கச்சேரி மாற்றங்கள்
இந்த உலகில் மாறுதல்தான் மாற்றம் இல்லாதது என்பார்கள். எத்தனையோ மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம், குறிப்பாக ஒரு முப்பது வருடங்களாக நடக்கும் மாற்றங்கள் அளவில் மிகப் பெரியதாக இருக்கின்றன.
இப்பொழுது கர்நாடக இசையை எடுத்துக் கொள்வோமே, முன்பெல்லாம் கர்நாடக இசை பாடுகிறவர்கள் சினிமா பாடல்களை பாடவே மாட்டார்கள்.
சினிமா பாடல்கள் பாடுவது என்பது ஏதோ ஒரு தவறான பாடல்கள் பாடுவதைக் போன்ற தவறான செயல் என்பது போல கருதப்பட்டது. ஏன் எங்கள் வீட்டிலேயே கூட சினிமா பாடல் கேட்பதற்கும் சினிமா பாடல் பாடுவதற்கும் தடை உண்டு. ரேடியோவில் சினிமா பாடல்களை சத்தமாக வைத்து கேட்டு விட முடியாது. நாங்கள் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டு பெரியவர்கள் வந்தால், "என்ன டீக்கடை மாதிரி சினிமா பாட்டு? நிறுத்து" என்று அதை நிறுத்தி விடுவார்கள்.
என் மூத்த சகோதரி முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவரும் சரி,அவருடைய தோழிகளும் சரி சினிமா பாடல்களை பாடி நான் கேட்டதே கிடையாது. அவர்கள் சினிமா பாடல்கள் பாடவே மாட்டார்கள் அது ஏன் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை அவர்களுக்கு அந்த பாட்டு பாட வரவில்லையா? அல்லது பாடக்கூடாது என்று அவர்களுடைய ஆசிரியர்கள் கண்டித்தார்களா என்று தெரியாது.
ஆனால் இப்பொழுது பாருங்கள் ரஞ்சனி காயத்ரி என்னும் பிரபல பாடகிகள் பக்காவாக ஒரு கர்நாடக இசை கச்சேரி செய்வது போலவே இளையராஜாவின் சினிமா பாடல்களையே கச்சேரியாக செய்திருக்கிறார்கள். கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது.
ராக ஆலாபனை, ஸ்வரமெல்லாம் பாடி ஒரு மெட்லியாக பாடல்களை அவர்கள் தொகுத்துக் கொடுத்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. அதையும் கர்நாடக இசை கச்சேரிக்கு உடை அணிவது போன்ற அதே முறையில் நல்ல பட்டுப் புடவை கட்டிக்கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு, அதே போல மேடை அமைப்பு வயலின், மிருதங்கம், போன்ற பக்கவாதிகளோடு அவர்கள் அந்த சினிமா பாடல்களை பாடியது மிகவும் ரசிக்கும் படியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது.
'ரங்கபுரவிகாரா.. ' என்னும் பாடலை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் தன்னுடைய அகம் என்னும் Bandல் ஃபியூஷனாக பேண்ட்,சர்ட் அணிந்து கொண்டு பாடி இருந்ததையும் ரசித்தோம்.
இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கொண்டு கர்நாடக இசையை பாடுகிறார்கள் நாம் அந்த பாடலை மட்டும் ரசிக்கிறோம் அவர்கள் உடையை ரசிக்காமல் பாடலை ரசிக்க கற்றுக் கொண்டு விட்டோம்.
சிந்து பைரவி படத்தில் சிவக்குமார் மீசை வைத்துக் கொண்டு நடித்ததை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது பாருங்கள் கர்நாடக இசை பாடும் இளைஞர்கள் நவீனமாக உடை அணிந்து கொண்டு மெல்லிசை பாடகரைப் போல உடை அணிந்து கொண்டு கர்நாடக இசை பாடுகிறார்கள் இதையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்களாகவே நான் கருதுகிறேன். அதற்காக வீம்புக்கு லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்ததை ஏற்க முடியவில்லை.

//வீம்புக்கு லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்ததை ஏற்க முடியவில்லை.//
ReplyDeleteஇறுதியில் சிறப்பாக சொன்னீர்கள்.
