நாயகன்
இப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொலைகாட்சியில் மீண்டும் 'நாயகன்' திரைப்படம் பார்த்து முடித்தேன் Oh my God! What a movie! என்ன ஒரு திரைக்கதை, எத்தனை சிறப்பான பவர்ஃபுல்லான வசனங்கள், அருமையான நடிப்பு, இசை.. சொல்லவே வேண்டாம் இளையராஜாவின் இசை குறிப்பாக பின்ணனி இசை இந்த படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.
கமலஹாசனின் திரை உலக வாழ்க்கையை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று பிரிக்கலாம் என்று சொல்வார்கள். பிரமாதமாக நடித்திருக்கிறார். மகன் இறந்து விட்டான் என்னும் செய்தியை அவர் அறிந்து கொள்ளும் அந்த காட்சி.. "என்ன ஆச்சு? யாருக்காவது அடி பட்டு விட்டதா?" என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வருவார் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் கோலி என்பவர், "மை சன் இஸ் யுவர் சன்" என்றதும் ஏதோ புரிய எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பாரே? அப்பா! அதற்குப் பிறகு அந்த நடை.. ஓ மை காட் !
அதே போல அவருடைய நண்பன் செல்வாவை கைது
செய்து அழைத்துச் சென்றிருப்பது தன் மகளின் கணவன் தான் என்பது தெரியாமல் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று நினைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று அங்கே புகைப்படத்தில் தன் மகளோடு அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் இருக்கும் போட்டோவை பார்த்து அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன்.. அங்கே அந்த குழந்தையின் குரலை கேட்ட பிறகு ஒரு முறை பார்க்கிறேன் என்று வசனம் இல்லாமல் அவர் மகளிடம் கண்களால் இறைஞ்சும் அந்த காட்சி... ப்பா! என்ன நடிகன்! செல்வா ரோலுக்கு ஜனகராஜ் தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை. Krithika was brilliant!
வேலு நாயக்கர் நீலாவை(சரண்யா) மணந்து கொள்ளும் காட்சியும், அவருடைய மகன் அவரை மிமிக் பண்ணும் விளையாட்டு காட்சியும் ரசனையான கவிதைகள்!
"அந்தி மழை மேகம்.." பாடல் தேவையில்லை என்று தோன்றுகிறது ஆனால் துணை நடிகைகளின் பருத்த தொடைகள் வியாபாரத்திற்கு
உதவுமோ என்னவோ?
போலீஸ் கமிஷனரே வேலு நாயக்கரிடம் உதவி கேட்டு வருகிறார் என்பது கொஞ்சம் ஓவர்தான்.
விபச்சார விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை அத்தனை சுளுவாக திருமணம் செய்து கொண்டு விட முடியுமா என்னும் கேள்வியும் எழும்புகிறது?
படம் முழுவதும் கமல்ஹாசன் தான் ஆனால் உறுத்தவில்லை இந்த படத்தை பார்க்கும் பொழுது தேவையில்லாமல் 'தக் லைஃப்' நினைவிற்கு வந்து தொலைகிறதே?

கமல் நடிப்பை பொறுத்தவரை ராட்சத ஹாசன். மகா கலைஞன். அரசியலில்தான் கடுப்பேற்றுகிறார். அவருக்கு அரசியல் தேவை இல்லாத ஒன்று. தன் மதிப்பை தானே இறக்கிக் கொள்கிறார்.
ReplyDeleteஅதே, ஸ்ரீராம்... கமலுக்கு அரசியல் தேவையே இல்லை. சமூக அக்கறை இருந்தால் அதை தனிப்பட்ட ரீதியாகச் செய்யலாம். அரசியல் தேவையே இல்லை அதற்கு.
Deleteகீதா
பாம்பே வரதராஜ முதலியார் கதை நாயகன். போலீஸ் கமிஷனர் வந்து உதவி கேட்கும் நிலை நிஜமாகவே நடந்ததாம். ஆனால் விபச்சார விடுதியிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்பது கற்பனையாக இருக்கலாம். ஒரேயடியாக காபி அடித்து விட்டார்கள் என்றும் சொல்லக் கூடாதே...
ReplyDeleteஇளையராஜாவைப் பற்றி சொல்லவும் வேண்டுமா... கமலும் சரி, இளையராஜாவும் சரி... இந்த ஜானரில் இப்படி அசத்தி இருப்பார்கள் என்றால் மைக்கேல் மதனகாமராஜனில் வேறு ஜானரில் அசத்தி இருப்பார்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நாயகன் பட விமர்சனம் அருமையாக தந்துள்ளீர்கள். இந்தப்படத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளேன். கமல் நடிப்பு எப்போதுமே அருமையாகத்தான் இருக்கும். இப்போது உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் மற்றொரு முறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அக்கா, கார்த்திகா கமல் மகளாக நடித்திருப்பவரின் பெயர்.
ReplyDeleteகமலின் நடிப்பைச் சொல்லணுமா? அவர் ராட்சசன் தான்.
இந்தப் படம் நான் முழுசும் பார்த்ததில்லை. அப்பப்ப சில சீன்கள்.
அதில் நீங்க குறிப்பிட்டிருக்கும் அந்த சீன் பார்த்திருக்கிறேன் அசாத்தியமான சீன்.
கீதா
போலீஸ் கமிஷனரே வேலு நாயக்கரிடம் உதவி கேட்டு வருகிறார் என்பது கொஞ்சம் ஓவர்தான்.//
ReplyDeleteஅப்படிச் சொல்ல முடியாதுக்கா. நிஜத்தில் நடக்கிறது. ஒரு சில போலீஸ் ஸ்டோரிகள் யுட்யூபில் கேட்டீங்கனா சிலது புரிய வரும்.
//விபச்சார விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை அத்தனை சுளுவாக திருமணம் செய்து கொண்டு விட முடியுமா என்னும் கேள்வியும் எழும்புகிறது?//
இதுவும் நடக்கிறது. நான் என் மனதில் கற்பனையில் எழுத நினைக்கும் சில கதைகளுக்காக, இது உடான்ஸ் கதை விட்டிருக்கா இதெல்லாம் நடக்காது என்று கமென்ட்ஸ் வர சான்ஸ் உண்டே என்று விஷயங்கள் திரட்டுவதுண்டு. அப்ப காணொளிகள், செய்திகள் பார்க்க முடிகிறது. நாம் நினைச்சுப் பார்க்க முடியாத அளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றன என்பதுதான்.
கீதா