ஒடிஷா யாத்திரை
ஸ்மார்ட்
வாட்ச்சை காணோம்..:
இந்தியாவிற்குள் பார்த்தே ஆக வேண்டும்
என்று நான் விரும்பும் சில இடங்களுள் ஓடிசாவில் உள்ள கோனார்க் சன் டெம்பிளும் ஒன்று.
என் உறவிலும், நட்பிலும் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை.
அந்த சமயத்தில்தான் பெங்களூர் மத்யமர் மீட் ஒன்றில் சந்தித்த சரோஜா அருணாசலம் அவர்கள்
தான் டூர் ஆபரேட்டர் மூலம் தனியாக சுற்றுலாக்கள் செல்வதாகவும், அவை சிறப்பாக நடத்தப்படும்
என்றும், அங்கு வருபவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்றும் கூறியது சற்று தைரியம்
தந்தது. அந்த சமயத்தில் முகநூலில் வந்த யாத்ரிகா டூர்(ஆபரேட்டர்கள்) விளம்பரம் என்னைக்
கவர அவர்களொடு தொடர்பு கொண்டு ஒடிஷா சுற்றுலாவிர்கு புக் பண்ணிக் கொண்டேன்.
சென்னை விமான நிலையத்தில் |
எங்கே போயிருக்கும்? கொஞ்சம் பதட்டமாக இருந்தது. மிக சமீபத்தில் என் மகன் வாங்கித் தந்திருந்த வாட்ச். அங்கிருந்த பணியாளரிடம் தெரிவித்த பொழுது, “நீங்கள் வைத்த டிரேயில்தான் இருக்கும், சரியாக பாருங்கள்” என்றார். அந்த டிரேயைத் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கு மேல் பல டிரேகள் வந்து விட்டன.
கம்ப்யூட்டர் திரையில் ஸ்கேன் செய்யப்படும் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கூரியதும், அவர் செக் செய்து விட்டு, “வாட்ச் உங்கள் கைப்பையில்தான் இருக்கிறது, சரியாகப் பாருங்கள்” என்றார். “ஐயா, இது வேறு கடிகாரம், நான் தேடுவது ஸ்மார்ட் வாட்ச்” என்றதும், என்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒருவர் என்னை அழைத்து, “மேடம், உங்கள் வாட்ச் அந்த் டிரேயில்தான் இருந்திருக்கிறது, நீங்கள் சரியாக பார்க்கவில்லை, வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, எக்ஸ்-ரே மிஷினிலிருந்து வெளியே வந்த ஒரு டிரேயில் இருந்த என் ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கொடுத்து விட்டு, “சிலர் பதட்டத்தில் லாப் டாப்பைக் கூட விட்டு விட்டு சென்று விடுவார்கள்” என்றார்.
பிஜுபட்னாயக் விமான நிலையத்தில் ஆஞ்சனேயர்(மணல் சிற்பம்) |
உள்ளே சென்று அமர்ந்து ட்ரவலர்ஸ் கொடுத்திருந்த இட்லி, ஃப்லாக்ஸ் சீட்ஸ் சத்துரண்டை இவற்றை மட்டும் சாப்பிட்டேன். கம்பு புட்டை விமானத்தில் சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமானத்தில் தூங்கி விட்டதால் சாப்பிட முடியவில்லை. உணவிற்குப் பிறகு காபி சாப்பிடலாம் என்று தோன்றியது. அங்கிருந்த காஃபிடேயில் ஒரு காபி 280 ரூபாய் என்றாள் அங்கிருந்த பெண். சீ! சீ! இந்தக் காபி கசக்கும் என்று திரும்பி விட்டோம். விமானத்தில் பேப்பர் படித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். குறித்த நேரத்திற்கு சற்று முன்பாகவே பிஜுபட்னாயக் விமான நிலயத்தை அடைந்தது எங்கள் விமானம். பெட்டி வருவதற்குள் அங்கு மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் முன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். வெளியே எங்களை வரவேற்ற அந்த ஊர் கைட் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் ஒரு அழகான முத்துமாலை கொடுத்து, அடையாளத்திற்காக அதை வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ள வேண்டும் என்றார். நான் மட்டுமே அதை கடை பிடித்தேன். மற்றவர்கள் ஒரு நாள் மட்டுமே அணிந்து கொண்டார்கள்.
ட்ராவலர்ஸ் கொடுத்த முத்து மாலை |
- தொடரும்
அடடே... பயணக்கட்டுரையா? தொடருங்கள். நல்ல புகைப் படங்களுடன் சுவாரஸ்யமான விவரங்கள் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்.
ReplyDeleteதொடர்கிறேன்.
Deleteஇப்படி ஒரு குழுவில் நாம் மட்டும் தனி என்றால் நான் செல்வேனா என்று யோசித்துப் பார்த்தேன். ஊ..ஹூம்! என்னதான் பழகினால் எல்லோரும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்றாலும் தெரிந்த யாராவது ஒருவரையாவது கோர்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். அக்கா.. நீங்க கிரேட்!