கில்லர்ஜி.. மெகசேசே பரிசு அந்த லுங்கி டிரெஸுக்குத்தான்
Deleteவாங்க கில்லர்ஜி, ரொம்ப நாளாச்சு. கருத்துக்கு நன்றி.
Deleteடிசம்பர் வந்து விட்டது. கச்சேரி பதிவும் வந்து விட்டது.கே.பி. சுந்தராம்பாள் அவர்களை கச்சேரியில் சினிமா பாட்டு பாட மாட்டேன் என்று சொல்லி தான் பாட வருவார்கள். ரசிகர்கள் சினிமாவில் அவர்கள் பாடியதை பாட சொன்னால் பாட பாட்டார்கள். இப்போது சில உடை மாற்றங்களை ஏற்று கொள்ள முடியவில்லைதான்.
ReplyDeleteஅதேபோல ஒரு அக்கச்சேரியில் கே பி எஸ் அவர்களை பூம்புகார் பாடல்கள் பாடச்சொல்லி கேட்டபோதும் மறுத்து விட்டாராம், அந்த நிகழ்ச்சிக்கு அமங்கலமான பாடல் பாட மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.
Deleteஜேசுதாஸ் கூட கர்நாடக இசை கச்சேரியில் சினிமா பாடல்கள் பாட மாட்டார்.
Deleteகச்சேரி பதிவு நன்று.
ReplyDeleteஒவ்வொரு ப்ரொஃபஷனுக்கும் அதற்குரிய உடை அலங்காரம் உண்டு.. மாறினால் ரசிக்காதுன்னு நினைக்கிறேன்
உடையையா பார்க்கிறோம் என்ற கேள்வி பொருத்தமில்லைனு நினைக்கிறேன்
அரை டிரௌசர் உடல் முழுக்க பெண்கள் விலங்குகள் டாட்டூக்களுடன் பட்டாச்சார்யரை நினைத்துப்பாருங்கள்
நீங்கள் ரொம்ப அதீதமாக யோசிக்கிறீர்கள் நெல்லை.
Deleteஅட,, சீசனல் பதிவா? டிசம்பர் சங்கீதக் கச்சேரிகள் நேரம் என்பதால் பதிவா?
ReplyDeleteசீசனல் பதிவு இல்லை. நான் மேலே குறிப்பிட்ட ரஞ்சனி,காயத்ரியின் கச்சேரியை நேற்று கேட்டேன், அப்போது தோன்றியதுதான். எழுதியதும்தான் அட, டிசம்பர் மாதம் வந்து விட்டதே என்று தோன்றியது.
Deleteரகா இளையராஜா நிகழ்ச்சி நானும் பார்த்திருக்கிறேன். சென்ற வருட நிகழ்ச்சி அது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteசிவகுமார் மீசையைச் சொன்ன நீங்கள் சலங்கை ஒலியில் கமலின் அக்குள் முடிக்கு வந்த எதிர்ப்பை சொல்ல மறந்து விட்டீர்கள்!
ReplyDeleteசலங்கை ஒலி சுத்தமாக நினைவுக்கு வரவில்லை. அந்த படத்தில் அவர் மீசையோடு நடனமாடியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
Deleteபாடகர் கார்த்திக் ட்ரம்ஸ், கிதார் போன்ற வாத்தியங்கள் வைத்துக்கொண்டு கர்னாடக இசைப்பாடல்கள் கச்சேரி செய்திருக்கிறார்.
ReplyDeleteஅப்படியா? நான் கேட்டதில்லையே? பிரசன்னாவின் கிடார் கர்னாடக இசை கேட்டிருக்கிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பதிவில் தங்கள் கருத்துக்கள் உண்மைதான். அந்நாட்களில் கர்நாடிக் கச்சேரிகளில் படுபவர்கள் சினிமாவில் பாடுவது குறைவுதான். ஆனால், அதையே பல சந்தர்ப்பங்களில், ஒரு சில படங்களில், பிரபலமாக்கும் விதங்களில் ஒன்றாக்கி காட்டியது சினிமா உலகம்.
