துப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 14. இராமானுஜம் திரைப் படத்தைப் பற்றிய செய்திகள் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டுகின்றன..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி. ராமானுஜம் பற்றிய டாகுமெண்ட்ரியும் பாருங்கள்.

   Delete
 15. இது பொருந்தாத ஜோடி என்று அப்போதே பேசிக் கொண்டார்கள்..

  நமக்கென்ன வந்தது?..

  ReplyDelete
  Replies
  1. மீடியாக்களுக்கு தீனி கிடைத்தது. எல்லாமே விளம்பரம்.

   Delete
 16. Buy Fusion Titanium for sale online for $39.99 | TITanium Arts
  The Fusion titanium core will titanium dioxide sunscreen allow you to enjoy the authentic SEGA Fusion engine from M2. This titanium dog teeth implants core provides a perfect fit snow peak titanium spork for goyangfc your gaming console, where can i buy titanium trim

  ReplyDelete