ReplyDeleteநீங்கள் கூட தனியாக செல்ல மாட்டீர்களா? பெண்களுக்குத்தான் இப்படிபட்ட தய்க்கங்கள் இருக்கும். நான் ஆண்களைப் பார்த்து பொறாமைப் படும் விஷய்ங்களுள் தனியாக எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்னும் சௌகரியம் குறித்தும் ஒன்று. நீங்களானால் இப்படி சொல்கிறீர்களே?
Deleteதய்க்கங்கள் - தயக்கங்கள், விஷய்ங்களுள் - விஷயங்களுள்
Delete250 ரூபாய் கொடுத்தாலும் அந்த காஃபி, காஃபி போல இருக்காது! என் அனுபவம்! நல்லவேளை தப்பித்தீர்கள்! உடன் வந்தவர்கள் யாவரும் தமிழர்களா, இல்லை மற்றவர்களும் உண்டா?
ReplyDeleteஎல்லோரும் தமிழர்கள்தான். அந்த விவரங்கள் பின்னர் தருவதாக இருக்கிறேன்.
Deleteதிக் திக் அனுபவத்துடன் பயணம் அருமை...
ReplyDeleteநன்றி
Deleteஒடிஷாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதப் போகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கேன். ஆரம்பமே ஸ்மார்ட்டாக ஆரம்பித்துள்ளது. குழுவின் பெயர், அவங்க ஒருங்கிணைப்பாளர்கள் பெயர், எவ்வளவு பணம் சாப்பாடெல்லாம் நன்றாகக் கொடுத்தார்களா? தங்குமிடம் வசதியாக இருந்ததா? எல்லாமும் விபரமாக எழுதுங்கள்.
ReplyDeleteஎழுதுகிறேன். நன்றி.
Deleteபயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது. படங்கள் அருமை.
ReplyDeleteதொடர்கிறேன். கடிகாரம் கிடைத்தது மகிழ்ச்சி.
நன்றி.
Deleteஆரம்பம் அமர்க்களம்! நானும் உங்கள் கட்சிதான். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் இப்படித் தனியாகக் கிளம்பிவிடுவேன்!!! நமக்கு வேண்டியது சுற்றிப் பார்த்தல்.
ReplyDeleteஇப்படி ஒருங்கிணைப்பாளர் வழி சுற்றுப் பயணம் எனும் போது ஒரே ஒரு விஷயம், அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்கள் மட்டுமே காண முடியும்.
என்றாலும் பயணம் பயணமே! பயணம் பிடித்த விஷயம் எனக்கு!
ஸ்மார்ட் வாட்ச் என்று இருக்க வேண்டிய ஒரு இடத்தில் மட்டும் ஸ்மார்ட் ஃபோன் என்று இருக்கு பானுக்கா...
கீதா
//ஸ்மார்ட் வாட்ச் என்று இருக்க வேண்டிய ஒரு இடத்தில் மட்டும் ஸ்மார்ட் ஃபோன் என்று இருக்கு// அப்படியா? திருத்துகிறேன். நன்றி
Deleteநானும் பார்க்க விரும்பும் இடம் இந்த சன் டெம்பிள்! வெங்கஜி யும் அவர் போய் வந்தது பற்றி எழுதியிருந்தார்.
ReplyDeleteவிமான நிலையத்தில் இருக்கும் மணல் சிற்பம் ஆஞ்சு வாவ்!!! இப்பல்லாம் விமான நிலையமே ஒரு சுற்றுலாத் தலமாகிவிடும் என்று தோன்றுகிறது!! அந்த அளவிற்கு அழகுபடுத்துகிறார்கள். இந்தச் சிற்பம் வெளியில் சுற்றுலாத்தலத்தில் இருப்பது போல் இருக்கு! சூப்பர்!
கீதா
காஃபி ச்சீ ச்சீ கசக்கும்! ஹாஹாஹாஹா ஆமாம் உண்மையாகவே நன்றாக இருக்காது! நல்ல வேளை வாங்கலை நீங்க.
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை வாசிக்க ஆர்வத்துடன் தொடர்கிறேன்.
கீதா
முத்துமாலை welcome gift என்று நினைத்தேன்...அடையாளமாகவா அப்ப திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் இல்லையா? நீங்க மட்டும் அணிந்துகொண்டது மிகச் சிறந்த விஷயம். உண்மையாகவே குழுவாகச் செல்லும் போது அவர்கள் சொல்லும் இப்படியான விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
ReplyDeleteகீதா
வெல்கம் கிஃப்ட்தான். திருப்பி கேட்கவில்லை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. பயண விபரங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். தனியாக பயணத்தில் கலந்து கொள்ளும் உங்கள் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள். என்னால் இந்த மாதிரியெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
மணற்சிற்பத்துடன், ஆஞ்சநேயரும், அவரருகில் தாங்களுமாக, படங்கள் அழகாக இருக்கின்றன. முத்து மாலை படம் நன்றாக உள்ளது. நல் முத்தா? பயணத்தில் சேர்ந்து சென்று வந்தமைக்காக அந்த மாலை தங்களுக்கே பயண முடிவில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
பயண விபரம் குறித்த அடுத்தப் பகிர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் எங்கே தனியாகச் சென்றேன்? என்னோடு இன்னும் முப்பது பேர்கள் வந்தார்களே..:)) தொடர்ந்து வாருங்கள். நன்றி
Delete