நேற்று உங்கள் பதிவை படித்ததில் உடனே நானும் தேடி ரஞ்சனி காயத்திரி சகோதரிகளின் அந்த இசை மழையில் நனைந்தேன். அருமையாக பாடியுள்ளனர்.
இறுதி வரிக்குரியவரை உணர முடியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோதரி. இப்போது கர்நாடக இசை உலகில் கொடி கட்டி பறப்பவர்கள் இந்த சகோதரிகள்தான்.
Deleteகடைசி வரிக்குறியவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? கிருஷ்ணா கிருஷ்ணா! சென்ற வருடம் இவருக்கு மியூசிக் அகடமியில் சங்கீத கலாநிதி விருது தரக்கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தார்களே.
ராகா சகோதரிகளின் இளையராஜா ராகங்கள் என்று பாடிய கச்சேரி கேட்டிருக்கிறேன். எனக்குப் பிடித்தது நன்றாகத்தான் இருந்தது. ஸ்வரம் போட்டுப் பாடும் போது எதுவாக இருந்தால் என்ன?
ReplyDeleteஆனால் முன்பெல்லாம் சினிமா பாடல்கள் பாட மாட்டாங்கதான். எங்க வீட்டில் ரொம்பவே தடா.
அதன் காரணம் கர்நாடக இசை பாடுவதற்கான சுருதியும், மெல்லிசை/சினிமாப் பாடல்களுக்கான ஸ்ருதியும் வித்தியாசமான ஸ்ருதி. சினிமாப் பாடல்களில் பொய்க்குரலில் பாட வேண்டிய சூழல் வரும் அதற்கு நாம் சாதாரணமாக 5 1/2 கட்டையில் பாடினால் சி பா வுக்கு 6 அதற்கு மேல் கட்டை எடுத்துப் பாடும் போது தொண்டை கெட வாய்ப்புள்ளது என்பதால். இரண்டாவது கர்நாடக இசையை 6 கட்டை அதற்கு மேல் பாடும் போது குறிப்பாகப் பெண்கள் பாடும் போது அது கீச்சென்று போகும். இதெல்லாம் காரணமாக இருக்கும்.
ஆனால் இப்ப வாய்ஸ் கல்சர் வந்துவிட்டது. எனவே தைரியமாகப் பாடுகிறார்களாக இருக்கலாம்.
பார்த்தீங்கனா காற்றினிலே வரும் கீதம் பாடலில் இடையில் ரொம்பவே மேலே போகும் இடங்கள் உண்டு. எம் எஸ் அவர்கள் அதை அனாயாசமாகக் கையாண்டு இருப்பாங்க. எனக்கு அந்தச் சுருதி முன்பு வந்தது ஆனால் இப்ப வராது...கொஞ்ச்ம பொய்க்குரல் தேவைப்படும்.
கீதா
ராக ஆலாபனை, ஸ்வரமெல்லாம் பாடி ஒரு மெட்லியாக பாடல்களை அவர்கள் தொகுத்துக் கொடுத்து இருக்கும் விதம் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. //
ReplyDeleteஆமாம் நன்றாக இருந்தது ரசித்தும் கேட்டேன்.
கீதா
இப்ப நிறைய இளைஞர்கள் ஃப்யூஷன் இசை செய்கிறார்கள். பாடகர் கார்த்திக் கூட கர்நாடக இசைப் பாடல்களை மேடையில் ட்ரம்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டு பாடியதைக் கேட்டிருக்கிறேன் ஆச்சு பல வருஷங்கள்.
ReplyDeleteகீதா
எனக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் மாற்றங்கள் பிடித்திருக்கிறது வரவேற்கிறேன்.
ReplyDeleteலுங்கிவாலாவை நான் பார்க்காமல் குரலையும் அவர் வித்வத்தையும், ரசிப்பேன். அசாத்திய ஞானம் உடையவர் என்பது பாட்டில் தெரியும்.
வெள்ளி வீடியோக்களில் ஸ்ரீராம் சொல்வதுண்டு, அப்படியும் இப்படியும் இருக்கும் காட்சிகளைப் பார்க்காமல் பாட்டை ரசியுங்கள்நு சொல்வாரே அது போல!!!!!!!!
கீதா